ஞாயிறு, 15 நவம்பர், 2015

நான்குவரி இராமாயணம் - படித்ததில் பிடித்தது.

தாதையார் சொலராமன் காடு போதல்
    சார்ந்துளபொன் மானெனுமா ரீசன் சாதல்
சீதையார் பிரிவெருவை மரணம் பானு
    சேயொடுநட் புக்கோடல் வாலி வீடல்
ஓதநீர்க் கடற்பரப்பை அநுமன் தாண்டல்
    உயரிலங்கை நகரெரியால் வேகக் காண்டல்
பாதகராம் அரக்கரெலாம் இறக்கத் தாக்கல்
    பாக்கிய ராமாயணச்சீர் காதை யீதே!
- யாழப்பாணத்துச் சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர்
நன்றி: http://oomaikkanavugal.blogspot.com/2015/11/blog-post_14.html

0 Comments: