சீமான் என்பதே தமிழ் பெயர் இல்லை. "பெருஞ் செல்வன்" என்பதே தமிழ்.
வெள்ளி, 16 ஜூலை, 2021
சீமான் என்பதே தமிழ் பெயர் இல்லை. "பெருஞ் செல்வன்" என்பதே தமிழ்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஜூலை 16, 2021 0 கருத்துரை
முழக்கங்கள்: சொல்லாராய்ச்சி
வெள்ளி, 7 மே, 2021
மறைந்தார் பாண்டு
புலனத்தில் முன் அனுப்பப்பட்ட பதிவு. பிறமொழிக் கலப்பிற்கு மன்னிக்க.
-+++-
ஆழ்ந்த இரங்கல் பாண்டு ஐயா
அதிமுக கொடி இரட்டை இலை உருவான விதம்🌱 :
பாண்டு இவர் சினிமா நடிகர்
மட்டுமல்ல,சிறந்த ஓவியரும் கூட. தமிழ்நாட்டில் ஓவியத் துறையில் phd
பட்டம் பெற்ற முதல் நபர் இவர்தான்.
தமிழக அரசின் சுற்றுலாத் துறை சின்னத்தை வரைந்து கொடுத்தவர்
இவர் தான்.
நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும்தான் நினைவுக்கு வரும்.
அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான்.
அவரின் அனுபவம்...
அதிமுக தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார் எம்.ஜி.ஆர்.(MGR) கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா... என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அதிமுக என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார்.
அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.
அப்போதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர்.
இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே. சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார்.
அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போதும் கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார்.
அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர்.
தமிழகம் முழுவதும் நான் வடிவமைத்த கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும் வேளைகளில் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றார் அவர்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, மே 07, 2021 0 கருத்துரை
முழக்கங்கள்: புலனச்செய்தி
ஞாயிறு, 27 செப்டம்பர், 2020
பாடும் நிலா ஒரு நேர்த்தியாளர் - கையறு நிலைக் கட்டுரை
பாட்டுத் தலைவன் குறித்து எழுத வேண்டுமென்றால், எழுதிக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு செய்திகள். அவ்வளவும் வியப்பான செய்திகளே. அவர் பெற்றிறாத பிள்ளை நான். எனது பெரியப்பா என்றும் சொல்லலாம். பெற்றால்தான் பிள்ளையா என்ன? அவரது பாடல்களால் கட்டப்பட்டு ஈர்க்கப்பட்டபின் நான் அவரது பிள்ளை என சொல்வதில் பிழையில்லை. உண்மையில் அவரை நான் பாராமல் ஓர் ஆசிரியர் போல ஏற்றுக் கொண்டே பாடல் பயின்றனன். "ல, ள, ழ" உச்சரிப்புக்களை அவரது பாடல்களே, சிற்றூரில் பிறந்த எனக்கு உணர்த்தின. பிறவியில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரே மனிதர். ஆனால் நேரில் அவரைப் பார்க்காமலேயே என் பிறவி முடிந்து விட்டது.
1. எல்லாக் கால கட்டத்திற்கும் இவரது பாடல்கள் உண்டு.
2. பாடல் பாடுவதில் இவர் ஒரு நேர்த்தியாளர். பாடுவதாலேயே அவர் குரல் பயிற்சி பெற்று அவர் பாடும் பாடல்களுக்கு உதவியது. தவிர, அவர் பாடுவதற்கு தனியாகப் பயிற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை.
3. இவர் பாடும் பாடலில் அவர் செய்யும் தவறுகள் கூட அழகே.
4. தவறுகளை அவரே ஒப்புக்கொண்டு, அதைத் தவறு என்று சொல்பவர். அதைத் தவறென்று அறியாமல் பிறர் ஏதோ பாடலின் அணிக்கூறு (சங்கதி) என்றெண்ணிப் பாடுவதையும் அவரே செல்லச் சீற்றத்துடன் கூறுவார். அப்போதுதான் அது தவறு என்றே அனைவருக்கும் புலப்படும்.
5. எவ்வளவு உரக்க அல்லது தாழப் பாடினாலும் குரல் கட்டுப்பாட்டை இழக்காதவர். பாடும் பொழுது முகம் கோணாமல் இயல்பான சிரித்த முகத்தோடே இருப்பவர்.
6. புகழின் உச்சத்திலிருந்து இறங்காமல் இருப்பினும் அகம் பிடிக்காதவர். அதனாலேயே எல்லோர் அகத்திலும் இடம் பிடித்தவர்.
7. கலையில் அரசியல் செய்யாதவர். நிறைகுடம்.
8. நடிகர்களுக்கேற்ற குரல் மாற்றம், கதையின் சூழ்நிலை மாற்றம் பொறுத்து குரல் வேறுபடுத்துதலில் மன்னன்.
9. விருதுகள் இவருக்குக் கிடைத்தது, அந்த விருதுகளுக்குத்தான் பெருமை.
10. எனது சிற்றூர் மொழியில் சுருங்கச் சொன்னால் அவர் ஒரு பாட்டுச்சாமி. ஒரே ஒரு பாட்டுச்சாமிதான். இன்னொன்று வர இயலாது.
யானை தடவும் குருடன் போல் எனக்குத் தெரிந்த பத்தே வியப்புகளை இங்கு அடுக்கியுள்ளேன். இவர் இல்லாத உலகில் நாம் இருக்கிறோமே என்று உள்ளம் தவிக்கிறது.
"வீசிச் சென்று விந்தை செய்ய
பாச வலையில் பாடற் கொண்டு
பாடிப் பறந்த பகலவப் பாட்டுத்
தலைவரின் குரலில் தவறும் அழகே !!!"
- கையறுநிலைப்பா.
"நா.. பெத்தெடுத்திடாத முத்துமணித் தேரே
நா.. தத்தெடுத்திடாத தங்கமணிச் சீரே
ஒரு சொந்தமிருந்தும் பந்தமிருமிருந்தும் சொல்லவில்லையே..."
நா.. தத்தெடுத்திடாத தங்கமணிச் சீரே
ஒரு சொந்தமிருந்தும் பந்தமிருமிருந்தும் சொல்லவில்லையே..."
என்று என் பெரியப்பா என்னை "ஒரு பாட்டாலே..." சொல்லியழைக்கிறார்.
- கண்ணீருடன்...
முழங்கியவர்: PNA Prasanna மணி: ஞாயிறு, செப்டம்பர் 27, 2020 0 கருத்துரை
முழக்கங்கள்: கையறுநிலைப்பா, திரைக் கட்டுரைகள்
வியாழன், 25 ஜூன், 2020
புலனச்செய்தி - பிறமொழிக் கலப்பிற்கு மன்னிக்க
1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.
2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.
3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.
4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்."இன்னும் கல்யாணம் ஆகலயா?""குழந்தைகள் இல்லையா?""இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?""ஏன் இன்னும் Car வாங்கவில்லை?"இது நமது பிரச்சினை இல்லைதானே!"
5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!
6. நண்பருடன் Taxiயில் சென்றால. இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.
7. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.
8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.
9. நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள். அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.
10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்.
11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.
12. உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்."நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.
13. யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.
14. யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். "விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறலாம்.
15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.
16. கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.
17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.
18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.
19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: வியாழன், ஜூன் 25, 2020 0 கருத்துரை
முழக்கங்கள்: புலனச்செய்தி
Subscribe to:
இடுகைகள் (Atom)
