புதன், 13 ஏப்ரல், 2011

உபுண்டு தன் இலவசச் சேவையை நிறுத்திவிட்டது.

உபுண்டு இயங்குதளத்தினை நாம் பொதுவாக இலவசமாகப் பெற நமது முகவரியை குறிப்பிட்ட (shipit.ubuntu.com) தளத்தில் கொடுக்க வேண்டும்.
ஆனால் உபுண்டு தன் இலவசச் சேவையினை இப்பொழுது நிறுத்தி விட்டது. ஆனால் பதிவிறக்கச்சுட்டி கொடுக்கப் பட்டுள்ளது. அதைக் கொண்டு நாம் பதிவிறக்கிக் கொள்ளலாம். சேவையை நிறுத்தியமைக்கு உபுண்டு சொல்லும் காரணத்தை ஆங்கிலத்திலே கீழே காணலாம்.

(ShipIt has closed

After delivering millions of Ubuntu CDs to millions of new users, our ShipIt programme has finally run its course. While we can no longer deliver free CDs through the programme, it’s still easy to get Ubuntu. You can download Ubuntu for free from Ubuntu.com or you can buy a CD straight from the Canonical shop.)

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

காலஞ்சென்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனுக்கு இந்தப்பதிவு அஞ்சலி

காலத்தால் அழிக்க இயலாத பல பாடல்கள் பாடியவர் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன். 66 அகவையில் இறையடி சேர்ந்தார். எஸ்.பி.பியும், கே.ஜே யேசுதாசும் கோலோச்சிய காலத்திலும், தன்னளவில் அருமையான பாடல்களைக் கொடுத்தவர் இவர். மலையாளத்தினை தாய் மொழியாகக் கொண்டாலும், தமிழ் உச்சரிப்பில் திலகம் இவர். இவர் பாடிய சில பாடல்களை இப்பதிவில் காணலாம்.
இரசினிகாந்த்:
வாவா வசந்தமே (புதுக்கவிதை)
ஆகாயகங்கை (தர்மயுத்தம்)
வாங்கடா வாங்க மற்றும் சில பாடல்கள் (மாவீரன்)
பெத்து எடுத்தவதான் (வேலைக்காரன்)
அதிசயப்பிறவி (அனைத்துப் பாடல்களும்)
மனிதன் மனிதன் (மனிதன்)
கமல்:
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு (16 வயதினிலே)
காதல் வந்திருச்சி [குரலை மாற்றிப் பாடிய பாடல்] (கல்யாணராமன்)
சிவாஜி:
முதல் மரியாதை (அந்த நெலாவத்தான் என்னும் ஒரு பாடல் தவிர‌ அனைத்துப் பாடல்களும்)
விசயகாந்த்:
மஞ்சள் பூசும் (சக்கரைத்தேவன்)
கார்த்திக்:
கட்டிவச்சுக்கோ
சத்யராஜ்:
என்னம்மா கண்ணு (மிஸ்டர் பாரத்)
பிரபு:
சிவி சிணுக்கெடுத்து (வெற்றி விழா)
அடி படகோட்டும் பட்டம்மா (சின்னவர்)
இராமராசன்:
புள்ளி வச்சா (பாட்டுக்கு நான் அடிமை)
ஏ.ஆர்.இரகுமான்:
தென்கிழக்குச் சீமையில(கிழக்குச் சீமையிலே)
காடு பொட்டக் காடு (கருத்தம்மா)
மோனோலிசா (மிஸ்டர் ரோமியோ)
கே.பாக்யராஜ்:
வான் மேகங்களே (புதிய வார்ப்புகள்)
ஏஞ்சோகக் கதைய கேளு (தூறல் நின்னு போச்சு)
முரளி:
ஓபார்ட்டி (இதயம்)
மோகன்:
கூட்சு வண்டியிலே (குங்குமச்சிமிழ்)
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை (சரணாலயம்)

மலேசியா வாசுதேவன் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் தேனாகக் காற்றில் கலந்து என்றென்றும் ஒலிக்கும் என்பது திண்ணம்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

என்னைக் கவர்ந்த பாடல்

படம்:மின்சாரக்கனவு
பாட‌ல்: வைர‌முத்து
பாடிய‌வ‌ர்க‌ள்:எஸ்.பி.பால‌சுப்ர‌ம‌ணிய‌ம், மால்குடி சுபா
இசை: ஏ.ஆர்.இர‌குமான்

குறிப்பு:எஸ்.பி.பிக்கு நாட்டின் உய‌ரிய‌ விருது கிடைத்த‌ பாட‌ல்.

பல்லவி


தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித்தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் - சிறு
விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே - (தங்கத் தாமரை)

சரணம் 1


செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே - என்
கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே.
தெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே - உன்
கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே.
இருதயத்தினுள்ளே ஒலை ஒன்னு கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க‌?
தொடட்டுமா தொல்லை நீக்க - (தங்கத் தாமரை)


சரணம் 2

பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்.
கனைக்கும் தவளைகள் துணையைச் சேரும் கார்காலம்.
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்.
பிரிந்திருக்கும் உயிரையெல்லம் பிணைத்து வைக்கும் கார்காலம்.
நகங்கடிக்கும் பெண்ணே நடக்காதே ஆசை.
நாகரிகம் பார்த்தால் நடக்காது பூஜை.
நெருக்கமே காதல் பாஷை. - (தங்கத் தாமரை)

தொழிற்நுட்பக் கலைஞர்களை முட்டாளாக்கிய கூகுள்.

கூகுளில் இன்று, ஏப்ரல் 1 தேதி நுழைவமைவில் கூகுள் மோஷன் என்ற வசதி இணைக்கப் பட்டிருப்பதாக செய்தி உள்ளது.

இதை நம்பி கூகுளில் தேடினால் மிகுதியான செய்திகளும், யுடியுபில் மிகுதியான காணொளிகளும் கிடைக்கின்றன.

எல்லாம் சரி என்று நினைத்து கூகுள் மோஷனை முயற்சி செய்தால் ஏப்ரல் முட்டாள் என்ற செய்தி வருகின்றது.

எல்லாரையும் முட்டாளாக்கிய கூகுள் வாழ்க.