சனி, 22 டிசம்பர், 2018

மறுக்கமுடியாத சில உண்மைகள் !!! - புலனத்தில் பிறமொழிக் கலப்புடன் வந்த செய்தி.

பிறமொழிக் கலப்புடன் வந்த செய்தி; நகைச்சுவையாதலால் பகிர்கிறேன்.

மருமகள் நைட்டி போட்டதால்
சண்டை வந்த வீடுகளில் எல்லாம்,
பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!

👄👩👖👠👜

தான் செஞ்ச தவற்றைப்
பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன்
சராசரி மனுஷன்;

தனக்கு ஒரு பொண்டாட்டி
இருக்கிறதையே மறைக்கிறவன்
பெரிய மனுஷன்!

😇🤡😇🤡

OMR -ல சம்பாதிக்கிறதை
ECR-ல செலவு பண்றாங்க!

🍿🥛🍻🥃

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அடிப்பது இல்லை !

😺😺😽👶

ஆண்களின் பெருங்குறைகளுள் ஒன்று...
'அன்பாக இருக்கத் தெரியும்;
ஆனால், யார் மீதெனத்
தேர்ந்தெடுக்கத் தெரியாது!’

😅😆🤠😆

ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம்.

அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம்.

ஆணாதிக்கச் சமூகம் !

💃👯‍♂🕺👗

நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே...
அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க ?

💿📽📡📽

முன்னர் எல்லாம் மழைக்காலம்
என ஒன்று இருந்தது.

இப்போது மழை நாட்கள் மட்டுமே !

⛈☔💦☔🤷‍♀🏃‍♀👨‍👦🏃‍♀

ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம் !

💯🈁📶🔈

நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான்,
சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம் !

💥🖥⚡💥

யாரும் இல்லாதபோதும்
குழந்தைகள் காதுக்குள் வந்தே
ரகசியங்கள் சொல்கிறார்கள் !

🤰🙎👨‍👩‍👦‍👦🙎

நம் வீட்டைச் சேர்ந்த ஒருவர்
வெளியில் சென்றிருக்கும்போது
அவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால்,
அவர் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது.

📞📲📱

‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு,
பேசாம இருந்ததுக்காகச் சண்டைய போட்டு,
அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்கப் பெண்களால் மட்டும்தான் முடியும் !

⛄😥⛄😥

ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம,
இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம் !!

🕺🤹‍♂🕺🤹‍♂

"அப்பாக்கிட்ட காசு இல்லம்மா"
எனும் சொல் கேட்டு
அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல்,
தந்தைக்குச் சோகமயமானது!

💃👫💃👫

காசு கொடுத்துக் கடவுளைப் பார்த்து,
கடவுளுக்கும் காசு கொடுத்து,
கடைசியில கடவுள்கிட்டயே
காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன் !

🙏🙏🙏🙏

ஒரு வரி உண்மைகள்....💞💕💞💕💞💕💞💕

*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…

*வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!

*எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.
யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !!

*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!

*உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!

*பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!

*ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!

*நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை!!

*சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!!

தமிழே! அழகு மொழியே!

"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?

அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!!

"இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்?

இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட!!

"உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்?

உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!!

"எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்?

எதையும் ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!!

"ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்?

அதற்கு நான் ( i ) ஐ என்ற அகம்பாவம் இருந்தால் தனிமை படுத்தப்படுவாய் என்பதனை உணர்த்த!

"ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்?

ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!!!

எனவே நான் (i - ஐ) தான் என்கிற குணம், ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும்.

தமிழனாய் அகம் மகிழ்கிறேன்.

பதினாறு வகையான அர்த்தங்கள் - புலனச்செய்தி

1 எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]

3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும். 

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] ☀சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...? 
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]

9] ☀ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம். 

10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11] ☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

13] ☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]⚜நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு  
*நம்பிக்கையையே* ஆகும்.

15] ☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. 
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

உப்பில் இருப்பது அசுர குணம்... தேனில் இருப்பது தேவர் குணம்... சித்த மருத்துவம்...

உப்பின் தன்மை என்ன ?
**************************

சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ?

இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு...
உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்
இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..
ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் .
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் .
சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உண்ண பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் ...

தேன்....
******

தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் . சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?

தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது . இதனால் தான் தேனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .
ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .
இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள் ..
மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ:-

1.மாதம் 2 முறையாவது 3 வேளையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .

2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .
தேன் சர்க்கரை நோய்களை தூண்டாது .

3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்
நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .

உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் )
இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணப்படுத்த
உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(alaopathy )

இனிப்பை வைத்து வைத்யம் செய்வது homeopathi .
உப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.

நல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது
கருவாடு ,உறுகாய்,போண்டரைவைகள் உதாரணம் ...
நம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே .

தேவ அமிர்தம் என்பது தேன் ...
தேன் தேவகுணம் உடையது
உப்பு அசுரகுணம் உடையது
தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும்
உப்பு பூலோகத்தில் இருக்க வைக்கும் ..
இவைகள் உடல் சார்ந்த விவரம் ....

ஆகவே உப்பை குறைத்தும் ,தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்ளவேன்டும்

நில அளவுகள் அறிவோம் - புலனச்செய்தி

♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
♓1 ஏக்கர் – 100 சென்ட்
♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
♓1 மீட்டர் – 3.281 அடி
♓1 குழி – 44 சென்ட்
♓1 மா – 100 குழி
♓1 காணி – 132 சென்ட் (3 குழி)
♓1 காணி – 1.32 ஏக்கர்
♓1 காணி – 57,499 சதுர அடி
♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்
♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
♓1 கிலோ மீட்டர் – 3280 அடி
♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)
♓1 லிங்க் – 0.66 அடி
♓1 கெஜம் – 3 அடி
♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)
♓10 செயின் – 1 பர்லாங்கு
♓1 இன்ச் – 2.54 செ.மீ
♓1 பேர்ச் - 272 சதுரஅடி
♓1 ஏக்கர் - 160 பேர்ச்
♓1 செ.மீ – 100 மி.மீ
♓1 கெஜம் – 0.9144 மீட்டர்
♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்
♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..

வெள்ளி, 5 அக்டோபர், 2018

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: நீதானே என் பொன் வசந்தம்
குரல்: கார்த்திக்
இசை: இளையராஜா
வரிகள்: நா.முத்துக்குமார்
ஆண்டு: 2012
 
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையால் மன்னிக்கவும்
உன்னக்கு உரிமை இல்லையா?

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்
தீயாக பார்காதடி....
சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கணக்கும் பயந்து நடுங்கும்

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைகணமே
காதல் அதை பொறுக்கண்ணுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைகணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: வீரா
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமண்யம்

வரிகள்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
ஆண்டு: 1994
 
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ… அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன் மயில் ஆடுது வெண்பனி தூவுது
பூமி எங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட
அன்னங்களின் ஊர்வலம்
சக  ரிம  கப  மத‌  பநி  த‌ச  நிரிநி…
சுவரங்களின் தோரணம்
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னி
ஆற்றில் பொற்க்கோல் அலையாட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
இயற்கையின் அதிசயம்
சக  ரிம  கப  மத‌  பநி  த‌ச  நிரிநி…
வானவில் ஓவியம்….
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: ரெட்டைவால் குருவி
குரல்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: இளையராஜா
வரிகள்: மு.மேத்தா
ஆண்டு: 1987


ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே


ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை மீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம்கள் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மொகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுமே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுமே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஒரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே

சனி, 28 ஜூலை, 2018

இந்த ஞமலிகளிடம் நாட்டை விட்டால்... ஐயோ - சீற்றப்பா - 9


திரைப்படம் நடிக்கத் திரிகிறான் குசுனி
பசப்பன் செய்கிறான் பரத்தை நிகழ்ச்சி
ஞமலிகள் இந்த நாட்டை ஆள‌
வாக்கு அளித்தால் வாய்க்கு அரிசியே.

சீற்றப்பா - 9.

சனி, 16 ஜூன், 2018

என்னைக் கவர்ந்த பாடல்

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

(கண்ணே)

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

(கண்ணே)

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
(கண்ணே)

சீமானின் சொத்து மதிப்பு விபரம் - புலனச்செய்தி

1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர் ,
2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்,
3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம்,
4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம் ,
5.ஆவடியில் 6ஏக்கர் நிலம் ,
6.பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள் ,
7.சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி!
8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில் ,
9.விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும்டிரஸ்டி பெயரில் சர்ச்,
10.மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம் ,
11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்
12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு .
13. நெல்லை குமரிமாவட்ட நாடார் முக்கிய சங்கத்தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது.
15.பழனி அருகே தென்னந்தோப்பு
16.ஊட்டியில் எஸ்டேட் தொழில்.
இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை , மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு அமௌன்ட்.

ஒரு சாதாரண எளிய பிள்ளையின் சொத்து இவ்வளவு தான்

கடைசிய அரணையூரில் ஆறு கோடி 6000 சதுர அடியில் சின்னதா ஒரு வீடு. 😜😜😁😁

👇👇👇உண்மை இல்லை என்று மறுக்க முடியுமா சீமான்

ஆண்டுப் பெயர்கள் தமிழில் - புலனச்செய்தி

1 நற்றோன்றல் - பிரபவ

2 உயர்தோன்றல் - விபவ

3 வெள்ளொளி - சுக்கில

4 பேருவகை - பிரமோதூத

5 மக்கட்செல்வம் - பிரசோற்பத்தி

6 அயல்முனி - ஆங்கிரச

7 திருமுகம் - ஸ்ரீமுக

8 தோற்றம் - பவ

9 இளமை - யுவ

10 மாழை - தாது

11 ஈச்சுரம் - ஈஸ்வர

12 கூலவளம் - வெகுதான்ய

13 முன்மை - பிரமோதி

14 நேர்நிரல் - விக்ரம

15 விளைபயன் - விஜ_

16 ஓவியக்கதிர் - சித்ரபானு

17 நற்கதிர் - சுபானு

18 தாங்கெழில் - தாரண

19 நிலவரையன் - பார்த்திப

20 விரிமாண்பு - விய

21 முற்றறிவு - சர்வசித்

22 முழுநிறைவு - சர்வதாரி

23 தீர்பகை - விரோதி

24 வளமாற்றம் - விக்ருதி

25 செய்நேர்த்தி - கர

26 நற்குழவி - நந்தன

27 உயர்வாகை - விசய

28 வாகை - சய

29 காதன்மை - மன்மத

30 வெம்முகம் - துன்முகி

31 பொற்றடை - ஏவிளம்பி

32 அட்டி - விளம்பி

33 எழில்மாறல் - விகாரி

34 வீறியெழல் - சார்வரி

35 கீழறை - பிலவ

36 நற்செய்கை - சுபகிருது

37 மங்கலம் - சோபகிருது

38 பகைக்கேடு - குரோதி

39 உலகநிறைவு - விசிவாவசு

40 அருட்டோற்றம் - பராபவ

41 நச்சுப்புழை - பிலவங்க

42 பிணைவிரகு - கீலக

43 அழகு - சௌமிய

44 பொதுநிலை - சாதாரண

45 இகல்வீறு - விரோதிகிருது

46 கழிவிரக்கம் - பரிதாபி

47 நற்றலைமை - பிரமாதீச

48 பெருமகிழ்ச்சி - ஆனந்த

49 பெருமறம் - இராட்சச

50 தாமரை - நள

51 பொன்மை - பிங்கள

52 கருமைவீச்சு - காளயுத்தி

53 முன்னியமுடிதல் - சித்தார்த்தி

54 அழலி - ரௌத்ரி

55 கொடுமதி - துன்மதி

56 பேரிகை - துந்துபி

57 ஒடுங்கி - ருத்ரோத்காரி

58 செம்மை - ரக்தாட்சி

59 எதிரேற்றம் - குரோதன

60 வளங்கலன் - அட்சய

சனி, 19 மே, 2018

பசப்பன் உலக ஞமலியைப் புறக்கணிப்போம்.

"அவனுக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லாதிங்கடா. தெரியாதுன்னு சொன்னா அதக் கத்துக்கிட்டு வருவான்டா. தாங்கமாட்டிங்கடா." உலக ஞமலி பற்றி இயக்குனர் இமயம் சொன்ன கூற்று இது. இதுநாள் வரை தனக்குத் தெரியாத அரசியலையும் அல்லது தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த அரசியலையும், தமிழக மக்களை ஏமாற்றிக் கற்றுக்கொண்டு வந்து விட்டது உலக ஞமலி. பெரு முதலாளி இரண்டு நிகழ்ச்சியில் பெருமுதலாளி ஒன்றைப் பார்க்காதவர்களையும் பார்க்க வைப்பதற்காகத் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் படத்தில் வைப்பது போல், அரசியலையும் முன்னெடுத்து வைக்கப் போகிறது ஞமலி. நிகழ்ச்சியைப் புறக்கணித்துப் பசப்பனின் இழிவான வலையிலிருந்து மீள்வோம். 
"கூத்தாடிக்கிட்ட நாட்டைக் கொடுத்தின்னா அவன் கூத்தியாகிட்ட கொடுத்திடுவான்." என்ற காமராசர் கூற்றை நினைவில் கொள்வோம். 

புதன், 21 பிப்ரவரி, 2018

தண்ணீர் கேட்டால் செந்நீர் தருவானாம் பசப்பன்.

தண்ணீா் தானே கேட்கிறீா்கள் நான் ரத்தத்தையே வாங்கி தருகிறேன் – கமல்ஹாசன் செய்தி
"நம்ம ஒரு கேள்வி கேட்டா, நம்மயே அசர வைக்கற மாதிரி ஒரு விளக்கம் கொடுப்பார் தெரியுமா? அது நமக்கு இங்க புரியாது. வீட்டுக்குப் போனாத்தான் புரியும்."
மிதிவண்டி கேட்டா, வானூர்தி வாங்கித் தருவானாம் வேப்பெண்ணெய்.
தண்ணீர் கேட்டால் செந்நீர் தருவானாம் பசப்பன்.
அட வெக்கங்கெட்டவிங்களா.. இதுக்கு ஏண்டா வெள்ளையும் சொள்ளையுமாத் திரியணும்.?

https://tamil.samayam.com/latest-news/state-news/kamalhaasan-speech-on-political-launch/articleshow/63017981.cms