சனி, 5 ஏப்ரல், 2014

நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்டு கைபேசி

சென்ற தமிழ் கம்ப்யூட்டர் இதழில் (மார்ச் 16-31,2014, பக்கம் 10) வெளியான எனது கட்டுரை.
எப்பொழுது வரும் என்று ஏறக்குறைய அனைவராலும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நோக்கியா ஆண்ட்ராய்டு கைபேசி விரைவில் சந்தைக்கு வருகிறது. சென்ற வாரம், அதாவது பிப்ரவரி திங்கள் இறுதி வாரம் பார்சிலோனாவில் நடந்த மொபைல் உலக மாநாட்டில் இது அறிவிக்கப்பட்டது.
இது முதலில் ஃபின்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும். (ஃபின்லாந்து நாட்டின் ஒரு சிற்றூரின் பெயரே நோக்கியா என்றழைக்கப்படுவதாகும்.) ஏரிகளின் நாடான (land of lakes) ஃபின்லாந்துவில்தான் நோக்கியா தொடங்கப்பட்டது.
கைபேசி உலகில் பல திறன்பேசிகள் வந்தாலும், நோக்கியாவிற்கு நிகர் அதுதான் என்பது உலகறிந்த உண்மை. அதற்குக் காரணம் அதன் நீடித்த உழைப்பு. மேலும் அதில் உள்ள மின்கலத்தின் உறுதித்தன்மை. நீரில் விழுந்தும், தூக்கியெறிப்பட்டும் கூட பிறகு மீண்டும் எடுத்து ஒட்ட வைக்கப்பட்டால் உழைக்கும் திறமை நோக்கியாவில் மட்டுமே உண்டு என்பதை இந்தியர்களுக்கு சொல்லித் தெரியத் தேவையில்லை.
கைபேசி உலகில் அனைவராலும் வாங்கக்கூடிய விலையில், பயனர் தோழமையில் (user friendly) உள்ள ஒரே அருமையான இயங்குதளமென்றால் அது ஆண்ட்ராய்டுதான். அது ஒரு திறமூல மென்பொருளாதலால் (open source) எவரும் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.
நோக்கியாவும் ஆண்ட்ராய்டும் கைகோர்க்குமா என்று சில ஆண்டுகளாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் வாங்கியது.
கைபேசி உலகில் நிலவிய கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் நோக்கியாவும், அதில் இயங்கிய‌ விண்டோஸ் இயங்குதளமும் சந்தித்த போது, ஆண்ட்ராய்டிற்கு எதிராக தனது கோலினை ஓச்ச வேண்டும் என்பதால்தான் மைக்ரோசாஃப்ட் அதனை வாங்கியது என்பதை எளிய பயனர்கள் கூட அறிந்து கொள்ளலாம்.
இனி இன்றைய கதைக்கு வருவோம். ஆண்ட்ராய்டு முழுக்க திறமூல மென்பொருள் கிடையாது. அதன் ஒருபகுதி லினக்ஸ் இயக்கமுறைமையின் அடிப்படையில் இருப்பதால் அதை மட்டும் எடுத்து சில பல மென்பொருள் தொடுதல்களைத் தட்டி (small software touchups), ஏற்கனவே இருக்கும் விண்டோஸின் இயக்கமுறைமையை ஒட்டி, இப்பொழுது அதில் இயங்காத, ஆனால் ஆண்ட்ராய்டில் இயங்கும் சில செயலிகளை இயங்கும் வண்ணம் இது அமைக்கப்பட்டிருக்கிறது என தொழிற்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலம் கண்டிப்பாக உறுதியான மின்கலப் பயன்பாட்டுடன் கூடிய ஒரு நம்பகமான அதே நேரம் விரும்பத்தகுந்த பயனர் இடைமுகப்புடன் அமைந்த ஒரு திறன்பேசியை குறைந்த விலைக்குக் கிடைக்கச் செய்து தனது சந்தையின் மதிப்பினை ஏற்றிக்கொள்ள மைக்ரோசாஃப்ட் திட்டம் தீட்டுகிறது.
இது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு சந்தையில் சோதனை செய்யப்படுகிறது. தொழிற்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, கொரியா, கனடா போன்ற நாடுகளில் இது விற்பனை செய்யப்படாது என இணையம் தெரிவிக்கிறது.
மேலும் இது சாம்சங் கேலக்ஸி எஸ்5 லிருந்து மென்பொருள் உரிமையுடன் எடுக்கப்பட்ட ஒரு புதிய வடிவம் என்று கூறப்படுகிறது. இது ஒரு பயனர் மாறுபடுத்திய(customized) ஆண்ட்ராய்டு4.1 ஜெல்லிபீன் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஏதும் சட்டச்சிக்கல் இல்லாத வண்ணம் அதே நேரம் ஆண்ட்ராய்டின் போட்டியினை சந்தையில் சமாளிக்க மைக்ரோசாஃப்டிற்கு இந்த வன்பொருள் உதவும் எனது பெரிதும் நம்பப்படுகிறது.
இது நோக்கியா X series என்று அழைக்கப்படுகிறது. இதன் இந்தியப்பதிப்பு வரும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனினும், இது இம்மாத இறுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் சிறப்பு அணிகள்:
  1. புத்தாக்கத்துடன் கூடிய ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன் (ஆன்ட்ராய்டு4.1)
  2. பயனர் கூகுள் செயலிகளை (Google apps) APK கோப்புகளின் மூலமா பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  3. கூகுள் App store இதில் இருக்காது. அதாவது, ஜிமெயில், கூகுள் குரோம், கூகுள் மேப்ஸ் அடங்கியவை நீக்கப்பட்டு, அதற்கு மாற்றாக‌ Outlook, Microsoft exchange, Nokia express browser ஆகியவை சேர்க்கப்பட்டு உள்ளன.
  4. இதன் இடைமுகப்பு ஆண்ட்ராய்டு போல அல்லாமல், நோக்கியா ஆஷாவின் இடைமுகப்பினை ஒத்துக் காணப்படுகிறது.
  5. மற்ற ஆஷா இயங்குதளங்களில் இருக்கும் மூன்று பொத்தான்கள் நீக்கப்பட்டு, back பொத்தான் சேர்க்கப்பட்டுள்ளது.
  6. நோக்கியா இதற்கான சிறப்பான App Store ஐச் சேர்த்துள்ளது.
மூன்று வகையான நோக்கியா X Series கள் வெளியிடப்பட இருக்கின்றன.
இதன் விபரங்கள் பின்வருமாறு:
Nokia X 89 euros (7538.52 INR)
Main camera sensor: 3-megapixel Display size: 4-inch Processor name: Qualcomm Snapdragon S4, Dual-core 1 GHz
Maximum talk time (3G): 10.5h Maximum music playback time: 26h Photo sharing: Twitter, Facebook, Send as email attachment, Share over Bluetooth
Social apps: Facebook, Twitter, WeChat, Viber, Skype
Display resolution: WVGA (800 x 480) Display features: Brightness control, Tactile feedback, Orientation sensor, Nokia Glance screen, Wide viewing angle, Screen double tap
Display colors: TrueColor (24-bit/16M) Aspect ratio: 15:9 Pixel density: 233 ppi
Display technology: IPS LCD Touch screen technology: Capacitive two-point touch
Sensors: Ambient light sensor, Accelerometer, Proximity sensor
Nokia X+ at 99 euros (8385.55 INR)
User data storage: In device, Memory card
RAM: 768 MB
Mass memory: 4 GB
Expandable memory card type: MicroSD
Maximum memory card size: 32 GB
Nokia XL for 89 euros (9232.57 INR)
Main camera sensor: 5 MP
Display size: 5-inch
Processor name: Qualcomm Snapdragon S4
Maximum talk time (3G): 13h
Maximum music playback time: 37h
Photo sharing: Twitter, Facebook, Send as email attachment, Share over Bluetooth
Social apps: Facebook, Twitter, WeChat, Viber, Skype
மைக்ரோசாஃப்ட் இப்படி சந்தையை மேம்படுத்துவது பற்றி கனவு கண்டு கொண்டிருக்க, சில கைபேசி நுட்பவியலாளர்கள் இந்தத் திறன்பேசி வந்தவுடன், எப்படி நாம் மைக்ரோசாஃப்ட் மடிக்கணினியில் உபுண்டு உள்ளிட்ட பல்வேறு லினக்ஸ் இயக்க முறைமைகளை நிறுவிப் பயன்படுத்துகிறோமோ அது போலவே திறன்பேசியிலும் குறிப்பிட்ட  இயங்குதளத்தினை அழித்துவிட்டு, நமக்கு வேண்டிய ஆண்ட்ராய்ட் கிட்கேட் ஐக் கூட நிறுவிக் கொள்ளலாம் என பேசிவருகின்றனர். நோக்கியாவின் நிலைமை என்ன என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் விபரம் அறிய‌
http://gadgets.ndtv.com/mobiles/news/nokia-x-android-smartphone-listed-online-at-rs-8500-with-march-15-availability-491743

0 Comments: