இந்த உலகம் வெற்றி பெற்ற மனிதனின் தும்மலைக் கூட இசை என்கிறது. தோல்வி அடைந்த மனிதனின் இசையினைக் கூட தும்மல் என்கின்றது.
வைரமுத்து.
இந்திப் பாடலில் காதை வைத்திருந்த தமிழனின் காதுகளை தமிழ்ப் பாடல்களைக் கேட்க வைத்தவர் இசைஞானி.
இந்திப் பாடலில் காதை வைத்திருக்கும் இந்திக்காரனையும், ஆங்கிலப் பாடலில் காதை வைத்திருந்த ஆங்கிலேயனையும் தமிழ்ப் பாடலைக் கேட்க வைத்தவர் இசைப்புயல்.
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
துணுக்குகள்
முழங்கியவர்: PNA Prasanna மணி: திங்கள், ஆகஸ்ட் 30, 2010 0 கருத்துரை
முழக்கங்கள்: இன்னபிற
வியாழன், 26 ஆகஸ்ட், 2010
பொறியன் திரைப்பாடல் திறனாய்வு
எந்திரன், இயந்திரன் என்பது எல்லாம் வடமொழி. பொறியன் என்பதே தமிழ் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
புதிய மனிதா பூமிக்கு வா என்பதில் வரும் பூ இசையணி ஆகும். அதைக் கேட்கும் பொழுதே நம்மையறியால்
பூ மிக்கு வா என்று பாடத்தோன்றுகின்றது. இருப்பினும் சாதனைப் பாடகர் எஸ்.பி.பி யின் குரலையே இசைப்படுத்தும்
பொறியால் இசையமைத்திருக்கிறது சற்றே நெருடுகின்றது. பின்னர் அவர் மனிதருக்குப் பாடவில்லை. பொறியனுக்கே
பாடியிருக்கிறார் என்றெண்ணும் பொழுது நெருடல் மறைகின்றது. சரணம் ஏற்ற இறக்கத்தோடு வருவது நம்மை புல்லரிக்கவைக்கிறது.
முதன் முறையாக இரகுமானின் மூத்த பெண் கதிஜா பாடியிருக்கிறார்.
அரிமா அரிமா வில் ஹரிஹரனின் குரல் பிளிறிவருகின்றது. படத்தில் நூறு இரஜினிகள் தோன்றுவார்கள் போலும்.
பூம் பூம் ரோபோ பாட்டில் யோகி.பி குரல் மேலோங்கி ஒலிக்கிறது. சுட்டி சுட்டி ரோபோ பட்டிதொட்டி எல்லாம் நீ பட்டுக்குட்டியோ:
பெண்குரலில் பாடலுக்கு மெருகேற்றுகின்றது.
இரகுமானும், கேஸியும் சேர்ந்து இரும்பிலே பூத்த இதயம் பாடியிருக்கிறார்கள். ஆங்கில வார்த்தைகள் வந்து போகின்றன.
காதல் அணுக்கள் பாடலை விஜய் பிரகாஷீம், ஸ்ரேயா கௌஷலும் பாடியிருக்கிறார்கள்.
பாடல் நாள் செல்லச் செல்ல மெதுவாக பேசப்படலாம்.
சின்மயி, ஜாவேத் அலியுடன் பாடும் கிளிமாஞ்சாரோவில் கின்னிக் கோழி,, ஆஹ்ஹா ஆஹ்ஹா
இனிமையாய் வந்து போகின்றது. சின்மயி தன் குரலை சற்றே மாற்றித்தான் பாடியிருக்கிறார்.
நரேஷ் ஐயரும், பென்னி தயாளும் குழுப்பாடகர்கள் ஆகி விட்டார்கள். "புதிய மனிதா...", "அரிமா அரிமா..."
ஆகிய பாடல்களில் அவர்கள் பாடியிருபபதை பாடலைப் பல முறை கேட்டால்தான் புரிகின்றது.
இரகுமானிடம் ஒரு கேள்வி: தமிழே தெரியாத பாடகர்களை வைத்து அதிகமாக பாடற் செய்கின்றீர்களே,
எப்பொழுது நமது புஷ்பவனம் குப்புசாமியினை இந்தியில் பாடவைக்கப் போகிறீர்கள்?

முழங்கியவர்: PNA Prasanna மணி: வியாழன், ஆகஸ்ட் 26, 2010 0 கருத்துரை
முழக்கங்கள்: திரைக் கட்டுரைகள்
திங்கள், 2 ஆகஸ்ட், 2010
குறும்பாக்கள்
கமண்டலத்தில் அடைக்கப்பட்டுள்ள
கடல்
கூகுள்.
எழுதுகோலில்
மை தீரத்தீர ஒரு கவிதை
என்னவள் பெயர் நீளமானது.
முழங்கியவர்: PNA Prasanna மணி: திங்கள், ஆகஸ்ட் 02, 2010 0 கருத்துரை
முழக்கங்கள்: கவிதைகள்
Subscribe to:
இடுகைகள் (Atom)