புதன், 27 மே, 2009

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடும் நிலா பாடிய மற்றுமிரு பாடல்கள்

தொலைவிலிருந்தாலும் கருத்தொருமித்த நண்பரின் அணுகுதலால் இப்பதிவு பெய்யப்படுகின்றது. இந்நண்பர் எனக்கு பாடும்நிலா[1] குறிப்பிட்ட இசையமைப்பாளரின்[2] இசையில் பாடிய மற்றுமிரு பாடல்களை மின்னஞ்சலில் அனுப்பினார். (பாடவா‍… – வெற்றி, நிழல் என்றும்… - குமரன்) பாடல்கள் மிகவும் பெயர் பெற்றதாக அமையவில்லையானாலும், இது போன்ற சுவைஞர்களும் பாடும்நிலாவிற்கு இருக்கின்றார்கள் என்பதை எண்ணும் பொழுது உள்ளம் புளங்காகிதம் அடைகின்றது. மேல்நிலைகள்[3] அதிகம் இல்லாத இப்பாடல்களைத் தொடர்ந்து கேட்க, இதயம் வருடும் மயிலிறகாக அமையும் என்பதில் ஐயமில்லை. பாடல் அனுப்பிய இணைய நண்பருக்கு[4] நன்றிகளை அள்ளித்தெளிக்கின்றேன்.

[1] எஸ்.பி.பாலசுப்ரமண்யம்
[2] Harris Jeyaraj
[3] High Pitch
[4] Subhash

3 Comments:

Subash said...

சுட்டுதலிற்கு மிக்க நன்றிகள் நண்பரே.
அப்பாடல்களை கொஞ்சம் கொஞ்சமாக கேட்க கேட்க பிடித்துப்போனது. உங்களிற்கம் பிடிக்குமென நினைக்கிறேன்.

PNA Prasanna said...

குமரன் படப்பாடலை பாடும் நிலா பாலு பாடவில்லை...தவறுக்கு வருந்துகிறோம்...

Subash said...

தகவலை ஊர்ஜிதப்படுத்தாமல் செவிவளியாக கேட்டு உங்களிற்குப் பரிந்துரைத்தமைக்கு மன்னிக்கவும் நண்பரே. சுட்டிக்காட்டியமைக்கும் நன்றிகள். அன்றே பின்னுட்டமுடிவில்லை.