சென்ற பதிவில் எழுதியிருந்தது போல தனிநாடு தேவையில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. அதற்கு, வில்லங்கத்தார் தனக்கேயுரிய வழியில் மறுமொழிதெரிவித்திருந்தார். நண்பர் செயபால் சற்று மேலே ஒருபடி போய் எனக்கு ஒரு கோப்பினை அனுப்பியிருந்தார். அதில் கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் பட்ட துன்பங்கள் பற்றி ஆங்கிலத்தில் செய்திகளிருந்தன. அவைகளெல்லாம் தமிழன் தனிநாடு கேட்டமையால்ஏற்பட்டவையாகும். கோப்பினை அனுப்பிய அவர் நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை என்று எழுதியதிலிருந்து அவரது பெருந்தன்மை புரிந்தது. இலங்கை ஈழம் என்றெல்லாம் பேசியவர்கள் எங்கே போனார்கள்? இலங்கை ஈழச்சிக்கலுக்குத்தீர்வு என்று பேசிய விடுதலைப்புலிகளின் தலைவர் இன்று இல்லை. இன்று இதைப்பற்றி எந்தத்தலைவரும் பேசவில்லை. எந்தத்தொலைக்காட்சியும் இதை முன்வைக்கவில்லை. அதைத்தான் நான் சற்றே சென்ற பதிவில் தொப்புள் நடனம் என்று சாடியிருந்தேன். கலைஞர்? ஏதோ ஒரு பேரரசர் தன் பின்னால் வருபவர்களுக்கு தன்னரசினை வாரி வழங்குவது போல் மூத்தபிள்ளைக்கு[1] மதுரை. இளையபிள்ளைக்கு[2]ச் சென்னை.ஆசைத்தலைவி பெற்ற பெண்பிள்ளை[3]க்கு பாரளுமன்றம் என்று பிரித்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப்பிறகு இலங்கைச் சிக்கலைப்பற்றி பேச்சே எடுக்கவில்லை. தனது உடலைத்தேற்றிக்கொள்வதிலும், புதிய திரைப்படத்திற்கு[4] உரையாடல் எழுதுவதிலேயும்கண்ணுங்கருத்துமாயிருக்கிறார். கலாநிதி தயாநிதி? அயன் வெற்றி பெற்றுவிட்டதாம்; மாசிலாமணி தயாரித்திருக்கிறார்களாம். சுனைனாவின் தொப்புளை ஒலியுடனும், ஒளியுடனும் உலகெங்கும் பரப்பிகாசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இலங்கைச்சிக்கல்...? அதற்கு மக்கள் அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டியதுதான். இதைப்பற்றி வரும் இடுகைகளும் குறைந்து விட்டன. நாளிதழ் வாரஇதழ்களுக்கு “பசங்க”, “நாடோடிகள்” செய்திகள் கிடைத்து விட்டன. திரையில் தொப்புளில் பம்பரம் சுற்றியவரும்[5], இன்னபிற இருந்திருந்தாற்போன்ற அரசியலர்களும்[6], செத்தபாம்பாய்ப் போனார்கள். அவர்களுக்கு தேர்தல்கட்டணத்தொகையே திரும்பக்கிடைக்கவில்லை. பிறகென்ன செய்வார்கள்? அம்மையார்? எதைப்பற்றியும் கவலையில்லாமல் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். தேர்தலுக்குப்பிறகு இச்சிக்கலில் இதுவரை அறிக்கை ஏதும் விடாமல் இருக்கிறார். விடுதலைப்புலிகளின் தலைவருக்கு மட்டும் எங்கிருந்து அவ்வளவு பணம் வந்ததென்றே புரியவில்லை. எல்லாத்தமிழனும் அழுது புலம்பி வந்த வேளையில், அவர் மட்டும்நீர்மூழ்கிக்கப்பலில் பதுங்கியிருத்தல், தன்மகனை அயல்நாட்டிற்கனுப்பி வானூர்தி பொறியியல்[7] படிக்கவைத்தல்,போன்றவைகள் எடுத்துக்காட்டுகள். சென்ற பிறந்தநாளின் போது இச்சிக்கலுக்காக பிறந்தநாளைக் கொண்டாடதவர்கள்[8], உண்ணாநோன்பு நாடகம் மேற்கொண்டவர்கள்[9] இனிமேல் என்ன செய்வார்கள் என்றுபார்க்கலாம். தலைவர்களெல்லாம் செவ்வனே இருக்கிறார்கள். இருப்பது நாம்தான். நாமென்ன செய்ய முடியும்? இடுகை எழுத முடியும். எழுதிய இடுகையை கருத்துரை எழுதுபவர்மறுத்து எழுதமுடியும். எல்லாம் சரிதான். நமக்கேன் ஊர்வம்பு? ஏதோ உள்ளிருப்பை ஆற்ற ஒரு இடுகை பெய்து விட்டேன். இன்னும் இந்தச்சிக்கல் தீர யாரேனும்உண்மையாக முயற்சி செய்யும் தலைவர்கள் இருப்பின் அவர் யார்? அவர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்? சுட்டிக்காட்டுங்களேன் பார்க்கலாம்.
செவ்வாய், 7 ஜூலை, 2009
இலங்கை ஈழச்சிக்கலுக்கான இறுதித்தீர்வு ஒரு வினாக்குறியே
முழங்கியவர்: PNA Prasanna மணி: செவ்வாய், ஜூலை 07, 2009
முழக்கங்கள்: கட்டுரைகள்
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
0 Comments:
Post a Comment