புதன், 23 ஆகஸ்ட், 2017

நுட்பவியல் கலைச் சொற்கள்

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

1. WhatsApp      -       புலனம்
2. youtube          -       வலையொளி
3. Instagram       -       படவரி
4. WeChat          -        அளாவி
5.Messanger     -        பற்றியம்
6.Twtter              -         கீச்சகம்
7.Telegram        -         தொலைவரி
8. skype             -          காயலை
9.Bluetooth       -          ஊடலை
10.WiFi             -          அருகலை 
11.Hotspot        -          பகிரலை
12.Broadband  -         ஆலலை
13.Online           -         இயங்கலை
14.Offline            -        முடக்கலை
15.Thumbdrive   -        விரலி
16.Hard disk       -        வன்தட்டு
17.GPS                -        தடங்காட்டி
18.cctv                 -        மறைகாணி
19.OCR              -         எழுத்துணரி
20 LED              -         ஒளிர்விமுனை 
21.3D                  -        முத்திரட்சி
22.2D                 -         இருதிரட்சி
23.Projector       -        ஒளிவீச்சி
24.printer          -        அச்சுப்பொறி
25.scanner         -        வருடி
26.smart phone  -       திறன்பேசி
27.Simcard          -       செறிவட்டை
28.Charger          -        மின்னூக்கி
29.Digital             -         எண்மின்
30.Cyber            -          மின்வெளி
31.Router           -         திசைவி
32.Selfie             -         தம் படம் - சுயஉரு - சுயப்பு
33 Thumbnail              சிறுபடம்
34.Meme           -         போன்மி
35.Print Screen -          திரைப் பிடிப்பு
36.Inkjet             -           மைவீச்சு
37.Laser            -          சீரொளி
நல்ல முயற்சி நாமும்  மனனம் செய்வோம் .

- தமிழுணர்வு கொண்டோர் இதை  நண்பர்களுக்கும்
பகிரலாம் -

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

சுழியமும் பிணந்தின்னியும் இணைந்தன - சீற்றப்பா - 6

அதிமுக அணிகள் இணைந்தன
-செய்தி
பிணந்தின் னியுடன் பண்பிலாச் சுழியமும்
கூட்டணி சேர்ந்து கூறு போட்டு
நாட்டை விற்க நாளும் பார்த்து
கடிநாய் போலவே காலைச் சுற்றுதே.
சீற்றப்பா - 6

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பாடும் நிலா பாலு

பாடும் நிலா,களிப்பும் காதலும் ததும்பும் எஸ்.பி.பி.யின் குரல் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று. பல்லவிகளும் சரணங்களும் வாழ்வான எஸ்.பி.பி.யின் பெர்சனல் பக்கங்களில் சில...

👉 பாலு பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை.  திருப்பதியில் படித்து முடித்து பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர்.

👉 ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்பிரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி.காதல் திருமணம்.பல்லவி,சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார்.சரண் பாடகராகவும்,நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

👉 முதன் முதலாக எஸ்.பி.பி.தமிழில் பாடியது "சாந்தி நிலையம்" என்ற திரைப் படத்திற்காக "இயற்கை எனும் இளைய கன்னி ஏங்குகிறாள் துணையை எண்ணி" என்ற பாடல்தான்.ஆனால், திரைக்கு முதலில் வந்தது "அடிமைப் பெண்"  திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலான "ஆயிரம் நிலவே வா".

👉 பாடலைத் தவிர நடிப்பிலும் அசத்தியவர்.தெலுங்கு,கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். "கேளடி கண்மணி", "சிகரம்" "காதலன்"  இன்றும் நினைவில் நிற்பவை.

👉 எஸ்.பி.பி இதுவரை ஆறு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார். இந்தி,தமிழ்,தெலுங்குப் பாடல்களைப் பாடியதற்காகப் பெற்ற விருதுகள்.
"சங்கராபரணம்","ருத்ர வீணா","ஏக் துஜே கேலியே", "மின்சாரக் கனவு" என இவர் பாடியதெல்லாம் ஒலி பரப்பாகாத நாளே இல்லை.

👉 "ஏக் துஜே கேலியே’’ படம் ஹிட்டுக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர் இதுதான் எல்லாப் பாடகர்களையும் விட எஸ்.பி.பி-யின் ஆல் டைம் ரெக்கார்டு.

👉 இளையராஜாவும்,எஸ்.பி.பி.யும் மிக நெங்கிய நண்பர்கள்."வாடா, போடா" எனப் பேசிக் கொள்ளும் அழகு எல்லோரையும் வியக்க வைக்கும்.

👉 சுத்தமான சைவ உணவுப் பழக்கம், இவ்வளவு கொண்ட இவர் சாப்பிட எடுத்துக் கொள்கிற நேரம் ஐந்தே நிமிடங்கள்.தயிர் சாதம்தான் இஷ்ட உணவு.

👉 இதுவரை 40000 பாடங்களுக்கு மேல் பாடி இருக்கிறார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி,பெங்காலி,ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில் பாடுபவர்.

👉 எஸ்.பி.பி.தன் குரலைப் பாதுகாக்க எந்தச் சிறப்புக் கவனமும் மேற்கொள்வது இல்லை. குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், இனிப்பு என எல்லாம் சாப்பிடுவார்.

👉 மூச்சு விடாமல் "கேளடி கண்மணியில் "மண்ணில் இந்தக் காதலன்றி" "அமர்க்களம்" படத்தில் "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" என எஸ்.பி.பி.பாடிய பாடல்கள் மிகப் பெரிதாகப் பேசப் பெற்றவை. இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பிக் கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்.

👉 எஸ்.பி.பி.க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரபி,ஜேசுதாஸ்.முகமது ரபியின் பாடல்களை விரும்பிக் கேட்பார். டி.எம்.எஸ்.அண்ணா பாடிய எந்தப் பாடலிலும் அபஸ்ருதியைக் கேட்கவே முடியாது எனப் பாராட்டி மகிழ்வார்

👉 எம்.ஜி.ஆரே விரும்பிக் கொடுத்த பாடல் "ஆயிரம் நிலவே வா".அந்தப் பாடலுக்கு எஸ்.பி.பி.அழைக்கப்பட்ட போது குளிர் காய்ச்சலில் இருந்தார். ரெஸ்ட் எடு.நீ எத்தனையோ பேரிடம் எம்.ஜி.ஆர் பாடலுக்குப் பாடுகிறேன் எனச் சொல்லி இருப்பாய் .மூன்று நாளைக்குப் பிறகு நீயே வந்து பாடு எனச் சொல்லி வாய்ப்பு கொடுத்தார்.

👉 கர்நாடக இசைக் கச்சேரி செய்ய வேண்டும் என்பது எஸ்.பி.பி.யின் தனியாத தாகம்.

👉 எஸ்.பி.பி.க்குப் பிடித்த இசையமைப்பாளர் இளையராஜாதான். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும் "ராஜா ராஜாதான்" என்கிற கட்சி.

👉 "மழை" படத்துக்காக எஸ்.பி.பி. ஒரு பாடலைப் பாடினார்.அவர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு அடியெடுத்து வைத்து பாடி வெளியேறியது எல்லாம் வெறும் 12 நிமிடங்களில் முடிந்துவிட்டது.

👉 கிரிக்கெட் விளையாட்டின் வெறியர் எஸ்.பி.பி.சச்சின் இவரது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு தன் கையெழுத்திட்ட பேட் பரிசு அளித்திருக்கிறார்.

👉 "துடிக்கும் கரங்கள்" படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.எல்லா மொழிப் படங்களும் இதில் அடக்கம்.

👉 "முதல் மரியாதை" படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்!

👉 எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போகாத நாடுகளே பூமியில் இல்லை. குறைபட்டுக்கொள்வார்!

👉 சினிமாவில் இருந்தாலும் சினிமாக்காரர்கள் யாரும் இதுவரை வீட்டுக்கு வந்தது இல்லை.ஏனோ இப்போதும் தனிமைதான் இவருக்கு விருப்பம்.சினிமாவையும் வீட்டையும் தள்ளித் தள்ளியே  வைத்திருக்க விரும்புவார்.

👉 எஸ்.பி.பி பிரமாதமாக படங்கள் வரைவார்.மிக நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பார்.இரவுகளில் புல்லாங்குழல் இசை இவர் அறை வழியாக கசிவதை இன்றைக்கும் கேட்கலாம்.

👉 தெலுங்குப் படங்களில் நிறைய "ராப்" பாடல்கள் எழுதியவர். கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன் பாலு என இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்.

👉 கடந்த 20 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்டவர் என எஸ்.பி.பி.யைக் குறிப்பிடுகிறார்கள்.மும்பைக்கும், பெங்களூருக்கும், ஹைதராபாத்துக்குமான அவசரப் பயணங்கள் அதிகம்.

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

மருந்துவப்பண்புள்ள உணவுப்பொருட்கள்


















இந்துமதக்கோயில்கள்












செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

புலனச்செய்தி

*ரோசம் இல்லா மக்களுக்கு ரேசன் பொருள் எதற்கு?*

*மானம் இல்லா மக்களுக்கு மானியம் எதற்கு?*

*சினம் கொள்ளா மக்களுக்கு சிலிண்டர் எதற்கு?*

*கொட்டக் கொட்டக் குனியும் குரங்கின மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியே தான் சரி*

*மெல்லச் சாகும் இனி இந்தியா*

*இருப்பவன் எல்லாம் வெளிநாடு ஓடிப் போவான்  மல்லையா போன்று*

*இல்லாதவன் இங்கே கிடந்து அடிமையாகச் சாவான் விவசாயிகளைப் போன்று*

*இனியும் நீ துணியவில்லை என்றால் துணியும் மிஞ்சாது*

*ஆளும் அரசின் திட்டம் தெரிந்தும் அவர்களின் கொட்டம் அடக்காமல் இருந்தால்*

*நட்டம் சாமானிய மக்களுக்கே*

*ஓட்டுப் போட உயிரை மட்டும் விட்டு*

*உன்னை ஊனமாக்கி பிச்சையெடுக்க விட்டு விடுவார்கள்*

*ஒழுங்காய் ஒன்று கூடி போராடு*

*இல்லை உன் இனமே அழிந்து விடும் வேரோடு*

கவிதை வரிகள்

🙏🙏🙏👇👇👇🙏🙏🙏

*முக நூலில் மனதை நெகிழ்ச்சியுற செய்த கவிதை வரிகள்...*
*# ஆசிரியர்கள் நிலைமை #*

கரும்பலகையில்
கைபதித்து...
சுண்ணாம்புத்தூளை
தினம்
சுவாசித்து...

கற்றுக்கொடுத்து
கற்றுக்கொடுத்து
காற்றை இழந்த
ஆசிரியர்
இதயத்தில்
இன்னும்
இருக்கிறது வலி...

மாணவன்
மண்ணாகிப்போவானோ
என்றெண்ணி
கண்டித்த ஆசிரியரை
தண்டித்த சமூகம்...

வழி காட்டிய
மனிதனுக்கு
வலி ஊட்டிய
சமூகம்...

ஆசிரியர்கள்
ஏணிப்படிகள்
என்பதால்தான்
என்னவோ
எல்லோரும்
ஏறி மிதிப்பார்கள் போலும்...

மரியாதைக்குரிய
ஆசிரியரை
அவமரியாதைக்கு
ஆளாக்கும்
ஆணவ சமூகம்...

காக்க வேண்டிய
கடவுளை
தாக்க வேண்டிய
அவசியம்
எப்படி வந்தது?

கத்தி கத்தி
கற்பித்த குற்றத்திற்கு
கத்திக்குத்துதான்
பரிசா?

மாணவனை
மகனாகப் பார்க்கும்
ஆசிரியரை
எதிர்வினையாக்கி
எதிர்த்துப்பேசும்
சமூகம்.

சிற்பி
கல்லை
காயப்படுத்துவதாய்
கருதி
சிற்பியை காயப்படுத்தினால்
சிலை எப்படி
கிடைக்கும்.

மாணவனை
செதுக்க நினைக்கும்
ஆசிரியரை
தண்டித்தால்
நல்ல
சமூதாயம்
எப்படி கிடைக்கும்?

காலையில்
பள்ளிக்கு ஆசிரியராய்
சென்று
மாலையில்
வீட்டிற்கு
அப்பாவாய்
அம்மாவாய்...
திரும்புவதே
சவாலானதே!

பள்ளியில்
மாணவனை
திட்டிவிட்டு
படுக்கையில்
உறங்காமல்
கிடப்பவனே
இன்றைய ஆசிரியன்...

ஒருபுறம்
தேர்ச்சிக்கான நெருக்கடி
மறுபுறம்
ஒத்துழைக்க மறுக்கும்
மாணவனின் தேள்கடி...
நடுவில்
காயம்பட்ட ஆசிரியன்...

ஆனால்...

*ஆசிரிய நண்பரே !!!*

*ஆண்டிற்கு*
*ஒரு தினம்*
*அது*
*ஆசிரியர் தினம்...*

*_அன்று_* மட்டும்
வாழ்த்துக்கள்
வந்து வந்து
குவியும்...

*_இன்று_*  மட்டுமே
போற்றப்படுவோம்
*_இனி எப்போதும்_*
தூற்றப்படுவோம்...

*_இன்று_*
அறப்பணி
அர்ப்பணி
என்பார்கள்...
*_நாளை_*   நம்மை
பலியிட
அர்ப்பணிப்பார்கள்...

*இன்று*
*சமூக சிற்பி*
என்பார்...
*நாளை*
*சமூக எதிரி* என்பார்...

*இருந்தாலும்*
*இறந்தாலும்*
*ஆசிரியராய் இருப்போம்...*

*_கற்பித்தலை_*
*_கடமை யோடு_*
*_செய்யும்..._*

*கல்விக்கடவுளாய்*
*எப்போதும்...*

ஒரு வரி உண்மைகள்

ஒரு வரி உண்மைகள்

*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…

*வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!

*எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.
யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !!

*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!

*உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!

*பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!

*ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!

*நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை!!

*சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!!

*‘சரியாக் கேட்க மாட்டேங்குது, அப்புறமாப் பேசுறேன்’ என்பது மட்டும் சரியாக் கேட்டுவிடுகிறது!

*சிறு வயதில் ஆம்லெட் ஆக முடியாமல் தப்பித்த முட்டைகள்தான் வளர்ந்தவுடன் தந்தூரி சிக்கன் ஆகிறது!

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

தொடக்கன் - ஓர் இனிய எளிய எழுச்சி

எமது எளிய தமிழ், அறிவியற்றமிழ்=அறிவியல்+தமிழ் நூல்களை இலவசமாகவே கொடுப்பதற்காக‌ எளிய வலைப்பூ தொடங்கியுள்ளோம். அனைவருடனும் பகிர்க. பயன்பெறுக.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

குழப்ப மட்டுமே தெரிந்த கூத்தன் - சீற்றப்பா -5


குழப்பம் மட்டுமே கோலோச் சுகின்ற
கொடிய ஆட்சியை கொதிக்க வைத்து
மக்கள் மாள மேலே ஊற்றும்
மூளை யில்லா முதன்மை அமைச்சனே
- சீற்றப்பா -5
அருஞ்சொற்பொருள்:
முதன்மை அமைச்சன் - Prime minister