தமிழில் உள்ள ஊர் பெயர்களை
அப்புடியே ஆங்கிலத்தில் மாத்துறாங்களாம்.
யய்யா எடப்பாடி
பல ஊர் பேர் தமிழே கிடையாதுன்னு தெரியுமா?
எடப்பாடி அல்ல
இடையர்பாடி
மதுரை அல்ல
மருதத்துறை.
மானாமதுரை அல்ல
வானவன் மருதத்துறை
காளையார் கோவில் அல்ல
கானப்பேரெயில்
சிவகங்கை அல்ல
செவ்வேங்கை
திருவாரூர் அல்ல
ஆரூர்
பொள்ளாச்சி அல்ல
பொழில் ஆட்சி
சிதம்பரம் அல்ல
திண்டிவனம் போல்
அது தில்லைவனம்
கான்சாபுரம் அல்ல
கான்சாகிபு புரம்
(மருதநாயகம் நினைவாக வைத்த பெயர்)
வத்ராயிருப்பு அல்ல.
வற்றாத ஆறு இருப்பு.
தனுஸ்கோடி அல்ல
வில்முனை
இராமேஸ்வரம் அல்ல
சேதுக்கரை
இராமநாதபுரம் அல்ல
முகவை
காஞ்சிபுரம் அல்ல
கஞ்சிவரம்
செங்கல்பட்டு அல்ல
செங்கழுநீர்பட்டு
சேர்மாதேவி அல்ல
சேரன்மகாதேவி
விருத்தாசலம் அல்ல
முதுகுன்றம்
வேளாங்கண்ணி அல்ல
வேலற்கன்னி
சைதாப்பேட்டை அல்ல
சையது பேட்டை
தேனாம்பேட்டை அல்ல
தெய்வநாயகம் பேட்டை
கொசப்பேட்டை அல்ல
குயவர்பேட்டை
குரோம் என்ற லெதர் கம்பெனியை காயிதே மில்லத் உருவாக்கியதால் குரோம்பேட்டை
ஆனால் அது தோல் பேட்டை தான்.
புரசைவாக்கம் அல்ல
புரசைப்பாக்கம்
பெரம்பூர் அல்ல
பிரம்பூர்
சேத்துப்பட்டு அல்ல
சேற்றுப்பேடு
அரும்பாக்கம் அல்ல
அருகன்பாக்கம்
சிந்தாதரிப்பேட்டை அல்ல
சின்னத்தறிப்பேட்டை
உடுமலைபேட்டை அல்ல
ஊடுமலைப்பேட்டை
பல்லாவரம் அல்ல
பல்லவபுரம்
தாராசுரம் அல்ல
ராராசுரம்
ஈரோடு அல்ல
ஈர ஓடு
ஒகனேக்கல் அல்ல
புகைக்கல்
தர்மபுரி அல்ல
தகடூர்
பழனி அல்ல
பொதினி
கும்பகோணம் அல்ல
குடந்தை
தரங்கம்பாடி அல்ல
அலைகள்பாடி
காவிரிபூம்பட்டினம் அல்ல
காவிரிபுகும்பட்டினம்
பூம்புகார் அல்ல
புகும்புகார்
ஸ்ரீரங்கம் அல்ல
அரங்கம்
திருவையாறு அல்ல
ஐயாறு
சீர்காழி அல்ல
சீகாழி
வேதாரண்யம் அல்ல
திருமறைக்காடு
கல்பாக்கம் அல்ல
கயல்பாக்கம்
சேலம் அல்ல
சேரளம்
திருத்தணி அல்ல
திருத்தணிகை
கீழ-மேல என்பதெல்லாம் அல்ல.
கிழக்கு-மேற்கு தான்.
இது தாழ்வு-உயர்வு என்ற பொருளில் கலவரமே நடக்குது.
திருவண்ணாமலை அல்ல
அண்ணாந்துமலை.
அ என்ற எழுத்துக்குப் பதிலாக
வ என்ற எழுத்து சேர்த்துள்ள ஊரெல்லாம் மாற்றப்பட வேண்டும்.
இன்னும் ஏராளமாய் இருக்கு.
தமிழகத்தில் உள்ள ஊர்கள்
தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.
பிறமொழிச் சொற்களை நீக்க வேண்டும்.
கொரோனா விவகாரத்தை திசை திருப்ப இந்தச் சோலி பார்த்துள்ளதாக சொல்கிறார்கள்.
கண்ணாடியைத் திருப்புனா
ஆட்டோ ஓடுமா யுவர் ஆனர்.
இதுல இன்னொரு கூத்து நடக்கும்
இதே பதிவு இன்னும் கொஞ்ச நேரத்துல
உங்களுக்குத் தெரியுமான்னு
எனக்கே வாட்சப்புல வரும்.
அத நெனச்சாத்தான்
மனசைப் போட்டு பிராண்டுது.
(மேலும் விபரங்களுக்கு வெளிவர இருக்கும் எனது 'காவிரி நீரோவியம்' நூலைப் படியுங்கள் @ Suriya Xavier )
வெள்ளி, 22 ஏப்ரல், 2022
ஊரும் பெயரும்
முழங்கியவர்: PNA Prasanna மணி: வெள்ளி, ஏப்ரல் 22, 2022
முழக்கங்கள்: இன்னபிற
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
0 Comments:
Post a Comment