படம்: ஒரு நாள் ஒரு கனவு
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம், ஷ்ரேயா கோஷல், பவதாரிணி
மெட்டமைவு: கல்யாணி இராகம்
காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..
காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..
அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…
காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிருக்கு……..
ஒரு மருந்தாகும்..
இசை அருந்தும் முகம்
மலரும் அரும்பாகும்
இசையின் பயனே
இறைவன் தானே…
காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா….
ஆதார ஸ்ருதி அந்த
அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதிலயங்கள் தன்னைச்
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல
இசைக் குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது
இதுபோல் இல்லம்
எது சொல் தோழி…
காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம், ஷ்ரேயா கோஷல், பவதாரிணி
மெட்டமைவு: கல்யாணி இராகம்
காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..
காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..
அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…
காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிருக்கு……..
ஒரு மருந்தாகும்..
இசை அருந்தும் முகம்
மலரும் அரும்பாகும்
இசையின் பயனே
இறைவன் தானே…
காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா….
ஆதார ஸ்ருதி அந்த
அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதிலயங்கள் தன்னைச்
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல
இசைக் குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது
இதுபோல் இல்லம்
எது சொல் தோழி…
காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா
2 Comments:
அருமை
இரசனை மிகு அண்ணா,
இப்பாடல் வெளிவந்தபொழுது நான் நான்காவது ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன்.
அப்பொழுது எனக்கு புது படம், புது பாடல் என்றெல்லாம் வேறுபாடே தெரியாது. அப்பொழுது எங்கள் வீட்டில் ஒரு கருப்பு வெள்ளை தொலைக்காட்சி இருந்தது. அதில் இந்த பாடலை கேட்டதாக தோன்றுகிறது. அதன்பிறகு, என்னை அறியாமல் எங்கேனும் கேட்டிருக்கலாம்...
இதை நினைவுபடுத்தி மீண்டும் பதிவிறக்கி கேட்க தூண்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா... இன்றுதான், இதன் கவிதை வரிகளோடு சேர்த்து இரசித்ததாக உணர்கிறேன்.
//வருந்தும் உயிருக்கு……..
ஒரு மருந்தாகும்..
இசை அருந்தும் முகம்
மலரும் அரும்பாகும்
இசையின் பயனே
இறைவன் தானே…//
அருமையான வரிகள்....!
இன்னும் நிறைய "என்னைக் கவர்ந்த பாடல்" பகுதிகள் மூலம் நிறைய நல்ல பாடல்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்...
Post a Comment