புதிய
பரிணாமம்
புதிய
பரிமாணம்
புதிய
பரிமாணம்
புதிய
பரிணாமம்
படி
என்னும் வார்த்தை எத்தனை
பொருளில் வருகிறது,
எத்தனை
பரிமாணங்களில் வருகிறது
என்பதைப் பார்போம்.
-
படி பெயர்ச்சொல்
பெயர்ச்சொல்லாக
எடுத்துக் கொண்டால் படிக்கட்டு
சொல்லைக் குறிக்கிறது
-
படி பெயர்ச்சொல்
படிக்காசு
(allowance)
சொல்லைக்
குறிக்கிறது.
அன்றாடப்படி
(daily
allowance)
-
படி பெயர்ச்சொல்
உழக்கு
என்னும் வழக்கொழிந்த சொல்லைக்
குறிக்கிறது.
எ.கா;
கால்படி
அரைப்படி
-
படி வினைச்சொல்
வினைச்சொல்லாக
எடுத்துக் கொண்டால் படித்தல்,
(வாசித்தல்)
தொழிலைக்
குறிக்கிறது.
-
படி வினைச்சொல்
xerox
என்னும்
சொல்லுக்கு இணையான படி எடுத்தல்
தொழிலைக் குறிக்கிறது.
எ.கா;
Backup = காப்புப்படி
xerox
= ஒளிப்படி
-
படி வினைச்சொல்
அடிபணிந்து
செல்லல் தொழிலைக் குறிக்கிறது.
-
படி படி அடுக்கடுக்காய் வந்தால்
படிப்படியாய்
முன்னேறுதல் தொழிலைக்
குறிக்கிறது.
இப்போது
"சும்மா"
எப்படி
இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
-
சும்மா
"சும்மா
இரு"
என்றால்
அமைதியாக இரு என்று பொருள்.
-
சும்மா
"சும்மாதான்"
என்றால்
ஒரு பேச்சுக்குத்தான்,
விளையாட்டுக்குத்தான்
என்று பொருள்.
-
சும்மா
"சும்மா
பேசிக்கிட்டே இருக்காதே"
என்றால்
எப்பொழுதும் பேசிக்கிட்டே
இருக்காதே என்று பொருள்.
-
சும்மா
"சும்மாதான்
செஞ்சேன்"
என்றால்
காரணமில்லை என்று பொருள்.
-
சும்மா
"சும்மாதான்
இருக்கேன்"
என்றால்
வேலையில்லாமல் இருக்கேன்
என்று பொருள்.
-
சும்மா
"சும்மாதான்
ஒப்புக்காகத்தான்"
ஒன்றுமில்லை
என்று பொருள்.
-
சும்மா
"சும்மா
சும்மா செய்யாதே"
என்றால்
அடிக்கடி செய்யாதே என்று
பொருள்.
சரி.
"படி"
மற்றும்
"சும்மா"
பற்றி
தெரிந்து கொண்டோம்.
அவைகளை
ஏழு வழிகளில் பிரித்தாராய்தோம்
.
சும்மா
இருக்காமல் படியுங்கள்.
0 Comments:
Post a Comment