வியாழன், 25 ஆகஸ்ட், 2016

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: அச்சம் என்பது மடமையடா பாடல்: பாவேந்தர் பாரதிதாசன் பாடியவர்: விஜய் யேசுதாஸ் இசை: ஏ.ஆர். இரகுமான்

அவளும் நானும் அமுதும் தமிழும் அவளும் நானும் அலையும் கடலும் அவளும் நானும் தவமும் அருளும் அவளும் நானும் வேரும் மரமும் ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும் அணியும் பணிவும் அவளும் நானும் அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும் அவளும் நானும் அளித்தலும் புகழும் மீனும் புனலும் விண்ணும் விரிவும் வெட்பும் தோற்றமும் வேலும் கூரும் ஆறும் கரையும் அம்பும் வில்லும் பாட்டும் உரையும் நானும் அவளும் நானும் அவளும் உயிரும் உடம்பும் நரம்பும் யாழும் பூவும் மனமும் நானும் அவளும் உயிரும் உடம்பும் நரம்பும் யாழும் பூவும் மனமும் அவளும் நானும் தேனும் இனிப்பும் அவளும் நானும் சிரிப்பும் மகிழ்வும் அவளும் நானும் திங்களும் குளிரும் அவளும் நானும் கதிரும் ஒளியும் அவளும் நானும் அமுதும் தமிழும் அவளும் நானும் அலையும் கடலும் அவளும் நானும் தவமும் அருளும் அவளும் நானும் வேரும் மரமும் ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும் அணியும் பணிவும் அவளும் நானும் அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும் அவளும் நானும் அளித்தலும் புகழும்

0 Comments: