ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

பாடும் நிலா ஒரு நேர்த்தியாளர் - கையறு நிலைக் கட்டுரை

 
பாட்டுத் தலைவன் குறித்து எழுத வேண்டுமென்றால், எழுதிக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு செய்திகள். அவ்வளவும் வியப்பான செய்திகளே. அவர் பெற்றிறாத பிள்ளை நான். எனது பெரியப்பா என்றும் சொல்லலாம். பெற்றால்தான் பிள்ளையா என்ன? அவரது பாடல்களால் கட்டப்பட்டு ஈர்க்கப்பட்டபின் நான் அவரது பிள்ளை என சொல்வதில் பிழையில்லை. உண்மையில் அவரை நான் பாராமல் ஓர் ஆசிரியர் போல ஏற்றுக் கொண்டே பாடல் பயின்றனன். "ல, ள, ழ" உச்சரிப்புக்களை அவரது பாடல்களே, சிற்றூரில் பிறந்த எனக்கு உணர்த்தின. பிறவியில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரே மனிதர். ஆனால் நேரில் அவரைப் பார்க்காமலேயே என் பிறவி முடிந்து விட்டது. 
1. எல்லாக் கால கட்டத்திற்கும் இவரது பாடல்கள் உண்டு. 
2. பாடல் பாடுவதில் இவர் ஒரு நேர்த்தியாளர். பாடுவதாலேயே அவர் குரல் பயிற்சி பெற்று அவர் பாடும் பாடல்களுக்கு உதவியது. தவிர, அவர் பாடுவதற்கு தனியாகப் பயிற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை.
3. இவர் பாடும் பாடலில் அவர் செய்யும் தவறுகள் கூட அழகே.
4. தவறுகளை அவரே ஒப்புக்கொண்டு, அதைத் தவறு என்று சொல்பவர். அதைத் தவறென்று அறியாமல் பிறர் ஏதோ பாடலின் அணிக்கூறு (சங்கதி) என்றெண்ணிப் பாடுவதையும் அவரே செல்லச் சீற்றத்துடன் கூறுவார். அப்போதுதான் அது தவறு என்றே அனைவருக்கும் புலப்படும்.
5. எவ்வளவு உரக்க அல்லது தாழப் பாடினாலும் குரல் கட்டுப்பாட்டை இழக்காதவர். பாடும் பொழுது முகம் கோணாமல் இயல்பான சிரித்த முகத்தோடே இருப்பவர்.
6. புகழின் உச்சத்திலிருந்து இறங்காமல் இருப்பினும் அகம் பிடிக்காதவர். அதனாலேயே எல்லோர் அகத்திலும் இடம் பிடித்தவர்.
7. கலையில் அரசியல் செய்யாதவர். நிறைகுடம்.
8. நடிகர்களுக்கேற்ற குரல் மாற்றம், கதையின் சூழ்நிலை மாற்றம் பொறுத்து குரல் வேறுபடுத்துதலில் மன்னன்.
9. விருதுகள் இவருக்குக் கிடைத்தது, அந்த விருதுகளுக்குத்தான் பெருமை.
10. எனது சிற்றூர் மொழியில் சுருங்கச் சொன்னால் அவர் ஒரு பாட்டுச்சாமி. ஒரே ஒரு பாட்டுச்சாமிதான். இன்னொன்று வர இயலாது.

யானை தடவும் குருடன் போல் எனக்குத் தெரிந்த பத்தே வியப்புகளை இங்கு அடுக்கியுள்ளேன். இவர் இல்லாத உலகில் நாம் இருக்கிறோமே என்று உள்ளம் தவிக்கிறது.

"வீசிச் சென்று விந்தை செய்ய
பாச வலையில் பாடற் கொண்டு 
பாடிப் பறந்த பகலவப்  பாட்டுத்
தலைவரின் குரலில் தவறும் அழகே !!!"
                                                    - கையறுநிலைப்பா.

"நா.. பெத்தெடுத்திடாத முத்துமணித் தேரே
நா.. தத்தெடுத்திடாத தங்கமணிச் சீரே
ஒரு சொந்தமிருந்தும் பந்தமிருமிருந்தும் சொல்லவில்லையே..."

என்று என் பெரியப்பா என்னை "ஒரு பாட்டாலே..." சொல்லியழைக்கிறார். 
- கண்ணீருடன்...

வியாழன், 25 ஜூன், 2020

புலனச்செய்தி - பிறமொழிக் கலப்பிற்கு மன்னிக்க‌

1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.
2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.
3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.
4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்."இன்னும் கல்யாணம் ஆகலயா?""குழந்தைகள் இல்லையா?""இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?""ஏன் இன்னும் Car வாங்கவில்லை?"இது நமது பிரச்சினை இல்லைதானே!"
5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!
6. நண்பருடன் Taxiயில் சென்றால. இம்முறை  இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.
7. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.
8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.
9. நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள். அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.
10. யார்  உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்.
11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.
12. உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்."நீங்கள் பார்க்க  Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.
13. யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.
14. யாரும் தனக்கு Doctor Appointment  இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். "விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறலாம்.
15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.
16. கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.
17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.
18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து  பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.
19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

எழுத மறந்த கதை 2013

செம்மொழியில் கற்போம் சிசிஎன்ஏ (2013) என்று தொடர் எழுதலாம் என்று நினைத்து மறந்தே போன கதை. இப்பொழுது ஏனோ இதை எழுத விருப்பமில்லை.

"முன்னுரை:
அண்மையில் சிசிஎன்ஏ தேறிவிட்டேன். எனினும் அதிலுள்ள நுட்பங்களெல்லாம் தேர்வுக்காக மட்டும் படித்து, நிகழ்நேரப் பணிக்காக சரிவர படிக்கவில்லையோ என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. இவ்வாறு ஒரு தொடர் எழுதும் பொழுது தொழிற்நுட்பமும் படித்தாகிவிட்டது, கற்ற தமிழும் மறக்காமல் இருக்கும் என்ற ஓர் எண்ணமே உள்ளத்தில் தோன்றுகிறது. தமிழில் இதுபோன்ற ஒரு தொழில்நுட்பத் தொடர் அல்லது தொழில்நுட்ப நூல் செய்ய வேண்டுமென்பது எனது தீராத அவா. அதுவே இத்தொடர் எழுதக் காரணமாகும்.
இன்றைய நாட்களில் சிறு அலுவலகங்களில் கூட‌ வலையம்(Network) என்பது இன்றியமையாததாகி விட்டது. வலையத்தினை எவ்வாறு அமைப்பது, அதற்கான அமைவுகள் (Configuration) எவை என்பதைப் பற்றியும் இத்தொடரில் விளக்கமாகக் காணலாம்.
தொடருக்கு உள், தொழிற்நுட்ப விளக்கங்களுக்குச் செல்லும் முன், முதலில் வலைய வகைகளைப் பற்றி காணலாம்.
LAN, MAN, WAN, Internet, Intranet, extranet, wifi
சிஸ்கோவின் வலைய வித்தகர்களுக்கான சான்றிதழ்கள்.
Entry, Associate, Professional, Expert
Cisco icons & symbols

திங்கள், 16 மார்ச், 2020

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து - பழமொழி விளக்கம்

"பந்திக்கு முந்து படைக்குப் பிந்து" என்று ஒரு பழமொழி உண்டு. அதன் விளக்கமாக, பந்தியில் சென்று சீக்கிரம் சாப்பிட வேண்டும். படை என்றால் பின்னால் நின்று ஒளிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு விளையாட்டாக விளக்கத்தைச் சொல்வதுண்டு. ஆனால் அதன் பொருள் அஃதன்று.

அதன் பொருளை கீழே காண்போம். அதைக் கீழேயுள்ளது போன்று திருத்தி வாசிக்க வேண்டும்.

"பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்." அனைவரும் நினைப்பது போன்று இது ஒரு பழமொழியன்று. இது ஒரு விடுகதை. அதை "பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும். அது என்ன ?" என்று கேட்க வேண்டும்.

அதற்கான விடை கட்டை விரல் அல்லது பெருவிரல். 

பந்தியில் கட்டை விரல் முந்திச் சென்று தேவையானதை எடுத்து வாய்க்குள் உணவாகத் தள்ளுகிறது அதனால் பந்திக்கும் முந்தும் என்றும், படையில் முதன்மையான போர்க்கருவி வில்லும் அம்பும் ஆகும். வில்லில் கட்டைவிரலானது பின்புறமாக நாணை (வில்லின் கயிற்றை) இழுக்க உதவும. எவ்வளவு பின்னால் நாணானது இழுக்கப்படுகிறதோ அவ்வளது தொலைவு முன்னால் அம்பானது சென்று எதிராளியைத் தாக்குகிறது. ஆகையால் படைக்கும் பிந்தும் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆதலால்,

"பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்." - அது என்ன? "கட்டைவிரல்"