ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-
1. எழுத்து இலக்கணம்
2. 2. சொல் இலக்கணம்
3. 3. பொருள் இலக்கணம்
4. 4. யாப்பு இலக்கணம்
5. 5. அணி இலக்கணம்
1. எழுத்து இலக்கணம்:-
2. 🐓 எழுத்துக்கள் இரண்டு வகை - 2
3. 1. முதல் எழுத்து
4. 2. சார்பெழுத்து
1. முதல் எழுத்து வகைகள் - 2 (1. உயர் எழுத்து, 2. மெய்யெழுத்து)
1. உயர் எழுத்துக்கள் - 12
2. 🐓வகைகள் - 2
3. குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
4. நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)
2. மெய்யெழுத்து - 18
3. 🐓 வகைகள் - 3
4. 🐓வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
5. 🐓மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
6. 🐓இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)
2. சார்பெழுத்து வகைகள் - 10
3. 1. உயிர்மெய்
4. 2. ஆய்தம்
5. 3. உயிரளபெடை
6. 4. ஒற்றளபெடை
7. 5. குற்றியலுகரம்
8. 6. குற்றியலிகரம்
9. 7. ஐகாரக்குறுக்கம்
10. 8. ஔகாரகுறுக்கம்
11. 9. மகரக்குறுக்கம்
12. 10. ஆய்தகுறுக்கம்
2.சொல் இலக்கணம்:-
🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது - சொல்
🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி
🐿 பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)
1. பகாபதம்:-
2. 🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்
3. 🐿 பகாபதம் வகைகள் - 4
4. 1. பெயர் பகாப்பதம்
5. 2. வினைப் பகாப்பதம்
6. 3. இடைப் பகாப்பதம்
7. 4. உரிப் பகாப்பதம்
2. பகுபதம்:-
3. 🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்
4. 🐿 பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)
5. 🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் - 6
6. 1. பொருள் பெயர்ப் பகுபதம்
7. 2. இடப் பெயர்ப் பகுபதம்
8. 3. காலப் பெயர்ப் பகுபதம்
9. 4. சினைப் பெயர்ப் பகுபதம்
10. 5. பண்புப் பெயர்ப் பகுபதம்
11. 6. தொழிற் பெயர்ப் பகுபதம்
12. 🐿 வினைப் பகுபதம் வகைகள் - 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)
13. 🐿 பகுபதம் உறுப்புகள் - 6
14. 1. பகுதி
15. 2. விகுதி
16. 3. இடைநிலை
17. 4. சந்தி
18. 5. சாரியை
19. 6. விகாரம்
20. 🐿 இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
21. 🐿 பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
22. 🐿 வினை இடைநிலை வகைகள் - 3
23. 1. இறந்த கால இடைநிலை
24. 2. நிகழ்கால இடைநிலை
25. 3. எதிர்கால இடைநிலை
3.பொருள் இலக்கணம்:-
📚 பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. 2. புறப்பொருள்
3. (1) அகப்பொருள்:-
4. 📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்
5. 📚 அகப்பொருள் உள்ள திணைகள் - 5
6. 📚 இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
7. 📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
8. 📚 அகத்திணை கூறிய பொருட்கள் - 3
9. 1. முதற் பொருள்
10. 2. கருப்பொருள்
11. 3. உரிப்பொருள்
1. முதற்பொருள்:
2. 📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
3. 📚 நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
4. 📚 பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)
2. கருப்பொருள்:-
3.
📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள் - 14 (தெய்வம், உயர்ந்தோர்,
தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை,
தொழில்)
3. உரிப்பொருள்:-
4. 📚 குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
5. 📚 முல்லை - இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
6. 📚 முருதம் - ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
7. 📚 நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
8. 📚 பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. 2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்
3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. 4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.
5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. 6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்
7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. 8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.
9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. 10. பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
11.
கைக்கிளை - ஒருதலை ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும்
தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. 12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு
4. யாப்பிலகணம்:-
5. 📚 யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6
6. 1. எழுத்து
7. 2. அசை
8. 3. சீர்
9. 4. தளை
10. 5. அடி
11. 6. தொடை
12. 1. எழுத்து:-
13. 📚 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்
2. அசை:-
3. 📚 எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை
4. 📚 அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)
3. சீர்:-
4. 📚 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்
5. 📚 சீர்கள் எண்ணிக்கை - 30
6. 1. மாச்சீர் - 2
7. 2. விளச்சீர் - 2
8. 3. காய்ச்சீர் - 4
9. 4. கனிச்சீர் - 4
10. 5. பூச்சீர் - 8
11. 6. நிழற்சீர் - 8
12. 7. ஓரசைச்சீர் - 2
4. தளை:-
5. 📚 சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை
6. 📚 தளை வகைகள் - 4
7. 1. ஆசியத்தளை
8. 2. வெண்டளை
9. 3. கலித்தளை
10. 4. வஞ்சித்தளை
5. அடி:-
6. 📚 அடி வகைகள் - 5
7. 1. குறளடி - இரண்டு சீர்கள்
8. 2. சிந்தடி - மூன்று சீர்கள்
9. 3. அளவடி - நான்கு சீர்கள்
10. 4. நெடிலடி - ஐந்து சீர்கள்
11. 5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்
6. தொடை:-
7. 📚 தொடை வகைகள் - 5
8. 1. மோனைத் தொடை
9. 2. எதுகைத் தொடை
10. 3. முரண் தொடை
11. 4. இயைபு தொடை
12. 5. அளபெடைத் தொடை
5. அணி இலக்கணம்:-
6. 📚 அணி என்பதன் பொருள் - அழகு
7. 📚 அணிகள் வகைகள் - 2
8. 1. சொல்லணி
9. 2. பொருளணி
10. 📚 சொல்லணி வருபவை - சிலேடை, மடக்கு, யமகம், திரிபு
11. 📚 பொருளணி வருபவை - உவமை, உருவகம்
12. அணிகள் பின்வருமாறு:-
13. 📚 இல்பொருள் உவமையணி
14. 📚 ஏகதேச உருவக அணி
15. 📚 பிறிது மொழிதல் அணி
16. 📚 வேற்றுமை அணி
17. 📚 வஞ்சிப்புகழ்ச்சி அணி
18. 📚 இரட்டுற மொழிதலணி
19. 📚 சொற்பொருள் பின்வருநிலையணி
20. 📚 தற்குறிப்பேற்ற அணி
21. 📚 நிரல்நிறை அணி
📚படிப்போம் 📚பகிர்வோம் 📚வெல்வோம் 📚
வெள்ளி, 22 ஏப்ரல், 2022
தமிழறிக
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஏப்ரல் 22, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: இன்னபிற
புலனத்தில் வந்து வேட்டி ஒட்டிய பதிவு
எஸ்.பி.பியின் பாடல்களில் தோய்ந்திருக்கும் நுட்பமான Sound Engineering
அல்லது Tailoring குறித்து ஆய்வு செய்தால் பலருக்கு முனைவர் பட்ட வாய்ப்பு
உண்டு....
அந்த அளவுக்கு Breathe Controlling இலும் சரி, Contained air
Mastering இலும் சரி எஸ்.பி.பி ஒரு மாஸ்டர். அந்த legendry level ஐ
எட்டுவதற்கு அவருக்கு இசை மீதிருந்த காதல் தான் காரணம்.
தென்னிந்திய
மொழிகளில் இளையராஜாவின் இசைப்பிரவாகம் பெருகி வழியத்துவங்கிய வெகு
காலத்துக்கு முன்பாகவே எஸ்.பி.பியும், ராஜாவும் சிறந்த நண்பர்கள்,
சைக்கிளில் துவங்கி, ஸ்கூட்டர், லாரி, தொடர்வண்டி என்று ஏதுமில்லாத
காலத்தில் இருந்து அவர்கள் பயணித்திருக்கிறார்கள்.
எஸ்.பி.பியின்
தலைசிறந்த பாடல்களாக நாம் கருதுகிற பாடல்களை எல்லாம் உருவாக்கியது
இளையராஜா, இளையராஜாவின் இசைக் கனவுகளுக்கு எல்லாம் உயிரூட்டியது
எஸ்.பி.பியின் அசாத்தியமான குரல் என்று ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத நிலை
தான் இன்று வரைக்கும்.
ராஜாவின் இசைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு,
Perfect Pre Rendering, மற்ற இசை அமைப்பாளர்களைப் போல இளையராஜா ஒரு Liberal
artist கிடையாது, ஒரு பாடலை இப்படித்தான் உருவாக்குவேன் என்று
முன்கூட்டியே மனச்சித்திரம் வரைந்து விட்டு அதற்கான Defined Notes எழுதிக்
கலைஞர்களுக்குக் கொடுத்து விடக்கூடிய Perfectionist.
பாடகர்களுக்கு
அந்த விஷயத்தில் நிறையவே Restrictions உண்டு, நான் சுதந்திரமான பாடகன்,
இந்த இடத்தில் என்னோட Suitable Rendering பண்ணிக் கொள்கிறேன்னு சொல்ற
ஆட்களுக்கு இளையராஜா பிரம்போடு சுற்றுகிற கண்டிப்பான ஆசிரியர்.
எஸ்.பி.பி
அந்த இலக்கணத்தை ஒரு போதும் உடைத்தது கிடையாது, அட்சர சுத்தமாக ராஜா என்ன
விரும்புகிறார் என்பதை அறிந்த பாடகர் என்பதால் அவருடைய இலக்கணங்களை உடைக்க
முயற்சி செய்யாத ஒரு அடக்கமான பாடகராக அவரிடம் இணைந்திருந்தார்.
இத்தனைக்கும் எஸ்.பி.பியைப் போல ஒரு Extraordinary Voice Rendering செய்கிற பாடகர் உலகத்திலேயே இருப்பாராங்குறது சந்தேகம்.
ஒரு
வெளிநாட்டு மேடையில் இளம் பாடகர் ஒருவர் "இளங்காத்து வீசுதே, எசபோலப்...."
பாடலை ராஜாவின் முன்னிலையில் பாடினார், "வளையாத மூங்கிலில்....."ன்னு
பாடுறப்ப ராஜாவோட Scale மிஸ்ஸிங்....
மனுஷன் பாட்டு முடியிற வரைக்கும்
கழுகாக் காத்திருந்து விட்டு, ஒரு நாலஞ்சு முறை அந்த இளம்பாடகரை மேடையிலேயே
அந்த மூங்கிலுக்கு வர வேண்டிய Scale வரும்வரை வறுத்தெடுத்து விட்டார். No
Mercy and Sympathy to his Art, Whomsoever....
இந்த விஷயத்தில்
எஸ்.பி.பிக்கும், ராஜாவுக்கும் துணையாக இருந்தது அவர்களுடைய நட்பு தான்.
சாப்பாடு இல்லாமல் மாடுகளோடு சாணத்தில் உருண்டெல்லாம் நட்போடு
பயணித்தவர்கள் இருவரும்.
எஸ்.பி.பியின் நம்ப முடியாத வெற்றிப்
பாடல்களின் பின்னால் ராஜாவின் Composing Magic இருக்கும், அதே போல ராஜாவின்
நம்ப முடியாத வெற்றிப் பாடல்களுக்குப் பின்னால் எஸ்.பி.பியின் Mettalic
Vocal இருக்கும்.
ஒன்றிரண்டு அல்ல, பல ஆயிரம் பாடல்கள் அதுபோல உண்டு,
"ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்" பாட்டை Just for a Sample எடுத்துப்
பாருங்கள், பாட்டு முழுவதுமே ஒரு Open Magical Portion பாடகர்களுக்கு
இருக்கக் கூடிய பாடல்......
But ராஜாவின் Defined Space ஐ விட்டு வெளியே
போக முடியாது. அந்தப் பாடலை அதற்குப் பிறகு பாடிய பல (இளையராஜா இல்லாத)
மேடைகளில் தன்னுடைய Liberal Space க்கு எஸ்.பி.பி எடுத்துச்
சென்றிருக்கிறார்.
இந்தப் புரிதல் தான், அவர்கள் இருவரையும் பல
ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக, இசை சகாக்களாக இணைத்து வைத்திருந்தது. அது ஒரு
விவரிக்க இயலாத, பார்வையாளர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாத பிணைப்பு.
இளையராஜாவையும்,
எஸ்.பி.பியையும் ராயல்டி விஷயத்தில் சிண்டு முடிந்து தனித்தனியாகப்
பிரிப்பது இட்லி அவித்த பிறகு அரிசி மாவையும் உளுந்து மாவையும் தனியாகப்
பிரிக்கிற மாதிரி ஒரு வேலையாக இருக்கும்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஏப்ரல் 22, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: இன்னபிற
சனி, 16 ஏப்ரல், 2022
ஓரெழுத்து ஒரு மொழி
முழங்கியவர்: PNA Prasanna மணி: சனி, ஏப்ரல் 16, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: சொல்லாராய்ச்சி
திங்கள், 28 மார்ச், 2022
என்னைக் கவர்ந்த பாடல் - கோடி அருவி கொட்டுதே
படம்: மெஹந்தி சர்க்கஸ்
குரல்: பிரதீப் குமார், நித்யஸ்ரீ
இசை: ஷான் ரால்டன்
பாடல்: யுகபாரதி
கோடி அருவி கொட்டுதே
முழங்கியவர்: PNA Prasanna மணி: திங்கள், மார்ச் 28, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: என்னைக் கவர்ந்த பாடல்