செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

கனவுகள் - அழைக்கிறார் அன்பர் அப்துல் கலாம்

கனவுகள் - அழைக்கிறார் அன்பர் அப்துல் கலாம்

விழிகள் இரண்டு ‍வரும்
கனவுகள் வகை மூன்று

துயில் கனவு
பகல் கனவு
குறிக்கொள் கனவு

துயில் கனவு
மிகைப்பாடு அதிகம்
நடப்பது கடினம்.

பகல் கனவு
பைத்தியம் எனும்
பழிச்சொல் தரும்.

குறிக்கோள் கனவு
சரிவரக் கொண்டால்
கோள் மாற்றம் திண்ணம்.

வாருங்கள்
கண்கள் திறந்து
கோள் மாற்றக்
கனவு காண்போம்.

சனி, 19 ஆகஸ்ட், 2023

கனவைத் தேடி

அந்தி நேரத்து மணியோசை குயிலுடன் கூடிய கூவலுடன் இணைந்தே ஒலித்தது. மாலைப் பறவைகள் கூடு தேடிச் செல்லும் பொழுதில் படித்துறையில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான் மயிலன். அந்தி நேரத்தில் தானெழுதிய அகக்காண் அட்டைக் குறிப்புகளை கண்முன்னே கொணர்ந்து மூளையேற்றிக் கொள்தல் மயிலனின் வழக்கம்.

"கனவு மூவகைப்படும்: முதலாவது தூக்கத்தில் வருவது, அடுத்தது சோம்பலில் வரும் பகற்கனவு, மற்றொன்று குறிக்கோள் கனவு." எப்போதோ, யாரோ எழுதிய கவிதையை வாசித்தது உள்ளத்தில் உதித்தது மயிலனுக்கு.
1. நன்கு பயின்று பள்ளியில் முதல்வனாக வேண்டும்.
2. அருமையான வேலையினை எளிமையாக முடிக்க வேண்டும்.
3. நால்வருக்கு நன்மை செய்து நற்றோனாக வாழ வேண்டும்.
அகக்காண் அட்டைப் பதிவுகளை மீண்டும் ஒரு முறை படித்து ஏற்றிக் கொண்டான். பதிவுகளைப் படித்து முடித்த நேரம்,
"வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி" என்ற பாடல் ஒலிப்பானில் வரத் தொடங்கிற்று.
நீதி: குறிக்கோள் கனவை நாடோறும் பயின்று வரின் நிகழும்.

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

சார்பட்டா பரம்பரை - எழுத மறந்த ஒரு பதிவு

சார்பட்டா பரம்பரை எழுத மறந்த ஒரு பதிவு :)  எழுதிய குறிப்புகளை வளர்ந்து திறனாய்வினை வாசிக்க

செம்மையான படம்
ரோசமான ஆங்கிலக் குத்துச்சண்டை
ஒளிக்கருவியின் கோணம்
மென்பொருள் இசை
இதுதான் உண்மையான வாழ்வியல்.
தொழிற்நுட்பச் செம்மை சிறப்பு.
நீலச்சட்டை மாறன் வலையொளியில் சொன்னாற் போன்று திரையரங்கில் வந்திருந்தால் வேறு வண்ணம் இருந்திருக்கும்.
காலா, கபாலி என்ற வீண் படங்களை இயக்கியவரா இப்படத்தின் இயக்குனர் என்று திறனாய்வர்களையே புருவமுயர்த்த வைக்கும்.
பசுபதி - பொழிச்சலூரார்
ஆர்யா
கலையரசன்
ஜான்விஜய்
காளி வெங்கட்
கைப்பாடம் கால்பாடம்
1:40 அருமை. அதன்பின் அரசியல் DTS ஒலிச்செறிவில் விருமாண்டி வாசம்.
புகைப்பூஞ்சுருள் (பீடி) தாத்தா வந்து பயிற்சி கொடுத்து வாகை சூட வைக்கிறார்.
தோல்வியிலிருந்து திரும்பி வர தன்னம்பிக்கை பாடம் தருகிறது படம்.
உனக்குன்னு காலம் ஒன்னும் வராது. நீதான் உனக்கான காலத்த உருவாக்கிக்கணும்.
தங்கதுரையில் ஒலியாடல்.