1.
|
நேர்-நேர்-நேர்-நேர்
|
தேமாந்தண்பூ
|
தே.மாந்.தண்.பூ
|
2.
|
நேர்-நேர்-நேர்-நிரை
|
தேமாந்தண்ணிழல்
|
தே.மாந்.தண்.ணிழல்
|
3.
|
நேர்-நேர்-நிரை-நேர்
|
தேமாநறும்பூ
|
தே.மா.நறும்.பூ
|
4.
|
நேர்-நேர்-நிரை-நிரை
|
தேமாநறுநிழல்
|
தே.மா.நறு.நிழல்
|
5.
|
நிரை-நேர்-நேர்-நேர்
|
புளிமாந்தண்பூ
|
புளி.மாந்.தண்.பூ
|
6.
|
நிரை-நேர்-நேர்-நிரை
|
புளிமாந்தண்ணிழல்
|
புளி.மாந்.தண்.ணிழல்
|
7.
|
நிரை-நேர்-நிரை-நேர்
|
புளிமாநறும்பூ
|
புளி.மா.நறும்.பூ
|
8.
|
நிரை-நேர்-நிரை-நிரை
|
புளிமாநறுநிழல்
|
புளி.மா.நறு.நிழல்
|
9.
|
நிரை-நிரை-நேர்-நேர்
|
கருவிளந்தண்பூ
|
கரு.விளந்.தண்.பூ
|
10.
|
நிரை-நிரை-நேர்-நிரை
|
கருவிளந்தண்ணிழல்
|
கரு.விளந்.தண்.ணிழல்
|
11.
|
நிரை-நிரை-நிரை-நேர்
|
கருவிளநறும்பூ
|
கரு.விள.நறும்.பூ
|
12.
|
நிரை-நிரை-நிரை-நிரை
|
கருவிளநறுநிழல்
|
கரு.விள.நறு.நிழல்
|
13.
|
நேர்-நிரை-நேர்-நேர்
|
கூவிளந்தண்பூ
|
கூ.விளந்.தண்.பூ
|
14.
|
நேர்-நிரை-நேர்-நிரை
|
கூவிளந்தண்ணிழல்
|
கூ.விளந்.தண்.ணிழல்
|
15.
|
நேர்-நிரை-நிரை-நேர்
|
கூவிளநறும்பூ
|
கூ.விள.நறும்.பூ
|
16.
|
நேர்-நிரை-நிரை-நிரை
|
கூவிளநறுநிழல்
|
கூ.விள.நறு.நிழல்
|
வெள்ளி, 13 ஜூலை, 2012
நான்கசைச்சீர்கள்
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஜூலை 13, 2012 0 கருத்துரை
முழக்கங்கள்: இலக்கணம்
சனி, 31 ஜனவரி, 2009
இலக்கணம்
குறில்,நெடில்:
குறுகி ஒலிக்கக்கூடியவை குறில்கள் என்றும், நீண்டு ஒலிக்கக்கூடியவை நெடில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இதைக் குற்றொலிகள், நெட்டொலிகள் என்றும் அழைப்பர். குற்றொலிகள் ஒலிக்கும் அளவு ஒரு மாத்திரை எனவும், நெட்டொலிகள் ஒலிக்கும் அளவு இரண்டு மாத்திரை எனவும், ஒற்றெழுத்துக்கள் ஒலிப்பது அரை மாத்திரை எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
அ,இ,உ,எ,ஒ குறில்கள் ஆ,ஈ,ஊ,ஏ,ஓ,ஐ,ஒள நெடில்கள் ஆகும். க்+அ=க குறிலாகும். க்+ஆ=கா நெடிலாகும்.
அடி:
செய்யுளில் அடி என்பது வரி என்பதைக் குறிப்பிடுவதாகும். எடுத்துக்காட்டு: திருக்குறளில் இரண்டு அடிகள் உள்ளன. ஈற்றடியில் ஈற்றுச்சீர் இல்லை.
எதுகை,மோனைகள் ஒலிச்சிறப்புக்காக செய்யுளில் அமைக்கப்படுகின்றன.
மோனை: அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வர அமைவது மோனையாகும்.
எ.கா:
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
இதில் அடிதோறும் "தோ" எழுத்து ஒன்றி வருவதால் மோனையாகிறது. "ஏஇமோமு" என நினைவில் வைத்துக்கொள்வது மரபு. அதாவது எதுகை இரண்டாமெழுத்து;முதலெழுத்து அளவொத்து நிற்க வேண்டியது இன்றியமையாதது. மோனை முதலெழுத்து.
எதுகை: அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வர அமைவது எதுகை எனப்படும்.
எ.கா:
பணியுமாம் என்றும் சிறுமை பெருமை
அணியுமாம் தன்னை வியந்து.
இதில் "பணியுமாம்" என்பது "அணியுமாம்" க்கு எதுகையாகிறது. ஏனெனில் அடிதோறும் முதலெழுத்து அளவொத்து குறிலாக இருக்கிறது.
தளை, தொடை போன்றவற்றை பின்னர் காணலாம்.
ஒருமை பன்மை:
ஒருமையில் பெரும்பாலும் "கள்" சேர்த்தாலே பன்மை வரும்.
எடுத்துக்காட்டுகள் பல
ஆடு: ஆடுகள்
மாடு: மாடுகள்
புலி: புலிகள்
எக்காளம்: எக்காளங்கள்
பன்மை இல்லாதவை: இயற்கை, கடவுள் போன்ற பொதுப்படையான சொற்களுக்கு பன்மைகள் இல்லையெனினும், அவை ஒருமையாகவோ அல்லது படர்க்கையில் ஒருமையாகவோ கருதப்பட்டால் அதற்கும் "கள்" சேர்த்து பன்மையாக எழுதும் வழக்கம் தமிழில் உண்டு. இவை பெயர்ச்சொற்களுக்கும் பொருந்தும். இருப்பினும், தமிழ்க்கற்றுக் கொள்ளும் தொடக்கநிலையாளர்கள் இப்படி எழுதுவதைத் தவிர்த்தல் நலம் பயக்கும்.
வேறுபட்ட பன்மைகள்:
பல - பற்பல
சில - சிற்சில
முழங்கியவர்: PNA Prasanna மணி: சனி, ஜனவரி 31, 2009 0 கருத்துரை
முழக்கங்கள்: இலக்கணம்
செவ்வாய், 27 ஜனவரி, 2009
எழுத்து, அசை, சீர்
இலக்கணம் குறித்து நான் அறிந்தவற்றைத் தருகிறேன். இது இலக்கணம் என்னும் முழக்கமாக அவ்வப்போது எங்கள் தமிழ் எக்காளத்தில் முழங்கப்படும்.
ஒரு செய்யுளுக்கு அடிப்படை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பனவாகும்.
எழுத்தில் இரண்டு வகைகள். ஒன்று வரிவடிவம் (எழுதும் முறை), ஒலி வடிவம் (உச்சரிக்கும் முறை). உயிரெழுத்து - பன்னிரெண்டு மெய்யெழுத்து - பதினெட்டு உயிர்மெய் எழுத்து - இருநூற்றி பதினாறு ஆய்தம் - ஒன்று ஆக மொத்தம் இருநூற்றி நாற்பத்து ஏழு எழுத்துக்கள் தமிழில் உள்ளன.
அசைகள் இரண்டு வகைப்படும். அவையாவன நேரசை, நிரையசை.
நேரசை: குறில் தனித்தோ ஒற்றடுத்தோ, நெடில் தனித்தோ ஒற்றடுத்தோ வருவதோ நேரசையாகும். எ.கா: நேர்
நிரையசை: இருகுறில்கள் இணைந்தோ ஒற்றடுத்தோ, குறில் நெடில் இணைந்தோ ஒற்றடுத்தோ அமைவது நிரையசையாகும். எ.கா: நிரை
இரண்டசைச்சீருக்கான வாய்ப்பாடுகள்
நேர்நேர் - தேமா
நிரைநேர் - புளிமா
நிரைநிரை - கருவிளம்
நேர்நிரை - கூவிளம்
மூன்றசைச்சீருக்கான வாய்ப்பாடுகள்
நேர்நேர்நேர் - தேமாங்காய்
நிரைநேர்நேர் - புளிமாங்காய்
நிரைநிரைநேர் - கருவிளங்காய்
நேர்நிரைநேர் - கூவிளங்காய்
நேர்நேர்நிரை - தேமாங்கனி
நிரைநேர்நிரை - புளிமாங்கனி
நிரைநிரைநிரை - கருவிளங்கனி
நேர்நிரைநிரை - கூவிளங்கனி
இவ்வாறு பிரித்தெழுதுவது அசை பிரிப்பது என்றழைக்கப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று அசைகள் சேர்ந்து ஒரு சீர் உருவாகின்றது. அதுவே வார்த்தை அல்லது கிளவி என்றழைக்கப்படுகிறது.
முழங்கியவர்: PNA Prasanna மணி: செவ்வாய், ஜனவரி 27, 2009 0 கருத்துரை
முழக்கங்கள்: இலக்கணம்