சனி, 31 டிசம்பர், 2011

என்னைக் கவர்ந்த பாடல்


படம்: சிகரம்
பாடல்: வைரமுத்து
இசைய‌மைத்துப் பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
நடிப்பு: இராதா, எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

பல்லவி

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னைத் தொட ஏணி இல்லை - வண்ணம்.

சரணம் 1

பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை - 2
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால்
சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை. - வண்ணம்

சரணம் 2

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி- 2
கன்னி உன்னைப் பாத்திருப்பேன்
கால் கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
மேகம் போல் நான் மிதப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன். - வண்ணம்

சனி, 15 அக்டோபர், 2011

கொடுக்கப்பட்டதை விட அதிக விலையா? எந்த எண்ணுக்கு அழைப்பது?


இன்றைய நாட்களில் எது வாங்கினாலும், 5 முதல் 10 உரூபாய் முடிய அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக அழைக்க வேண்டிய தொலைபேசி எண்க‌ள்: 044‍ 24321438, 044 24321525

இந்த எண்க‌ள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் உள்ள சட்டமுறை எடையளவுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குச் செல்லும். இது குறித்து அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்வார். 

அப்படி அதிகமான விலைக்கு விற்றால் குறைந்தபட்சம் 2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 25 ஆயிரம் முடிய தண்டத்தொகை விதிக்கப்படும். கடந்த சில நாட்களில் தென்சென்னையில் 63 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நன்றி: தினகரன்

சனி, 1 அக்டோபர், 2011

என்னைக் கவர்ந்த பாடல்பாடல்: இஞ்சி இடுப்பழகி...
பாடியவர்கள்: கமல்ஹாசன், எஸ்.ஜானகி
படம்: தேவர்மகன்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
குறிப்பு: எஸ்.ஜானகிக்கு நாட்டின் மிக உயரிய விருது கிடைத்த பாடல்

பல்லவி:

இஞ்சி இடுப்பழகி
மஞ்ச செவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம்
மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட
மானே வா (இஞ்சி...)

சரணம் 1

தன்னந்தனிச்சிருக்க‌
தத்தளிச்சுத் தானிருக்க‌
ஒன் நெனப்பில் நான் பறிச்சேன் தாமரைய‌
புன்ன வனத்தினிலே
பேடக்குயில் கூவயில‌
ஒன்னுடைய வேதனைய நானறிஞ்சேன்.
ஒங்கழுத்தில் மாலயிட
ஒன்னிரண்டு தோளத் தொட‌
என்ன தவம் செய்தேனோ என் மாமா
வண்ணக்கிளி கையத் தொட‌
சின்னச்சின்ன கோலமிட‌
உள்ள மட்டும் ஒன்வழியே மானே - 2

பல்லவி (பெண்குரல்):

இஞ்சி இடுப்பழகா
மஞ்ச செவப்பழகா
கள்ளச் சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே
அடிக்கிற காத்தக் கேளு
அசயிற நாத்தக் கேளு
நடக்கிற ஆத்தக் கேளுக‌
நீ தானே

திங்கள், 12 செப்டம்பர், 2011

தமிழில் புதிய வார்த்தை சித்தாமாமா.


ஒராண்டு பதினொரு மாதங்கள் ஆன என் ஆண் மகவு, "பொற்கோ" சில நாட்களாகப் பேசி வருகிறான். "அம்மா, அப்பா, தண்ணி, மாமா, தாத்தா, சித்தி" எனச் சரியாகப் பேசி வருபவனுக்கு "சித்தப்பா" என்ற வார்த்தை சரியாக வரவில்லை. அதற்கு மாற்றாக‌ "சித்தாமாமா" எனக்கூறிவருகிறான். அவன் அவ்வார்த்தையைக் கூறும் பொழுது நாங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

"குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்."

என்ற திருக்குறளுக்கொப்ப அவன் பேசுவதை நாங்கள் நாள்தோறும் சுவைத்து வருகிறோம். 

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

தம்பிக்குத் திருமணம்


எனதருமைத் தம்பிக்கு வரும் செப்டம்பர்த் திங்கள் இரண்டாம் நாள் (02-09-2011) திருமணம்
நடக்கவிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அழைப்பிதழ் ஆங்கிலத்தில் உங்களை அழைக்கிறது.


வியாழன், 28 ஜூலை, 2011

முடிந்தால் உதவுவோம்.


என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பதிவு இது.
தொடுப்பை இணைத்துள்ளேன்.

http://bluehillstree.blogspot.com/2011/07/blog-post_25.html

முடிந்தால் உதவுவோம்.

வெள்ளி, 1 ஜூலை, 2011

25 பைசா நாணயத்திற்கு மூடு விழா

புதுடில்லி: இன்று முதல் 25 பைசா நாணயத்திற்கு மூடு விழா நடத்தவுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. ஒரு காலத்தில் ஒரு பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசா என்று நாணயங்கள் இருந்தன. அவற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டனர். இவற்றை இப்போதெல்லாம் காணவே முடிவதில்லை. தற்போது 25 பைசா, 50 பைசா ஆகியவை மட்டும் புழக்கத்தில் உள்ளன. இதில் 25 பைசா நாணயத்தையும் புழக்கத்திலிருந்து நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி இன்றுடன் (ஜூன் 30ம்) தேதியுடன் 25 பைசா நாணயத்தை நிறுத்தவுள்ளனர். அதற்குப் பிறகு இந்த பைசா செல்லாததாக அறிவிக்கப்படும். அதன் பிறகு இதை எங்கும் பயன்படுத்த முடியாது. எனவே அதற்குள் 25 பைசாக்களை வைத்துள்ளவர்கள் அவற்றை வங்கிகளில் மொத்தமாக கொடுத்தால் அதற்கு நிகரான தொகையை வங்கிகள் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்

திங்கள், 20 ஜூன், 2011

அரிசியின் வேறு பெயர்கள்:


உலகத்தின் பொதுவான அணிகளில் ஒன்றாக அரிசி இருந்தாலும் அதன் தாய்வீடு தமிழகம்தான். அதன் வெவ்வேறு பெயர்கள் வெவ்வேறு மொழிகளில் பின்வருமாறு:

ஒரைஸா (இலத்தீன்)
அரூஜ் (அரபி)
அரோஜ் (ஸ்பானிஷ்)
ஒரிஜா (கிரேக்கம்)
ரயிஸொ (இத்தாலி)
ரிஜ் (பிரெஞ்சு)
ரியிஸ் (ஜெர்மன்)
ரிஸ் (ரஷ்யா)
வ்ரிஹி (சமற்கிருதம்)
வாரி (மடகஸ்கர்)
ப்ரின்ஜ் (பார்சி)
அக்கி (கன்னடம்)
சாவல் (இந்தி)

நன்றி தினகரன்.வசந்தம்

காற்றில் ஓடும் ஊர்தி கண்டுபிடிப்பு


பொள்ளாச்சி. ஏப்ரல் 17. பெட்ரோல் விலை உயர்வு, ஊர்தி விலை அதிகம், சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு கோவை கருமத்தப்பட்டி தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் தீர்வு கண்டுள்ளனர். இன்று உலகம் முழுவதிலும் மக்களைப் பெரிதும் தாக்கி வருவது சூழல் மாசுபாடுதான். மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நாடுகளும் பல பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

3 மாதம் இடைவிடாத முயற்சியின் காரணமாக 35000உரூபாய் செலவில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் ஊர்தியை அமைத்தோம். மணிக்கு 35 கி.மி செல்லும் இதற்கு ஆண்டுக்கு பராமரிப்புச் செலவு 2000உரூபாய் மட்டுமே. இதிலிருந்து புகையும் வராது. சூழலும் மாசுபடாது. நாம் செல்லும் வழியில் எங்காவது ஒரு மிதிவண்டிக் கடையில் நிறுத்தி ஊர்தியின் பின்புறத்தில் இருக்கும் பெட்டியில் காற்றை நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடரலாம். இவ்வாறு மதன்குமார்(21) கூறினார்.

நன்றி தினகரன்.

நாப்பழக்கச் செழுங்கவிதை


அண்டமெல்லாம் பற்றுறுதி கொண்டு கற்றறிய‌
பொங்குதமிழ் தொட்டெழுதிப் படைக்கின்றேன்
புதுவிருந்து யான் உற்றறிந்ததை.

உற்றறிந்ததில் ஊறு காணாமல்
சிற்றறிவு பேரறிவு பிணக்கில்லாமல்
பற்றிடுவீர் தமிழ் சுவைஞர்களே!

சுவைஞர்களே அமிழ்தஞ்சுவையறிய‌
செப்புங்கள் "தமிழ் தமிழ்" என்று
பிழையறாது இடையறாது.

சனி, 18 ஜூன், 2011

என்னைக் கவர்ந்த பாடல்


படம்: ரோஜா
பாடியவர்: மின்மினி
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: ஏ.ஆர்.இரகுமான்
குறிப்பு: ஏ.ஆர்.இரகுமானுக்கு நாட்டு விருது வாங்கித்தந்த பாடல்.


பல்லவி

சின்னச்சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றிவர ஆசை - (சின்னச்சின்ன)

சரணம் 1


மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களை எல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களை எல்லாம் சுட்டுவிட ஆசை
கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை - (சின்னச்சின்ன)

சரணம் 2


சேற்றுவயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை - (சின்னச்சின்ன)
புதன், 13 ஏப்ரல், 2011

உபுண்டு தன் இலவசச் சேவையை நிறுத்திவிட்டது.

உபுண்டு இயங்குதளத்தினை நாம் பொதுவாக இலவசமாகப் பெற நமது முகவரியை குறிப்பிட்ட (shipit.ubuntu.com) தளத்தில் கொடுக்க வேண்டும்.
ஆனால் உபுண்டு தன் இலவசச் சேவையினை இப்பொழுது நிறுத்தி விட்டது. ஆனால் பதிவிறக்கச்சுட்டி கொடுக்கப் பட்டுள்ளது. அதைக் கொண்டு நாம் பதிவிறக்கிக் கொள்ளலாம். சேவையை நிறுத்தியமைக்கு உபுண்டு சொல்லும் காரணத்தை ஆங்கிலத்திலே கீழே காணலாம்.

(ShipIt has closed

After delivering millions of Ubuntu CDs to millions of new users, our ShipIt programme has finally run its course. While we can no longer deliver free CDs through the programme, it’s still easy to get Ubuntu. You can download Ubuntu for free from Ubuntu.com or you can buy a CD straight from the Canonical shop.)

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

காலஞ்சென்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனுக்கு இந்தப்பதிவு அஞ்சலி

காலத்தால் அழிக்க இயலாத பல பாடல்கள் பாடியவர் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன். 66 அகவையில் இறையடி சேர்ந்தார். எஸ்.பி.பியும், கே.ஜே யேசுதாசும் கோலோச்சிய காலத்திலும், தன்னளவில் அருமையான பாடல்களைக் கொடுத்தவர் இவர். மலையாளத்தினை தாய் மொழியாகக் கொண்டாலும், தமிழ் உச்சரிப்பில் திலகம் இவர். இவர் பாடிய சில பாடல்களை இப்பதிவில் காணலாம்.
இரசினிகாந்த்:
வாவா வசந்தமே (புதுக்கவிதை)
ஆகாயகங்கை (தர்மயுத்தம்)
வாங்கடா வாங்க மற்றும் சில பாடல்கள் (மாவீரன்)
பெத்து எடுத்தவதான் (வேலைக்காரன்)
அதிசயப்பிறவி (அனைத்துப் பாடல்களும்)
மனிதன் மனிதன் (மனிதன்)
கமல்:
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு (16 வயதினிலே)
காதல் வந்திருச்சி [குரலை மாற்றிப் பாடிய பாடல்] (கல்யாணராமன்)
சிவாஜி:
முதல் மரியாதை (அந்த நெலாவத்தான் என்னும் ஒரு பாடல் தவிர‌ அனைத்துப் பாடல்களும்)
விசயகாந்த்:
மஞ்சள் பூசும் (சக்கரைத்தேவன்)
கார்த்திக்:
கட்டிவச்சுக்கோ
சத்யராஜ்:
என்னம்மா கண்ணு (மிஸ்டர் பாரத்)
பிரபு:
சிவி சிணுக்கெடுத்து (வெற்றி விழா)
அடி படகோட்டும் பட்டம்மா (சின்னவர்)
இராமராசன்:
புள்ளி வச்சா (பாட்டுக்கு நான் அடிமை)
ஏ.ஆர்.இரகுமான்:
தென்கிழக்குச் சீமையில(கிழக்குச் சீமையிலே)
காடு பொட்டக் காடு (கருத்தம்மா)
மோனோலிசா (மிஸ்டர் ரோமியோ)
கே.பாக்யராஜ்:
வான் மேகங்களே (புதிய வார்ப்புகள்)
ஏஞ்சோகக் கதைய கேளு (தூறல் நின்னு போச்சு)
முரளி:
ஓபார்ட்டி (இதயம்)
மோகன்:
கூட்சு வண்டியிலே (குங்குமச்சிமிழ்)
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை (சரணாலயம்)

மலேசியா வாசுதேவன் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் தேனாகக் காற்றில் கலந்து என்றென்றும் ஒலிக்கும் என்பது திண்ணம்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

என்னைக் கவர்ந்த பாடல்

படம்:மின்சாரக்கனவு
பாட‌ல்: வைர‌முத்து
பாடிய‌வ‌ர்க‌ள்:எஸ்.பி.பால‌சுப்ர‌ம‌ணிய‌ம், மால்குடி சுபா
இசை: ஏ.ஆர்.இர‌குமான்

குறிப்பு:எஸ்.பி.பிக்கு நாட்டின் உய‌ரிய‌ விருது கிடைத்த‌ பாட‌ல்.

பல்லவி


தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித்தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் - சிறு
விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே - (தங்கத் தாமரை)

சரணம் 1


செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே - என்
கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே.
தெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே - உன்
கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே.
இருதயத்தினுள்ளே ஒலை ஒன்னு கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க‌?
தொடட்டுமா தொல்லை நீக்க - (தங்கத் தாமரை)


சரணம் 2

பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்.
கனைக்கும் தவளைகள் துணையைச் சேரும் கார்காலம்.
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்.
பிரிந்திருக்கும் உயிரையெல்லம் பிணைத்து வைக்கும் கார்காலம்.
நகங்கடிக்கும் பெண்ணே நடக்காதே ஆசை.
நாகரிகம் பார்த்தால் நடக்காது பூஜை.
நெருக்கமே காதல் பாஷை. - (தங்கத் தாமரை)

தொழிற்நுட்பக் கலைஞர்களை முட்டாளாக்கிய கூகுள்.

கூகுளில் இன்று, ஏப்ரல் 1 தேதி நுழைவமைவில் கூகுள் மோஷன் என்ற வசதி இணைக்கப் பட்டிருப்பதாக செய்தி உள்ளது.

இதை நம்பி கூகுளில் தேடினால் மிகுதியான செய்திகளும், யுடியுபில் மிகுதியான காணொளிகளும் கிடைக்கின்றன.

எல்லாம் சரி என்று நினைத்து கூகுள் மோஷனை முயற்சி செய்தால் ஏப்ரல் முட்டாள் என்ற செய்தி வருகின்றது.

எல்லாரையும் முட்டாளாக்கிய கூகுள் வாழ்க.

வியாழன், 24 மார்ச், 2011

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: வெளிச்சம்
இசை: மனோஜ் கியான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
 
பல்லவி

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன‌?
கன்னி உந்தன் பேர் என்ன‌?
வெள்ளிக் கொலுசு போகும் திசையில் பாவி  நெஞ்சு போவதென்ன?  -(துள்ளி)
 
சரணம் 1
 
பூமி என்னும் பொண்ணும் பொட்டு வைத்துக் கொண்டு பச்சை ஆடை கட்டிப் பார்த்தால், ஊமைப் பெண் நாணம் கொண்டு ஏன் மறைந்து போகிறாள்?-2
பூமிப்பெண்ணுக்கும் கன்னிப்பெண்ணைப் போல் நெஞ்சில் ஈரம் உண்டு. -
(துள்ளி)


சரணம் 2

அந்தி வெளிச்சம் முந்தி விரித்துப் பந்தி இங்கு வைக்கும் நேரம், பூச்சிந்தும் பூமியெல்லாம் நான் வணங்கும் காதலி - 2
மண்டியிட்டு நான் முத்தம் தரவா மின்னல் பெண்ணே வாவா. -(துள்ளி)

வெள்ளி, 11 மார்ச், 2011

பணம் படுத்தும் பாடு

செவிவழிக் கவிதை

நாயாய்ப் பணத்தைத் தேடினேன்.
பேயாய் அதனைப் பாதுகாத்தேன்.
நோயாய் அதனைச் செலவழித்தேன்.
மனிதனாய் வாழ மறந்துவிட்டேன்.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

தமிழில் சில கலைச்சொற்களைக் காண்போம்.


பொதுவாக ஆங்கில வழக்கு இன்றைய நாட்களில் அதிகம் வந்து விட்டது. நாம் கணினித்துறையில் மிகவும் அதிகமாக

ஆங்கிலத்தில் கலைச்சொற்களைப் பயன்படுத்தி வருகின்றோம். ஆங்கிலச் சொற்களையும்

அதற்கிணையான தமிழ்ச் சொற்களையும் இந்தக் கட்டுரையில் காணலாம்.

protocols - முறைமைகள்

communication - தொடர்பாடல்.

DNS (Domain Name System) - வட்டாரத் பெயரிடல் முறை (வ.பெ.மு)

DHCP(Dynamic Host Configuration Protocol) - இயக்கநேர பொறி சீரமைவு முறைமை

boot - தொடக்கம்

bootp (boot protocol)- தொடக்க முறைமை.

restart(reboot)- மறுதொடக்கம்.

shutdown - பொறியணைப்பு, அணை

Operating system/ platform - இயங்குதளம்

logoff - வெளியேற்றம்

exit -‍ வெளியேறுதல்

login - நுழைவமைவு

network - வலையம்

ipaddress ‍- இணைய முகவரி/வலைய முறைமை முகவரி

mac address - ‍ ‍வலைய அட்டை அணுகல் கட்டுப்பாட்டு முகவரி

account ‍- கணக்கு

ddns(Dynamic Domain Name System) -‍ இயக்க நேர வட்டாரப் பெயரிடல் முறை (இ.வ.பெ.மு)

server -‍ சேவையாளர்/சேவையர்

client ‍- வாடிக்கையாளர்

BIOS -‍ அடிப்படை உள்ளீட்டு பொறியமைவு

motherboard ‍- தாய்ப்பலகை

samba server ‍- சாம்பா சேவையாளர்/ சம்பா சேவையர்.

kick start ‍- உதைத் தொடக்கம்/ உந்து தொடக்கம்

unattend installation ‍- குறுவட்டில்லா நிறுவல் முறை

remote installation ‍‍- தொலை நிறுவல் முறை

apache server/web serveer - ‍ வலைச் சேவையாளர்/ வலைச் சேவையர்

default- உள்ளிருப்பு

Linux - லினக்ஸ் டோர்வால்ட்ஸ் என்பவரால் கண்டறியப்பட்ட‌ இயங்குதளம்.

user administration - பயனர் ஆட்சிமை

user management - பயனர் மேலாண்மை

user friendly - பயனர் தோழமை

click - சொடுக்கி

mouse pointer - சுட்டி

keyboard - விசைப்பலகை, தட்டச்சுப் பலகை

ping - கூவல், இணைப்பொலி

packet - செய்தித்துளி

squid/proxy - போலிச் சேவையாளர்/ போலிச் சேவையர்

mail server - மின்னஞ்சல் சேவையர்

dovecot - மின்னஞ்சல் வாடிக்கையாளர்

rpm(redhat package management) - ரெட் ஹாட் நிறுவல் தொகுப்பு மேலாண்மை

package - தொகுப்பு

editor - தொகுப்பான்

configuration - சீரமைவு, அமைவு, பொறியமைவு

LDAP(lite weight direct access protocol) - எடைகுறைவு அணுகல் முறைமை

POP - அஞ்சல் முறைமை

POP3 - அஞ்சல் முறைமை3

concept - கருத்துரு, கருத்தமைவு

NAT (Network Address Translation) - வலைய முகவரி பெயர்ப்பு

iptables - இணைய முகவரி அட்டவணை

shortcut - சுருக்குவிசை, குறுக்குவிசை

virtual console/terminals - நிகழ்நிகர் பொறி

shell script - பொறி நிரல்

Python script - பைத்தான் நிரல்

Perl script - பெர்ல் நிரல்

project - திட்டம்

report - அறிக்கை

colour - வகை

YellowDog Updater Modifier - பழுப்புஞமலி மேம்பாடு

xerox - ஒளிப்படி

backup - காப்புப்படி

grep - தேடல் கட்டளை

command - கட்டளை

instruction - கட்டளை வரி

dictionary - அகரமுதலி

browser - உலாவி, மேய்வான்

VNC viewer/ remote desktop - தொலை அணுகல்

Remote login - தொலை நுழைவமைவு

ssh(secure shell) - பாதுகாப்பு பொறி நுழைவு

trust - நம்பிக்கைப் பொறிகள்

domain - வட்டாரம், பகுதி

interactivity - ஊடாட்டம்

arp (address resolution protocol) - முகவரி கூடுதல் முறைமை

virtual reality - நிகழ்நிகர் நிகழ்வு

move - நகர்வு, மாற்றம்

copy - படி, படியெடு

built-in - உள்ளிணைந்த, பொறியோடிணைந்த‌

machine-independent - தன்னாட்சி பெற்ற

windows - சாளரம்

statusbar - நிலைஉணர்த்திப் பட்டை

flexibility - நெகிழ்தன்மை, இலகுதன்மை,எளிமைத்தன்மை

unicode - சிருரூ, ஒருங்குறி

progressbar - தேர்ச்சிப் பட்டை

menubar - பட்டியல் பட்டை

toolbar - கருவிப் பட்டை

scanner - ஒளிவருடி

submenu - துணைப் பட்டை, துணைப்பட்டியல் பட்டை

mount - குன்றுதல், இணைத்தல்

format - சீரமைத்தல்

quota - வரம்பு

network pinging - தொலை இணைப்பொலி

limit - எல்லை

POST(Power On Self Test) - மின்னியக்கத் தன் தேர்வு, மின்தன்தேர்வு

LILO(Linux Loader) - லினக்ஸ் ஏற்றுவான்

GRUB(Grand Unified Boot Loader) - பெரிய தனித்துவ தொடக்க ஏற்றுவான்

Abbrevation - சொற்சுருக்கம்

acronym - குறுஞ்சொல்

hover-craft - நிலநீர் உந்து

shift key - மாற்றுவிசை

ctrl key - கட்டுப்பாட்டு விசை

alt key - வேறு விசை

function key - முறை விசை

duplicate - இரண்டாம் போலி

triplicate - மூன்றாம் போலி

script - குறுநிரல்

widget, gadgets - குறுநிரல் தொகுப்பு

pen scanner - நூவல் வருடி

menu-driven programming - பட்டை ஓட்ட நிரலமைவு, பட்டை இயக்க நிரலமைவு

device drivers - கருவி செயலி, கருவி இயக்கி

console - காண்பிப்பான்

redundancy -போலி, போலிருத்தல்