புதன், 19 நவம்பர், 2025

இடர்பாடுகளின் தீர்வு

"கல்லுளி மங்கனுக்கு காடு மேடெல்லாம் தவிடுபொடி."
கல்லுளி மங்கன் போல் நம் மேல் விழும் அடிகளையெல்லாம் தாங்கிக் கொண்டால் என்ன இடர்பாடுகள் வந்தாலும் தவிடுபொடியாகும். என் தந்தை எப்போதோ சொல்லியது.

சனி, 5 ஏப்ரல், 2025

கொலையாட்டம்

கொண்டாட்டங்களைக் 

குற்றங்களாக்கி 

நாம் விரட்டி விட்டதால்

குற்றங்கள் 

கொண்டாட்டங்களாகி

நம்மை விரட்ட தொடங்கிவிட்டன

மத்தாப்புகளைப் பிடித்த கைகள் 

வெடிகுண்டிற்கு பழகிவிட்டன.

https://tayagvellairoja.blogspot.com/2025/04/blog-post_5.html

வியாழன், 16 நவம்பர், 2023

எண்பதுகளில் வந்த பொங்கல் வாழ்த்து

வாழ்த்து மட்டும் போதுமே. எண்ண முடியாதவற்றிற்கு 'கள்' சேர்க்க வேண்டாம் என்பதறிக.
வாழ்த்துக்கள், வாழ்த்துகள் இரண்டுமே "Greetings" என்பதற்கு இதழியலாளர்கள் மற்றும் ஊடகத்தார் புதியதாய்ச் செய்த‌ தவறான‌ பதமே. எண்பதுகளில் இது கிடையாது. பொங்கல் வாழ்த்து அட்டைதான். திருக்குறளில் வருவது கூட கடவுள் "வாழ்த்து"த்தான்.  "கடவுள் வாழ்த்துக்கள்" அல்ல. தமிழை மிகுதியாய்ப் புகழ்ந்த அல்லது வாழ்த்திய சுந்தரனாருங்கூட "தமிழ்த்தாய் வாழ்ந்து" என்றே அருளியிருக்கிறார். "தமிழ்த்தாய் வாழ்த்துக்கள்" அல்ல. மிகுதியாய் இருக்கும் தண்ணீரை தண்ணீர்கள் என்றழைப்பது தகுமோ? 
அன்புடன், எளியோன்.
எண்பதுகளில் வந்த பொங்கல் வாழ்த்து. இப்போதெல்லாம் "வாழ்த்துக்கள்" என்று தவறாக எழுதுகிறார்கள். எண்பதுகளில் வந்த ஒரு மாதிரி வாழ்த்து.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

கனவுகள் - அழைக்கிறார் அன்பர் அப்துல் கலாம்

கனவுகள் - அழைக்கிறார் அன்பர் அப்துல் கலாம்

விழிகள் இரண்டு ‍வரும்
கனவுகள் வகை மூன்று

துயில் கனவு
பகல் கனவு
குறிக்கொள் கனவு

துயில் கனவு
மிகைப்பாடு அதிகம்
நடப்பது கடினம்.

பகல் கனவு
பைத்தியம் எனும்
பழிச்சொல் தரும்.

குறிக்கோள் கனவு
சரிவரக் கொண்டால்
கோள் மாற்றம் திண்ணம்.

வாருங்கள்
கண்கள் திறந்து
கோள் மாற்றக்
கனவு காண்போம்.