சனி, 22 டிசம்பர், 2018

மறுக்கமுடியாத சில உண்மைகள் !!! - புலனத்தில் பிறமொழிக் கலப்புடன் வந்த செய்தி.

பிறமொழிக் கலப்புடன் வந்த செய்தி; நகைச்சுவையாதலால் பகிர்கிறேன்.

மருமகள் நைட்டி போட்டதால்
சண்டை வந்த வீடுகளில் எல்லாம்,
பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!

👄👩👖👠👜

தான் செஞ்ச தவற்றைப்
பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன்
சராசரி மனுஷன்;

தனக்கு ஒரு பொண்டாட்டி
இருக்கிறதையே மறைக்கிறவன்
பெரிய மனுஷன்!

😇🤡😇🤡

OMR -ல சம்பாதிக்கிறதை
ECR-ல செலவு பண்றாங்க!

🍿🥛🍻🥃

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அடிப்பது இல்லை !

😺😺😽👶

ஆண்களின் பெருங்குறைகளுள் ஒன்று...
'அன்பாக இருக்கத் தெரியும்;
ஆனால், யார் மீதெனத்
தேர்ந்தெடுக்கத் தெரியாது!’

😅😆🤠😆

ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம்.

அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம்.

ஆணாதிக்கச் சமூகம் !

💃👯‍♂🕺👗

நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே...
அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க ?

💿📽📡📽

முன்னர் எல்லாம் மழைக்காலம்
என ஒன்று இருந்தது.

இப்போது மழை நாட்கள் மட்டுமே !

⛈☔💦☔🤷‍♀🏃‍♀👨‍👦🏃‍♀

ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம் !

💯🈁📶🔈

நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான்,
சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம் !

💥🖥⚡💥

யாரும் இல்லாதபோதும்
குழந்தைகள் காதுக்குள் வந்தே
ரகசியங்கள் சொல்கிறார்கள் !

🤰🙎👨‍👩‍👦‍👦🙎

நம் வீட்டைச் சேர்ந்த ஒருவர்
வெளியில் சென்றிருக்கும்போது
அவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால்,
அவர் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது.

📞📲📱

‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு,
பேசாம இருந்ததுக்காகச் சண்டைய போட்டு,
அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்கப் பெண்களால் மட்டும்தான் முடியும் !

⛄😥⛄😥

ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம,
இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம் !!

🕺🤹‍♂🕺🤹‍♂

"அப்பாக்கிட்ட காசு இல்லம்மா"
எனும் சொல் கேட்டு
அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல்,
தந்தைக்குச் சோகமயமானது!

💃👫💃👫

காசு கொடுத்துக் கடவுளைப் பார்த்து,
கடவுளுக்கும் காசு கொடுத்து,
கடைசியில கடவுள்கிட்டயே
காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன் !

🙏🙏🙏🙏

சனி, 19 நவம்பர், 2016

கணினிச்சிரிப்புகள்

"நம்ம தலைவருக்கு ஃபேஸ் புக் பத்தி ஒன்னுமே தெரியாது போலிருக்கே..."
"ஏன் என்னாச்சு?"
"ஃபேஸ்புக்க பைண்டிங் பண்ணி நம்ம அலுவலக நூலகத்துல வச்சுட்டா அப்பப்ப பாத்துக்கலாம்ங்கறார்."

"அரசருக்கு எல்லாமே தெரியும் போலருக்கே?"
"எப்படி சொல்ற?"
"போர்ல வீரர்களுக்கு மாற்றாக ரோபோக்கள பயன்படுத்தலாம்கிறார்"
"அட நீ வேற.. ரோபோக்கள பயன்படுத்தினா புறமுதுகு சிக்கல் வராதில்லையா அதுக்குத்தான் அப்படிச் சொல்றார்.”

“நம்ம ஹெச் ஓ டி மேடத்துக்கு கம்ப்யூட்டர்ல அன்னா ஆவன்னா கூட தெரியாது போலருக்கே.”
“எப்டீ சொல்ற?”
“அடுத்த ப்ராஜெக்ட்ட நாம எம் எஸ் ஆஃபிஸீல பண்ணலாம்ன்னு சொன்னா, அதுக்கு அவுங்க அதுக்கெதுக்கு எம்.எஸ் ஆஃபிஸ் போகணும். நம்ம ஆஃபிஸுலேயே பண்ணலாமேன்னு சொல்றாங்களாம்.”

“டேய் ஒனக்குத் தெரியுமா? நா.. கூகுள்+, ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் எல்லாத்துலயும் அக்கெளண்ட் வச்சிருக்கேன்.”
“ஒனக்கு வாழ்க்கைன்னா என்னான்னு தெரியுமாடா?”
“அடக்கடவுளே. எனக்குத் தெரியாதே. அதுக்குச் சீக்கிரமா லிங்க் அனுப்புடா.”

“தலைவர் மகளிரணித்தலைவி மேல ரொம்பக் கோவமா இருக்காரே ஏன்?”
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்ட்ராய்டுக்குப் போட்டியா நம்ம கட்சியிலர்ந்து பெண்ட்ராய்டு கைபேசி தருவோம்ன்னு மேடையிலயே அறிவிச்சுட்டாங்களாம்.”

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

சிரிப்பா -2

என்னிடம் சோற்றை எச்சிலாய்த் தின்று
திமிருடன் காலால் தள்ளி மிதித்து
எள்ளி நகைத்து இன்பங் கண்ட‌
வேலை யில்லா வெட்டிப் பயலே.
சிரிப்பா -2

புதன், 5 நவம்பர், 2014

சிரிப்பா -1

தூற்றுவார் என்னைத் தூற்றல் கண்டு
பொழுதும் என்னகம் பொறுமை கொண்டு
இருக்க மாட்டேன் என்பத றிகுவாய்
மூளை யில்லா முட்டாப் பயலே.
சிரிப்பா-1

திங்கள், 6 அக்டோபர், 2014

தக்காளி - எம்பேரு கோயில் மணி

கவுண்டமணி செந்திலை திரையில் சேர்ந்து பார்த்து கொள்ள நாளாச்சு. இருவரும் சேர்ந்து பேசினால் எப்டியிருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை.
“வாங்க பெல்லு”
“என்ன அண்ணே நீங்க எவ்ளோ பெரிய ஆளு, நீங்க போயி என்னய வாங்கன்னு கூப்டுக்கிட்டு.”
“அது ஒனக்குத் தெரியுதாடா வண்டுருட்டாந் தலையா”
“அது ஊருக்கே தெரியுமே. ஆமாண்ணே நீங்க இப்ப எங்க ஆணி புடுங்கிட்டு இருக்கிங்க.”
“நானாவது எங்கயாவது ஆணி புடுங்கிட்டு இருக்கேன். நீ புடுங்கறது எல்லாமே தேவயில்லாத ஆணிதானடா.”
“அதுக்கில்லண்ண,..”
“டேய் இந்த டக்கால்டி வேலயெல்லாம் வச்சுக்காத. சும்மா வெட்டி ஒட்டற வேலயில்ல இருக்க நீயே இப்டி பேசுனா, சொந்தமா வேல செய்யற நாங்க எப்டியிருப்போம். அதென்னமோ pdf எல்லாம் ஏத்துக்க மாட்டிங்களாமே, Document தான் வெட்டி ஒட்டறதுக்கு தோதுப்படுதோ.”
“அண்ணே எதப்பத்தி வேண்ணாலும் பேசுங்க. ஆனா வேலையப் பத்தி மட்டும் பேசாதீங்க.”
“அடுத்தவன் கக்குறத நக்குறீங்க. காலக்கழுவிக் குடுத்தாக்கூட குடிப்பிங்க. பத்து பதினைஞ்சு வீடு பிச்ச‌யடுத்து  (document வெட்டி ஒட்டி) திங்கற நாய்க்கு எகத்தாளத்தப் பாரு. லோலாய்த்தனத்தப் பாரு.”
“டேய் பெல்லு கோவணம் இல்லனாலும், மீசைக்கு முறுக்கு கேக்குதாக்கும்.”
“அண்ணே சொந்தப் பேர் சொல்லி கூட்டுங்க.”
“பெல்லுன்னு சொன்னா நான் மட்டுந்தான் அடிப்பேன். தக்காளி, ஒன் சொந்தப்பேர் கோயில் மணின்னு சொன்னா, அவன் அவன் வந்து அடிப்பான். பத்தாதக்கு கோயில் மணிய யாரு ஆடிச்சா ஒனக்கென்னம்பான்.”
“எல்லாம் சரிதான். தக்காளின்னா என்னண்ணே?”

“ம். அத அடுத்த வாரம் சொல்றேன்.”

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

நான் கடவுள் இரண்டாம் பகுதிக்கு ஆயத்தம் - இயக்குனர் பேரரசு


கோடம்பாக்கத்தில் ஒருபடம் வெற்றி பெற்று விட்டால் போதும், அதே நடையில் கதை செய்து காசு பார்க்க நினைப்பார்கள். அவ்வகையில் அண்மையில் "வில்லு"வில் கையைச் சுட்டுக்கொண்ட கதையுடைத்தலைவனும், "திருவண்ணாமலை" சரிவர செல்லாததில் இயக்குனர் பேரரசுவும் இணைந்து நான் கடவுளை தலைகீழ் செய்து ஒரு கதை செய்ய நினைக்கிறார்கள். இது நகைச்சுவைக்காக பின்னப்பட்ட கற்பனையே. பிறர் சிந்தை நோகச் செய்ய அல்ல.

நான் கடவுள் படத்தின் கதையினைச் சுட்டு[1] தன் நடையில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார் பேரரசு. படத்தின் கதையுடைத்தலைவன்[2] அமர்ந்து இயக்குனரை கண்ணுங்கருத்துமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

"தலைவரே இதுல அஞ்சு பாட்டு; எல்லாமே நான் தான் எழுதறேன். படத்துக்குப்பேரு வாரணாசி. சிவகாசி, திருப்பாச்சி வரிசையில இதுவும் கலக்கீடும்.”

"ஒங்களுக்கு இணையா[3] மூன்றெழுத்து நடிகை[4]யக் கேட்டிருக்கிறோம். இந்தப்படத்தோட முதல் பகுதி ஏற்கனவே எடுத்துட்டதால இத நாம நகைச்சுவையா பண்றோம்.”

"எடுத்த ஒடனே நீங்க ஒத்தக்கால்ல நடனம் ஆடுறீங்க. நீங்க மட்டும் தான் ஆடுறீங்க.

'நாந்தாண்டா கடவுள்

எல்லாமே பொதுவில்,

உருளுங்கடா தெருவில்'

அப்டீன்னு, எல்லாரும் தெருவுல உருள்றாங்க. நீங்க மிதிச்சு மிதிச்சு அருள் தர்றீங்க. எப்டீ?”

"ம். நல்லாயிருக்கு.", கதையுடைத்தலைவர் தலையசைக்கிறார்.

"இசை நம்ம இசையமைப்பாளர்[5]தான். அவரும் இசைக்கருவிகள் மேல் உருண்டே எல்லா இசையும் இந்தப் படத்துக்கு அமைக்கிறார்.”
"அப்றம், இந்தப்படத்துல நீங்க ஒப்பனையில்லாம நடிக்கிறீங்க. எல்லாரும் ஒங்களப்பாத்து மிரள்றாங்க. தாடி, மீசையெல்லாம் ஒட்டுத்தான். நீங்கதான் வேற மாதிரி செய்யமாட்டீங்கள்ல‌.”

"கதையெல்லாம் முதல் பகுதி நான் கடவுள் மாதிரிதான். ஒங்கப்பன் ஆத்தாவயெல்லாம் போட்டு அடியடின்னு அடிக்கிறீங்க. எடைல கெட்ட வார்த்த பேசுறீங்க. அதுவும் வடமொழில[6]தான். எல்லாத்துக்கும் நீங்க பயிற்சி எடுத்துட்டு வரணும்.” பேரரசு அள்ளி விடுகிறார்.

"இதெல்லாம் எனக்கு ஒத்து வருமா? எதாச்சும் குத்துப்பாட்டு இருக்கா?” கதையுடை கனைக்கிறது.

"உச்சக்காட்சில சண்டைக்கு மாறா நாம குத்துப்பாட்டு வைக்கிறோம். குருட்டுப்பெண்ணான தலைவிக்கு நீங்க வாழ்வு தர்றீங்க. எதிர் நாயகனை ஒழிச்சுக்கட்டுறீங்க. அப்றம் ஒரு சாமியார் தலைவிக்கு பார்வை கொடுக்கறார். அப்றம் என்ன குத்துப்பாட்டுதான். வாரணாசிலயே எடுக்கறோம். அப்பப்ப சென்னயத் தொட்டுக்கறோம்."

"அந்த சாமியாரா நானே வர்றேன்; எம்பேரு மருதகாசி." பேரரசு தொடர்கிறார். "நீள நீளமா உரையாடல்[7] பேசப்போறேன்."

குத்துப்பாட்ட மறந்துட்டேனே.

"நீ கண்ணு கொடுத்த சாமி - ஒன்ன

கட்டிக்கிட்டேன் மாமி

ஒன்னோட எதயம் காமி - அதுல

நான் மட்டுந்தான் சாமி”

"யோவ் புதுசா எதாச்சும் சொல்லுயா நானே வில்லு ஓடாத கடுப்புல இருக்கேன்." கதையுடை மீண்டும் கனைக்கிறது.

இதே மாதிரி கோப்பப்படுங்க. எடைல ஓம். ஸம்பவாமி.. அப்டீயிப்டீன்னு கெட்ட வார்த்தை பேசுங்க. படம் பிச்சிக்கும். பேரரசுவின் பிதற்றல் தொடர்ந்தது.
"இதுல 'பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே...' பாட்ட நம்ம இசையமைப்பாளர் கலவை[8] செய்வார். அத வேண்ணா நீங்களே ஒங்க குரல்ல பாடுங்க.

"போடாங்... நீ இப்டீயே பேசிக்கிட்டு இருந்தேன்னா இந்தப்பாட்ட அப்றம் நம்ம தயாரிப்பாளர்தான் பாடணும்.” கோபமாகச் செல்கிறார் கதையுடை.
"அப்பாடா ஒரு வழியா நம்ம தலைவர படத்தோட பாத்திரத்துக்கு ஏத்த மாதிரி மாத்திட்டேன்.” பேரரசு பெருமூச்சு விடுகிறார்.



[1] வட்டார வழக்கு, திருடுதல் என்பது பொருள்

[2] விஜய்தான் வேறுயார்?

[3] Pair

[4] த்ரிஷா

[5] இற்றீகாந்த் தேவா

[6] சமற்கிருதம்

[7] Dialouge

[8] re- mix