தமிழறிவோம்
--
அ
(வளர்ச்சி
ஒன்று)
நீண்ட
நெடுங்காலமாக
தமிழ்
மொழி
பற்றி
தமிழில்
எழுத
வேண்டுமென்பது
எனது
பேரவா.
அதற்கு
தக்கதொரு
வாய்ப்பு
நேயா
இதழ்
மூலம்
கிட்டியது
பெருமை.
இது
தமிழ்
மொழியறியும்
தொடர்.
இதில்
நாம்
தமிழில்
செய்யும்
பிழைகள்.
அவற்றிற்கான
தீர்வுகள்.
மற்றும்
இன்னபிறவற்றைக்
காணலாம்.
இரண்டு
தலைமுறைக்குப்பிறகு தமிழ்ப்பேசும்
தமிழனே இருக்கமாட்டானோ என
அஞ்ச வேண்டியிருக்கிறது.
ஏனெனில்
தமிழ் மெல்ல செத்துக்கொண்டிருக்கிறது.
தமிழ்
வழி கல்வி கற்ற என் போன்ற
சிலர் பணி நிமித்தமாக நுனி
நாக்கு ஆங்கிலத்தில் மிதந்து
கொண்டிருக்கிறோம்.
நாளிதழ்களும்,
தொலைக்காட்சிகளும்
தம் விருப்பத்திற்கு தமிழை
தூக்கிலேற்றிக் கொண்டிருக்கின்றன.தமிழ்
மொழியின் சிறப்பு,
பெருமை
எல்லாமே அதன் தொன்மையில்
மட்டும் இல்லை.
அதன்
தொடர்ச்சியிலும்தான் இருக்கிறது
என்பதை நாம் நினைவுகூரவேண்டும்.
இன்னிலையில்
"தமிழ்
பேசு!
தமிழ்
பேசு"
என்று
சொல்வதை விட அடுத்த தலைமுறைக்கு
நாம் கற்ற தமிழைச் சொல்லிக்கொடுத்தலே
முறை எனக் கருதியே நான்
இத்தொடரினை வரைகிறேன்.
இவ்வாறான
தொடருக்கு
தமிழறிவோம்
என்று
பெயரிடுவதே
சாலப்
பொருந்தும்.
தொடரின்
சிறப்பு என்னவெனில் ஒவ்வொரு
பகுதியிலும் (வளர்ச்சியிலும்)
நாப்பழக்கச்
செழுங்கவிதை கொடுக்கப்பட்டிருக்கும்.
அதைத்
தொடர்ந்து படித்து வர எல்லா
நாவும் நன்றாத் தமிழ்ப்
பேசும்.
அந்நாளை
நோக்கி தொடர்ந்து பயணிக்கத்தான்
இத்தொடர்.
நாப்பழக்க
செழுங்கவிதை படிக்கும் முறை:
"சித்திரமும்
கைப்பழக்கம் செந்தமிழும்
நாப்பழக்கம்"
என்ற
சொலவடை கீழ்வரும் நாப்பழக்கச்
செழுங்கவிதைக்குச் செம்பொருத்தம்.
தனியறையில்
அமர்ந்து கொண்டு கவிதையினை
மீண்டும் மீண்டும் பொருளுணரும்
வண்ணம் மெதுவாகவோ,
உரக்கவோ
நாடோறும் படித்து வர நாவில்
தமிழ் மிளிரும்.
தொடரின்
தொடக்கமாக
"படி"
மற்றும்
"சும்மா"
என்னும்
சொற்கள்
எவ்வாறெல்லாம்
பயன்படுத்தப்படுகின்றது
என்பதைக்
காணலாம்.
நாப்பழக்கச்
செழுங்கவிதை
"நாவுள
நலவுள தீயகல தமிழ் புகன்று
என்றும்
பாடுவாய் பொன்நாவே."
"ஓ..."
வென்று
பொலிவம்புலி பொழிந்த வேளையில்
ஆநிரைகள்
ஓடும் வழிப்பாதையில்
பிறழாத
செவ்வாழை ஏழெழு குலைகள்
தள்ளிற்றே...
!”பொருள்:
நாக்கு
உண்டு.
நல்லவை
உண்டு.
தீயவை
அகல
தமிழ்
சொல்லி
பாடுவாய்
பொன்
நாவே.
அம்புலி
-
நிலா
பொலிவம்புலி
-
பொலிவான
நிலா
ஆநிரைகள்
-
பசுமாடுகள்
தமிழ்
வளர்ப்போம்.
0 Comments:
Post a Comment