வெள்ளி, 22 ஏப்ரல், 2022

புலனத்தில் வந்து வேட்டி ஒட்டிய பதிவு

புலனத்தில் வந்து வேட்டி ஒட்டிய பதிவு. மற்ற மொழிக் கலப்பிற்கு மன்னிக்க.

 

எஸ்.பி.பியின் பாடல்களில் தோய்ந்திருக்கும் நுட்பமான Sound Engineering அல்லது Tailoring குறித்து ஆய்வு செய்தால் பலருக்கு முனைவர் பட்ட வாய்ப்பு உண்டு....
அந்த அளவுக்கு Breathe Controlling இலும் சரி, Contained air Mastering இலும் சரி எஸ்.பி.பி ஒரு மாஸ்டர். அந்த legendry level ஐ எட்டுவதற்கு அவருக்கு இசை மீதிருந்த காதல் தான் காரணம்.
தென்னிந்திய மொழிகளில் இளையராஜாவின் இசைப்பிரவாகம் பெருகி வழியத்துவங்கிய வெகு காலத்துக்கு முன்பாகவே எஸ்.பி.பியும், ராஜாவும் சிறந்த நண்பர்கள், சைக்கிளில் துவங்கி, ஸ்கூட்டர், லாரி, தொடர்வண்டி என்று ஏதுமில்லாத காலத்தில் இருந்து அவர்கள் பயணித்திருக்கிறார்கள்.
எஸ்.பி.பியின் தலைசிறந்த பாடல்களாக நாம் கருதுகிற பாடல்களை எல்லாம் உருவாக்கியது இளையராஜா, இளையராஜாவின் இசைக் கனவுகளுக்கு எல்லாம் உயிரூட்டியது எஸ்.பி.பியின் அசாத்தியமான குரல் என்று ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத நிலை தான் இன்று வரைக்கும்.
ராஜாவின் இசைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு, Perfect Pre Rendering, மற்ற இசை அமைப்பாளர்களைப் போல இளையராஜா ஒரு Liberal artist கிடையாது, ஒரு பாடலை இப்படித்தான் உருவாக்குவேன் என்று முன்கூட்டியே மனச்சித்திரம் வரைந்து விட்டு அதற்கான Defined Notes எழுதிக் கலைஞர்களுக்குக் கொடுத்து விடக்கூடிய Perfectionist.
பாடகர்களுக்கு அந்த விஷயத்தில் நிறையவே Restrictions உண்டு, நான் சுதந்திரமான பாடகன், இந்த இடத்தில் என்னோட Suitable Rendering பண்ணிக் கொள்கிறேன்னு சொல்ற ஆட்களுக்கு இளையராஜா பிரம்போடு சுற்றுகிற கண்டிப்பான ஆசிரியர்.
எஸ்.பி.பி அந்த இலக்கணத்தை ஒரு போதும் உடைத்தது கிடையாது, அட்சர சுத்தமாக ராஜா என்ன விரும்புகிறார் என்பதை அறிந்த பாடகர் என்பதால் அவருடைய இலக்கணங்களை உடைக்க முயற்சி செய்யாத ஒரு அடக்கமான பாடகராக அவரிடம் இணைந்திருந்தார்.
இத்தனைக்கும் எஸ்.பி.பியைப் போல ஒரு Extraordinary Voice Rendering செய்கிற பாடகர் உலகத்திலேயே இருப்பாராங்குறது சந்தேகம்.
ஒரு வெளிநாட்டு மேடையில் இளம் பாடகர் ஒருவர் "இளங்காத்து வீசுதே, எசபோலப்...." பாடலை ராஜாவின் முன்னிலையில் பாடினார், "வளையாத மூங்கிலில்....."ன்னு பாடுறப்ப ராஜாவோட Scale மிஸ்ஸிங்....
மனுஷன் பாட்டு முடியிற வரைக்கும் கழுகாக் காத்திருந்து விட்டு, ஒரு நாலஞ்சு முறை அந்த இளம்பாடகரை மேடையிலேயே அந்த மூங்கிலுக்கு வர வேண்டிய Scale வரும்வரை வறுத்தெடுத்து விட்டார். No Mercy and Sympathy to his Art, Whomsoever....
இந்த விஷயத்தில் எஸ்.பி.பிக்கும், ராஜாவுக்கும் துணையாக இருந்தது அவர்களுடைய நட்பு தான். சாப்பாடு இல்லாமல் மாடுகளோடு சாணத்தில் உருண்டெல்லாம் நட்போடு பயணித்தவர்கள் இருவரும்.
எஸ்.பி.பியின் நம்ப முடியாத வெற்றிப் பாடல்களின் பின்னால் ராஜாவின் Composing Magic இருக்கும், அதே போல ராஜாவின் நம்ப முடியாத வெற்றிப் பாடல்களுக்குப் பின்னால் எஸ்.பி.பியின் Mettalic Vocal இருக்கும்.
ஒன்றிரண்டு அல்ல, பல ஆயிரம் பாடல்கள் அதுபோல உண்டு, "ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்" பாட்டை Just for a Sample எடுத்துப் பாருங்கள், பாட்டு முழுவதுமே ஒரு Open Magical Portion பாடகர்களுக்கு இருக்கக் கூடிய பாடல்......
But ராஜாவின் Defined Space ஐ விட்டு வெளியே போக முடியாது. அந்தப் பாடலை அதற்குப் பிறகு பாடிய பல (இளையராஜா இல்லாத) மேடைகளில் தன்னுடைய Liberal Space க்கு எஸ்.பி.பி எடுத்துச் சென்றிருக்கிறார்.
இந்தப் புரிதல் தான், அவர்கள் இருவரையும் பல ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக, இசை சகாக்களாக இணைத்து வைத்திருந்தது. அது ஒரு விவரிக்க இயலாத, பார்வையாளர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாத பிணைப்பு.
இளையராஜாவையும், எஸ்.பி.பியையும் ராயல்டி விஷயத்தில் சிண்டு முடிந்து தனித்தனியாகப் பிரிப்பது இட்லி அவித்த பிறகு அரிசி மாவையும் உளுந்து மாவையும் தனியாகப் பிரிக்கிற மாதிரி ஒரு வேலையாக இருக்கும்.

0 Comments: