வாழ்த்து மட்டும் போதுமே. எண்ண முடியாதவற்றிற்கு 'கள்' சேர்க்க வேண்டாம் என்பதறிக.
வாழ்த்துக்கள்,
வாழ்த்துகள் இரண்டுமே "Greetings" என்பதற்கு இதழியலாளர்கள் மற்றும் ஊடகத்தார் புதியதாய்ச்
செய்த தவறான பதமே. எண்பதுகளில் இது கிடையாது. பொங்கல் வாழ்த்து
அட்டைதான். திருக்குறளில் வருவது கூட கடவுள் "வாழ்த்து"த்தான். "கடவுள் வாழ்த்துக்கள்" அல்ல. தமிழை மிகுதியாய்ப் புகழ்ந்த அல்லது வாழ்த்திய சுந்தரனாருங்கூட "தமிழ்த்தாய் வாழ்ந்து" என்றே அருளியிருக்கிறார். "தமிழ்த்தாய் வாழ்த்துக்கள்" அல்ல. மிகுதியாய் இருக்கும் தண்ணீரை தண்ணீர்கள் என்றழைப்பது தகுமோ?
அன்புடன், எளியோன்.
எண்பதுகளில் வந்த பொங்கல் வாழ்த்து. இப்போதெல்லாம் "வாழ்த்துக்கள்" என்று தவறாக எழுதுகிறார்கள். எண்பதுகளில் வந்த ஒரு மாதிரி வாழ்த்து.
0 Comments:
Post a Comment