திங்கள், 18 நவம்பர், 2019

எத்தனை வகையான பேச்சு!

பேசு( speak)
பகர்( speak with data)
செப்பு(speak with answer)
கூறு ( speak categorically)
உரை ( speak meaningfully)
நவில்( speak rhymingly)
இயம்பு( speak musically)
பறை ( speak to reveal)
சாற்று ( speak to declare)
நுவல் (speak with introduction)
ஓது ( speak to recite)
கழறு( speak with censure)
கரை( speak with calling)
விளம்பு( speak with a message)
தொல்காப்பியர் இத்தனை வகையான பேச்சுகளைக் குறிப்பிடுகிறார்.
*எத்தனை மொழிகளில் இந்த சொல்லாக்கம் உண்டு!*
எண்ணிப் பாருங்கள் தமிழின் வலிமையை!

பழந்தமிழ்.. - புலனச்செய்தி

பழந்தமிழ்..
😊😊😊😊😊
தினமும் கூறப்படும் இரட்டை சொற்களும் அவற்றின் பொருட்களும்:-*
😌🌹😌🌹😌🌹😌🌹

*குண்டக்க மண்டக்க.*

குண்டக்க-இடுப்புப்பகுதி.

மண்டக்க-தலைப்பகுதி.

சிறுவர்கள் கால்பக்கம்,தலைப்பக்கம்
பார்க்காமல் தூங்குவார்கள்.
அதுபோல் வீட்டில் பொருள்கள் சிதறி,
மாறி இருத்தலே
குண்டக்க மண்டக்க என்று பொருள்

*அக்குவேர் ஆணிவேர்*

அக்குவேர்_செடியின் கீழ் உள்ள
மெல்லியவேர்.

ஆணிவேர்_செடியின் கீழ் ஆழமாக
செல்லும் உறுதியான வேர்.

*அரை குறை*

அரை-ஒரு பொருளில் சரிபாதி அளவு.

குறை-அந்த சரிபாதியளவில்
குறைவாக உள்ளது குறை.
(உ-ம்.)அரை குறை வேலை.

*அக்கம்பக்கம்.*

அக்கம்-தன்வீடும்,தான்இருக்கும் இடமும்.

பக்கம்-பக்கத்துவீடும் பக்கத்தில் உள்ள இடமும்.
*கார சாரம்*

காரம்-உறைப்புச்சுவை.

சாரம்-சார்ந்தது.(காரம்
சார்ந்த பிற சுவைகள்)

*இசகு பிசகு.*

இசகு-தம் இயல்பு
தெரிந்து,ஏமாற்றுபவனிடம்
ஏமாறுதல்.

பிசகு-தம்முடைய
அறியாமையால் ஏமாறுதல்.
(உ-ம் )இசகு பிசகாக மாட்டிக்கொண்டார்.

*இடக்கு முடக்கு*

இடக்கு--எள்ளி நகைத்தும்,
இகழ்ந்தும் பேசுதல்.

முடக்கு--கடுமையாக எதிர்த்தும்,
தடுத்தும் பேசுதல்.

*ஆட்ட பாட்டம்*

ஆட்டம்--தாளத்திற்குப் பொருந்தியோ/பொருந்தாமலோ ஆடுவது.

பாட்டம்--ஆட்டத்திற்குப்
பொருந்தியோ/பொருந்தாமலோ
பாடுவது..

*தோட்டம் துரவு*

தோட்டம் -செடி,கொடி கீரை பயிரிடப்படும் இடம்.தோப்பு-மரங்களின் தொகுப்பு.

துரவு--கிணறு.

*பழக்க வழக்கம்.*

பழக்கம்--ஒருவர் ஒரு
செயலைப் பலகாலம்
செய்து வருவது.

வழக்கம்--பலர் ஒரு செயலைப்
பலகாலம் கடைபிடித்து வருவது.(மரபு)

*சத்திரம் சாவடி.*

சத்திரம்--இலவசமாக சோறு போடும் இடம்(விடுதி).

சாவடி--இலவசமாக தங்கும் இடம்(விடுதி

*பற்று பாசம்.*

பற்று--நெருக்கமாக உறவாடி இருத்தல்.

பாசம்--பிரிவில்லாமல்
சேர்ந்தே இருத்தல்.

*ஏட்டிக்குப் போட்டி.*

ஏட்டி-விரும்பும் பொருள் அல்லது செயல்.
(ஏடம்--விருப்பம்.)

போட்டி--விரும்பும் பொருள் அல்லது
செயலுக்கு எதிராக வரும் ஒன்று.

*கிண்டலும் கேலியும்.*

கிண்டல்--ஒருவன் மறைத்தச் செய்தியை அவன் வாயில் இருந்தே
பிடுங்குதல்.(கிண்டி தெரிந்து கொள்ளுதல்).

கேலி--எள்ளி நகையாடுதல்.

*ஒட்டு உறவு.*

ஒட்டு--இரத்தச்சம்பந்தம் உடையவர்கள்.(தாய்,தந்தை,
உடன்பிறந்தவர்கள்,மக்கள்)

உறவு--பெண் கொடுத்த அல்லது
பெண் எடுத்த வகையில் நெருக்கமானவர்கள்.
*பட்டி தொட்டி.*
பட்டி---மிகுதியாக
ஆடுகள் வளர்க்கப்படும் இடம்(ஊர்).

தொட்டி---மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் இடம்(ஊர்).

*கடை கண்ணி.*

கடை---தனித்தனியாக அமைந்த வியாபார(வணிக)நிலையம்.

கண்ணி-----தொடர்ச்சியாக கடைகள் அமைந்த
கடைவீதி.
*பேரும் புகழும்.*
பேர்--வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும்.

புகழ்--வாழ்விற்குப் பிறகும்
நிலைப்பெற்றிருக்கும் பெருமை.

*நேரம் காலம்.*

நேரம்--ஒரு செயலைச்
செய்வதற்கு நமக்கு வசதியாக
(Time) அமைந்த பொழுது.

காலம்--ஒரு செயலைச்
செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில்
எடுத்துக்கொள்ளும் கால அளவு நிலை.

*பழி பாவம்.*

பழி---நமக்கு தேவையில்லாத,
பொருந்தாத செயலைச்
செய்ததால்,இப்பிறப்பில்
உண்டாகும் பழிப்பு.

பாவம்---தீயசெயல்களைச்
செய்ததால் மறுபிறப்பில்
நாம் அனுபவிக்கும் தீய நிகழ்வுகள்.

*கூச்சலும் குழப்பமும்.*

கூச்சல்--துன்பத்தில் சிக்கி உள்ளோர் போடும்
அவல ஒலி (ஓலம்).
கூ--கூவுதல்.
----
குழப்பம் --அவல ஒலியைக் கேட்டு அங்கு வந்தவர்கள் போடும் இரைச்சல்..

*நகை நட்டு.*

நகை--பெரிய அணிகலங்களைக்
குறிக்கும்.(அட்டியல்,ஒட்டியாணம்,சங்கிலி).
நட்டு---சிறிய அணிகலன்களைக்குறிக்கும்.
(திருகு உள்ள தோடு,காப்பு,கொப்பு).

*பிள்ளை குட்டி.*

பிள்ளை--(பொதுப்பெயர்)
இருப்பினும் ஆண் குழந்தையைக் குறிக்கும்.

குட்டி---இது பெண் குழந்தையைக்
குறிக்கும்.

*வாட்ட சாட்டம்.*
வாட்டம்-வளமான தோற்றம்,வாளிப்பான உடல் ,
அதற்கேற்ப உயரம்.

சாட்டம்--உடல்(சட்டகம்),வளமுள்ள கனம்.
தோற்றப் பொலிவு.
*காய்கறி.*

காய்---காய்களின் வகைகள்.

கறி--
(சைவ உணவில் )கறிக்கு உபயோகப்
படுத்தப்படும் கிழங்கு வகைகளும்,கீரை வகைகளும்.

*கால்வாய்-வாய்க்கால்*

வாய்--குளம்.

கால்வாய்--குளத்திற்கு
தண்ணீர் வரும் கால்.(பாதை).
வாய்க்கால்--குளத்திலிருந்து
தண்ணீர் செல்லும் கால்.(பாதை)
பாதை என்பது நீர்வழிப்பாதையைக்குறிக்கும்.

*ஈவு இரக்கம்.*

ஈவு--(ஈதல்).கொடை வழங்குதல்.

இரக்கம்---(அருள்).
பிற உயிர்களின்மேல்
அருள் புரிதல்.
*பொய்யும் புரட்டும்.*

பொய்---உண்மை இல்லாததைக்கூறுவது.

புரட்டு-- ஒன்றை நேருக்கு மாறாக
மாற்றி ,உண்மைபோல் நம்பும்படியாக கூறுவது.

*சூடு சொரணை.*

சூடு--ஒருவர் தகாத சொல்லைப்
பேசும்போது/தகாத செயலைச்செய்யும் போது நமக்கு ஏற்படும்
மனக்கொதிப்பு(மனவெதுப்பு,எரிச்சல்).

சொரணை--நமக்கு ஏற்படும் மான உணர்வு.
*பட்டம், விருது.*

பட்டம்-- கல்லூரி , பல்கலைக்கழகம் இவற்றல் படித்து பெறுவது.
பெயருக்கு ப்பின்னால்‌ இடம் பெறும்.

விருது--தகுதி அடிப்படையில் வழங்கப்படுவது.இது
பெயருக்கு முன்னால் ஸ்டார் இடம்பெறும்.☺☺☺👍👍👌👌
------------ -------------.
படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
அன்புடன்
❤🙏🏻

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

கிளவிகள், வழக்குகள் - சொல்லாராய்ச்சி

... குண்டக்க மண்டக்க. குண்டக்க-இடுப்புப்பகுதி.மண்டக்க-தலைப்பகுதி.
சிறுவர்கள் கால்பக்கம்,தலைப்பக்கம்
பார்க்காமல் தூங்குவார்கள்.
அதுபோல் வீட்டில் பொருள்கள் சிதறி,
மாறி இருத்தலே
குண்டக்க மண்டக்க என்பதற்கு பொருள்.
அந்தி சந்தி.
அந்தி_மாலைக்கும்
இரவுக்கும் இடையில்உள்ள பொழுது.
சந்தி_இரவுக்கும் காலைக்கும்
இடையில் உள்ள விடியல் பொழுது.

அக்குவேர் ஆணிவேர்

அக்குவேர்_செடியின் கீழ் உள்ள
மெல்லியவேர்.
ஆணிவேர்_செடியின் கீழ் ஆழமாக
செல்லும் உறுதியான வேர்.

அரை குறை

அரை-ஒரு பொருளில் சரிபாதி அளவு.
குறை-அந்த சரிபாதியளவில்
குறைவாக உள்ளது குறை.
(உ-ம்.)அரை குறை வேலை.

அக்கம்பக்கம்.

அக்கம்-தன்வீடும்,தான்இருக்கும் இடமும்.
பக்கம்-பக்கத்துவீடும் பக்கத்தில் உள்ள இடமும்.
கார சாரம்

காரம்-உறைப்புச்சுவை.
சாரம்-சார்ந்தது.(காரம்
சார்ந்த பிற சுவைகள்)

இசகுபிசகு.

இசகு-தம் இயல்பு
தெரிந்து,ஏமாற்றுபவனிடம்
ஏமாறுதல்.
பிசகு-தம்முடைய
அறியாமையால் ஏமாறுதல்.
(உ-ம் )இசகு பிசகாக மாட்டிக்கொண்டார்.

இடக்கு முடக்கு

இடக்கு--எள்ளி நகைத்தும்,
இகழ்ந்தும் பேசுதல்.
முடக்கு--கடுமையாக எதிர்த்தும்,
தடுத்தும் பேசுதல்.

ஆட்ட பாட்டம்

ஆட்டம்--தாளத்திற்குப் பொருந்தியோ/பொருந்தாமலோ ஆடுவது.
பாட்டம்--ஆட்டத்திற்குப்
பொருந்தியோ/பொருந்தாமலோ
பாடுவது.

அலுப்பு சலிப்பு

அலுப்பு-உடலில் உண்டாகும் வலியும்
குடைச்சலும்.
சலிப்பு-உள்ளத்தில் ஏற்படும்
வெறுப்பும் சோர்வும்.

1.தோட்டம் துரவு.
2.தோப்பு துரவு.
தோட்டம் -செடி,கொடி கீரை பயிரிடப்படும் இடம்.தோப்பு-மரங்களின் தொகுப்பு.
துரவு--கிணறு

காடு கரை.

காடு-மேட்டுநிலம்
(முல்லை).

கரை-வயல் நிலம்(மருதம்-
நன்செய்,புன்செய்)

காவும் கழனியும்.

கா--சோலை.
கழனி--வயல்.
(மருதம் சார்ந்த நிலப்பகுதி)

நத்தம் புறம்போக்கு.

நத்தம்--ஊருக்குப் பொதுவாகிய
மந்தை.(ஊருக்குப் பக்கத்தில் இருக்கும்)
புறம்போக்கு--ஆடு மாடு மேய்வதற்காக அரசு
ஒதுக்கிய புல்நிலம்.(ஊர் கடந்து தூரத்தில் இருக்கும்.)

பழக்க வழக்கம்.

பழக்கம்--ஒருவர் ஒரு
செயலைப் பலகாலம்
செய்து வருவது.
வழக்கம்--பலர் ஒரு செயலைப்
பலகாலம் கடைபிடித்து வருவது.(மரபு)

சத்திரம் சாவடி.

சத்திரம்--இலவசமாக சோறு போடும் இடம்(விடுதி).
சாவடி--இலவசமாக தங்கும் இடம்(விடுதி).

நொண்டி நொடம்.

நொண்டி--காலில் அடிப்பட்டோ அல்லது அடிபடாமலோ ,ஒரு குறையால் நொண்டி நடப்பவர்.
நொடம்--கை முடங்கி,அதனால் கையின் செயல் அற்றவர்(நுடம்,முடம்)

பற்று பாசம்.

பற்று--நெருக்கமாக உறவாடி இருத்தல்.
பாசம்--பிரிவில்லாமல்
சேர்ந்தே இருத்தல்.

ஏட்டிக்குப் போட்டி.

ஏட்டி-விரும்பும் பொருள் அல்லது செயல்.
(ஏடம்--விருப்பம்.)
போட்டி--விரும்பும் பொருள் அல்லது
செயலுக்கு எதிராக வரும் ஒன்று.

கிண்டலும் கேலியும்.

கிண்டல்--ஒருவன் மறைத்தச் செய்தியை அவன் வாயில் இருந்தே
பிடுங்குதல்.(கிண்டி தெரிந்து கொள்ளுதல்).
கேலி--எள்ளி நகையாடுதல்.

ஒட்டு உறவு.

ஒட்டு--இரத்தச்சம்பந்தம் உடையவர்கள்.(தாய்,தந்தை,
உடன்பிறந்தவர்கள்,மக்கள்)
உறவு--பெண் கொடுத்த அல்லது
பெண் எடுத்த வகையில் நெருக்கமானவர்கள்.

பட்டி தொட்டி.
பட்டி---மிகுதியாக
ஆடுகள் வளர்க்கப்படும் இடம்(ஊர்).
தொட்டி---மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் இடம்(ஊர்).

கடை கண்ணி.

கடை---தனித்தனியாக அமைந்த வியாபார(வணிக)நிலையம்.
கண்ணி-----தொடர்ச்சியாக கடைகள் அமைந்த
கடைவீதி.
பேரும் புகழும்.
பேர்--வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும்.
புகழ்--வாழ்விற்குப் பிறகும்
நிலைப்பெற்றிருக்கும் பெருமை.

நேரம் காலம்.

நேரம்--ஒரு செயலைச்
செய்வதற்கு நமக்கு வசதியாக
(Time) அமைந்த பொழுது.
காலம்--ஒரு செயலைச்
செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில்
எடுத்துக்கொள்ளும் கால அளவு நிலை.

பழி பாவம்.

பழி---நமக்கு தேவையில்லாத,
பொருந்தாத செயலைச்
செய்ததால்,இப்பிறப்பில்
உண்டாகும் பழிப்பு.
பாவம்---தீயசெயல்களைச்
செய்ததால் மறுபிறப்பில்
நாம் அனுபவிக்கும் தீய நிகழ்வுகள்.

கூச்சலும் குழப்பமும் .

கூச்சல்--துன்பத்தில் சிக்கி உள்ளோர் போடும்
அவல ஒலி (ஓலம்).
கூ--கூவுதல்.
----
குழப்பம் --அவல ஒலியைக் கேட்டு அங்கு வந்தவர்கள் போடும் இரைச்சல்..

நகை நட்டு.

நகை--பெரிய அணிகலங்களைக்
குறிக்கும்.(அட்டியல்,ஒட்டியாணம்,சங்கிலி).
நட்டு---சிறிய அணிகலன்களைக்குறிக்கும்.
(திருகு உள்ள தோடு,காப்பு,கொப்பு).

பிள்ளை குட்டி.

பிள்ளை--(பொதுப்பெயர்)
இருப்பினும் ஆண் குழந்தையைக் குறிக்கும்.
குட்டி---இது பெண் குழந்தையைக்
குறிக்கும்.

பங்கு பாகம்
பங்கு--கையிருப்பு பணம்,நகை,பாத்திரங்களைப்பிரித்தல்.(அசையும் சொத்து)
பாகம்--வீடு,மனை,நிலபுலன்களைப் பிரித்தல்,(அசையா சொத்து)

வாட்ட சாட்டம்.

வாட்டம்-வளமான தோற்றம்,வாளிப்பான உடல் ,
அதற்கேற்ப உயரம்.
சாட்டம்--உடல்(சட்டகம்),வளமுள்ள கனம்.
தோற்றப் பொலிவு.
காய்கறி.

காய்---காய்களின் வகைகள்.
கறி--
(சைவ உணவில் )கறிக்கு உபயோகப்
படுத்தப்படும் கிழங்கு வகைகளும்,கீரை வகைகளும்.

கால்வாய்-வாய்க்கால்

வாய்--குளம்.
கால்வாய்--குளத்திற்கு
தண்ணீர் வரும் கால்.(பாதை).
வாய்க்கால்--குளத்திலிருந்து
தண்ணீர் செல்லும் கால்.(பாதை)
பாதை என்பது நீர்வழிப்பாதையைக்குறிக்கும்.

ஈவு இரக்கம்.
ஈவு--(ஈதல்).கொடை வழங்குதல்.
இரக்கம்---(அருள்).
பிற உயிர்களின்மேல்
அருள் புரிதல்.
பொய்யும் புரட்டும்.

பொய்---உண்மை இல்லாததைக்கூறுவது.
புரட்டு-- ஒன்றை நேருக்கு மாறாக
மாற்றி ,உண்மைபோல் நம்பும்படியாக கூறுவது.

சூடு சொரணை.

சூடு--ஒருவர் தகாத சொல்லைப்
பேசும்போது/தகாத செயலைச்செய்யும் போது நமக்கு ஏற்படும்
மனக்கொதிப்பு(மனவெதுப்பு,எரிச்சல்).
சொரணை--நமக்கு ஏற்படும் மான உணர்வு.
பட்டம், விருது.
பட்டம்-- கல்லூரி , பல்கலைக்கழகம் இவற்றல் படித்து பெறுவது.
பெயருக்கு ப்பின்னால்‌ இடம் பெறும்.
விருது--தகுதி அடிப்படையில் வழங்கப்படுவது.இது
பெயருக்கு முன்னால் இடம்பெறும் ......

சனி, 20 ஜூலை, 2019

தமிழறிவோம்


புதிய பரிணாமம்
புதிய பரிமாணம்
புதிய பரிமாணம்
புதிய பரிணாமம்
படி என்னும் வார்த்தை எத்தனை பொருளில் வருகிறது, எத்தனை பரிமாணங்களில் வருகிறது என்பதைப் பார்போம்.
  1. படி பெயர்ச்சொல்
பெயர்ச்சொல்லாக எடுத்துக் கொண்டால் படிக்கட்டு சொல்லைக் குறிக்கிறது
  1. படி பெயர்ச்சொல்
படிக்காசு (allowance) சொல்லைக் குறிக்கிறது.
அன்றாடப்படி (daily allowance)
  1. படி பெயர்ச்சொல்
உழக்கு என்னும் வழக்கொழிந்த சொல்லைக் குறிக்கிறது.
.கா; கால்படி அரைப்படி
  1. படி வினைச்சொல்
வினைச்சொல்லாக எடுத்துக் கொண்டால் படித்தல், (வாசித்தல்) தொழிலைக் குறிக்கிறது.
  1. படி வினைச்சொல்
xerox என்னும் சொல்லுக்கு இணையான படி எடுத்தல் தொழிலைக் குறிக்கிறது.
.கா; Backup = காப்புப்படி
xerox = ஒளிப்படி
  1. படி வினைச்சொல்
அடிபணிந்து செல்லல் தொழிலைக் குறிக்கிறது.
  1. படி படி அடுக்கடுக்காய் வந்தால்
படிப்படியாய் முன்னேறுதல் தொழிலைக் குறிக்கிறது.
இப்போது "சும்மா" எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
  1. சும்மா
"சும்மா இரு" என்றால் அமைதியாக இரு என்று பொருள்.
  1. சும்மா
"சும்மாதான்" என்றால் ஒரு பேச்சுக்குத்தான், விளையாட்டுக்குத்தான் என்று பொருள்.
  1. சும்மா
"சும்மா பேசிக்கிட்டே இருக்காதே" என்றால் எப்பொழுதும் பேசிக்கிட்டே இருக்காதே என்று பொருள்.
  1. சும்மா
"சும்மாதான் செஞ்சேன்" என்றால் காரணமில்லை என்று பொருள்.
  1. சும்மா
"சும்மாதான் இருக்கேன்" என்றால் வேலையில்லாமல் இருக்கேன் என்று பொருள்.
  1. சும்மா
"சும்மாதான் ஒப்புக்காகத்தான்" ஒன்றுமில்லை என்று பொருள்.
  1. சும்மா
"சும்மா சும்மா செய்யாதே" என்றால் அடிக்கடி செய்யாதே என்று பொருள்.
சரி. "படி" மற்றும் "சும்மா" பற்றி தெரிந்து கொண்டோம். அவைகளை ஏழு வழிகளில் பிரித்தாராய்தோம் . சும்மா இருக்காமல் படியுங்கள்.

புதன், 10 ஜூலை, 2019

கேட்ட கதை

நான் பள்ளியில் படிக்கும்போது எங்களிடம் ஆய்வு செய்ய வந்த உயர் அதிகாரி ஒரு கேள்வி கேட்டார் !
இந்த பூமி திடீரென சுழல்வதை நிறுத்தி கீழே விழுந்து விட்டால் நாம் என்ன ஆவோம் ?
பலர் விழித்தனர் ! 
சிலர் பதிலாக எரிந்து விடுவோம் ! சிதைந்து விடுவோம் !! காற்று இல்லாமல் செத்து விடுவோம் !!! என்றெல்லாம் சொல்ல 
ஒரு பெண் மட்டும், எது கீழே ? எது மேலே ?எங்கே விழுவோம் ? என்று திருப்பிக் கேட்டு பாராட்டுகள் பெற்றாள் !

திங்கள், 17 ஜூன், 2019

நம் பண்டைய பழமொழிகள்...

🌝 தவளை கத்தினால் மழை 

🌝 அந்தி ஈசல் பூத்தால் 
அடை மழைக்கு அச்சாராம் 

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல் 

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 

🌝 தை மழை நெய் மழை

🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும் 

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

🌝 புற்று கண்டு கிணறு வெட்டு

🌝 வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தே பயிர் செய் 

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு

🌝 களர் கெட பிரண்டையைப் புதை 

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

🌝 நன்னிலம் கொழுஞ்சி 
நடுநிலம் கரந்தை 
கடை நிலம் எருக்கு

🌝 நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய் 

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய் 

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை 

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

🌝 உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ 

🌝 அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் 

🌝 புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு 

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

🌝 ஆடு பயிர் காட்டும் 
ஆவாரை கதிர் கட்டும் 

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் 

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 

🌝 நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

🌝 தேங்கி கெட்டது நிலம் 
தேங்காமல் கெட்டது குளம்

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை 

🌝 சொத்தைப் போல் 
விதையை பேண வேண்டும்

🌝 விதை பாதி வேலை பாதி

🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை 

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

🌝 கோப்பு தப்பினால் 
குப்பையும் பயிராகாது

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் 

🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும் 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்! 
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

யாரையும் நம்பாதீர்கள்.

உழவே தலை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும் - இனி
பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.

நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

மேழிச் செல்வம் கோழை படாது.

அன்புடன்
உங்கள் விவசாய நண்பன்
பகிர்ந்நால் நம் மண் மீண்டும் செழிக்கும்.