செவ்வாய், 19 ஜனவரி, 2016

ரஜினிமுருகன் - திறனாய்வு

பட்டையை மட்டுமல்ல, இலவங்கத்தையும் சேர்த்து கிளப்பியிருக்கிறார்கள் ரஜினிமுருகனில். "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்ன? அதையும் தூக்கிச்சாப்பிட்ருக்கிறார்கள். இந்த‌ச் சிரிப்பு மூட்டும் திருவிழா யானையை சென்னை வெள்ளம் வந்து ஈரச்சாக்குப் போர்த்தியமையால், படம் தாமதமாக வெளியாகியிருக்கிறது. கதையுடைத்தலைவி கீர்த்தி சுரேஷ், இற்றிதிவ்யாவை ஓரங்கட்டுவாரா எனப்பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். நகைச்சுவை சூரி, நாறோடு சேர்ந்த பூவாய் நாறியிருக்கிறார். இனி கண்டிப்பாக ஒரு பெரிய வட்டம் வருவார். ஏற்கனவே குறுவட்டில் வந்த பாடல்கள் இணையத்தில் பிய்த்து எறிய‌, இன்னும் புதிதாக இரண்டு பாடல்களையும் தந்து அசத்தியிருக்கிறார் இமான். அதுவும் கதையுடைத்தலைவி வரும் இடத்தில் வரும் பாடல் "இசைஞானியையே" நினைவு படுத்துகிறது. உங்களை தலைக்குவிப்பு தூக்கி பாரட்டுகிறோம் இமான். பொன்ராம் இயக்கத்தில், மதுரை வழக்கில் உள்ள இப்படம், அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. அப்புறம் என்ன, படம் பார்த்த அனைவரும், நம்ம மதுரை சாலமன் பாப்பையா குரலில் சொல்கிறார்கள், "அரும ஐயா, படம் நல்லாயிருக்குல்ல".

0 Comments: