ஞாயிறு, 11 மே, 2008

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

இது மேனிலைப்பள்ளி (+2) தேர்வு முடிந்த காலம். இனி என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?” என்பதே இப்பொழுதைய சூடான விவாதமாகும். குறுகிய காலத்தில் கணினி படிப்பினைப்படித்து பெரியாள் ஆக வேண்டுமென்பதே இன்றைய இளைஞர்களின், இளம்பெண்களின் விருப்பம். அதிகம் படிப்பதைவிட ஆழமாய்ப் படித்தல் நன்கு பயன்தரும். செம்மையான வேலை வாய்ப்புகள் அள்ளித்தரும் சில பயன்தரும் கணினி படிப்புகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

1. வன்பொருள் மற்றும் வலையவியல் (Hardware and Networking)

வன்பொருள் மற்றும் வலையவியல் அமைப்பாளராக ஆக இயலும். Jetking, Rooman Technologies, STG(Software Techonology Group) போன்ற நிறுவனங்கள் இவ்வகை படிப்புகளைக் கொடுக்கின்றன. இரண்டு வகையான இயங்குதளங்களில் இப்படிப்பு கிடைக்கிறது.

i)Windows

ii)Linux

LAN, WAN, MAN, Wireless Netwoking, Shell scripting போன்றவைகளை திறம்பட கற்க வேண்டும்.

படிப்புக்காலம்:6 முதல் 18 திங்கள்கள் (குறுகிய கால விரைவுப்படிப்பும் உண்டு.[fast track])

ஆகுஞ்செலவு: ரூ.50,000/- ரூ.25,000 (குறுகிய கால விரைவுப்படிப்பிற்கு)

வேலை: வலைய அமைப்பாளர் (Network Administrator) அல்லது பொறி ஆட்சியர் (System Administrator)

ஊதியம்: ரூ.10,000 முதல் 20,000 வரை (தொடக்கமாக)

நல்ல நிலைக்கு வர 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை ஆகும். மேலும் முன்னேற Solaris போன்ற இயங்குதளங்களை கற்றுத்தேற வேண்டும். கீழ்க்காணும் ஏதேனும் ஒரு சான்றிதழ் பெற்றிருத்தல் சிறப்பு.

சான்றிதழ்கள்: RHCT (Redhat Certified Technician)

RHCE (Redhat Certified Engineer) மாதிரி வினாத்தாள் http://pnaplinux.blogspot.com தொடுப்பில் கிடைக்கின்றது.

RHCSS (Redhat Certified Security Specialist)

RHCA (Redhat Certified Architect)

MCSA(Microsoft Certified System Administrator)

MCP (Microsoft Certifed Professional)

MCSE (Microsoft Certified Engineer)

CCNA (Cisco Certified Network Administator)

CCNP (Cisco Certified Network Professional)

CWNA (Cisco Wireless Network Administrator)

2. Embedded Systems & Telecommunications (தொலைதொடர்பியல்)

CMS, ISM போன்ற நிறுவனங்கள் இவ்வகை படிப்புகளைக் கொடுக்கின்றன. இரு வகையான படிப்புக்களை படிக்கலாம். கார்களுக்கு செய்வது மற்றும் பொறிகளுக்கு (machines) செய்வது.

படிப்புக்காலம்: 3 முதல் 4 திங்கள்கள்

ஆகுஞ்செலவு: ரூ.60,000/- (தொலைதொடர்பியல் சேர்த்துப் படித்தால் ரூ.80,000/-) படிக்கும் பொழுதே செய்யும் திட்ட அறிக்கைக்களுக்கு (Project Report) நல்ல விலை உண்டு.

வேலை: Embedded System Engineer அல்லது Telecommunications Engineer (தொலைதொடர்பியல் பொறிஞர்)

ஊதியம்: ரூ. 25,000 முதல் ரூ. 30,000(தொடக்கமாக)

சான்றிதழ்கள்: தனிப்பட்ட சான்றிதழ்கள் ஏதுமில்லை. அந்தந்த நிறுவனங்கள் தரும் சான்றிதழ்கள் போதும். Linux இயங்குதள internals C, C++ தெரிந்திருக்க வேண்டும். கார்களுக்கு செய்யும் embedded system project களுக்கு அதிக ஊதியமுண்டு.

3. Graphics & Animations Developer (வரைகலை வடிவமைப்பாளர்):

ISM, CSE போன்ற நிறுவனங்கள் இவ்வகை படிப்புகளைக் கொடுக்கின்றன. இதில் நிரம்பப்பயிற்சி பெற்றால்தான் நல்ல வேலை கிட்டும். 3D Studio Max, Maya போன்றவைகளை திறம்பட கற்க வேண்டும்.

படிப்புக்காலம்: 3 திங்கள்கள்

ஆகுஞ்செலவு: ரூ. 60,000/-

வேலை: Silicon Graphics Designer அல்லது Animation Engineer.

ஊதியம்: திரைப்படங்களுக்கு animation செய்யும் வாய்ப்புண்டு. செய்யும் வேலையைப் பொறுத்து 1 இலட்சம் வரை ஊதியம் பெறலாம்.

சான்றிதழ்கள்: தனிப்பட்ட சான்றிதழ்கள் ஏதுமில்லை. அந்தந்த நிறுவனங்கள் தரும் சான்றிதழ்கள் போதும்.

4. Java Developer(ஜாவா வடிவமைப்பாளர்):

Core Java, J2EE, J2ME திறம்பட கற்க வேண்டும். Aptech NIIT போன்ற நிறுவனங்கள் இவ்வகை படிப்புகளைக் கொடுக்கின்றன. சிறந்த நிறுவனங்களுக்குச் செல்ல ஓராண்டாவது பட்டறிவு வேண்டும்.

படிப்புக்காலம்: 2 முதல் 3 திங்கள்கள்

ஆகுஞ்செலவு: ரூ.15,000/-

வேலை: Java Programmer (ஜாவா நிரலர்)

ஊதியம்: ரூ.15,000/- (தொடக்கமாக)

சான்றிதழ்கள்: ஜாவா சான்றிதழ் ஏதேனும் ஒரு சான்றிதழ் பெற்றிருத்தல் சிறப்பு.

5. Webdesiger (இணைய வடிவமைப்பாளர்):

Aptech NIIT போன்ற நிறுவனங்கள் இவ்வகை படிப்புகளைக் கொடுக்கின்றன. சிறந்த நிறுவனங்களுக்குச் செல்ல ஓராண்டாவது பட்டறிவு வேண்டும். உங்களது திறனை இதில் காட்ட நிரம்ப நாட்கள் தேவைப்படும். .net, javascript, vbscript, HTML, DHTML, XML, Flash8 திறம்பட கற்க வேண்டும்.

படிப்புக்காலம்: 2 முதல் 3 திங்கள்கள்

ஆகுஞ்செலவு: ரூ.15,000/- முதல் ரூ.20,000/-

வேலை: Webdesigner அல்லது Content Manger அல்லது Flash Programmer

ஊதியம்: ரூ.15,000/-

சான்றிதழ்கள்: http://www.brainbench.com போன்ற இணையதளங்களில் ஏதேனும் ஒரு சான்றிதழ் பெற்றிருத்தல் சிறப்பு.

6. Tally Accountant (டேலி கணக்காளர்:)

CSE, Tally Center போன்ற நிறுவனங்கள் இவ்வகை படிப்புகளைக் கொடுக்கின்றன. Tally 7.2, Tally9 திறம்பட கற்றல் வேண்டும்.

படிப்புக்காலம்: 2 முதல் 3 திங்கள்கள்

ஆகுஞ்செலவு: ரூ.10,000/- முதல் ரூ.15,000/-

வேலை: Tally Accountant (டேலி கணக்காளர்)

ஊதியம்: ரூ.10,000/- (தொடக்கமாக)

சான்றிதழ்கள்: தனிப்பட்ட சான்றிதழ்கள் ஏதுமில்லை. அந்தந்த நிறுவனங்கள் தரும் சான்றிதழ்கள் போதும்.

7. Testing (சோதித்தறிதல்:)

CSE, STC, NIIT, Aptech போன்ற நிறுவனங்கள் இவ்வகை படிப்புகளைக் கொடுக்கின்றன. Winrunner, Rational Rose, Advanced Testing Tools போன்றவற்றை திறம்பட கற்றல் வேண்டும்.

படிப்புக்காலம்: 1 முதல் 2 திங்கள்கள்

ஆகுஞ்செலவு: ரூ.10,000/- முதல் ரூ.15,000/-

வேலை: Software Engineer (மென்பொறிஞர்)

ஊதியம்: ரூ.10,000/- (தொடக்கமாக)

சான்றிதழ்கள்: தனிப்பட்ட சான்றிதழ்கள் ஏதுமில்லை. அந்தந்த நிறுவனங்கள் தரும் சான்றிதழ்கள் போதும்.

8. Desktop Publishing (தொடக்கமேடை அமைப்பாளர்)

CSE, STC, NIIT, Aptech போன்ற நிறுவனங்கள் இவ்வகை படிப்புகளைக் கொடுக்கின்றன. Adobe Photoshop CS2, CorelDraw12, Macromedia Flash8, Powerpoint 2007, MS-Word 2007, MS-Excel 2007 போன்றவற்றை திறம்பட கற்றல் வேண்டும்.

படிப்புக்காலம்: 1 திங்கள்

ஆகுஞ்செலவு: ரூ.10,000/-

வேலை: Desktop Publisher அல்லது DTP Operator

ஊதியம்: ரூ.10,000/- (தொடக்கமாக)

சான்றிதழ்கள்: தனிப்பட்ட சான்றிதழ்கள் ஏதுமில்லை. அந்தந்த நிறுவனங்கள் தரும் சான்றிதழ்கள் போதும்.

மேற்கண்ட இத்தகைய படிப்புக்கள் நகரெங்கும் விரவியிருப்பினும் அவைகளைப் படிப்பது மட்டும் போறாது. தேர்ந்தெடுத்த துறையில் முழுத் தன்னம்பிகையோடு உழைக்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே வெற்றி திண்ணம்.

வேலைவாய்ப்புக்களை வாரி வழங்கும் தளங்கள் சில உங்கள் பார்வைக்கு,

http://www.monster.com

http://www.naukri.com

http://www.timesjobs.com

http://www.irecuitment.com

http://www.jobstreet.com

0 Comments: