செவ்வாய், 27 நவம்பர், 2012

மணிப்புறாவும் மென்பொருளும் - கணினிக்கதை


பல நாட்களுக்குப் பின் தன் பள்ளித் தோழன் பொற்கோவைச் சந்திக்க வந்திருந்தாள் காண்பதற்கினியா.
அத்த, கோ எங்க?” பொற்கோவின் அம்மா குமுதினியிடம் கேட்டாள் இனியா.
அவன் மாடில புறா வளக்கிறாம்மா. அதப் பாக்கத்தான் போயிருக்கான். மேல போயிப் பாரு.” வரவேற்பு முறுவலுடன் சொன்னாள் குமுதினி.
“சரிங்கத்த...” குமுதினி கொடுத்த தேநீரைப் பெற்றுக் கொண்டு மேலே சென்றாள் காண்பதற்கினியா.
தான் ஆசையாசையாய் வளர்த்து வரும் மணிப்புறாவினை எடுத்து அன்புருகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான் பொற்கோ.
என்ன கோ திடீர்னு புறாவெல்லாம் வளக்கறீங்க.” தேநீரை உறிஞ்சியபடி கேட்டாள் இனியா.
“எப்பப் பாத்தாலும், கணினிச்செய்திகள், நிரல்கள் எல்லாம் தலைக்குள்ள இருக்குதா.. அதனால ஒரு சின்ன மாற்றம் தேவப்பட்டுச்சு, அதனாலதான் புறா வளக்கத் தொடங்கிட்டேன்.” தடவிக்கொண்டிருந்த புறாவை மெல்லப் பறக்க விட்டான் பொற்கோ.
“புறாவ நா.. பாக்கலாமா..?” தான் குடித்து முடித்த தேநீர் குவளையை வைத்து விட்டுக் கேட்டாள் அந்த மென்பொருள் மங்கை.
“நிச்சயமா..” கூண்டிலிருந்த மற்றொரு மணிப்புறாவை எடுத்துத் தன் தோழிக்குக் கொடுத்தான் பொற்கோ.
"கொத்துமா..?" ஐயத்துடன் வினவினாள் அந்த அணங்கு.
“அமைதிக்கான தூதுதான் புறா. அது கொத்துமா என்ன?” சிரித்துக் கொண்டே அவளின் தலையில் மெல்லத் தட்டினான் பொற்கோ.
எனக்கு தொழில் நுட்பச் செய்தி சொல்லுங்க கோ. இப்ப கைபேசிலஎல்லாம் பேச்சுமூலமே கட்டளைகள் கொடுக்கறோம். அது மாதிரி கணினில செய்ய மென்பொருள் இருக்கா..?” அவன் கொடுத்த புறாவினைத் தடவிக்கொண்டே கேட்டாள் இனியா.
“நீ சாம்சங் கைபேசி வச்சிருக்க.. நா.. ஆப்பிள் கைபேசி வச்சிருக்கேன். இதுல ஏற்கனவே குரல் அறியும் மென்பொருள் இருக்கறது. ஆனா விண்டோஸ் 7 பதிப்புல அதுக்கான மென்பொருள் உள்ளிருப்பா (Default) இல்ல. அத நாம தனியா நிறுவணும். அத என்னோட மடிக்கணினியில பாக்கலாம்.” என்றவன் அவளைத் தன் மடிக்கணினி அறைக்கு அழைத்து வந்தான்.
“அப்பா. அருமையா அறைய வச்சிருக்கிங்க..” புறாவைக் கையில் வைத்த படியே பேசினாள் இனியா.
“இதெல்லாம் ஒங்க அத்ததான் பாத்துக்கறாங்க. நா..இல்ல.” சிரித்தபடியே தன் எச்.பி மடிக்கணினியை உயிர்ப்பித்தான் பொற்கோ.
கூகுள் குரோமைச் சொடுக்கி, http://www.e-speaking.com/index.htm என்று தட்டச்சு செய்தான் அந்த மடிக்கணினி மன்னன். தொடர்ந்து Download தொடுப்பைச் சொடுக்கி பின்கண்ட மென்பொருளைப் பதிவிறக்கினான்.
அதன் பிறகு, சில கட்டளைகளை தன் சிறிய ஒலிவாங்கி (microphone) மூலம் செப்பிச் சோதனை செய்து கொண்டான்.
அருகே இருந்த சிறிய சாளரம் வழியே மணிப்புறாவினைப் பறக்க விட்டுவிட்டு, அவன் மென்பொருளைக் கையாளும் அழகைப் பருகிக் கொண்டிருந்தாள் காண்பதற்கினியா.
“இனி, இது ஒரு குரலறிவான் மென்பொருள் (voice recognition software). 30 நாளுக்கு இலவசமா பயன்படுத்தலாம். அதுக்கப்பறம் பதினாலு டாலர் கொடுத்து செயற்படுத்தணும் (activation). இதுல நூறு கட்டளைகள ஏற்கனவே உள்ளீடு (100 built-in commands) செய்யப்பட்டிருக்கு. விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, எழு பதிப்புகள்ல செயல்படுது. Speech Application Programming Interface (SAPI) மூலமா செயல்படறது. .NET க்கு ஆதரவளிக்கக்கூடியது. ஆன்லைன்லயே இதுக்குரிய ஆதரவும் (online support) குடுக்கப்பட்டிருக்கு.” தான் இணையத்தில் பார்த்தவற்றை எளிமையாக விளக்கினான் அந்த மென்பொருள் தலைவன்.
“easy youtube log on and off and easy upload videos using e speaking voice recognition system”
“அப்டீன்னு தட்டச்சுச் செஞ்சு யூடியுப்லயும் பாக்கலாம். இது சீனம், ஜெர்மன், ஸ்பேனிஷ் மொழிகள்லயும் சிறப்பாகச் செயல்படறது.” தொடர்ந்து சொன்னான் பொற்கோ. அவன் சொல்வதை ஏதோ காணொளி காண்பது போல் கண்டுகளித்துக் கொண்டிருந்தாள் காண்பதற்கினியா.
“இதுல எதாவது ஐயம் இருந்துச்சுன்னா support@e-Speaking.com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பித் தெரிஞ்சுக்கலாம்.” கூடுதல் செய்தி தந்தான் பொற்கோ.
Open Word
Open Excel
Open Email
Open Powerpoint
Open Internet
Open Notepad
Start Word
Start Excel
Start Email
Start Powerpoint
Start Internet
Start Notepad
மேலும் எந்தெந்தக் கட்டளைகள் கொடுத்தால் என்னென்ன நிகழும் என்பதையும் தனது மடிக்கணினியில் செய்து காண்பித்தான் பொற்கோ.
“நான் இப்பெல்லாம் எந்த bookக்குமே படிக்கறதில்ல. எல்லாமே online தான். சீக்கிரமே கண்ணாடி போட்டுருவேன்னு நெனக்கிறேன்.” தலைப்பினை மாற்றினாள் காண்பதற்கினியா.
“ஒன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் ஒரு புதிய செய்தியக் கொடுத்துருக்காங்க‌  ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவங்க‌..” மாற்றிய தலைப்புக்கு விடை பகன்றான் பொற்கோ.
              “அது என்ன சேதி?” வியப்புற்றாள் இனியா.
“நியுரோபயலாஜிஸ்ட்கள் பலர் வாசிப்புத் திறன் உள்ளவங்களஆராய்ச்சி செஞ்சாங்க. அந்த ஆராய்ச்சில மூளைக்குச் செல்லும் blood அளவுக்கும், வாசிப்புத்திறனுக்கும் தொடர்பு இருக்குதான்னு பாத்தாங்க. ஆய்வுல இருந்த நெறயப்பேர் ஜேன் ஆஸ்டினின் மேன்ஸ்ஃபீல்ட் பார்க் அப்டீங்கற book ஐ வாசிச்சாங்க. அவர்கள் வாசிக்கும் போது அவங்க‌ MRI (Magnetic Resonance Imaging) பொறிக்குள்ள வைக்கப்பட்டு இருந்தாங்க. ஆய்வின் முடிவுல எல்லாருக்கும் குருதி ஓட்டம் (Blood circulation) மூளைல அதிகமா இருந்தது தெரிஞ்சது. அதனால வாசிக்கற பழக்கத்த நாம விட்றவே கூடாது.தான் படித்த நாளேட்டுச் செய்தியை (http://news.stanford.edu/news/2012/september/austen-reading-fmri-090712.html) வளமுடன் சொன்னான் பொற்கோ.
Researcher Natalie Phillips positions an eye-tracking device on Matt Langione.
“ம்.. சரிதான். தமிழ் கம்ப்யூட்டர படுத்துக்கிட்டுப் படிக்க முடியும். ஆனா. இணையத்த படுத்துக்கிட்டு படிக்க முடியுமா? எப்படியிருந்தாலும் இனிமே books வாசிக்கறத அதிகப்படுத்திகறேன்.” ஒரு முடிவுடன் சொன்னான் காண்பதற்கினியா.
“ஒங்க கூகுள் பத்தி எதாவது புது சேதி சொல்லுங்க. கோ.” இயல்பாகக் கேட்டாள் இனியா.
“இதுவரைக்கும் நிலப்பரப்பில் வரைபடங்களைப் (maps) புகுத்தின‌ கூகுள், இனி கடல் பரப்பிலும் தனது Street View புகுத்தியிருக்கு. அதைப் பாக்க, http://maps.google.com/help/maps/streetview/gallery.html#!/ocean செல்லலாம். கடல் ஆமைகள், மீன்கள் இப்டி எல்லாத்தோட நாமும் நீந்திச் செல்ல முடியும்.” கூகுள் வரைபடங்கள் ட்வீட்டரில் வெளியிட்ட சேதியினைச் சுட்டிக்காட்டினான் பொற்கோ.
சுட்டியவன் தொடர்ந்தான் “அடுத்து வலியில்லா ஊசி பத்தினது. இது மென்பொருள் தொடர்புடையது இல்லைன்னாலும், இதுவும் ஒரு அறிவியல் சேதிதான். இததென்கொரிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க. தோல் சிகிச்சைக்கு பயன்படுத்தற லேசர் கற்றையால இதைச் செய்யலாம். இது சவ்வூடு பரவல் (Osmosis) எனப்படும் அறிவியல் முறை மூலமா நடக்கறது. இத நம்ம சந்தைக்கு ஏத்தா மாதிரி தயார்ப்பண்ண ஒரு பன்னாட்டு நிறுவனத்தோட பேச்சு வார்த்த நடந்து வர்றது. (http://www.indianexpress.com/news/now-a-laserpowered-needle-to-give-painfree-injections/1002599/0) தான் பதிவிறக்கிய ஆங்கில நாளேட்டுச் சேதியினை தன் தோழியிடம் காண்பித்தான் பொற்கோ.
"ரெண்டு பேரும் பேசினா நேரம் போறதே தெரியதே. நேரமாச்சு. வாங்கப்பா சாப்டலாம்..." சமையலறையிலிருந்து குமுதினியின் குரல் ஒலித்தது.
“அத்த கையால சாப்ட்டு நெறய நாளாகுது. இன்னைக்கு கண்டிப்பா ஒரு புடி புடிக்கணும்.” செவிக்குக் கிடைத்த உணவு வயிற்றுக்கும் கிடைக்க வேண்டுன்று விரைந்தாள் இனியா.
மடிக்கணினியினை மடித்து விட்டு அவளைத் தொடர்ந்தான் பொற்கோ.

திசம்பர்த் திங்களில் ஒரு வியப்புக்குரிய நிகழ்வு

சனி, 24 நவம்பர், 2012

என்னைக் கவர்ந்த பாடல்

திரைப்படம்: மைனா
நடிகர்கள்: அமலாபால், வித்தார்த்
இசை: D.இமான்
பாடியவர்கள் : சோலார் சாய் , கல்பனா
ஆண்டு: 2010
பாடலாசிரியர்: யுகபாரதி

        ஆண்:ஏ! ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப் போட்டு
              சிலு சிலுக்கிற ரவிக்கைப் போட்டு
              எங்கே நீயும் கெளம்பிப்போற சொல்லு வேகமா?
              நானும் தொணைக்கு வரேன் பேசிகிட்டே கண்ணே போவோமா?

              ஜிங் சிக்கா!...க்குசிக்கா! க்குசிக்கா! க்குசிக்கா!
              ஜிங் சிக்கா!.. க்குசிக்கா! க்குசிக்கா! க்குசிக்கா!

        பெண்:ஏ! ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப் போட்டு
              சிலு சிலுக்கிற ரவிக்கைப் போட்டு
              எங்கேவேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க
              நீங்க எப்போதுமே தொணைக்கு வேணாம் எட்டி நகருங்க..

              ஜிங் சிக்கா!...க்குசிக்கா! க்குசிக்கா! க்குசிக்கா!
              ஜிங் சிக்கா!.. க்குசிக்கா! க்குசிக்கா! க்குசிக்கா!

        ஆண்:நாடுரொம்ப கெட்டுப்போச்சு
              நல்லதெல்லாம் செத்துப்போச்சு
              கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா
              நீ கூடாதேன்னு சொல்லாதேடி குட்டி கோகிலா?

              ஏய்ய்.....

        ஆண்:ராயங்கூரு  மூனு மைலு
              நாங்குனேரி நூறு மைலு
              சாயங்கால வேளையில சேலை எதுக்கடி?
              சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் விலக்கடி!

              ஜிங் சிக்கா!...க்குசிக்கா! க்குசிக்கா! க்குசிக்கா!
              ஜிங் சிக்கா!.. க்குசிக்கா! க்குசிக்கா! க்குசிக்கா!

        பெண்:சீராலூரு அஞ்சு மைலு
              சிதம்பரமோ ஐம்பது மைலு
              வேலூருல ஏற்கனவே கம்பி எண்ணுன
              அந்த வெக்ககேட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற

              ஜிங் சிக்கா!...க்குசிக்கா! க்குசிக்கா! க்குசிக்கா!
              ஜிங் சிக்கா!.. க்குசிக்கா! க்குசிக்கா! க்குசிக்கா!

        ஆண்:சிங்கிப்பட்டி ஒன்பது மைலு
              சிங்கப்பூரு எத்தனை மைலு
              அத்தனை ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி?
              உன்னை ஆராஞ்சி நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி!

              ஏய்!....ஏய்!.....ஏய்!..... ஏய்!

        ஆண்:பூதலூரு ஏழு மைலு
              பூண்டிக் கோவிலு நாலு மைலு
              காதலோட உன்னை நானும் கட்டிபிடிக்கவா?
              இல்ல காவிவேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா?

        பெண்:கும்பகோணம் ஆறு மைலு
              குளித்தலையோ நாலு மைலு
              ஊருக்கூரு உதபட்டும் நீ இன்னும் திருந்தல
              உங்க அப்பா அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல!

              ஜிங் சிக்கா!...க்குசிக்கா! க்குசிக்கா! க்குசிக்கா!
              ஜிங் சிக்கா!.. க்குசிக்கா! க்குசிக்கா! க்குசிக்கா!

        ஆண்:மாயவரம் எட்டு மைலு
              மன்னார்குடி பத்து மைலு
              எறைக்காத கேணியில நீரு ஏதடி?
              என்ன ஏத்துகிட்டு இஷ்டம்போல தூருவாறடி!

              அடியே!.......
         
              ஜிங் சிக்கா!...க்குசிக்கா! க்குசிக்கா! க்குசிக்கா!
              ஜிங் சிக்கா!.. க்குசிக்கா! க்குசிக்கா! க்குசிக்கா!

வியாழன், 8 நவம்பர், 2012

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: கடல்
பாடியவர்: ஷக்திஸ்ரீ  கோபாலன்
இசை: ஏ.ஆர். இரகுமான்

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெள்ள பார்வ வீசி விட்டீர் முன்னாடி.
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி.

வண்ண மணியாரம்
வளருது கெடிகாரம்
ஆனை புலியெல்லாம்
அடங்கும் உன் அதிகாரம்.

நீர் போன பின்னும் நிழல் மட்டும்.
போகலையே போகலையே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து.
விழுந்திருச்சே

அப்ப நிமிந்தவ தான்.
அப்பறமா குனியலையே குனியலையே.
கொடகம்பி போல மனம்.
குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

பச்சி ஊரங்கிருச்சு
பால், தயிரா தூங்கிருச்சு.
இச்சி மரத்து மேல.
இல கூட தூங்கிருச்சு.

காச நோய்க்காரிகளும்
கண்ணுரங்கும் வேளையில
ஆச நோய் வந்தமக.
அர நிமிசம் தூங்கலையே.

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

ஒரு வாய் இறங்கலையே.
உள் நாக்கு நனையலையே.
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே

யேல இளஞ்சிருக்கி
எதோ சொல்ல முடியலையே.
ரப்பர் வள‌விக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே

ஓ...நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

வெள்ள பார்வ வீசி விட்டீர் முன்னாடி.
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி.

வண்ண மணியாரம்
வளருது கெடிகாரம்
ஆனை புலியெல்லாம்
அடங்கும் உன் அதிகாரம்.

நீர் போன பின்னும் நிழல் மட்டும்.
போகலையே போகலையே
நெஞ்சுகுழியில் நிழல் வந்து.
விழுந்திருச்சே

அப்ப நிமிந்தவ தான்.
அப்பறமா குனியலையே குனியலையே.
கொடகம்பி போல மனம்.
குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்க.
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

திங்கள், 29 அக்டோபர், 2012

என்னைக் கவர்ந்த பாடல்


படம் :பொன்னுமணி (1993)
இசை : இளையராஜா
பாடியவர் : SP பாலசுப்ரமணியம்
வரிகள்: RV உதயகுமார்

பல்லவி

அன்பை சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பை சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

சரணம் 1

வான் மழையில் தான் நனைந்தால்
பால் நிலவும் கரைந்திடுமா
தீயினிலே நீயிருந்தால்
நிலவொளி தான் சுகம் தருமா
மரக்கிளையில் ஒரு குருவி கூடுக்கட்டி வாழ்ந்ததே
அந்தரத்தில் ஆடவிட்டு ஆலமரம் சாய்ந்ததே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

சரணம் 2

நீ அரைச்ச சந்தனமே
வாசனை தான் மாறலியே
நேசமெனும் கோட்டையிலே
காவல் இன்னும் தீறலையே
பேசாமல் போனதென்ன
பாசப்புறா விண்ணிலே
வீசாமல் வீசுகின்ற
பாசப்புயல் மண்ணிலே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

பல்லவி

அன்பை சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பை சுமந்து சுமந்து

வெள்ளி, 19 அக்டோபர், 2012

தொல்லை கொடுத்த நண்பரும், தொலைந்து போன கடவுச்சொல்லும்


எனக்கு நண்பர் ஒருவர் உண்டு. அவரிடம் தொழிற்நுட்பம் தொடர்பாகச் சில மாறுபட்ட வழக்கங்கள் உண்டு.
1.       எது எதற்காகப் பயன்படுகிறது என்பது கூடத் தெரியாமல், நிறைய இலவச இணையக் கணக்குகளைத் தொடங்குவது.
2.       அனைத்திற்கும் எளிய கடவுச்சொல் கொடுப்பது. .கா: xyz789
3.       அனைத்திற்கும் ஒரே கடவுச்சொல் கொடுப்பது.
4.       கடவுச்சொல்லை யாருக்கும் சொல்லாமல் இருப்பது. ஆனால் அனைத்துக் கணக்குகளுக்கும், ஒரே கடவுச்சொல் கொடுத்துள்ளேன் என்பதை அனைவருக்கும் சொல்வது.
இதையெல்லாம் நண்பரிடம் கண்ட நான், இது போன்றெல்லாம் செய்யாதீர்கள். சில இணையதளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியினைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் கொடுத்த அந்தக் கணக்கிற்குரிய கடவுச்சொல்லை, உங்கள் மின்னஞ்சலை உடைக்கப் பயன்படுத்திக் (crack) கொள்வார்கள். என்று சொல்லிய பின், நண்பர் என்னைப்பார்த்து குறுநகை செய்வார். நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா? எனது கணக்கை யார் பயன்படுத்துவார்கள்? என்று வினவுவார்.
“ஒங்களுக்குப் பட்டாத்தான் தெரியுமையா...” என்று சொல்லிவிட்டு அதற்குப் பிறகு அதைப்பற்றிய பேச்சையே நிறுத்திவிட்டேன்.
திடீரென்று ஒரு நாள் அவரது ஜிமெயில் கணக்கு உடைக்கப்பட்டது. கடவுச்சொல்லும் மாற்றப்பட்டு விட்டதுநண்பருக்கு நான் இது பற்றியெல்லாம் நான் சொன்னமையால், நான் தான் அவரது கணக்கினை உடைத்து கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன் என்று நினைத்துக்கொண்டு என்னிடம் வந்து நிலைமையை விளக்கினார்.
ஐயா எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அதையெல்லாம் விடுத்து நான் இதைச் செய்வேனா என்றதும், நண்பர் என்னை நம்ப மறுத்துவிட்டார்.  எல்லாவற்றிற்கும் ஒரே கடவுச்சொல் கொடுத்திருந்ததை உடனே மாற்றுங்கள் அல்லது அதையும் இணையக்கயவர்கள் உடைத்து விடுவார்கள் என்றதும், அச்சம் மேலிட்டவராய், இணையத்தில் உலாவச் சென்றார். மற்ற கணக்குகளை எல்லாம் மாற்றியமைத்தவர், மீண்டும் மீண்டும் முயற்சித்தும், ஜிமெயில் கணக்கினை மட்டும் திரும்பப் பெற இயலவில்லை என்று அழாத குறையாக என்னிடம் வந்து சொன்னார்.
இதற்கு ஜிமெயிலே வழிவகை செய்கிறது. நீங்கள் தொலைத்த கணக்கின் பயனர் பெயரைக் கொடுத்தால் அது உங்கள் கடவுச்சொல்லை மாற்றியமைக்க உதவுகிறது என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், அவரது கடவுச்சொல்லை எங்கள் அலுவலக இணைய இணைப்பிலேயே மாற்றிக் கொடுத்தேன்.
எனினும், அவரது முந்தைய மின்னஞ்சல்கள் இணையக் கயவர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. இதையறிந்ததும் நண்பர் முகம் பேயறைந்தது போல் ஆகிவிட்டது.
இப்பொழுதேல்லாம் நண்பர் வேவ்வேறு கடவுச்சொற்கள் கொடுக்கிறார். தேவையற்ற இணையக் கணக்குகளைத் தொடங்குவதை நிறுத்திவிட்டார்.
கடவுச்சொல் முதன்மை (importance) கருதி நண்பர் அமைதிகாக்கிறார். எங்கள் குழுவிலே, கடவுச்சொல் பற்றி பேச்சு எழுந்தாலே, காதத் தொலைவு சென்று விடுகிறார்.
என்ன செய்வது? கண் கெட்டபின் கதிரவன் வணக்கம் கிட்டுமா?