திங்கள், 28 அக்டோபர், 2013

எங்கோ எதிலோ படித்தது

எழுந்துவிட்ட அதிகாலை

எழுப்பிவிட்ட கடிகாரம்

காத்திருக்கும் கடமை

இன்னும் உறங்கும் நண்பன்

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்

விரும்பிய இசைபாடும் குறுவட்டு

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்

நாளைய காலையின் விழிப்பிலாவது  
 
                 தாயின் , "மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாருஎனும் குரல் கேட்காதா 


என்ற எதிர்பார்ப்போடு..... 


இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்

மென்பொருள் வல்லுனன்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

மாதா உன் கோவிலில் - என்னைக் கவர்ந்த பாடல்


இசை: இளையராஜா
குரல்: ஜானகி
திரைப்படம்: அச்சாணி (1978)

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் (2 )
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (2 )
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே 
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (2 )
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே 
அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

பிள்ளைப பெறாத பெண்மை தாயானது (2 )
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது 
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
ம்ம்...ம்ம்..ம்ம்ம்........

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சாலமன் பாப்பையா - லியோனி ஓர் ஒப்பீடு

சாலமன் பாப்பையா - லியோனி

இது மதுரை - அது திண்டுக்கல்

இது சன் தொலைக்காட்சி - அது கலைஞர் தொலைக்காட்சி

இது கலை - அது அரசியல்

இது பட்டிமன்றம் - அது பாட்டுமன்றம்

இது அலசல், ஆராய்தல் - அது கிண்டல், நக்கல்

மொத்ததில் இது தமிழ் - அது தமிள்

நல்(ள்ளி)லிரவு

நள்ளிரவுத் தூக்கம்
நன்கு தொலைந்தவுடன்
படிக்கத் தொடங்கினேன்
பழைய பனுவலை.

பனுவல் படித்தால்
படுத்தவுடன் வருமாம்
தூக்கம்.

சொன்னதும் ஒரு பனுவல்தான்
இணையமல்ல.

தூக்கம் வந்ததோ இல்லையோ
வந்தது முத்தாய்ப்பற்ற
இந்த ஆக்கம்.