"அவனுக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லாதிங்கடா. தெரியாதுன்னு சொன்னா அதக் கத்துக்கிட்டு வருவான்டா. தாங்கமாட்டிங்கடா." உலக ஞமலி பற்றி இயக்குனர் இமயம் சொன்ன கூற்று இது. இதுநாள் வரை தனக்குத் தெரியாத அரசியலையும் அல்லது தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த அரசியலையும், தமிழக மக்களை ஏமாற்றிக் கற்றுக்கொண்டு வந்து விட்டது உலக ஞமலி. பெரு முதலாளி இரண்டு நிகழ்ச்சியில் பெருமுதலாளி ஒன்றைப் பார்க்காதவர்களையும் பார்க்க வைப்பதற்காகத் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் படத்தில் வைப்பது போல், அரசியலையும் முன்னெடுத்து வைக்கப் போகிறது ஞமலி. நிகழ்ச்சியைப் புறக்கணித்துப் பசப்பனின் இழிவான வலையிலிருந்து மீள்வோம்.
"கூத்தாடிக்கிட்ட நாட்டைக் கொடுத்தின்னா அவன் கூத்தியாகிட்ட கொடுத்திடுவான்." என்ற காமராசர் கூற்றை நினைவில் கொள்வோம்.