திங்கள், 20 ஜூலை, 2009

குனியக்குனிய குட்டுபவன் முட்டாளே....

திருக்குறளின் கூறப்படாத மேலாண்மைக் கருத்துக்களே இல்லையெனலாம். அவ்வகையில் மேலாண்மைக்கும், அரசியலுக்கும், நடைவாழ்வுக்கும் பொருந்திவர அமையும் ஒரு குறளினை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
"குனியக் குனிய குட்டுபவன் முட்டாள்" என்பதை அறியாதவர்களே புது அரசியலர்கள். பொதுவாக இது போன்ற குட்டுவாங்கும் அப்பாவிகள் மிகவும் வலிமை மிக்கவர்கள். இவர்களைக் குட்டுவதால் குட்டுபவர்களின் வலிமை குறைந்துவிடுகிறது. மேலும் இது போன்று தொடர்ந்து குட்டுபவர்களை அவர்களை விட மேலிருப்பவர்கள் பகடைக் காய்களாக்கி விடுகிறார்கள்.
இதுபோன்று குட்டுபவர்கள் ஒரு காலத்தில் அது தவிர வேறு வேலை அற்றவர்களாகி விடுகிறார்கள். குட்டு வாங்குபவர்கள் வலிமை மிக்கவர்களாக மாறிவிடுகின்றர்கள். இது ஒரு எளிய மேலாண்மை கருத்தே. இதை சரிவரப் புரியாதவர்கள் நல்ல அரசியலர்களாக இருக்க இயலாது.
இந்த எளிய மேலாண்மைக் கருத்து திருக்குறளில் அருமையாகக் கூறப்பட்டுள்ளது. இஃதினை நன்றாகக் கையாளத் தெரிந்த அரசியலர் தன் தொகுதியில் இதுவரை தேர்தலில் நின்று தோற்றிடாத கலைஞரே....
இதோ குறள்
"வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து."
கலைஞர் உரை:
தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.
மு.வ உரை:
(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.

4 Comments:

கடவுளன் said...

நல்ல கருத்து அண்ணே... இது புரியாமல் சிலர் இன்றும் இதே போல் குட்டிக் கொண்டே இருக்காங்களே..

கல்லுளி மங்கன் said...

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் கூறப்படாத கருத்துக்களே இல்லை அன்பரே....

எனினும் நல்ல நடை.. தொடர்ந்து எழுதுங்கள்..

தமிழ் said...

அருமை

வாழ்த்துகள்

PNA Prasanna said...

கருத்துரைகளுக்கு நன்றிகள்.