செவ்வாய், 8 செப்டம்பர், 2009

திகம்பர சாமியார் 1950 - அரிய செய்தி தமிழில் முதன்முறையாக‌


1950ல் வெளிவந்த திகம்பர சாமியார் என்னும் இப்படத்தில் எம்.என்.நம்பியார் ஒன்பது தோற்றங்களில் வந்திருக்கிறார். இது வி.சி.கணேசன் ஒன்பது தோற்றங்களில் நடித்து வெளிவந்த நவராத்திரி திரைப்படத்திற்கு முன்பே வந்தபடம்.

அரிதான இப்படம் இப்பொழுது எங்கும் காணக்கிடைக்காதது பெருவியப்பே. இப்படம் அந்நாட்களில் பெரும் பெயர் பெற்றிருக்கிறது.

இணையத்திலும் கூட காணக்கிடைக்காத இதைப்பற்றி அண்மையில் நடிகை மனோரமா கூறுகையில்தான் சில செய்திகள் தெரியவந்தன.

எழுத்தாளர் இராண்டார் கை இந்து நாளிதழில் இதைப்பற்றி எழுதியிருந்த கட்டுரை தேடுபொறி உதவியுடன் சிக்கியது. அதைத்தழுவி எழுதப்பட்டதே இக்கட்டுரை. அதைத்தவிர பிற செய்திகளையும் எடுத்தாண்டிருக்கிறேன்.

இந்தப்படம் வெளிவந்த ஆண்டில் (1950) 13 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய புதினம் இது அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற துப்பறியும் கதையாகும்.

இப்பொழுது பலராலும் பார்க்க விரும்பும் ஒருபடமாக இது விளங்கினாலும், அரிதான இப்படம் இப்பொழுது எங்குமே கிடைக்கவில்லை. யாரிடமாவது இருப்பின் மின்மடலனுப்பவும்.

தமிழில் வெளிவந்த இப்படத்தினைப் பற்றி செய்திகள் அனைத்து இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைப்பது அடுத்து எழும் விந்தை.

இதில் ஒரு நம்பியார் மட்டுமே வந்தாலும் அவர் வெவ்வேறு தோற்றங்களில் வந்து கடத்தப்பட்ட கதையுடைத்தலைவியினை தேடுவார். அண்மையில் இதைப்பற்றிப் பேசிய மனோரமா இதில் நம்பியார் 15 தோற்றங்களில் வந்திருக்கிறார் என்ற செய்தினைச் சொல்லியிருக்கிறார்.

மார்டன் தியேட்டர்சில் எடுக்கப்பட்ட இப்படம் கும்பகோணம், தஞ்சாவூர்,மன்னார்குடி ஆகிய இடங்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் நம்பியார் காவல்துறை மறைவு உளவாளியாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பொதிகைத் தொலைக்காட்சியில் மட்டுமே உள்ள இத்திரைப்படம் எப்பொழுதாவது ஒளிபரப்புச் செய்யப்படும். பழங்காலத்தில் வந்த படமாதலால் சிலர் இதில் நம்பியார் பதினொரு தோற்றங்களில் வந்திருக்கிறார் என்றும் புதுச்செய்தி சொல்லிவருகின்றனர் இக்காலத் தலைமுறையினருக்கு.

மனோரமா அக்கால நடிகை என்பதால் அவர் சொல்வதை மட்டும் வைத்துப்பார்த்தால் எம்.என்.நம்பியார் 15 தோற்றங்களில் வந்தார் என்பதை நம்பலாம்.

பல தோற்றங்களில் வந்தாலும், இத்தோற்றங்கள் பெரிதும் பெயர் பெற்றவையாம்.
காதுகேளாத சித்துவேலை செய்பவன், அரபுநாட்டு வணிகன், தொழிலதிபன், நாதசுர கலைஞன், நிலமுள்ள பெருஞ்செல்வந்தன், அஞ்சல்காரன்.

குமாரி கமலா நடமாடும் புகழ்பெற்ற "நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே..." பாடல் இப்படத்தில் இடம்பெற்றதே. அந்நாளைய வடமொழிப்பாடல்களிலிருந்து மூன்று பாடல்கள் சுடப்பட்டு இதில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது துணைச்செய்தி.

இராமநாதன், சுப்பையா நாயுடு இசையமைத்துள்ள இப்படத்தில் நடித்த இன்னபிற கலைஞர்கள்:

எம்.சி.சக்கரபாணி, ஏ.கருணாநிதி, சி.கே.சரசுவதி,லட்சுமி பிரபா, டி.பாலசுப்ரமண்யம், தனலட்சுமி, டி.கே.இராமசந்திரன், ஏழுமலை.

இப்படத்தை இக்காலத்தலைமுறையினர் வெகுசிலரே பார்த்திருக்கின்றனர். பார்த்தவர்களும் எத்தனை தோற்றம் என்று சரிவர கூறவில்லை. T.R.சுந்தரம் இயக்கிய இப்படத்தினை, நான் நம்பியாரின் தோற்றங்களை எண்ணும் வண்ணம் பார்க்க விரும்புகிறேன். 15 தோற்றங்கள் எனில் அதுதான் உலக சாதனை. உலகநாயகன் செய்தது அல்ல.

10 Comments:

கல்லுளி மங்கன் said...

அருமையான செய்தி. நல்ல நடை. நானும் படம் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது.

rocky said...

நான் பொதிகைல நாதர் முடி... பாட்டு கேட்டிருக்கறேன். ஆனா எத்தன நம்பியார்ன்னு பாக்கலையே...

கடவுளன் said...

உண்மையிலேயே அரிய செய்திதான். தமிழில் இந்தப்படத்தைப் பற்றி செய்திகளே இல்லையே. தேடுபொறி (கூகுள்) உங்களைத்தான் தேடப்போகுது. ம்ம்ம்..

வில்லன் said...

இந்தமாதிரி கதையெல்லாம் நீங்க சொன்னாத்தான் தெரியுது. ம்.. கலக்குறீங்க...

தூயா (Thooya) said...

எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நாதர் முடி பாட்டு மட்டுந்தான்...

P N A Prasanna said...

நாதர் முடி.. பாட்டை எல்லாருமே கேட்டிருப்போம். அது அவ்வளவு புகழ்பெற்றது.

வேறு செய்திகளிலிருந்தால் கருத்துரையிடவும்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

கதாபாத்திரம் ஒன்றுதான். வேடங்கள் அதிகம். விறுவிறுப்பான படம். தொலைக்காட்சிகளில் போடுகிறார்கள். சி.டி. அல்லது டி.வி.டி யாராவது வெளியிட்டால் பிரயோஜனமாக இருக்கும்

sivaraman said...

இந்த படத்தில் நம்பியார் 11 வேடங்களில் நடித்துள்ளார். 15 அல்ல. இந்த திரைப்படத்தின் உரிமை ஜெயா டிவி யிடமும் உள்ளது.

வால்பையன் said...

எனக்கும் அந்த படத்தை பார்க்கனும்னு தோணுது!

Ravikumar Tirupur said...

இப்போது ஜெயா மூவிஸ்ல் இந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது. நம்பியாரின் நடிப்பு அசத்தலாக இருக்கிறது