திங்கள், 20 ஜூலை, 2009

குனியக்குனிய குட்டுபவன் முட்டாளே....

திருக்குறளின் கூறப்படாத மேலாண்மைக் கருத்துக்களே இல்லையெனலாம். அவ்வகையில் மேலாண்மைக்கும், அரசியலுக்கும், நடைவாழ்வுக்கும் பொருந்திவர அமையும் ஒரு குறளினை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
"குனியக் குனிய குட்டுபவன் முட்டாள்" என்பதை அறியாதவர்களே புது அரசியலர்கள். பொதுவாக இது போன்ற குட்டுவாங்கும் அப்பாவிகள் மிகவும் வலிமை மிக்கவர்கள். இவர்களைக் குட்டுவதால் குட்டுபவர்களின் வலிமை குறைந்துவிடுகிறது. மேலும் இது போன்று தொடர்ந்து குட்டுபவர்களை அவர்களை விட மேலிருப்பவர்கள் பகடைக் காய்களாக்கி விடுகிறார்கள்.
இதுபோன்று குட்டுபவர்கள் ஒரு காலத்தில் அது தவிர வேறு வேலை அற்றவர்களாகி விடுகிறார்கள். குட்டு வாங்குபவர்கள் வலிமை மிக்கவர்களாக மாறிவிடுகின்றர்கள். இது ஒரு எளிய மேலாண்மை கருத்தே. இதை சரிவரப் புரியாதவர்கள் நல்ல அரசியலர்களாக இருக்க இயலாது.
இந்த எளிய மேலாண்மைக் கருத்து திருக்குறளில் அருமையாகக் கூறப்பட்டுள்ளது. இஃதினை நன்றாகக் கையாளத் தெரிந்த அரசியலர் தன் தொகுதியில் இதுவரை தேர்தலில் நின்று தோற்றிடாத கலைஞரே....
இதோ குறள்
"வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து."
கலைஞர் உரை:
தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.
மு.வ உரை:
(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.

செவ்வாய், 7 ஜூலை, 2009

இலங்கை ஈழச்சிக்கலுக்கான இறுதித்தீர்வு ஒரு வினாக்குறியே


சென்ற பதிவில் எழுதியிருந்தது போல தனிநாடு தேவையில்லை என்பதே எனது தாழ்மையான கருத்துஅதற்குவில்லங்கத்தார் தனக்கேயுரிய வழியில் மறுமொழிதெரிவித்திருந்தார்நண்பர் செயபால் சற்று மேலே ஒருபடி போய் எனக்கு ஒரு கோப்பினை அனுப்பியிருந்தார்.

அதில் கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் பட்ட துன்பங்கள் பற்றி ஆங்கிலத்தில் செய்திகளிருந்தன. அவைகளெல்லாம் தமிழன் தனிநாடு கேட்டமையால்ஏற்பட்டவையாகும்.

கோப்பினை அனுப்பிய அவர் நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை என்று எழுதியதிலிருந்து அவரது பெருந்தன்மை புரிந்தது.

இலங்கை ஈழம் என்றெல்லாம் பேசியவர்கள் எங்கே போனார்கள்?

இலங்கை ஈழச்சிக்கலுக்குத்தீர்வு என்று பேசிய விடுதலைப்புலிகளின் தலைவர் இன்று இல்லைஇன்று இதைப்பற்றி எந்தத்தலைவரும் பேசவில்லைஎந்தத்தொலைக்காட்சியும் இதை முன்வைக்கவில்லைஅதைத்தான் நான் சற்றே சென்ற பதிவில் தொப்புள் நடனம் என்று சாடியிருந்தேன்.

கலைஞர்? ஏதோ ஒரு பேரரசர் தன் பின்னால் வருபவர்களுக்கு தன்னரசினை வாரி வழங்குவது போல் மூத்தபிள்ளைக்கு[1] மதுரைஇளையபிள்ளைக்கு[2]ச் சென்னை.ஆசைத்தலைவி பெற்ற பெண்பிள்ளை[3]க்கு பாரளுமன்றம் என்று பிரித்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

தேர்தலுக்குப்பிறகு இலங்கைச் சிக்கலைப்பற்றி பேச்சே எடுக்கவில்லைதனது உடலைத்தேற்றிக்கொள்வதிலும்புதிய திரைப்படத்திற்கு[4] உரையாடல் எழுதுவதிலேயும்கண்ணுங்கருத்துமாயிருக்கிறார்.

கலாநிதி தயாநிதி? அயன் வெற்றி பெற்றுவிட்டதாம்மாசிலாமணி தயாரித்திருக்கிறார்களாம்சுனைனாவின் தொப்புளை ஒலியுடனும்ஒளியுடனும் உலகெங்கும் பரப்பிகாசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  இலங்கைச்சிக்கல்...? அதற்கு மக்கள் அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

இதைப்பற்றி வரும் இடுகைகளும் குறைந்து விட்டனநாளிதழ் வாரஇதழ்களுக்கு பசங்க”நாடோடிகள்” செய்திகள் கிடைத்து விட்டன.

திரையில் தொப்புளில் பம்பரம் சுற்றியவரும்[5]இன்னபிற இருந்திருந்தாற்போன்ற அரசியலர்களும்[6]செத்தபாம்பாய்ப் போனார்கள்அவர்களுக்கு தேர்தல்கட்டணத்தொகையே திரும்பக்கிடைக்கவில்லைபிறகென்ன செய்வார்கள்?

அம்மையார்? எதைப்பற்றியும் கவலையில்லாமல் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்தேர்தலுக்குப்பிறகு இச்சிக்கலில் இதுவரை அறிக்கை ஏதும் விடாமல் இருக்கிறார்.

விடுதலைப்புலிகளின் தலைவருக்கு மட்டும் எங்கிருந்து அவ்வளவு பணம் வந்ததென்றே புரியவில்லைஎல்லாத்தமிழனும் அழுது புலம்பி வந்த வேளையில்அவர் மட்டும்நீர்மூழ்கிக்கப்பலில் பதுங்கியிருத்தல்தன்மகனை அயல்நாட்டிற்கனுப்பி வானூர்தி பொறியியல்[7] படிக்கவைத்தல்,போன்றவைகள் எடுத்துக்காட்டுகள்.

சென்ற பிறந்தநாளின் போது இச்சிக்கலுக்காக பிறந்தநாளைக் கொண்டாடதவர்கள்[8], உண்ணாநோன்பு நாடகம் மேற்கொண்டவர்கள்[9]  இனிமேல் என்ன செய்வார்கள் என்றுபார்க்கலாம்.

தலைவர்களெல்லாம் செவ்வனே இருக்கிறார்கள்இருப்பது நாம்தான்நாமென்ன செய்ய முடியும்இடுகை எழுத முடியும்எழுதிய இடுகையை கருத்துரை எழுதுபவர்மறுத்து எழுதமுடியும்எல்லாம் சரிதான்நமக்கேன் ஊர்வம்புஏதோ உள்ளிருப்பை ஆற்ற ஒரு இடுகை பெய்து விட்டேன்இன்னும் இந்தச்சிக்கல் தீர யாரேனும்உண்மையாக முயற்சி செய்யும் தலைவர்கள் இருப்பின் அவர் யார்அவர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்? சுட்டிக்காட்டுங்களேன் பார்க்கலாம்.


[1] மு..அழகிரி

[2] மு..ஸ்டாலின்

[3] கனிமொழி

[4] நீயின்றி நானில்லை

[5] விஜயகாந்த்

[6] சரத்குமார்கார்த்திக்

[7] Aeronautical Engineering

[8] கமல்ஹாசன்

[9] விஜய்