வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

இசைஞானியின் ஆங்கிலம்


விடுதலை நாளன்று (15/08/2012) இசைஞானியும் கௌதமும் பேசுவதைப் பார்க்க நேர்ந்தது. தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்து அவர்கள் பேசியது அருமையாக இருந்தது.இதுவரை பொதுமக்கள் ஞானியைத் தமிழில் பேசுவதையே பார்க்க நேர்ந்திருக்கும். அவர் பேசிய ஆங்கிலமும், பேசிய விதமும் இதுவரை பொதுமக்கள் பார்த்திருக்காத‌ ஒன்று. இதைப் பார்த்த பிறகு நீதானே என் (எந்தன்) பொன் வசந்தம் படத்தினையும், படப்பாடல்களையும் நிறையவே எதிர்பார்க்கத் தோன்றுகின்றது. இதை ஏற்பாடு செய்த செயா தொலைக்காட்சியைப் பாராட்டலாம்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

முகநூலின் அறிவுத்தனம்


முகநூல் ஒரு விளம்பர நிறுவனமா என்ற கேள்விக்கு அறவே இல்லை என விடைபகன்று வரும் அந்நிறுவனத்தைத் தோற்றுவித்த மார்க் சூக்கர்பர்க் சென்ற ஆண்டு கூகுளில் பணிபுரிந்த‌ ஒரு பெண் ஊழியரை அதிக ஊதியத்திற்கு முகநூலிற்கு பணியில் அமர்த்தியுள்ளார். கூகுள் தேடுதலில் நாம் ஒரு பொருளைத் தேடுகின்றோம் என்றால் அந்தப் பொருள் தொடர்பான விளம்பரங்களும் அந்தப் பொருளை விற்பவர்களும் அதன் வலது பக்கத்தில் தோன்றுவார்கள். அவ்வாறு தோன்றிய அந்த நிறுவனத்திடம் இருந்து கூகுள் பணம் பெறுகிறது. இவ்வகையான விளம்பரத் திட்டங்களை கூகுளுக்கு அறிமுகப்படுத்திய ஷெரில் சான்பர்க் (Sheryl Sandberg) என்ற அந்தப்பெண் ஊழியர்தான் தற்போது முகநூலில் அதிக ஊதியம் பெரும் ஊழியராவார். இவரைப் பணியில் அமர்த்தியதன் மிக முக்கிய நோக்கம் முகநூலில் விளம்பரங்களிலால் வரும் பணத்தைப் பெருக்கத்தான் எனபது அனைவரும் அறிந்ததே.
நன்றி: தமிழ் கம்ப்யூட்டர் இதழ்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

என்னைக் கவர்ந்த பாடல்


பாடல்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம் குழுவினர்
தொடர்: நம்பிக்கை
தயாரிப்பு: ஏவிஎம்

பல்லவி

நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
நம்பிக்கை இல்லாமல் நாளை இல்லை.
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
நம்பிக்கை இல்லாமல் வாழ்வு இல்லை.

சரணம் 1

அப்பா என்னும் உறவும் கூட அம்மா கொடுத்த நம்பிக்கை
ஆண்டவன் என்னும் கற்பனை கூட அச்சம் கொடுத்த நம்பிக்கை. (ஒ...ஒ)
விதியே பெரியது என்பவர்க்கெல்லாம் காத்துக் கருப்பில் நம்பிக்கை
மதியே பெரியது என்பவர்க்கெல்லாம் நம்பிக்கை மீதே நம்பிக்கை
அந்தரத்திலே பூமி சுற்றலும் ஆகாயத்தில் நிலவு நிற்றலும்
எல்லைக்குள்ளே கடல்கள் நிற்றலும் இதயக்கூட்டிலே ஜீவன் நிற்றலும்
நம்பிக்கை நம்பிக்கை அது
நம்பிக்கை நம்பிக்கை - (நம்பிக்கை)

சரணம் 2

இரத்தம் சத்தம் போடும் வயதில் நான் தான் என்பது நம்பிக்கை
ஓடி ஆடி ஓய்ந்த வயதில் ஊன்றுகோல் மீது நம்பிக்கை. (ஒ...ஒ)
அடுத்த வருடம் மழை வரும் என்பது உழவன் கொண்ட நம்பிக்கை
அடுத்த தேர்தலில் ஆட்சி என்பது அரசியல்வாதியின் நம்பிக்கை.
தலைக்கு மேலே வானம் இருப்பதும்
தரைக்கு மேலே கால்கள் இருப்பதும்
காசு பணங்கள் சேர்த்து வைப்பதும்
தூங்கி விழிப்போம் என்று நினைப்பதும்
நம்பிக்கை நம்பிக்கை அது
நம்பிக்கை நம்பிக்கை - (நம்பிக்கை)

குறிப்பு: இப்பாடலுக்கு இசை தினாவா, இமானா என்று தெரிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்.