புதன், 25 ஜனவரி, 2012

நண்பன் தரவரிசை

ஒரு வழியாக நண்பன் பார்த்தாகி விட்டது. திறனாய்வெல்லாம் இணையத்தில் ஏற்கனவே நிறைய வந்து விட்டதால் அதில் நடித்துள்ள நடிகர்களின் தரத்தினை வரிசைப் படுத்துகிறேன். அவ்வளவே....

தரம் 1: சத்யராசு
தரம் 2: சத்யன்
தரம் 3: இற்றிகாந்த்
தரம் 4: சீவா
தரம் 5: விசய்

சனி, 21 ஜனவரி, 2012

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: மிஸ்டர் மெட்ராஸ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: வித்யாசாகர்
நடிப்பு: பிரபு, சுகன்யா

பல்லவி

பூங்காற்று வீசும் பொன்மாலை நேரம்
காதோடு ஏதோ கூறாமல் கூறும்.
உச்சிவானமெங்கும் ஒடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னைத் தொட்டுவிட்டுப் போகும்.- பூங்காற்று

சரணம் 1

கோலமிட்ட வீடு என்றும் கோயில் என்றாகும்
கோயில் தன்னை நாடிவந்தால் வாழ்க்கை நன்றாகும்.
வேலைவாய்ப்பொன்று தேடினேன். தேடி நாள்தோறும் ஓடினேன்
தெய்வம் என்பாடு பார்த்தது - இங்கு எனைக் கொண்டு சேர்த்தது.
வேதனை யாவும் சோதனை யாவும் நேற்றுடன் தீர்ந்தது - பூங்காற்று

சரணம் 2

நானும் இந்த வீட்டைச் சேர்ந்த ஜீவன் என்றானேன்.
இங்கே உள்ள யாவரோடும் நானும் ஒன்றானேன்
வீட்டின் சந்தோஷம் பொங்கவே பாட்டு எந்நாளும் பாடுவேன்
அன்பு பாராட்டும் யாருக்கும் நன்றி என்பாட்டில் கூறுவேன்.
பூமியில் நானும் நேரினில் காணும் சொர்கமே வீடுதான் - பூங்காற்று

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: மறுபடியும்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
இயக்கம்: பாலு மகேந்திரா
நடிப்பு: ரேவதி, அரவிந்தசாமி

பல்லவி

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் - தமிழ்
கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன்மீது பண் பாடும் - நலம்

சரணம் 1

மனிதர்கள் சில நேரம் நிறமாறலாம்.
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் - எழுதிய
அன்பு இலக்கியம் தவறாகலாம்.
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே - நலம்

சரணம் 2

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
எழுவதும் பின்பு விழுவதும் இயல்பானது.
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன் - நலம்

செவ்வாய், 17 ஜனவரி, 2012

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: இளமைக் காலங்கள்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: இளையராஜா
பல்லவி
ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே – 2
சரணம் 1
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும் -2
உன் வாசலில் என்னைக் கோலம் இடு
இல்லையென்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே.. ஏ...
உன் போல என் ஆசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோணி - ஈரமான
சரணம் 2
நேரம் கூடி வந்த வேளை நீ
நெஞ்சை மூடி வைத்த கோழை – 2
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை
என் காதலி.. இ..
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து -ஈரமான