வியாழன், 3 நவம்பர், 2022
யார் தமிழன்
முழங்கியவர்: PNA Prasanna மணி: வியாழன், நவம்பர் 03, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: புலனச்செய்தி
செவ்வாய், 1 நவம்பர், 2022
தமிழன் யார் புலனச்செய்தி
● *சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்.*
முழங்கியவர்: PNA Prasanna மணி: செவ்வாய், நவம்பர் 01, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: புலனச்செய்தி
செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022
கிறிஸ்தவர்கள் இல்லை - உலகம் இல்லை.
முழங்கியவர்: PNA Prasanna மணி: செவ்வாய், ஆகஸ்ட் 02, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: புலனச்செய்தி
புதன், 27 ஜூலை, 2022
இளையராஜாவின் கல்யாணி ராகம்
முழங்கியவர்: PNA Prasanna மணி: புதன், ஜூலை 27, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: புலனச்செய்தி
திங்கள், 25 ஏப்ரல், 2022
தமிழ் மழை பாரீர்...!*
முழங்கியவர்: PNA Prasanna மணி: திங்கள், ஏப்ரல் 25, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: புலனச்செய்தி
சனி, 23 ஏப்ரல், 2022
நமது முன்னோர்கள் வகுத்த#நிலங்களின்_வகைகள்
நமது முன்னோர்கள் வகுத்த
முழங்கியவர்: PNA Prasanna மணி: சனி, ஏப்ரல் 23, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: புலனச்செய்தி
வெள்ளி, 22 ஏப்ரல், 2022
எலிசபெத் பேரரசி பற்றிய நீங்கள் அறிந்திராத செய்திகள்
இணையத்தில் வெட்டி ஒட்டியது பிறமொழிக் கலப்பிற்கு மன்னிக்க.
பிரித்தானியாவின் சக்தி வாய்ந்த மனிதரான எலிசபெத் மகாராணியால் மட்டுமே சில முக்கிய விடயங்களை செய்யவோ, கடைப்பிடிக்கவோ முடியும்.
ஓட்டுனர் உரிமம்
பிரித்தானியாவில் வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் எலிசபெத் மகாராணி பெயரில்
தான் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மகாராணி வாகனம் ஒட்ட ஓட்டுனர் உரிமம்
வைத்திருக்க தேவையில்லை.
கடவுச்சீட்டு
விமானத்தில் பயணம் செய்ய கடவுச்சீட்டு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் நிலையில், எலிசபெத் மகாராணிக்கு மட்டும் அது தேவையில்லை.
தனி ஏ.டி.எம்
அரச குடும்பம் மட்டும் உபயோகப்படுத்துவதற்காக பக்கிங்ஹாம் அரண்மனை கீழ்
தளத்தில் அவர்களுக்காக பிரத்யேகமாக ஒரு ஏ.டி.எம் இயந்திரம்
வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிறந்தநாள்
எலிசபெத் மகாராணி பிறந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஒரு பிறந்தநாளும், வருடா
வருடம் யூன் மாதம் சனிக்கிழமை இன்னொரு பிறந்தநாளும் கொண்டாடப்படும்.
வானிலையை கருத்தில் கொண்டு ராணுவ அணி வகுப்பு நடத்த இவ்வாறு செய்யப்படுகிறது.
சட்டம் இயற்றும் உரிமை
எந்த சட்டத்தையும் ஒரு உண்மையான சட்டமாக மாற்றுவதற்கு ஒப்புதல் தேவை.
முன்மொழியப்பட்ட ஒரு சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
நிறைவேற்றப்பட்டவுடன், எலிசபெத் மகாராணியின் பார்வைக்கு வரும். அதற்கு
மகாராணி ஒப்புதல் அளித்தால் தான் குறித்த சட்டம் நிறைவேறும்.
வரி கட்ட தேவையில்லை
எலிசபெத் மகாராணி எந்தவொரு வரியையும் கட்ட தேவையில்லை. ஆனால் தானாக
முன்வந்து அவர் வருமான வரி மற்றும் மூலதன ஆதாய வரியை தவறாமல் கட்டி
வருகிறார்.
அவுஸ்திரேலியா கெளரவ தலைவர்
அவுஸ்ரேலியா நாட்டின் கெளவர தலைவராகவும் எலிசபெத் மகாராணி இருப்பதால், அந்த அரசுக்கு எதிரான நடவடிக்கையை கூட அவரால் எடுக்க முடியும்.
அன்னப்பறவை, டால்பின்கள்
பிரித்தானியாவின் பொது வெளி தண்ணீரில் இருக்கும் அன்னப்பறவைகள்,
டால்பின்கள், திமிங்கலங்கள் ஆகியவை எலிசபெத் மகாராணிக்கே சொந்தமாகும்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஏப்ரல் 22, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: புலனச்செய்தி
இசைஞானி இளையராஜா .பற்றிய சில குறிப்புகள் - யார் இந்த இளையராஜா?
யார் இந்த இளையராஜா?
1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.
2.
3. 2. பிறந்த தேதி : 2.6.1943
3. தந்தை : டேனியல் ராமசாமி
4.
5. 4. தாய் : சின்னத்தாய்
6.
7. 5. சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
6. கல்வி : எட்டாம் வகுப்பு
7. மனைவி : ஜீவா ( சொந்த சகோதரியின் மகள் )
8. குழந்தைகள் : கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி
9. சகோதரர்கள் : பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்)
10. இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். அவருக்கு 25
11. ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது
11. 1958-ல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால்
12. அம்மா சின்னத்தாய், இளையராஜாவை வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போ, இடையிடையே
13. ஒரு பாடலை அவன் பாடினால் உனக்குக் கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று கூறியிருக்கிறார்.
14.
15. “என் அன்னையின் திருவாக்கில்தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று பொன்
16. மலையிலும், திருவெரும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்ச்சிகளில் என் பாட்டுக்கு அவ்வளவு பெரிய
17. வரவேற்பு கிடைத்ததாக இளையராஜா அடிக்கடி நினைவு கூறுவார்.
12. ஹார்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில்
13. தென்னிந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும்,
14. பயணம் செய்து வாசித்துப்பாடி மிக இளம் வயதிலேயே லட்சோப லட்சம் மக்களை சந்தித்து
15. இசையின் நாடித்துடிப்பை அறிந்தவர்.
13. கம்யூனிஸ்ட் கட்சிப் பிராச்சார பாடகராக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இளையராஜா
14. தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இன்றும்
15. கம்யூனிஸ்ட் தலைவர்கள் இவர்களது பாடல்கள் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு உதவியாய்
16. இருந்ததை அன்போடு சொல்லிக் கொண்டிருக்கிரார்கள்.
14. ஆரம்ப காலங்களில் இளையராஜா பெண்குரலில் மட்டுமே பாடி வந்திருக்கிறார்.
15. வானுயுர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு
16. பாடுகின்றேன் என்று சொத்து பத்துக்களை நாடகம் போட்டு இழந்திருந்தாலும் லட்சியத்தை இழக்காத
17. அண்ணனின் பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டுமில்லாமல் ஒரு தவமாக பரிணமித்திருக்கிறது
18. என்று கூறியிருக்கிறார் இளையராஜா.
16. பாட்டு கேட்பதற்காக வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு இளையராஜா தன் சகோதரர்கள்
17. ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரோடு இசையமைப்பாளராக வேண்டும் என்று சென்னைக்கு
18. ரயில் ஏறினார்.
17. மேற்கத்திய இசைக்கு இளையராஜாவின் குருநாதர் மாஸ்டர் தன்ராஜ்
18. வருமானம் குறைவாக இருந்த இளையராஜாவிடம் பணமே வாங்காமல் இசையின் அடிப்படை
19. நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார் தன்ராஜ் மாஸ்டர்.
19. பியானோ கற்று கொள்வதற்காக சென்ற இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து அதைக்
20. கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்மாக எல்லாவற்றையும் கற்றுக்
21. கொடுத்தார் தன்ராஜ் மாஸ்டர்.
20. வாரத்தின் இரண்டுநாள் இரண்டு மணிநேரம் பயிற்சி பெற்று வந்த இளையராஜா தினமும்
21. அங்கேயே பயிற்சி பெறலானார்.
21. ஹார்மோனியம், கிட்டார், பியானோ, கீபோர்ட், புல்லாங்குழல் என்று பல்வேறு இசைக்கருவிகளை
22. வாசிப்பதில் தேர்ந்தவர்.
22 .க்ளாசிக்கல் கிட்டார் இசையில் லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் 8வது
கிரேட் வரை முடித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றவர்.
23. திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார். அதாவது
24. 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல
25. இடங்களுக்கு சென்று சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து
26. கொண்டார்.
24. சகோதரர்கள் மூவரும் இணைந்து ”பாவலர் பிரதர்ஸ்” என்ற இசைக்குழுவும் நடத்தி
25. வந்துள்ளார்கள்.
25. இசையமைப்பதற்கு இசையை முறையாக கற்க வேண்டும் என்பதால் தங்களிடம் இருந்த
26. ஆம்ப்ளிஃபயரை அடகு வைத்து வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசை பயின்றார் இளையராஜா. ஆனால்
27. அந்த ஆம்ப்ளிஃபயரை திரும்ப மீட்டெடுக்க சென்றபொழுது அந்த இடத்தில் வேறொரு கடை
28. இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார்.
26. ஆரம்ப காலங்களில் தான் பணியாற்றும் இசையமைப்பாளர் தயாரிப்பாளருடனும்,
27. இயக்குனருடனும் உட்கார்ந்து மெட்டு அமைக்கும்போது மெட்டுக்களை நோட்ஸ் எடுக்கும் கம்போசிங்
28. அசிஸ்டென்ட்டாக இளையராஜா பணியாற்றினார்.
27. 1970 களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக இசையமைப்பாளர் ”சலீல் சௌத்ரி”யிடம் பணியில்
28. சேர்ந்தார்.
28. சலீல் சௌத்ரிக்கு பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின்
29. உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார்.
29.. முதல் படம் “அன்னக்கிளி”
தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர்
பஞ்சு அருணாச்சலத்தால் 1976 ல் அறிமுகம் செய்யப்பட்டார்.
30. அன்னக்கிளி படத்திற்காக அவர் தேர்வானபொழுது சற்றே புருவம் உயர்த்திய அனைவருக்கும்
31. பதிலடி தர இயக்குனர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படப்பாடல்களை இசையமைத்துக் காட்டு
32. எனக்கூற, அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அத்தனை பாடல்களுக்கும் இசையமைத்துத் தனது
33. திறமையை நிரூபித்தார் இளையராஜா.
31. இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவினை என்ன பெயரில்
32. அறிமுகம் செய்யலாம் எனக்கேட்க ”பாவலர் பிரதர்ஸ்” என்றார் இசைஞானி.. இது சற்று பழையதாய்
33. உள்ளது என்று யோசித்த இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே ”இளையராஜா”.
32. சினிமாவிற்கு பின் ராசையா இளையராஜா ஆனது அனைவரும் அறிந்தது.ஆனால் சினிமாவில்
33. சேருவதற்கு முன் டேனியல் ராசைய்யா என்றே அழைக்கப்பட்டார்.
33. கதை கவிதை கட்டுரை எழுதுவதும் , பென்சில் ட்ராயிங் வரைவதும், தான் எடுத்த
34. புகைப்படங்களை ப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுவதும் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த
35. பொழுதுபோக்கு.
34. சிபாரிசு சுத்தமாக பிடிக்காது.ஆனால் ஒரே முறை சிபாரிசு கருதி நடிகர் சங்கிலிமுருகனுக்கு
35. கால்ஷீட் தந்தார். சிபாரிசு செய்தவர் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள்.
35. அன்னையின் மீது அவர் பாசம் அதிகம். சின்னத்தாய் அம்மாள் சென்னை வந்தால் ராசய்யாவின்
36. வீட்டிலே தான் தங்குவார். காரணம் கேட்டதற்கு "ராஜா இன்னும் குழந்தையாவே இருக்கான். அவன்
37. காலையிலேயே வேலைக்குப் போகும்போது நான் போய் டாட்டா காட்டணும். சாயங்காலம் அவன்
38. வரும்போது நான் இங்க இருக்கனும்" என நெகிழ்ச்சியாய் சொன்னார்.
39.
40. 36. எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் மேஸ்ட்ரோ, இசைஞானி என்று
41. புனைப்பெயரிட்டு அழைத்தாலும் பண்ணைபுரத்துக்காரர் என்பதே எனக்கு பெருமை என்பார்.
37. கொஞ்சம் பரபரப்பு குறைந்திருந்த தாய் வழிப்பாட்டு பாடல்கள் இளையராஜா காலத்தில் தான்
38. புத்துயிர் பெற்றன.
38. கவிஞர் கண்ணதாசனால் திரையுலகத்தில் இசையமைக்கத் தொடங்கிய இளையராஜா தான்
39. கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார்.
39. பண்ணைபுரத்தில் ஒரு இடம் வாங்கி அதில் அவர் சின்னத்தாய் அம்மாளின் இறப்பிற்கு பிறகு
40. அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான
41. ஒன்று.
40. பின்னணி இசை சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே, தாளில்
41. இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை
42. ஒரு ஐதீகக்கதைப்போல சொல்லிக் கொள்கிறார்கள்.
வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை.
இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே
இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும்.
ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க
வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக
முடிந்துவிடும்.
சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்கவேண்டியதில்லை.
அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும்.
41.காட்சியை ஒருமுறை பார்க்கும் போதே மனதிற்குள் இசைவடிவத்தை யோசித்து, அடுத்த விநாடியே
கைகளால் இசைக்குறிப்பை வாசித்துப் பார்க்காமல் எழுதி முடித்து, மற்றவர்களை வாசிக்கச் செய்வார்.
மிகத்துல்லியமாக வரும் அந்த இசை பார்ப்போரை வியக்க வைப்பதோடு கற்பனாசக்தியின் உச்சம்
என்று பிரமித்து அவரது நண்பர் இயக்குநர் பாரதிராஜா அடிக்கடி சொல்வார்.
42. பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை இளையராஜா உருவாக்கினார்.
43. ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.
44. 2010 ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
45. 2012 ல்‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்
46. இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார்.
47. 1985 - சாகர சங்கமம் (தெலுங்கு)
48. 1987 - சிந்து பைரவி (தமிழ்)
49. 1989 - ருத்ர வீணை (தெலுங்கு)
50. 2009 - பழஸிராஜா (மலையாளம்)
51. 2016 - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)
47. லண்டன் ராயல் ஃபில் ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவினைக் கொண்டு, அவர் ‘சிம்பொனி’
48. ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று
49. அழைப்பர். அந்த சாதனையை முதலில் நிகழ்த்தியுள்ள ஆசியக் கலைஞர் இவரே.
48. மகாத்மா காந்திஜி எழுதிய கவிதையை ‘ஆதித்ய பிர்லா’ நிறுவனத்தினர் ‘இளையராஜா
49. இசையில்’ பாடலாக்க திட்டமிட்டனர். பண்டிட் பீம்ஸென் ஜோஷி,
50. பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, பேகம் பர்வீன் சுல்தானா ஆகிய மேதைகளைப் பாட வைத்து
51. அப்பாடலை உருவாக்கினார். இந்திய இசை மேதை ‘நவ்ஷத்’ அப்பாடலை மிகவும்
52. பாராட்டிப் பேசினார்.
49. கோவையில்தான் எனது ஹார்மோனியத்தை 85 ரூபாய்க்கு இங்குள்ள சுப்பையா ஆசாரியாரிடம்
50. வாங்கினேன்.அந்த ஹார்மோனியம்தான் இன்றும் என்னிடம் உள்ளது
51. என்று அடிக்கடி சொல்வார்.
50. கமல்ஹாசன் குரலில் இருக்கும் ‘பிட்ச்’ அபூர்வமானது.ஒரே நாளில் இரண்டு பாடல் கம்போஸ்
51. செய்து அவரை பாட வைத்துள்ளார் ஒன்று... ‘சிகப்பு ரோஜாக்களில்’ வரும் ‘நினைவோ ஒரு
52. பறவை’மற்றொன்று...அவள் அப்படித்தான் படத்தில் வரும்
53. ‘பன்னீர் புஷ்பங்களே...ராகம் பாடுங்கள்’ என்ற பாடல்.
51. நான் இசையமைப்பாளராக இருந்து எனக்கு போட்டியாளராக இளையராஜா இருந்திருந்தால்
52. பொறாமையால் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது என கமல்ஹாசன் குமுதம் புத்தக
53. வெளியீட்டு விழாவில் பேசினார். அப்படி ஒரு திறமை படைத்தவர் இளையராஜா அவரைப் பார்க்கும்
54. போதெல்லாம் அவர் திறமையின் உயரம் கண்டு பிரமிக்கிறேன் என்று பெருமை கொள்வார்.
52."How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை
ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த இந்த இசைத் தொகுப்பினை இசை
மும்மூர்த்திகளில் ஒருவரான ”
தியாகராஜ சுவாமிகள்” மற்றும் மேற்கத்திய இசைமேதை ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும்
காணிக்கையாக்கினார்.
53. "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர்
54. ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
54. "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார்.
55. இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
55. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசையுடன் கூடிய சிம்பொனி வடிவில்
56. இசையமைத்து வெளியிட்டுள்ளார்.
56. 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர்
57. பல்கலைக்கழகத்தினாலும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர் இளையராஜா.
57. இளையராஜா புகைப்படக்கலையில் மிகத்திறமை படைத்தவர்,
58. பாரதிராஜா போன்ற நெருங்கிய இயக்குனர்களுக்கு புதிய ட்யூன்களைக்கொடுத்து இதற்கு
59. காட்சியமைப்பை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி பல பாடல்களை ஹிட்டாகக்
60. கொடுத்திருக்கிறார்.
59. பாடலாசிரியர் வைரமுத்து இளையராஜாவைப் பற்றி பேசும் போது இசையின் காட்டாற்று
60. வெள்ளம் என்று வர்ணிப்பார்.
60.அரசியல் தலைவர்கள் முதல் அன்றாடக் கூலிதொழிலாளி வரை சமுதாயத்தின் எல்லா
மட்டத்திலும் அவரின் ரசிகர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள்.
61. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த போது, அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட
62. தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் ஆதிக்கம் மறையவில்லை. ஹிந்தி பாடல்களை கேட்பதையும்
63. பாடுவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த அலையை ஓய வைத்து
64. தமிழ் பாடல்களை தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் விரும்பிக் கேட்கும்படியான
65. சாதனையை செய்தவர் இளையராஜா.
62. முதல் படம் இசையமைக்கும் போது இளையராஜாவின் வயது 33.
63. பெல்பாட்டம், விதவிதமான கலர் சட்டைகள், கருப்பு கண்னாடிகள் என்றெல்லாம் இருந்த
64. இளையராஜா திரையுலகமே தன் பக்கம் திரும்பிய போது எளிமையான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.
64. இளையராஜாவின் இசைக்குறிப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் இசைக்கல்லூரிகளின் பாடப்
65. புத்தகங்களில் இடம்பெறும் என்று பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் கூறியுள்ளார்.
65. ஒரே ஆண்டில் இளையராஜா 56 படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசை உட்பட இசையமைத்து
66. சாதனை படைதுள்ளார்.
66. ஆழ்ந்த ஞானம், நேரம் தவறாமை, இசைமேல் கொண்ட பற்று, கடின உழைப்பு, கவனம் சிதறாமை
67. என்று பல்வேறு உயர் எண்ணங்களால் பல கோடி இதயங்களைக் கவர்ந்துள்ளார்.
67. திரையிசையில் இதுவரை தன்னுடைய இசையமைப்பு மற்றும் பிற இசையமைப்பளர்களின்
68. இசையிலும் சேர்த்து 450 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
68. திரைப்படம் தவிர பல்வேறு ஆல்பங்களில் 100 பாடல்களுக்கு மேல் இசையமைத்துப் பாடியுள்ளார்.
69. இசைஞானி என்ற பட்டம் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது.
70. உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பளர்களை வரிசைப்படுத்திய மிகப் புகழ்பெற்ற அமெரிக்க
71. இணையதளம் இளையராஜாவுக்கு 9 வது இடம் அளித்துள்ளது. அதே இணையதளம்
72. இளையராஜாவை முதல் இடத்திற்கும் அவரே என்று அறிவிக்கும் நாள் வெகு சமீபத்திலிருக்கிறது.
71. சில வருடங்களுக்கு முன் லண்டன் பிபிசி வானொலி நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த 75
72. ஆண்டுகளில் மிகச்சிறந்த பாடலாக இளையராஜா இசையமைத்த ’தளபதி’ திரைப்படத்தின்
73. “ராக்கம்மா கையத்தட்டு”ப் பாடலை மிக சிறந்த பாடலாக அறிவித்துள்ளது.
72. இளையராஜா எழுதிய புத்தகங்கள் :
1. சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
2. 2. வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
3. 3. வழித்துணை
4. 4. துளி கடல்
5. 5. ஞான கங்கா
6. 6. பால் நிலாப்பாதை
7. 7. உண்மைக்குத் திரை ஏது?
8. 8.யாருக்கு யார் எழுதுவது?
9. 9. என் நரம்பு வீணை
10. 10. நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை,
11. இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
12. 11. பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
13. 12. இளையராஜாவின் சிந்தனைகள்.
73. 1000 படங்களைத்தாண்டி தன் இசைப்பயணத்தை தொடரும் பெருமைக்குரிய இந்திய
74. இசையமைப்பாளராக உலகை வலம் வரும் இமாலய மனிதர் ”இசைஞானி இளையராஜா"
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஏப்ரல் 22, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: புலனச்செய்தி
வளவு - ஐயா இராம.கி சொல்லாய்வுகள்
Liberty = எழுவுதி
freedom = பரியுடைமை
independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை
பேரளவாக்கம் – Scaling
http://valavu.blogspot.com/2018/09/liberty-freedom-independence.html
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஏப்ரல் 22, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: இன்னபிற
ஊரும் பெயரும்
தமிழில் உள்ள ஊர் பெயர்களை
அப்புடியே ஆங்கிலத்தில் மாத்துறாங்களாம்.
யய்யா எடப்பாடி
பல ஊர் பேர் தமிழே கிடையாதுன்னு தெரியுமா?
எடப்பாடி அல்ல
இடையர்பாடி
மதுரை அல்ல
மருதத்துறை.
மானாமதுரை அல்ல
வானவன் மருதத்துறை
காளையார் கோவில் அல்ல
கானப்பேரெயில்
சிவகங்கை அல்ல
செவ்வேங்கை
திருவாரூர் அல்ல
ஆரூர்
பொள்ளாச்சி அல்ல
பொழில் ஆட்சி
சிதம்பரம் அல்ல
திண்டிவனம் போல்
அது தில்லைவனம்
கான்சாபுரம் அல்ல
கான்சாகிபு புரம்
(மருதநாயகம் நினைவாக வைத்த பெயர்)
வத்ராயிருப்பு அல்ல.
வற்றாத ஆறு இருப்பு.
தனுஸ்கோடி அல்ல
வில்முனை
இராமேஸ்வரம் அல்ல
சேதுக்கரை
இராமநாதபுரம் அல்ல
முகவை
காஞ்சிபுரம் அல்ல
கஞ்சிவரம்
செங்கல்பட்டு அல்ல
செங்கழுநீர்பட்டு
சேர்மாதேவி அல்ல
சேரன்மகாதேவி
விருத்தாசலம் அல்ல
முதுகுன்றம்
வேளாங்கண்ணி அல்ல
வேலற்கன்னி
சைதாப்பேட்டை அல்ல
சையது பேட்டை
தேனாம்பேட்டை அல்ல
தெய்வநாயகம் பேட்டை
கொசப்பேட்டை அல்ல
குயவர்பேட்டை
குரோம் என்ற லெதர் கம்பெனியை காயிதே மில்லத் உருவாக்கியதால் குரோம்பேட்டை
ஆனால் அது தோல் பேட்டை தான்.
புரசைவாக்கம் அல்ல
புரசைப்பாக்கம்
பெரம்பூர் அல்ல
பிரம்பூர்
சேத்துப்பட்டு அல்ல
சேற்றுப்பேடு
அரும்பாக்கம் அல்ல
அருகன்பாக்கம்
சிந்தாதரிப்பேட்டை அல்ல
சின்னத்தறிப்பேட்டை
உடுமலைபேட்டை அல்ல
ஊடுமலைப்பேட்டை
பல்லாவரம் அல்ல
பல்லவபுரம்
தாராசுரம் அல்ல
ராராசுரம்
ஈரோடு அல்ல
ஈர ஓடு
ஒகனேக்கல் அல்ல
புகைக்கல்
தர்மபுரி அல்ல
தகடூர்
பழனி அல்ல
பொதினி
கும்பகோணம் அல்ல
குடந்தை
தரங்கம்பாடி அல்ல
அலைகள்பாடி
காவிரிபூம்பட்டினம் அல்ல
காவிரிபுகும்பட்டினம்
பூம்புகார் அல்ல
புகும்புகார்
ஸ்ரீரங்கம் அல்ல
அரங்கம்
திருவையாறு அல்ல
ஐயாறு
சீர்காழி அல்ல
சீகாழி
வேதாரண்யம் அல்ல
திருமறைக்காடு
கல்பாக்கம் அல்ல
கயல்பாக்கம்
சேலம் அல்ல
சேரளம்
திருத்தணி அல்ல
திருத்தணிகை
கீழ-மேல என்பதெல்லாம் அல்ல.
கிழக்கு-மேற்கு தான்.
இது தாழ்வு-உயர்வு என்ற பொருளில் கலவரமே நடக்குது.
திருவண்ணாமலை அல்ல
அண்ணாந்துமலை.
அ என்ற எழுத்துக்குப் பதிலாக
வ என்ற எழுத்து சேர்த்துள்ள ஊரெல்லாம் மாற்றப்பட வேண்டும்.
இன்னும் ஏராளமாய் இருக்கு.
தமிழகத்தில் உள்ள ஊர்கள்
தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.
பிறமொழிச் சொற்களை நீக்க வேண்டும்.
கொரோனா விவகாரத்தை திசை திருப்ப இந்தச் சோலி பார்த்துள்ளதாக சொல்கிறார்கள்.
கண்ணாடியைத் திருப்புனா
ஆட்டோ ஓடுமா யுவர் ஆனர்.
இதுல இன்னொரு கூத்து நடக்கும்
இதே பதிவு இன்னும் கொஞ்ச நேரத்துல
உங்களுக்குத் தெரியுமான்னு
எனக்கே வாட்சப்புல வரும்.
அத நெனச்சாத்தான்
மனசைப் போட்டு பிராண்டுது.
(மேலும் விபரங்களுக்கு வெளிவர இருக்கும் எனது 'காவிரி நீரோவியம்' நூலைப் படியுங்கள் @ Suriya Xavier )
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஏப்ரல் 22, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: இன்னபிற
தமிழறிக
ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-
1. எழுத்து இலக்கணம்
2. 2. சொல் இலக்கணம்
3. 3. பொருள் இலக்கணம்
4. 4. யாப்பு இலக்கணம்
5. 5. அணி இலக்கணம்
1. எழுத்து இலக்கணம்:-
2. 🐓 எழுத்துக்கள் இரண்டு வகை - 2
3. 1. முதல் எழுத்து
4. 2. சார்பெழுத்து
1. முதல் எழுத்து வகைகள் - 2 (1. உயர் எழுத்து, 2. மெய்யெழுத்து)
1. உயர் எழுத்துக்கள் - 12
2. 🐓வகைகள் - 2
3. குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
4. நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)
2. மெய்யெழுத்து - 18
3. 🐓 வகைகள் - 3
4. 🐓வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
5. 🐓மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
6. 🐓இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)
2. சார்பெழுத்து வகைகள் - 10
3. 1. உயிர்மெய்
4. 2. ஆய்தம்
5. 3. உயிரளபெடை
6. 4. ஒற்றளபெடை
7. 5. குற்றியலுகரம்
8. 6. குற்றியலிகரம்
9. 7. ஐகாரக்குறுக்கம்
10. 8. ஔகாரகுறுக்கம்
11. 9. மகரக்குறுக்கம்
12. 10. ஆய்தகுறுக்கம்
2.சொல் இலக்கணம்:-
🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது - சொல்
🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி
🐿 பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)
1. பகாபதம்:-
2. 🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்
3. 🐿 பகாபதம் வகைகள் - 4
4. 1. பெயர் பகாப்பதம்
5. 2. வினைப் பகாப்பதம்
6. 3. இடைப் பகாப்பதம்
7. 4. உரிப் பகாப்பதம்
2. பகுபதம்:-
3. 🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்
4. 🐿 பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)
5. 🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் - 6
6. 1. பொருள் பெயர்ப் பகுபதம்
7. 2. இடப் பெயர்ப் பகுபதம்
8. 3. காலப் பெயர்ப் பகுபதம்
9. 4. சினைப் பெயர்ப் பகுபதம்
10. 5. பண்புப் பெயர்ப் பகுபதம்
11. 6. தொழிற் பெயர்ப் பகுபதம்
12. 🐿 வினைப் பகுபதம் வகைகள் - 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)
13. 🐿 பகுபதம் உறுப்புகள் - 6
14. 1. பகுதி
15. 2. விகுதி
16. 3. இடைநிலை
17. 4. சந்தி
18. 5. சாரியை
19. 6. விகாரம்
20. 🐿 இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
21. 🐿 பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
22. 🐿 வினை இடைநிலை வகைகள் - 3
23. 1. இறந்த கால இடைநிலை
24. 2. நிகழ்கால இடைநிலை
25. 3. எதிர்கால இடைநிலை
3.பொருள் இலக்கணம்:-
📚 பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. 2. புறப்பொருள்
3. (1) அகப்பொருள்:-
4. 📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்
5. 📚 அகப்பொருள் உள்ள திணைகள் - 5
6. 📚 இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
7. 📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
8. 📚 அகத்திணை கூறிய பொருட்கள் - 3
9. 1. முதற் பொருள்
10. 2. கருப்பொருள்
11. 3. உரிப்பொருள்
1. முதற்பொருள்:
2. 📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
3. 📚 நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
4. 📚 பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)
2. கருப்பொருள்:-
3.
📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள் - 14 (தெய்வம், உயர்ந்தோர்,
தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை,
தொழில்)
3. உரிப்பொருள்:-
4. 📚 குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
5. 📚 முல்லை - இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
6. 📚 முருதம் - ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
7. 📚 நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
8. 📚 பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. 2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்
3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. 4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.
5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. 6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்
7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. 8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.
9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. 10. பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
11.
கைக்கிளை - ஒருதலை ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும்
தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. 12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு
4. யாப்பிலகணம்:-
5. 📚 யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6
6. 1. எழுத்து
7. 2. அசை
8. 3. சீர்
9. 4. தளை
10. 5. அடி
11. 6. தொடை
12. 1. எழுத்து:-
13. 📚 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்
2. அசை:-
3. 📚 எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை
4. 📚 அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)
3. சீர்:-
4. 📚 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்
5. 📚 சீர்கள் எண்ணிக்கை - 30
6. 1. மாச்சீர் - 2
7. 2. விளச்சீர் - 2
8. 3. காய்ச்சீர் - 4
9. 4. கனிச்சீர் - 4
10. 5. பூச்சீர் - 8
11. 6. நிழற்சீர் - 8
12. 7. ஓரசைச்சீர் - 2
4. தளை:-
5. 📚 சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை
6. 📚 தளை வகைகள் - 4
7. 1. ஆசியத்தளை
8. 2. வெண்டளை
9. 3. கலித்தளை
10. 4. வஞ்சித்தளை
5. அடி:-
6. 📚 அடி வகைகள் - 5
7. 1. குறளடி - இரண்டு சீர்கள்
8. 2. சிந்தடி - மூன்று சீர்கள்
9. 3. அளவடி - நான்கு சீர்கள்
10. 4. நெடிலடி - ஐந்து சீர்கள்
11. 5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்
6. தொடை:-
7. 📚 தொடை வகைகள் - 5
8. 1. மோனைத் தொடை
9. 2. எதுகைத் தொடை
10. 3. முரண் தொடை
11. 4. இயைபு தொடை
12. 5. அளபெடைத் தொடை
5. அணி இலக்கணம்:-
6. 📚 அணி என்பதன் பொருள் - அழகு
7. 📚 அணிகள் வகைகள் - 2
8. 1. சொல்லணி
9. 2. பொருளணி
10. 📚 சொல்லணி வருபவை - சிலேடை, மடக்கு, யமகம், திரிபு
11. 📚 பொருளணி வருபவை - உவமை, உருவகம்
12. அணிகள் பின்வருமாறு:-
13. 📚 இல்பொருள் உவமையணி
14. 📚 ஏகதேச உருவக அணி
15. 📚 பிறிது மொழிதல் அணி
16. 📚 வேற்றுமை அணி
17. 📚 வஞ்சிப்புகழ்ச்சி அணி
18. 📚 இரட்டுற மொழிதலணி
19. 📚 சொற்பொருள் பின்வருநிலையணி
20. 📚 தற்குறிப்பேற்ற அணி
21. 📚 நிரல்நிறை அணி
📚படிப்போம் 📚பகிர்வோம் 📚வெல்வோம் 📚
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஏப்ரல் 22, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: இன்னபிற
புலனத்தில் வந்து வேட்டி ஒட்டிய பதிவு
எஸ்.பி.பியின் பாடல்களில் தோய்ந்திருக்கும் நுட்பமான Sound Engineering
அல்லது Tailoring குறித்து ஆய்வு செய்தால் பலருக்கு முனைவர் பட்ட வாய்ப்பு
உண்டு....
அந்த அளவுக்கு Breathe Controlling இலும் சரி, Contained air
Mastering இலும் சரி எஸ்.பி.பி ஒரு மாஸ்டர். அந்த legendry level ஐ
எட்டுவதற்கு அவருக்கு இசை மீதிருந்த காதல் தான் காரணம்.
தென்னிந்திய
மொழிகளில் இளையராஜாவின் இசைப்பிரவாகம் பெருகி வழியத்துவங்கிய வெகு
காலத்துக்கு முன்பாகவே எஸ்.பி.பியும், ராஜாவும் சிறந்த நண்பர்கள்,
சைக்கிளில் துவங்கி, ஸ்கூட்டர், லாரி, தொடர்வண்டி என்று ஏதுமில்லாத
காலத்தில் இருந்து அவர்கள் பயணித்திருக்கிறார்கள்.
எஸ்.பி.பியின்
தலைசிறந்த பாடல்களாக நாம் கருதுகிற பாடல்களை எல்லாம் உருவாக்கியது
இளையராஜா, இளையராஜாவின் இசைக் கனவுகளுக்கு எல்லாம் உயிரூட்டியது
எஸ்.பி.பியின் அசாத்தியமான குரல் என்று ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத நிலை
தான் இன்று வரைக்கும்.
ராஜாவின் இசைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு,
Perfect Pre Rendering, மற்ற இசை அமைப்பாளர்களைப் போல இளையராஜா ஒரு Liberal
artist கிடையாது, ஒரு பாடலை இப்படித்தான் உருவாக்குவேன் என்று
முன்கூட்டியே மனச்சித்திரம் வரைந்து விட்டு அதற்கான Defined Notes எழுதிக்
கலைஞர்களுக்குக் கொடுத்து விடக்கூடிய Perfectionist.
பாடகர்களுக்கு
அந்த விஷயத்தில் நிறையவே Restrictions உண்டு, நான் சுதந்திரமான பாடகன்,
இந்த இடத்தில் என்னோட Suitable Rendering பண்ணிக் கொள்கிறேன்னு சொல்ற
ஆட்களுக்கு இளையராஜா பிரம்போடு சுற்றுகிற கண்டிப்பான ஆசிரியர்.
எஸ்.பி.பி
அந்த இலக்கணத்தை ஒரு போதும் உடைத்தது கிடையாது, அட்சர சுத்தமாக ராஜா என்ன
விரும்புகிறார் என்பதை அறிந்த பாடகர் என்பதால் அவருடைய இலக்கணங்களை உடைக்க
முயற்சி செய்யாத ஒரு அடக்கமான பாடகராக அவரிடம் இணைந்திருந்தார்.
இத்தனைக்கும் எஸ்.பி.பியைப் போல ஒரு Extraordinary Voice Rendering செய்கிற பாடகர் உலகத்திலேயே இருப்பாராங்குறது சந்தேகம்.
ஒரு
வெளிநாட்டு மேடையில் இளம் பாடகர் ஒருவர் "இளங்காத்து வீசுதே, எசபோலப்...."
பாடலை ராஜாவின் முன்னிலையில் பாடினார், "வளையாத மூங்கிலில்....."ன்னு
பாடுறப்ப ராஜாவோட Scale மிஸ்ஸிங்....
மனுஷன் பாட்டு முடியிற வரைக்கும்
கழுகாக் காத்திருந்து விட்டு, ஒரு நாலஞ்சு முறை அந்த இளம்பாடகரை மேடையிலேயே
அந்த மூங்கிலுக்கு வர வேண்டிய Scale வரும்வரை வறுத்தெடுத்து விட்டார். No
Mercy and Sympathy to his Art, Whomsoever....
இந்த விஷயத்தில்
எஸ்.பி.பிக்கும், ராஜாவுக்கும் துணையாக இருந்தது அவர்களுடைய நட்பு தான்.
சாப்பாடு இல்லாமல் மாடுகளோடு சாணத்தில் உருண்டெல்லாம் நட்போடு
பயணித்தவர்கள் இருவரும்.
எஸ்.பி.பியின் நம்ப முடியாத வெற்றிப்
பாடல்களின் பின்னால் ராஜாவின் Composing Magic இருக்கும், அதே போல ராஜாவின்
நம்ப முடியாத வெற்றிப் பாடல்களுக்குப் பின்னால் எஸ்.பி.பியின் Mettalic
Vocal இருக்கும்.
ஒன்றிரண்டு அல்ல, பல ஆயிரம் பாடல்கள் அதுபோல உண்டு,
"ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்" பாட்டை Just for a Sample எடுத்துப்
பாருங்கள், பாட்டு முழுவதுமே ஒரு Open Magical Portion பாடகர்களுக்கு
இருக்கக் கூடிய பாடல்......
But ராஜாவின் Defined Space ஐ விட்டு வெளியே
போக முடியாது. அந்தப் பாடலை அதற்குப் பிறகு பாடிய பல (இளையராஜா இல்லாத)
மேடைகளில் தன்னுடைய Liberal Space க்கு எஸ்.பி.பி எடுத்துச்
சென்றிருக்கிறார்.
இந்தப் புரிதல் தான், அவர்கள் இருவரையும் பல
ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக, இசை சகாக்களாக இணைத்து வைத்திருந்தது. அது ஒரு
விவரிக்க இயலாத, பார்வையாளர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாத பிணைப்பு.
இளையராஜாவையும்,
எஸ்.பி.பியையும் ராயல்டி விஷயத்தில் சிண்டு முடிந்து தனித்தனியாகப்
பிரிப்பது இட்லி அவித்த பிறகு அரிசி மாவையும் உளுந்து மாவையும் தனியாகப்
பிரிக்கிற மாதிரி ஒரு வேலையாக இருக்கும்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஏப்ரல் 22, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: இன்னபிற
சனி, 16 ஏப்ரல், 2022
ஓரெழுத்து ஒரு மொழி
முழங்கியவர்: PNA Prasanna மணி: சனி, ஏப்ரல் 16, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: சொல்லாராய்ச்சி
திங்கள், 28 மார்ச், 2022
என்னைக் கவர்ந்த பாடல் - கோடி அருவி கொட்டுதே
படம்: மெஹந்தி சர்க்கஸ்
குரல்: பிரதீப் குமார், நித்யஸ்ரீ
இசை: ஷான் ரால்டன்
பாடல்: யுகபாரதி
கோடி அருவி கொட்டுதே
முழங்கியவர்: PNA Prasanna மணி: திங்கள், மார்ச் 28, 2022 0 கருத்துரை
முழக்கங்கள்: என்னைக் கவர்ந்த பாடல்