செவ்வாய், 23 டிசம்பர், 2008

மாலை உலா

மாலை உலா

புது வேலைக்குச் சென்ற பிறகு கிடைத்த மாலை வேளையில் மனைவியுடன் பாட்டுக்கச்சேரிக்குச் சென்றேன். ஆனால் அது ஆடலும் பாடலுமாம். (இப்போதெல்லாம் அப்படித்தான் அழைக்கிறார்கள்.) திருவிழா என்றாலே இப்படியெல்லாம் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது அல்லவா. இதில் வரும் கன்னட பாடல்களை விட நடனங்களே மிகவும் சுவைக்கப்படுகின்றன. என் மனைவியும் கூட "அடுத்து பாடினா வீட்டுக்குப் போகலாம்;ஆடினா பார்க்கலாம்." என்றுதான் சொன்னாள்.

இது கன்னடர்கள் திருவிழாவாதலால் கன்னட ஆடலும் பாடலும் பார்த்தோம். இந்த புதுயுகத்தில் இதெல்லாம் பார்ப்பவர்கள் குறைவு என்பது கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தே அறிந்து கொண்டேன்.

"ஜிங்கமெரினா" இப்படித்தான் உச்சரிக்கிறார்கள். இதுதான் இப்போழுது இங்கு முதன்மைப்பாடல். இதற்கு நடனமாடிய இளைஞர் நன்கு உடல் வளைத்து ஆடியதை அனைவரும் சுவைத்தனர். நமது தமிழ்ப்பாடல்களைச் சுட்டு சில பாடல்கள் போட்டார்கள். ஒரு மாலைப் பொழுதை சற்றே இனிமையாகக் கழித்த மகிழ்வில் நானும் மனைவியும் வீடு திரும்பினோம்.

திங்கள், 22 டிசம்பர், 2008

பாராட்டும் பொன்மனம்

பாராட்டும் பொன்மனம்.

நண்பர் இறீ கலியாண இராமன்1 (கடைசியாக நண்பர் பெயரை தமிழில் பெய்தாகி விட்டோம்.) ஏரிகளின் நாட்டிலிருந்து2 மென் தொலைபேசினார்3 எளிமையாக; அருமையாக. எனது வலைப்பூக்களைப்4 பற்றியும் பேச்செழுந்தது. வலைத் தோட்டத்தைப் பாராட்டினார். இது போன்று தொலைவிலுள்ள நண்பர்கள் பேசும் பொழுது உள்ளம் புளகாங்கிதம்5 அடைகிறது. (இதைப் படித்தால் கூட புளகாங்கிதம் என்பது பெரிய வார்த்தை என்பார் முற்சொன்னவர்.)பாராட்டியதோடன்றி தொடர்ந்து மின்னஞ்சலும், கருத்துரைகளும் கொண்டு எம் புகழை அள்ளித் தெளிக்கிறார். எம் புகழ் என்பது எம‌க்கு மட்டுமல்ல, எம்மைச் சார்ந்தவர்களுக்கும், எம்மைக் கொணர்ந்த தமிழுக்கும் உரியதாகவே கருதுகிறோம்.

இது போன்ற புகழ்ச்சிகளைக் காணும் பொழுது புளகாங்கிதம் என்பதுகூட‌ வெறும் வார்த்தைதான் என்றே எண்ணத் தோன்றுகிறது. நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை இவ்வார்த்தையால் நிறைவு செய்ய முடியாது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இவர் அனுப்பிய மின்னஞ்சல் பார்த்த எம் இளவல் அறிவு "அண்ணே!! ஒன்னயப்பத்தி இப்டி பாராட்டிப் பேசுறாறே.. அருமை." என்று கைபேசினார்6  இது போன்று பாராட்டும் பொன்மனம் உரியவருகளுக்கே வரும். இத்தகையோர் இருப்பின் அழகான எம்தமிழ் கொண்டு அறிவியல் நோக்கிப் பயணிக்கும் இவ்வுலகைக் கட்டியிழுப்போம். நன்றி நண்ப. உம் பாராட்டும் பொன்மனத்திற்கு நன்றி அன்ப. தொடர்ந்து கருத்துரைகள் இடுக. ஆதரவு தருக.

- பெருங்கோன்.பா.நி..பிரசன்னா.

1Sri Kalyana Raman

2Finland

3Talking through VOIP

4Blog

5Ecstacy

6Talking over the mobile

சனி, 20 டிசம்பர், 2008

நான் கடவுள் வருகிறதாம் - நம்புவோம்.

இதோ வரும் அதோ வரும் என்று எதிர் பார்க்கப்பட்ட "நான் கடவுள்" பொங்கலுக்கு வரப்போகிறதாம். (நம்புவோம்.) ஆரியா குரல்1 கொடுத்து விட்டாராம். தொடுதல் வேலைகள்2 இன்னும் இருக்கின்றனவாம். படம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனாலும் இன்னுமும் வேலைகள் மெதுவாகத்தான் இருக்கின்றன. முதலில் அஜித், மீரா ஜாஸ்மின் நடித்தார்கள்.

--------
அஜித்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீக்கப்பட்டார். அவரிடமிருந்து கொடுத்த முன்பணம்3 சண்டையிட்டுப் பிடுங்கப்பட்டது. அதற்குப்பின் அவர் நடித்த பல படங்கள் வெளியாகி விட்டன. பிறகு ஆரியா வந்தார். நாயகிகள் பாவனா,கார்த்திகா என்று பலர் மாறினர். பின்பு பூஜா ஆரியா மேல் கொண்ட அன்பால் இப்படத்தை ஏற்றுக் கொண்டார். அவர் பிச்சைக்கார பெண்ணாக நடிக்கிறார்.

--------

ஏறக்குறைய கலைஞர்கள் நிறையவே மாறிவிட்டார்கள். பாலாவிற்கு இது நான்காம் படம். இப்படத்திற்கு அவர் நாயகனின் பெயர் வைக்கவில்லை. (முந்தைய படங்களின் தலைப்பும் நாயகனின் பெயரும் ஒன்றே என்றறிக. சேது, நந்தா. பிதாமகன் விதிவிலக்கு.)

பாலாவைத் தூக்கி வைத்தாடும் குழுவே இப்படத்தில் வேலை செய்கிறது. எடுத்துக்காட்டு துணை இயக்குநர் சிங்கப்புலி.

--------

சன் தொலைக்காட்சியின் ஆதரவினை பிதாமகன் வெளிவந்த நேரத்திற்கு சற்று பின்னால் இழந்தவர் பாலா. ஆக இப்படத்திற்கு அதன் ஆதரவும் இருக்காது. எனவே அதன் போட்டி அலைவரிசைகள்4 இப்படத்தின் பின்னால் ஓடுவர் என்பது திண்ணம். எது எப்படியோ தயாரிப்பாளரும், சுவைஞர்களும்5 தப்புவார்களா? இல்லையேல் பைத்தியம் பிடித்து ஐயோ கடவுளே என்பார்களா? "நான் கடவுள்" வெளியானால்தான் விடை கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் எடுக்கும் அளவுக்கு அப்படியென்ன இது "தசாவதாரத்தை" விட பெரிய படமா? பாலாதான் விடை சொல்ல வேண்டும். சொல்வாரா?

1Dubbing

2Touch-up

3Advance

4Channels

5Fans

பதிவிறக்கிப்படிக்க கீழே சொடுக்கவும்.

http://pnaprasanna.blog.co.in/files/2008/12/naan-kadavul.pdf

வியாழன், 18 டிசம்பர், 2008

இரண்டுகால் இழிமா

இரண்டுகால் இழிமா1

இவன் ஒரிழிமா. இவன் பெயர் எழுதக்கூட எம் தமிழ் கூசுகிறது.

நான்கு கால் மாக்களைக்கூட நாம் நன்கு பழக்கிவிடுகிறோம். ஆனால் இவனைப் பாருங்கள்!! "அச்சுறுத்துதல்2 பழக அன்னையிடம் ஆசி. நான் வாழ விரும்புகிறேன். நான் பாகித்தானியந்தான். எனக்கு எந்நாட்டிடமிருந்து உதவி தேவை." என்றெல்லாம் இவனைப்பற்றி அன்றாடம் செய்திகள்.

குறிப்பிட்ட இனத்தவர்கள்3 கூர் மூளைக்காரர்கள்தாம். நாடு போற்றும் நல்லிசைமைப்பாளர் ஏ.ஆர்.இரகுமான், அண்ணல் அப்துல் கலாம் அவர்கள், அண்மையில் உலகைக் கலக்கிய ஒபாமா அனைவருமே குறிப்பிட்ட இனத்தவர்கள்தாம். இவர்களெல்லாம் நல்வழியில் தம் சிந்தையினைச் செலுத்தியமையால் பெயர் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இவ்விழிமா?

இவனையும் பெற்றெடுத்தவள் ஒரு தாயா? இல்லை பேயா? இவனைக் முறையாகக் கருத்தாங்கி பெற்றாளா? அல்லது பிணக்குவியலுடன் புணர்ந்து பெற்றாளா? இவ்விழிமாக்கள் அரசாண்டால் பிணங்கள்தாம் பண்டமாற்றுக்கு பயன்படுத்த வேண்டும் போலும். இவ்விழிமாவைப் பார்த்து அனைவரும் கேட்க விரும்பும் ஒரு கேள்வி. "எல்லோரையும் கொல்வது எளிது. எல்லோரையும் கொன்று விட்டு ஆளில்லை என்றால் நிலவுக்குச் செல்வீர்களா இழிவினத்தோரே4?" என்பதுதான்.

எவ்வளவு பொருள் வீண்5. எவ்வளவு தருணம் வீண். இவன் அணிந்திருக்கும் உடையினைப் பாருங்கள்! ஏதோ வாரவிடுமுறை வடநாட்டு மென்பொறிஞன்6 போல் இருக்கிறது. இவனது காலணிகள் மற்றும் உடைகள் உயர்தரமானவை. கையில் இருக்கும் துப்பாக்கி மட்டும் இவனிழி பண்பு உணர்த்துவதாயிருக்கிறது.

இதையெல்லாம் இவன் இறை7 ஏற்குமா? மறை8 ஏற்குமா? இது போன்ற இழி செயல்களில் ஈடுபடுபவர்கள் எதற்கும் உதவாத கோழைகள். இவர்களால் இவர்கள் இனத்திற்கு கேடு. ஐயோ கேடு. ஏழெழு தலைமுறைக்கும் பெருங்கேடு.

அரபு நாடுகளில் பெண்களைத் தவறாகத் தீண்டினால்கூட ஒறுத்தல்9 கடுமையாக இருக்கும். திருடியவனின் கைவிரல்கள் வெட்டுறும். இவனை என் செய்வார்கள்? இவ்விழிமாக்களுக்கு தரும் ஒறுத்தல் பிற இழிமாக்களுக்கு பாடம் புகட்டும் வண்ணம் இருக்க வேண்டும்.
பழங்காலத்தில் செய்வது போன்று கழுவிலேற்ற10 வேண்டும். அல்லது இவர்களைக் கொல்வதற்கு மாறாக தாமாகவே சாவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.(உணவு தரக்கூடாது. நீர் தரக்கூடாது. யாரும் பேசக்கூடாது. அவர்களையும் பேசவிடக்கூடாது. செம்மையாக‌ அடித்துத் துவைத்து தொங்க விட்டுவிட வேண்டும். இழிமாக்களுக்காக என்னெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது பாருங்கள்!!) ஏனெனில் இவ்விழிமாக்கள் நன்றாக மூளைச்சலவை11 செய்யப்பட்டவர்கள். இவர்களை மீண்டும் மூளைச்சலவை செய்து நல்வழிப்படுத்துவதென்பது கனவில் மட்டுமே நிகழும். எது செய்கிறோமோ இல்லையோ உறுதியாக பொதுமன்னிப்பு வழங்கக் கூடாது.

காந்தியடிகள் என்ன நினைத்துச் சொன்னாரோ தெரியவில்லை. அவர்கூற்று இதுதான். "நான் சொல்வதை மட்டும் கேட்கும் உலகம் கிடைத்தால்12, ஒரே நாளில் அச்சுறுத்தும் தன்மையினை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன்."

அன்பே உருவாகிய இயேசு பெருமான் காலத்தில் இவ்வச்சுறுத்தற்தன்மை இருந்தத‌ற்கான வரலாற்றுச் சான்றுகள்13 நம்மிடையே இல்லை. இயேசு பெருமான் கூட இவ்விழிமாக்களை மன்னிக்க மாட்டார்.

இவ்வினத்தோர் பெரும் மூளைக்காரர்கள்தாம். பெருஞ்செல்வந்தர்கள்தாம். அவை அழிவிற்கு, இழிவிற்கு பயன்பட்டு வீணாகின்றது. இப்படியெல்லாம் நிகழ்வதால், பேருந்து நிலையத்தில் மணி கேட்கும் இவ்வின சிறுவனையும் நாம் ஐயுறவேண்டியிருக்கிறது.14 இழிமாக்களால் நம் வாழ்வில் என்ன ஒரு அமைதியின்மை15! !

பதிவிறக்கிப் படிக்க கீழே சொடுக்கவும்.

http://pnaprasanna.blog.co.in/files/2008/12/izhima.pdf

1மா என்றால் விலங்கு. இழிமா என்றால் இழி விலங்கு. animal

2 Terrorism

3 Muslims

4 Waste people

5 Waste

6 Software Engineer

7 Allah

8 Qur-on

9 Punishment

10கழுமரம் என்பது அந்நாட்களில் மரண ஒறுத்தலுக்கான மரம். இந்நாளைய சிறுவர்களுக்கென்றால் கல்லை மட்டும்... பாட்டில் (தசாவதாரம்) கமலஹாசனைக் கட்டியிருக்கும் மரம்.

11 brainwash

12 Dictatorship

13 Historic evidences

14Doubt, suspicious

15 Terror

செவ்வாய், 16 டிசம்பர், 2008

என்னைக் கவர்ந்த பாடல்

என்னைக்கவர்ந்த பாடல்


படம்: உழவன்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பாடல்: வாலி

நடிப்பு: பிரபு, பானுப்ரியா, ரம்பா

இசை: .ஆர்.ரஹ்மான்

இயக்கம்: கதிர்

பல்லவி

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ

கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ

சிரிப்பு மல்லிகைப்பூ


சிறுகைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ-அவள்

கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ

மைவிழி ஜாடைகள் முல்லைப்பூ

மணக்கும் சந்தனப்பூ


சித்திரமேனி தாழம்பூ

சேலையணியும் ஜாதிப்பூ

சிற்றிடை மீது வாழைப்பூ

ஜொலிக்கும் செண்பகப்பூ - பெண்ணல்ல...


சரணம் 1

தென்றலைப் போல மிதப்பவள் -எனைத்

தழுவக் காத்துக் கிடப்பவள்

செந்தமிழ்நாடுத் திருமகள் -எந்தன்

தாய்க்கு வாய்த்த மருமகள்.

சிந்தையில் தாவும் பூங்கிளி -அவள்

சொல்லிடும் வார்த்தை தேன் துளி

அஞ்சுகம் போல இருப்பவள் -கொட்டும்

அருவி போலச் சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து

நடையைப் பழகும் பூந்தேரு

மெட்டியைக் காலில் நான் மாட்ட‌

மயங்கும் பூங்கொடி - பெண்ணல்ல...

சரணம் 2

சித்திரைமாத நிலவொளி -அவள்

சில்லென தீண்டும் பனித்துளி

கொஞ்சிடும் பாத‌ கொலுசுகள் -அவை

கொட்டிடும் காதல் முரசுகள்

பழத்தைப்போல இருப்பவள் -வெல்லப்

பாகைப் போல இனிப்பவள் -சின்ன

மைவிழி மெல்லத்திறப்பவள் -அதில்

மன்மதராகம் படிப்பவள்

உச்சியில் வாசனைப்பூ முடித்து

உலகம் அளக்கும் பூந்தோட்டம்

மெத்தையில் நானும் சீராட்ட‌

பிறந்த மோகனம். - பெண்ணல்ல...