என்னை மட்டுமல்ல. பல இசை விரும்பிகளையும் கவர்ந்தவர் இசையமைப்பாளர் இமான். அதற்கு அவரது இசை மட்டும் காரணமல்ல. அவரது பண்பும்தான்.
அண்மையில் இவர் இசையில் வெளிவந்துள்ள படம் வலியவன். அதில் கொஞ்சம் நேரம் மழை வரும் பாடலின் இசை என்னை மிகவும் கவர்ந்தது. எங்கேயோ கேட்ட பாடல் போல இருக்கிறதே என்று நினைத்துப்பார்த்தால் இந்தப் பழைய பாடல் நினைவுக்கு வந்தது. இந்தப்பாடல் நியாயத் தராசு படத்தில் சங்கர் இசையில் 11-08-1989இல் வெளிவந்த வெண்ணிலா என்னோடு வந்து ஆடவா பாடலைப் போலவே இருக்கிறது.
6 Comments:
இமான் மேற்கத்திய இசையமைப்பாளரிடமிருந்து களவாடியிருப்பார். 1989இல் சங்கர் என்பவர் ஏற்கெனவே களவாடியது அவருக்கு தெரியாம இருந்திருக்கிறது.
ஒரே தாளக்கட்டு என்பதைத் தவிர வேறு ஒற்றுமை இல்லை. ஆனால் இது இரண்டுமே ஆங்கில ராக் இசையின் தமிழ் வடிவம் என்பதால் ஒன்றுபோலவே உங்களுக்குத் தோன்றுகிறது. சங்கர் கணேஷின் வெண்ணிலா என்னோடு ஆட வா அக்னி நட்சத்திரம் ராஜாதி ராஜா பாடலுக்கு போட்டியாக வந்தது அப்போது. பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. ஆனால் அதைவிட இது கொஞ்சம் நல்ல தாளம் கொண்டது.
நானும் இமான் விரும்பிதான். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
நன்றி காரிகன்.
வேகநகரி கருத்தினை சிரிப்புடன் சுவைக்கிறேன்.
வேகநகரி கருத்தினை சிரிப்புடன் சுவைக்கிறேன்.
வேகநகரி கருத்தினை சிரிப்புடன் சுவைக்கிறேன்.
Post a Comment