திங்கள், 8 ஜூன், 2009

ஈழம் இலங்கைச் சிக்கலுக்கான இறுதித்தீர்வு

ஈழம் இலங்கைச் சிக்கல் பற்றி எழுதலாமே என்று நண்பர் இற்றி கலியாண இராமன் மின்னஞ்சலில் இயம்பியமையால் இஃதினை எழுத விழைகின்றேன். இஃதினை என் சாளரவழிப்பார்வையாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, பூசலுக்காக எடுத்துக் கொள்ளக்கூடாது.

சிக்கலுக்கான தீர்வு நாட்டின் பெயரிலேயே இருக்கின்றது. அங்கே இராமன் காலத்திலிருந்து இலங்கை மட்டும்தான் இருக்கின்றது. ஈழம் கிடையாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக வேலுப்பிள்ளையின் பிள்ளை[1] போர் செய்து மட்டுமே தனி நாடு வாங்கி விட முடியாது.

எப்பொழுதுமே ஒரு செயற்பாடு காலந்தாழ்த்தியும் நிகழ்ந்து கொண்டிருந்தால் அஃது தன்னிலை திரிந்து பிறழ்ந்து விடுவது இயற்கையே. அவ்வகையில் இலங்கை ஈழ நிகழ்வு பல்லாண்டுகளாக நிகழ்வதால், நிலை பிறழ்ந்து அரசியலாயிற்று. அஃதினை இருந்திருந்தாற்போன்று கழகம் தொடங்கியவர்களெல்லாம் பயன்படுத்திக் கொண்டது உள்ளங்கை நெல்லிக்கனி.

அவ்வாறு அரசியலாக்கியவர்களெல்லாம், அதற்கான தீர்வறிவதில் ஈடுபாடு காட்டாமல், அதன் மூலம் அவர்களுக்கான வாக்கினைச் சேர்ப்பதிலேயே குறிக்கோளாயிருந்தார்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட போதும், அஃதினை பலர் சிரமேற்கொண்டார்கள். வேலுப்பிள்ளையின் பிள்ளையும், தனிநாடான ஈழம் பிரிப்பதிலிருந்து பிறழ்ந்து, தன்னைக் காத்துக்கொள்ள அப்பாவித் தமிழர்களைப் பயன்படுத்திக் கொண்டார்.

சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்ற முதனிலைக் குறிக்கோள் மறைந்து, தன்னுயிர்காக்க வேண்டும் என்ற இரண்டாந்நிலை குறிக்கோள் குறித்தவரின் உள்ளத்தில் நிலை கொண்டது. பிறகென்ன, உயிர்நீந்தது. முதனிலைக் குறிக்கோள் தகர்ந்தது.

ஒரு சிக்கலுக்கான தீர்வினை அங்கிருந்து ஓடிவிடாமல் காணவேண்டும். அதைச் சரியாக குறிப்பிட்டவர் செய்திருக்கிறார். அவ்வகையில் அவர் ஒரு சிறந்த தலைவரே. ஆனால் தீர்வானது இன்னும் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே.

தனிநாடு என்னும் கருத்தினையொழித்து, அங்கிருந்தே உரிமை பெறுதல் சிறப்பு. அதற்கு எடுத்துக்காட்டாக நம் இந்தியாவினைச் சொல்லலாம். எவ்வளவு பேரிடர்கள் வந்தாலும், தமிழ்நாடு இன்னும் இந்தியாவுடனேயே இருக்கின்றது.

பஞ்சாபில் சீக்கியர்கள் தனிநாடு கேட்கிறார்கள்; கசுமீரில் அச்சுறுதல்காரர்கள் தனிநாடு கேட்கிறார்கள். தமிழ்நாடு தவிர எங்கு சென்றாலும் தமிழன் ஒடுக்கப்படுகின்றான்; ஏமாற்றப்படுகின்றான். அதற்காக அவன் தனிநாடு கேட்டால் என்னாவது? சர்தார் வல்லபாய் படேல் என்ற இரும்பு மனிதர் இணைந்த இந்தியா உடைந்து விடும். அது முறையா?

இலங்கை ஈழம் சிக்கலுக்குத் தீர்வு தன்னலமில்லாத ஒரு தலைவர் இரும்பு மனிதராய்ப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தமிழனின் உரிமைகளை முறையாகப் பெற வேண்டும். அவ்வாறு பெற்று விட்டால் சிங்களனும் தமிழனும் கூடி வாழலாம்.

நாடுகளை இணைப்பது மிகவும் கடினம்தான். கிழக்கு மேற்கு செருமனிகள் 1990ல் இணைந்தன. அளப்பரிய நிகழ்வுதான். அஃது போல சிங்களமும் தமிழும் உறவாட, ஏதேனும் ஒரு தன்னலமில்லா இரும்பு மனிதர்[2] உதவ உள்ளத்தில் நாடொறும் நினைப்போம். நினைவு ஒருநாள் நிகழ்வாகும். போலி அரசியலர் ஒழிய புதுவாழ்வு புலரும்.


[1] பிரபாகரன்

[2] அது நீங்களாகக் கூட இருக்கலாம்.

8 Comments:

தங்க முகுந்தன் said...

அருமையான கட்டுரை!
நான் தானே முதல் இடுகை! வாழ்த்துக்கள் - அருமையான தமிழ் நடை - தொடர்ந்து எழுதுங்கள்!

வில்லங்கம் விக்னேஷ் said...

தங்கமுகுந்தன் தலை ஆட்டுவாரு. ஆனந்தசங்கரியோட ஆளாச்சே. தமிழனுங்க செத்தா சந்தோசமேதான்

இலங்கைல தமிழன் இருக்கானா இல்லையான்னு நேத்திக்கு வரைக்கும் கவலைப்படாத பெரிய மனுசங்கல்லாம் அட்வைசு பண்ணுராங்க பாரு. ஒதைக்கலாமைய்யா ஒங்களைலாம். போன ஆறு மாதமா எங்கைய்யா இருந்தீங்க? ரசனி என்ன படம் வுடுறாருன்னு பாத்துக்கிட்டா? இந்தியா ஆளை கொல்ல ஆயுதம் அனுப்பறாப்ப என்ன பண்ணிட்டிருந்தீங்க? பட்டர் சுலோகம் சொல்லி நாமம் போட்டதையா. வந்துட்டானுங்க. ஒத்துமை, ஒத்துவராத மையின்னு பேச.

செல்வன் said...

*அவ்வகையில் அவர் ஒரு சிறந்த தலைவரே *
என்பதை தவிர தங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

PNA Prasanna said...

கருத்துக்களுக்கு நன்றிகள் அன்பர்களே...

Unknown said...

hi, I totally agree with Prasanna in many respects. I like Prabakaran in a way that he could inspire a greater number of people and to the extent of making themselves as bombs. But the stand point he has taken was wrong and the approach was utterly endangering everyone's life. At the end of the day, Prabakaran suffered every moment of his life;also making others to suffer.

Also being an Indian, I would first address the inequalities within my state and country than to look at some other thing happening in Sri Lanka. I do not see anyone raising any blogs in Tamil nadu when people in Iraq were assaulted and tortured by US.

PS : It is very hard for me to understand what the hell Mr. Villangam Vignesh wants to say. Utterly useless and racist kinda comments.

Unknown said...

hi, I totally agree with Prasanna in many respects. I like Prabakaran in a way that he could inspire a greater number of people and to the extent of making themselves as bombs. But the stand point he has taken was wrong and the approach was utterly endangering everyone's life. At the end of the day, Prabakaran suffered every moment of his life;also making others to suffer.

Also being an Indian, I would first address the inequalities within my state and country than to look at some other thing happening in Sri Lanka. I do not see anyone raising any blogs in Tamil nadu when people in Iraq were assaulted and tortured by US.

PS : It is very hard for me to understand what the hell Mr. Villangam Vignesh wants to say. Utterly useless and racist kinda comments.

சவுக்கடி said...

பொழுது போக்குக்கும் நகைச் சுவைக்கும் ஈழச்சிக்கலைத் தொடுவது ஈழத்தமிழர் மற்றும் தமிழ்உணர்வாளர் பலரின் மனத்தைக் காயப்படுத்தும் செயலாகும்.

வரலாற்றைச் சரியாக அறிந்து கொண்டு உருப்படியாகச் சிந்தித்து எழுதினால் பயனிருக்கும்.

PNA Prasanna said...

என்ன நினைத்து சவுக்கடி கருத்துரை தெரிவித்தாரோ தெரியவில்லை... வரலாறு தெரிவிக்க ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும்.