யாவரும் நலம்
பல நாட்களுக்குப்பின் குடும்பத்தோடு பார்க்க வந்திருக்கும் ஒரு படம்.குடும்பத்தோடு பார்க்க விழைவதானால் சில பிழைகளைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். எடுத்துக்காட்டுகள்: தொலைகாட்சிக்கு பேய் பிடிப்பது,தொலைக்காட்சி திட்டுவது போன்றவை.
கதையுடைத்தலைவன்1 நன்றாக நடித்திருக்கிறார். பாடல் இசையினைவிட பின்னணி இசை படத்திற்கு மெருகளிக்கிறது. இருமொழிகளில்2 வந்திருக்கும் இப்படம், மக்களை அச்சுறுத்தி மகிழ்விக்கும் திரைக்கதையுடையது.
பலதிருப்பங்களோடு வரும் திரைக்கதை மூளையுடைய சுவைஞர்களையும் நிமிர்ந்து அமரவைக்கும். படத்தின் முதன்மை ஊக்கிகள்: திரைக்கதை,கதையுடைத்தலைவன் நடிப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை. நல்ல படம்;குடும்பத்தாரோடு சேர்ந்து அச்சுரலாம்.
தலைவன் தவிர மற்றவர்களுக்கு3 நடிக்கும் வாய்ப்புக் குறைவே.
வாரணம் ஆயிரம்
படத்தின் இயக்குனர்4 தனது தொடர்புடைய இசையமைப்பாளரோடு5 பூசல் கொண்டு எடுத்திருக்கும் படம். அவரது முந்தைய படங்களோடு6ஒப்பிடும்பொழுது சரியான இழுவைதான் இப்படம். இசையமைப்பாளர் பூசல்கொண்டிருப்பினும், இசையில் அதைக்காட்டவில்லை.
படத்தைத் தூக்கி நிறுத்துபவை கதையுடைத்தலைவரின்7 நடிப்பு, இசை, பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவை. தள்ளிவிடுபவை இயக்குனரின் திரைக்கதை,நெறியாள்கை, ஆங்கில உரையாடல்கள். இயக்குனர் தான் படித்த கல்லூரியினையே8 கதையில் கதையுடைத்தலைவன் படித்ததாகக் கூற பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழ்ப்பெயர்களயே இதுவரை தன் கதைமாந்தர்களுக்குச்9 சூட்டிவந்த இயக்குனர் ஆங்கில வெறியுடன் செயற்பட்டிருப்பது என் போன்ற தமிழ் விரும்பிகளுக்கு வருந்தமளிக்கிறது.
மூன்று கதையுடைத்தலைவிகளில்10 இறந்து போபவர்11 பதுமை போல வந்து இரவல் குரலில்12 உரையாடுகிறார். நடனம் செய்கிறார். ஆனால் நடிப்பு, அது மட்டும் கேள்விக்குறியாகி விடுகிறது. இவர் அகவையிலும், உயரத்திலும் கதையுடைத்தலைவனைவிட அதிகமாகவே இருப்பதால், இவர்களிடையேயான வேதியியல்13 பரிமளிக்கவில்லை.
தலைவனின் அம்மாவாக முன்னாள் தலைவி14 இவரும் சற்று நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். மற்றபடி தலைவனுக்கு முதன்மைதரும் இக்கதையில் இவருக்கு அவ்வளவாக வேலையில்லை. படம் முழுக்க ஆங்கில உரையாடலை பரப்பிவிட்டு, படத்தின் இறுதியில் தலைப்புக்கு விளக்கம் தருவது தமிழன்னைக்கு இழுக்கு.
இரஃமான் இந்தியாவின் முதன்மை இசையமைப்பாளர். உலகின் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர். எவ்வளவு நொந்து கொண்டு இப்படத்திற்கு இசையமைத்திருப்பாரோ தெரியவில்லை. குறுவட்டிலேயே இப்படத்தினைப் பார்க்க இயலவில்லை. பழையகாலத்து முக்கோணக்காதல் கதைதான்.தயாரிப்பாளரின் பணத்தினை வீணாக்க வந்திருக்கும் படம். படத்தின் இயக்குனர்15படம் எடுத்துப்பழகிக் கொண்டிருக்கிறார்.
கதையுடைத்தலைவனாகக் காட்டப்படுபவர்16 ஆங்கில வழி17 கல்வி கற்றவர் போலும். தமிழே பேசத் தெரியவில்லை. படம் முழுக்க ஆங்கில வெறி இழையோடிக் காணப்படுகிறது. ஒருதலையாகக் காதலிக்கும் தலைவிக்கு18இரவல் குரல் கொடுத்திருப்பவர் குரல்19 அவ்வளவு சரிவர பொருந்தவில்லை.படத்தின் உருப்படியான ஒரேசெய்தி இசையமைப்பாளர் இரஃகுமான் மட்டுமே.