சனி, 31 ஜனவரி, 2009

பன்னாட்டு நிறுவனத்தில் விரைவுந்து பார்த்து மகிழும் கூட்டம்


இளவல் அறிவு பன்னாட்டு நிறுவனத்தில் திட்ட அறிக்கை மென்பொறிஞனாக இருக்கிறான். நிறுவனத்தின் பெயரை உனது முழக்கத்தில் சேர்க்காதே என்னும் கூற்றோடுதான் இந்த ஒளிப்படங்களைக் கொடுத்தான். பாருங்கள் எல்லோர் மனதிலும் ஏதோ தாங்களே பந்தயத்தில் வெற்றி பெற்றது போன்ற உணர்வு!!!

விரைவுந்து






புதிய விரைவுந்துப் பந்தயத்திற்கான அமைப்பினைப் பார்க்கத்தான் எம் இளவலுக்கு எத்துணை ஆசை. பார்த்தவுடன் பாருங்கள் எத்துணை வகையாக தன் கைபேசியில் சுட்டு எடுத்துவிட்டான்!! அவன் எடுத்த படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவன் மட்டுமல்லாது அவனது அலுவலகத்தில் அனைவரும் குறிப்பிட்ட விரைவுந்தினை மொய்ப்பதைப் பார்த்தீர்களா!!

செல்வந்தனான சேரி நாய் - திறனாய்வு


இதைவிடச் சிறப்பாக வடமொழிப்படத்திற்கு தமிழில் பெயர் வைக்க முடியாது என என்னை நானே மெச்சிக்கொண்ட தலைப்பு இது.

செல்வந்தனான சேரி நாய்1 - திறனாய்வு

பல நாட்களுக்கு பின்பு ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு இயக்குனரால் தர முடிந்திருக்கிறது. மேலும் இப்படத்திற்கான விளம்பரங்கள் இதனை மேலும் பார்க்கத் தூண்டுகிறது. அயல்நாட்டு விருதுகள்2 பத்திற்கு இது பரிந்துரை செய்யப்பட்ட படம் என்பதால், இது அத்துணை உயரிய விருதுகளெல்லாம் உரியதா என்னும் ஆய்வினைச் சற்றே தள்ளி வைத்து விட்டு ஆய்வு செய்யலாம்.

கதை - சேரியில் பிறந்து வளர்ந்தவன் கோடிகளுக்கு உரியவனாவது. ஒரு போட்டியில் கலந்து கொள்கிறான். கேள்விகளுக்கு விடையளிக்கிறான். வெற்றி பெறுகிறான். இடையில் காதல், மோதல், உணர்ச்சிகள் என படம் செல்கிறது.

என்ன போட்டி3 என்பவர்கள் தென்றென புரிய வடநாட்டு அலைவரிசை4 யினைப்பார்த்திருக்க வேண்டும்.

கேள்வி கேட்டு விடையளிக்கு எளிமையான கதை மூன்று கதைக்களன்களில் செல்கிறது. அங்குதான் திரைக்கதையின் உயிர் தெரிகிறது. முதல் களன் நாயகன்5 எப்படி இத்துணை கேள்விகளுக்கு விடையளித்தார் என்ற ஆய்வில் செல்கிறது. அவரை அடித்துத்துவைக்கிறார்கள். இரண்டாவது களனில் நாயகன் போட்டியில் எப்படி விடையளிக்கிறார் என்பதில் விரிவடைகிறது. மக்களெல்லாரும் அவர் வெற்றி பெறுவதை பொறாமையோடு பார்க்கும் போட்டிக்காட்சிகளில் விரிவடைகின்றன. . மூன்றாவது கதைக்களன் நாயகன் சிறுஅகவையில் பட்டது6; அதன் மூலம் கண்டு கொண்டதில் பயணிக்கிறது.

கதைக்குள் கதைக்குள் கதைதான். ஆனால் அதைத் தொகுத்திற்கும் வகையில் அனல் பறக்கிறது. இவ்வகை திரைக்கதைகள் நம் நாட்டிற்குச் சேய்மையானவை. படத்தினை நெறியாண்டவரும்7 நம்மவரல்லர். பத்து அயல்நாட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதற்கான காரணம் புரிகிறதல்லவா!

நாயகனின் வலிகள், காதல், எல்லாவற்றையும் அவன் வெற்றி கொள்ளுவகை என அனைத்திலும் புதுமையாகச் செய்திருக்கிறார் அறிமுக வடநாயகன். பதினெட்டு அகவைதான் ஆகின்றதாம் நம்பமுடியவில்லை. உச்சகாட்சியில் பாடல் புதிது.

இசையமைப்பாளர்8 நன்கு பரிமளிக்க உதவியிருக்கும் படம். அவரும் விளையாண்டிருக்கிறார். பின்னணி இசையும் அருமை. அவருக்கு ஏற்கனவே தங்கப்புவி விருது9 இப்பட இசைக்காக கிடைத்து விட்டது. தமிழ் எக்காளம் சார்பாக அவருக்கு அயல்நாட்டு உயர் விருது கிடைக்க வாழ்த்துக்கள்.

நம்நாட்டு போட்டி விளையாட்டு. அதைப்பற்றி கேள்வியும் - விடையும்10 என்று எழுதியவரும் நம்மவரே. அதைப்படமாக எடுத்தவர் அயல்நாட்டவர். அதையும் நாம் சுவைத்து திறனாய்வு செய்கின்றோம். எனினும் அவர் இந்தியாவாழ் அயல்நாட்டவர். அவர் வெற்றி பெற வாழ்த்துவோம்.

1Slumdog Millionaire

2Oscar Awards

3Kuan Banega Krorpati

4Star Plus

5Dev Patel

6Experience in childhood days

7Director - Danny Boyel

8A.R.Rehman

9Golden Globe

10The book Q and A   

இலக்கணம்

குறில்,நெடில்:

குறுகி ஒலிக்கக்கூடியவை குறில்கள் என்றும், நீண்டு ஒலிக்கக்கூடியவை நெடில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இதைக் குற்றொலிகள், நெட்டொலிகள் என்றும் அழைப்பர். குற்றொலிகள் ஒலிக்கும் அளவு ஒரு மாத்திரை எனவும், நெட்டொலிகள் ஒலிக்கும் அளவு இரண்டு மாத்திரை எனவும், ஒற்றெழுத்துக்கள் ஒலிப்பது அரை மாத்திரை எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

,,,,ஒ குறில்கள் ஆ,,,,,,ஒள நெடில்கள் ஆகும். க்+=க குறிலாகும். க்+=கா நெடிலாகும்.

அடி:

செய்யுளில் அடி என்பது வரி என்பதைக் குறிப்பிடுவதாகும். எடுத்துக்காட்டு: திருக்குறளில் இரண்டு அடிகள் உள்ளன. ஈற்றடியில் ஈற்றுச்சீர் இல்லை.

எதுகை,மோனைகள் ஒலிச்சிறப்புக்காக செய்யுளில் அமைக்கப்படுகின்றன.

மோனை: அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வர அமைவது மோனையாகும்.

.கா:

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.
இதில் அடிதோறும் "தோ" எழுத்து ஒன்றி வருவதால் மோனையாகிறது. "ஏஇமோமு" என நினைவில் வைத்துக்கொள்வது மரபு. அதாவது எதுகை இரண்டாமெழுத்து;முதலெழுத்து அளவொத்து நிற்க வேண்டியது இன்றியமையாதது. மோனை முதலெழுத்து.
எதுகை: அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வர அமைவது எதுகை எனப்படும்.

.கா:

பணியுமாம் என்றும் சிறுமை பெருமை

அணியுமாம் தன்னை வியந்து.

இதில் "பணியுமாம்" என்பது "அணியுமாம்" க்கு எதுகையாகிறது. ஏனெனில் அடிதோறும் முதலெழுத்து அளவொத்து குறிலாக இருக்கிறது.

தளை, தொடை போன்றவற்றை பின்னர் காணலாம்.

ஒருமை பன்மை:

ஒருமையில் பெரும்பாலும் "கள்" சேர்த்தாலே பன்மை வரும்.

எடுத்துக்காட்டுகள் பல‌

ஆடு: ஆடுகள்

மாடு: மாடுகள்

புலி: புலிகள்

எக்காளம்: எக்காளங்கள்

பன்மை இல்லாதவை: இயற்கை, கடவுள் போன்ற பொதுப்படையான‌ சொற்களுக்கு பன்மைகள் இல்லையெனினும், அவை ஒருமையாகவோ அல்லது படர்க்கையில் ஒருமையாகவோ கருதப்பட்டால் அதற்கும் "கள்" சேர்த்து பன்மையாக எழுதும் வழக்கம் தமிழில் உண்டு. இவை பெயர்ச்சொற்களுக்கும் பொருந்தும். இருப்பினும், தமிழ்க்கற்றுக் கொள்ளும் தொடக்கநிலையாளர்கள் இப்படி எழுதுவதைத் தவிர்த்தல் நலம் பயக்கும்.
வேறுபட்ட பன்மைகள்:

பல - பற்பல‌

சில - சிற்சில‌

மனைவியின் பொழுதுபோக்கு

என்னுடன் பேசுவதே என் மனைவியின் மிகப்பெரிய பொழுதுபோக்கு. விடுமுறையானால் என்னைப்பாடச்சொல்லி தனியாக அவள் மட்டுமே சுவைப்பாள். அவளுக்குக்காக பாடும்பொழுது என்குரல் மேலும் பரிமளிப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.

அவளுக்காக பாடும் பொழுது பெரும்பாலும் நான் பாடும் நிலா பாலு1 பாடிய பாடல்களையே பாடுகின்றேன். அதுவே அவளுக்கும் பிடிக்கிறது.

அண்மையில் நான் பாடிய பாடல்கள்:

கூ..க்கூ... - காதல் பரிசு

கல்யாண மாலை..., குருவாயூரப்பா... - புதுப்புது அர்த்தங்கள்

இது மாதிரி பாட்டெல்லாம் இப்போ வர்றதில்லீங்க என்னும் என் மனைவி குரலில் அவளது இசையார்வமும், தமிழ் பாடல்கள் குறித்த கவலையும் தெரிந்தது.

1S.P. Balasubramanyam

செவ்வாய், 27 ஜனவரி, 2009

வில்லு மறுபார்வை

வில்லு பாத்து நொந்து போன மானிடன் எழுதியது.
இனிமேலாவது கடவுள் இவருக்கு நல்ல அறிவு கொடுக்கட்டும்.

திருட்டுக்குறுவட்டிற்குக்கூட தகுதியில்லாத வில்லு


பழங்காலத்து பழிவாங்கும் கதையினை குதறி எடுத்திருக்கிறார் நாயகன்1. திருட்டுக்குறுவட்டிற்குக்கூட தகுதியில்லாத இப்படத்திற்கு ஒரு திறனாய்வு தேவையா என்ற கேள்வி எனக்கே எழுகின்றது. இருப்பினும் என்ன செய்ய மனக்குமுறல்களைக் கொட்ட. இசையமைப்பாளர்2 நன்கு இசைபழகிக் கொண்டிருக்கிறார். இது போன்ற படங்களை சுவைஞர்கள் கொண்டாடினால் தமிழ்நாட்டினை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. இனிமேலாவது நல்ல படங்களில் நாயகன் என்றழைக்கப்படுபவர் நடிக்க இறைவனை இக்கட்டுரை வாயிலாக இறைஞ்சுகின்றோம்.  படம் பார்க்க யாரும் திரையரங்கம் பக்கம் செல்ல வேண்டாம்.

1Vijay

2Devi sri prasad

என்னைக் கவர்ந்த வலைப்பதிவுகள்

பொதுவாக தமிழ்மணத்தில் அவ்வப்போது உலாவுவது என் வழக்கம். அப்படி உலாவும் வேளையில் என் மனம் கவர்ந்த பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அதனால் பிறந்தது இவ்வலைப்பதிவு. ஜெயகாந்தன் என்னும் நாய்க்கு http://kattamanaku.blogspot.com/2009/01/blog-post_25.html
ஒரு படத்தின் கதை அம்பலம்  http://subankan.blogspot.com/2009/01/blog-post_27.html
புதுச்சேரி மாநிலத்தமிழாசிரியர்களுக்கு இணையம் பற்றிய அறிமுகம் http://muelangovan.blogspot.com/2009/01/blog-post_27.html

எழுத்து, அசை, சீர்

இலக்கணம் குறித்து நான் அறிந்தவற்றைத் தருகிறேன். இது இலக்கணம் என்னும் முழக்கமாக அவ்வப்போது எங்கள் தமிழ் எக்காளத்தில் முழங்கப்படும்.

ஒரு செய்யுளுக்கு அடிப்படை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பனவாகும்.

எழுத்தில் இரண்டு வகைகள். ஒன்று வரிவடிவம் (எழுதும் முறை), ஒலி வடிவம் (உச்சரிக்கும் முறை). உயிரெழுத்து - பன்னிரெண்டு மெய்யெழுத்து - பதினெட்டு உயிர்மெய் எழுத்து - இருநூற்றி பதினாறு ஆய்தம் - ஒன்று ஆக மொத்தம் இருநூற்றி நாற்பத்து ஏழு எழுத்துக்கள் தமிழில் உள்ளன.

அசைகள் இரண்டு வகைப்படும். அவையாவன நேரசை, நிரையசை.

நேரசை: குறில் தனித்தோ ஒற்றடுத்தோ, நெடில் தனித்தோ ஒற்றடுத்தோ வருவதோ நேரசையாகும். .கா: நேர்
நிரையசை: இருகுறில்கள் இணைந்தோ ஒற்றடுத்தோ, குறில் நெடில் இணைந்தோ ஒற்றடுத்தோ அமைவது நிரையசையாகும். .கா: நிரை

இரண்டசைச்சீருக்கான வாய்ப்பாடுகள்

நேர்நேர் - தேமா

நிரைநேர் - புளிமா

நிரைநிரை - கருவிளம்

நேர்நிரை - கூவிளம்

மூன்றசைச்சீருக்கான வாய்ப்பாடுகள்

நேர்நேர்நேர் - தேமாங்காய்

நிரைநேர்நேர் - புளிமாங்காய்

நிரைநிரைநேர் - கருவிளங்காய்

நேர்நிரைநேர் - கூவிளங்காய்

நேர்நேர்நிரை - தேமாங்கனி

நிரைநேர்நிரை - புளிமாங்கனி

நிரைநிரைநிரை - கருவிளங்கனி

நேர்நிரைநிரை - கூவிளங்கனி

இவ்வாறு பிரித்தெழுதுவது அசை பிரிப்பது என்றழைக்கப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று அசைகள் சேர்ந்து ஒரு சீர் உருவாகின்றது. அதுவே வார்த்தை அல்லது கிளவி என்றழைக்கப்படுகிறது