செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

கிறிஸ்தவர்கள் இல்லை - உலகம் இல்லை.

*கிறிஸ்தவர்கள் இல்லை - உலகம் இல்லை.*
 `~•~•~•~•~•~•~•~•~•~
 கண்டுபிடிப்பாளர்கள்:

 இரு சுழற்சி = *மேக் மிலன்.*
 பைக் = *ஜே.டெய்லர்.*
 ஆட்டோ= *ஜோனாதன் ஸ்கோபி.*
 கார் = *கார்ல் பென்ஸ்.*
 மோட்டார் கார்= *ஆஸ்டின்.*
 ஜீப் = *டபிள்யூ.  L. Zedson.*
 பேருந்து = *தங்க வாஸ்.*
 ஏரோ பிளேன்= *ரைட் பிரதர்ஸ்*
 ரயில் = *ரிச்சர்ட் ட்ரிவிட்டிக்.*
 டிராக்டர்= *ஜான் ஃப்ரோக்ளிச்.*
 JCB= *ஜோசப் சி பாம்ஃபோர்ட்.*
 பேட்டரி = *A.  வோல்ட்.*
 எலக்ட்ரிக்= *பெஜமின் பிராங்க்ளின்.*
 பல்ப்= *தாமஸ் எ எடிசன்.*
 தியானமோ= *எம் ஃபாரடே.*
 எரிவாயு இயந்திரம்= *டைமியர்.*
 சீல் எஞ்சின்= *ஆர் டிசீல்.*
 வெல்டர்= *எடிஷ் தாம்சன்.*
 ரயில்வே எஞ்சின் = *ஸ்டீபன் மகன்.*
 எல்பிஜி கேஸ்= *டாக்டர் வால்டர் டிஎஸ்*
 மைக் = *ஹார்ஸ் ஷார்ட்.*
 பேனா = *லூயிஸ் வாரர்மேன்.*
 இரும்புப் பெட்டி= *HW Sule.*
 போட்டிகள் = *ஜான் வாக்கர்.*
 கேமரா= *ஜான் கார்பெட்.*
 டிஜிட்டல் கேமரா= *ஸ்டீவன்.*
 ரேஸர்= *கிங்ஸ் ஜே ஜில்லெட்.*
 ரப்பர்= *சி குட் இயர்.*
 குளிர்சாதன பெட்டி= *ஜேம்ஸ் ஹாரிசன், அலெக்சாண்டர் கிட்சின்.*
 சேஃப்டி பின்= *வால்டர் ஹன்ட்.*
 தையல் இயந்திரம் = *பார்த்தலோம் டைமோனிவ்.*
 லென்ஸ் = *வெனிஸ் (வின்சி).*
 கண் கண்ணாடி= *சால்வினோ டி ஏ.*
 டி வி= *பேர்ட்.  ஜான் லோகி.*
 தொலைபேசி= *கிரஹாம்பெல் ஏ.*
 கணினி= *சார்லஸ் பாபேஸ்.*
 மொபைல்= *மார்ட்டின்.* கூப்பர்.
 SD கார்டு= *Rolnd Moreno.*
 வர்ணங்கள்= *ஷாலிமார்.*
 எஃகு= *ஹென்றி பெஸ்மர்.*
 சிமெண்ட்= *ஜோஸ்ப் அஸ்பாடின்.*
 டைல்ஸ்= *ஜெர்மன் மிஷனரிகள்.*
 Tiolet= *Thomas Crapper.*
 பேன்ட்= *ஜார்ஜ் பிரையன்.*
 சட்டை= *பியோன்ஸ்.*
 ஜீன் பண்ட்= *ஜேக்கப் தேவிஸ்.*
 பிரா= *மேரி டுகோக்.*
 கிரிக்கெட்= *WJ கிரேஸ்.*
 கைப்பந்து= *மோர்கன் வில்சன்.*
 கால் பந்து= *ராபர்ட் கேன்*
 பென்சிலின் = *ஒரு ஃப்ளெமிங்.*
 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை = *ஆர்க்கிபால்ட்.  ஹெக்டர் எம்*
 போலியோ= *ஜோனாஸ் சால்க்.*
 SmallPox = *Edward Jenner.*
 எக்ஸ்ரே= *வில்ஹெல்ம் ரஞ்சன்.*
 இன்சுலின்= *ஃபிரடெரிக் பான்டிக்.  சார்லஸ் எச் பெஸ்ட்.*
 Quinine= *pierra Joseph.*
 ஸ்டென்ட் ஹார்ட்= *ஜூலியோ பால்மாஸ்.*
 பிளாஸ்டர்= *Paul Beiersdorf.*
 மயக்க மருந்து= *வில்லியம் மார்டன்.*
 ஆந்த்ராக்ஸ்= *லூயிஸ் பாஸ்டர்.*
 கிருமி நாசினி= *ஜோசப் லிஸ்டர்.*
 செயற்கை இதயம்= *டென்டன் கூலி.*
 செயற்கை இடுப்பு = *ஜான்சார்ன்லி.*
 தோல்= *ஜான் எஃப். லோனிஸ்.*
 பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் = *கிரிகோரி பின்கஸ்.  மின் சுச்.*
 இரத்தமாற்றம் = *தாமஸ் ப்ளூடெல்.*
 காண்டாக்ட் லென்ஸ்= *அடால்ஃப் ஃபிக்.*
 இருமல் சொட்டுகள் = *ஜேம்ஸ் ஸ்மித்.*
 சிரிஞ்ச்= *கொலின் முர்டோக்*

 கிறிஸ்தவம் உலகிற்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறும் மற்ற சமூகத்தினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதை பதிவிட காரணம்.  யார் செய்கிறார்கள், யார் செய்ய மாட்டார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 ஒற்றை மனிதனிலும் உலகத்திலும் கிறிஸ்துவின் வல்லமையைக் காண கண்கள் திறக்கப்படட்டும்.

புதன், 27 ஜூலை, 2022

இளையராஜாவின் கல்யாணி ராகம்

இளையராஜா கல்யாணி ராகத்தில் அமைத்த பாடல்களில் மிகச் சாதாரணமானது ' அம்மா என்றழைக்காத உயிரில்லையே'

டாப் 10 எனது ரசனை தேர்வு

ஆறுதல் பரிசு
நான் என்பது நீயல்லவோ- சூரசம்ஹாரம்

10. மஞ்சள் வெயில் மாலை கட்டும்- நண்டு
9.சிறு கூட்டில உள்ள குயிலுக்கு- பாண்டி நாட்டு தங்கம்
8.கலைவாணியே உனைத்தானே- சிந்து பைரவி
7. வெள்ளைப் புறா ஒன்று- புதுக்கவிதை
6. வந்தாள் மகாலட்சுமியே- உயர்ந்த உள்ளம்
5. மலையோரம் மயிலு- ஒருவர் வாழும் ஆலயம்
4. நிற்பதுவே நடப்பதுவே- பாரதி
3. காற்றில் வரும் கீதமே- ஒரு நாள் ஒரு கனவு
2. ஜனனி ஜனனி- தாய் மூகாம்பிகை

முதலிடம்?

1. நதியில் ஆடும் பூவனம் - காதல் ஓவியம்

என்னுடைய அளவுகோல் படி

டாக்டர் ராமானுஜம்

திங்கள், 25 ஏப்ரல், 2022

தமிழ் மழை பாரீர்...!*

*தமிழ் மழை பாரீர்...!* 

ஏன் அடைமழை என்கிறோம்?

அடைமழை = வினைத்தொகை!  
அடைத்த மழை  
அடைக்கின்ற மழை  
அடைக்கும் மழை

விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை = அடை மழை! 
அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!

கனமழை வேறு! 
அடைமழை வேறு!  

தமிழில், 14 வகையான மழை உண்டு!

தமிழில், மழை!

1. மழை  
2. மாரி  
3. தூறல்  
4. சாரல்  
5. ஆலி  
6. சோனை  
7. பெயல்  
8. புயல்  
9. அடை (மழை)  
10. கன (மழை)  
11. ஆலங்கட்டி  
12. ஆழிமழை  
13. துளிமழை  
14. வருள்மழை

வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! 
ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!  

இயற்கை நுனித்த தமிழ்!

மழ = தமிழில் உரிச்சொல்!  
*மழ களிறு = இளமையான களிறு  
*மழவர் = இளைஞர்கள்

அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே..  
மழை எனும் சொல்! 
மழ + ஐ

இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை என்ற காரணப் பெயர்!

மழை வேறு / மாரி வேறு!  
அறிக தமிழ் நுட்பம்! இயற்கை!

மழை/மாரி ஒன்றா?

மழை = இள மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல!  

மாரி = சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல!

மார்+இ = மாரி!  
தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்!  

அப்படித்தான் மாரி+அம்மன் என்று ஆதிகுடிப் பெண், தெய்வமானாள்!

தமிழ்மொழி,  
பிறமொழி போல் அல்ல!  
வாழ்வியல் மிக்கது!

அட்டகாசம்...!

இன்னும் கொஞ்சம்...

1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது

2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..

3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்…...

·சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு.. (சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)  
சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்…..  
அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.  

சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்;  
சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்..மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்.

4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை..

அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..  

5. கனமழை -  துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்

6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை (இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்…. 

புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்).

7. பனிமழை - பனித்துளிகளே மழை போல பொழிவது. 
இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..

8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..

மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளச் சேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது.  

(அதனால்தான் இலக்கியங்களில் ‘ மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன).

சனி, 23 ஏப்ரல், 2022

நமது முன்னோர்கள் வகுத்த#நிலங்களின்_வகைகள்

நமது முன்னோர்கள் வகுத்த

#நிலங்களின்_வகைகள் அறிவீரா??

1. நிலம் (பொதுவாக சொல்வது)

2. கல்லாங்குத்து நிலம் - கற்கள் மிகுந்து காணப்படும் நிலம்

3. செம்பாட்டு நிலம் - செம்மண் நிலம்

4. மேய்ச்சல் நிலம் - கால்நடைகள் மேய்யும் நிலம்

5. வட்டகை நிலம் - சுற்றிலும் வேலியிடப்பட்ட நிலம்

6. அசும்பு -- வழுக்கு நிலம்

7. அடிசிற்புறம் - உணவிற்க்காக விடப்பட்ட மானிய நிலம்

8. அடுத்தூண் - பிழைப்புக்கு விடப்பட்ட நிலம்

9. அறப்புறம் - தருமச் செயல்களுக்கு வரிவிலக்குடன் விடப்பட்ட இடம்

10. ஆற்றுப்படுகை - நதி நீர் பாசனத்தில் உள்ள வண்டல் படுகை நிறைந்த நிலம்

11. இதை - புன்செய் சாகுபடிக்கான நிலம்

12. இறையிலி - வரி நீக்கப்பட்ட நிலம்

13. உவர்நீலம் - உப்புத்தன்மை கொண்ட நிலம்

14. உழவுகாடு - உழவுக்கேற்ற நிலம்

15. உள்ளடிநிலம் - ஏரியை அடுத்துள்ள நிலம்

16. ஊர்மானியம் - ஊரின் பொது ஊழியத்துக்காக விடப்பட்ட வரியில்லா நிலம்

17. ஊரிருக்கை - ஊரைச் சார்ந்த நிலம்

18. ஒருபோகு - ஒரே தன்மையை உடைய நிலம்

19. ஓராண்காணி - ஒருவனுக்கே உரிய நிலம்

20. கடவுளரிடன் - கோயிலுக்கு விடப்பட்ட இறையிலி நிலம்

21. கடறு - பாலை நிலம்

22. கடுந்தரை - இறுகிய நிலம்

23. கரம்பு - சாகுபடி செய்யாத நிலம்

24. கரம்பை - வறண்ட களிமண் நிலம்

25. கழனி / காணி - நன்செய் நிலம்

26. களர் - சேற்று நிலம்

27. காணியாட்சி - உரிமை நிலம்

28. காவிதிப்புரவு - அரசனால் காவிதைப்பட்டம் பெற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம்

29. கீழ்மடை - மடைநீர் இறுதியாகச் சென்று பாயும் நிலம்

31. கொத்துக்காடு - கொத்திப் பயிரிடுவதற்குரிய நிலம்

32. கொல்லை - முல்லை நிலம்

33. சாந்துப்புறம் - அரசனுக்குச் சந்தனம் கொடுத்து வருவதற்க்காக விடப்பட்ட இறையிலி நிலம்

34. சுரம் - வறண்ட பாலை நிலம்

35. சுவாஸ்தியம் - பரம்பரையாக வரும் நிலம்

36. செய்கால் - சாகுபடி நிலம்

37. செய்கால்கரம்பு - தரிசாக விடப்பட்ட நிலம்

38. செவல்காடு - செம்மண் நிலம்

39. தகர் - மேட்டு நிலம்

40. தண்பணை - மருத நிலம்

41. தரிசு - சாகுபடி செய்யப்படாமல் கிடக்கும் நிலம்

42. திருத்து - நன்செய் நிலம்

43. தினைப்புனம் - தினை வகைகள் விளையும் நிலம்

44. தோட்டக்கால் - கிணற்றுப் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்ப்டௌம் நிலம்

45. நத்தம் - கிராமத்தில் உள்ள மனை நிலம்

46. நதீமாதுருகம் - ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம்

47. நீர்நிலம் - நன்செய் நிலம்

48. நீராரம்பம் - நீர்பாசன வசதியுள்ள நிலம்

49. பங்குக்காணி - கூட்டுப்பாங்கான நிலம்

50. படிப்புறம் - கோயில் அருச்சகருக்கு அளிக்கப்படும் மானிய நிலம்

51. பயிரிலி - தரிசு நிலம்

52. பழந்தரை - நீண்ட நாள் சாகுபடியில் இருந்ததால் வளம் குன்றிய நிலம்

53. பள்ளக்காடு - தாழ்வான புன்செய் நிலம்

54. பற்றுக்கட்டு - குடியுரிமை நிலம்

55. பாதவக்காணி - கோயில் பணியாளர்களுக்குப் படியாகத் தரப்படும் நிலம்

56. பார் - கடினமான நிலம்

57. பாழ்நிலம் - விளைச்சலுக்கு உதவாத நிலம்

58. பிரமதாயம் - பிராமணருக்குத் தரப்படும் மானிய நிலம்

59. புரவு - அரசனால் அளிக்கப்பட்ட மானிய நிலம்

60. புழுதிக்காடு - புழுதியாக உழுத புன்செய் நிலம்

61. புழுதிபாடு - தரிசு நிலம்

62. புறணி - முல்லை நிலம்

63. புறம் - இறையிலி நிலம்

64. புறம்போக்கு - சாகுபடிக்கு ஏற்றதல்லாத அல்லது பொதுப் பயன்பாட்டுக்கு விடப்பட்ட தீர்வை விதிக்கப்படாத நிலம்

65. புறவு - முல்லை நிலம்

66. புன்செய் - மழை நீரைக் கொண்டு புன்செய்ப்பயிர் சாகுபடி செய்யும் நிலம்

67. புன்புலம் - தரிசு நிலம்

68. புன்னிலம் - வறண்ட, பயனற்ற நிலம்

69. பூசாவிருத்தி - கோயிற் பூசைக்கு விடப்பட்ட மானிய நிலம்

70. பூமி - தரை (நிலம்)

71. பொதுநிலம் - பிரிவினை செய்யப்படாத நிலம்

72. போடுகால் - தரிசு நிலம்

73. மஞ்சள்காணி - பெண்ணுக்குப் பெற்றோர் சீதனமாகத் தரும் நிலம்

74. மடப்புறம் - மடத்திற்க்கு விடப்பட்ட மானிய நிலம்

75. மனை - வீடு கட்டுவதற்க்கான நிலம்

76. மா - நிலம்

77. மானாவாரி - மழைநீரால் சாகுபடி செய்யப்படும் நிலம்

78. மானியம் - கோயில், நிருவாகம், அறச்செயல்கள் போன்றவற்றிற்கு முற்காலத்தில் வழங்கப்பட்ட வரியில்லாத நிலம்

79. முதைப்புனம் - நெடுங்காலம் பயன்பாட்டில் உள்ள நிலம்

80. மெல்லம்புலம்பு - நெய்தல் நிலம்

81. மென்பால் - மருத நிலம் / நெய்தல் நிலம்

82. மேட்டாங்காடு - புன்செய்ப் பயிர்கள் விளையும் மேட்டுப் பாங்கான நிலம்

83. வறுநிலம் - பாழ் நிலம்

84. வறும்புனம் - அறுவடைக்குப் பிறகு தரிசாக உள்ள புன்செய் நிலம்

85. வன்பார் - இறுகிய பாறை நிலம்

86. வன்பால் - பாலை நிலம்

87. வானம்பார்த்த பூமி - மழையை முழுவதுமாக நம்பியிருக்கும் நிலம்

88. விடுநிலம் - தரிசு நிலம்

89. வித்துப்பாடு - குறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்க்குரிய நிலம்

90. விதைப்பாடு - குறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்க்குரிய நிலம்

92. விருத்தி - ஒருவருடைய பிழைப்புக்கு மானியமாக விடப்பட்ட நிலம்

93. விளைநிலம் - பயிர் செய்யும் வளமுடைய நிலம்

94. வெங்கார் மண் - சூரிய வெப்பத்தால் சூடேறிய நிலம்

95. வெட்டுக்காடு - திருத்தியமைத்த காட்டு நிலம்

முன்னோர்களின் பேரறிவுக்கு இதனை விட பெரும் சான்று வேண்டுமா???

நன்றி....