இன்றைய நாட்களில் எது வாங்கினாலும், 5 முதல் 10 உரூபாய் முடிய அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள்: 044 24321438, 044 24321525
இந்த எண்கள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் உள்ள சட்டமுறை எடையளவுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குச் செல்லும். இது குறித்து அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்வார்.
அப்படி அதிகமான விலைக்கு விற்றால் குறைந்தபட்சம் 2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் முடிய தண்டத்தொகை விதிக்கப்படும். கடந்த சில நாட்களில் தென்சென்னையில் 63 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நன்றி: தினகரன்