படத்தில் மூன்று கதையுடைத்தலைவர்கள். ஒன்று இசையமைப்பாளர் இரஃமான்; இரண்டு கலை இயக்குனர்; மூன்று ஒளிப்பதிவாளர். இவர்கள்தாம் படத்தினைத் தூக்கி நிறுத்துகின்றார்கள். கதை என்ன? அதுபற்றிக் கேட்கக்கூடாது. திரைக்கதை? கதை பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம் ஆனால், இதைப்பற்றிக் கேட்கவே கூடாது.
காதல், உரிமைநிலம் பணம் விரிசல்கள், இசைப்பயணம் என முப்புரவிகளில் படம் பயணிக்கிறது. முதலிரு புரவிகளுக்கு கால்கள் கிடையாது. மூன்றாவது புரவியினை மட்டும் நம்பிப் படம் எடுத்ததால், படம் சில நாட்களுக்குள்ளேயே பெட்டிக்குள் புகுந்துவிட்டது.
தனது இசைப்பேரரசினை இப்படத்திலும் திறம்பட நிறுவியிருக்கிறார் இரஃமான். காதல் பாடல்கள்1 தேன். பிறபாடல்கள்2 வெயிலுக்கு இதமான மோர்.
அனில்கப்பூர் இசைக்கிறுக்கனாக வருகிறார். கொடுத்த பணத்திற்கு மேல் நடித்திருக்கிறார்3. படத்தில் அதிகமாக வரும் சல்மான், காத்ரீனா போன்றவர்கள் நல்ல நடிப்புப்பள்ளியில் நடிப்பு கற்றுக்கொண்டால் நல்லது. குறிப்பாக சல்மானின் நடிப்பு ஒத்திகை4 பார்ப்பது போன்றே இருக்கின்றது. பாடல்களுக்கும் நல்ல முறையில் வாயசைக்கவில்லை. குறிப்பாக உச்சக்காட்சியில் வரும் பாடல்.
படத்தில் வரும் இடங்கள், ஒளிப்பதிவு, இசை அனைத்துமே புதுமை. ஆனால் படம் எடுத்த விதம், நடிகர்கள் நடிப்பு எல்லாமே பழமை. பாடல்களை மட்டும் காணொளியாக5 குறுவட்டு வாங்கியோ, இணையிறக்கம் செய்தோ காணலாம். தயவுசெய்து படம் பார்த்துவிடாதீர்கள்.
1 Aja meri, Muskura
2 Mustam, Shano
3 Overacting
4 Rehaushal
5 Video DVD
6 Comments:
சரியாச் சொன்னீங்க... நானும் படத்தப்பாத்துட்டு அதேதான் நெனச்சேன்.
நல்ல வேளங்க... நா இன்னும் படத்தப்பாக்கல... யூட்யூப்ல பாட்டெல்லாம் இருக்குதான்னு இப்பவே பாக்கறேன்.
கேத்தரீனா இனிமேலாவது நல்ல நடிப்பாளான்னு தெரியல....
நானும் யுவராஜைப் பொறுத்தவரை உங்க கட்சிதான்... (தேர்தல் நேரம் இல்லையா...)
இந்த சொல் சரிபார்ப்பை நீக்கி விட்டால் எளிமையாக கருத்துரைகள் சொல்வோம்.
இந்தமாதிரியேல்லாம் தொடர்ந்து படம் எடுக்கறதாலதான் நடிகர்கள் எதப்பத்தியும் கவல இல்லாம ஊரச் சுத்தறாங்க. அரசியல்ல குதிக்கறாங்க.
மான்கறி தின்ற நடிகர் (சல்மான்) நடிப்பு கொடுமை.. கொடுமை.
கருத்துரைகளுக்கு நன்றி. இப்பொழுது சொல் சரிபார்ப்பு நீக்கப்பட்டு விட்டது.
மனநிறைவோடு
கருத்துரைகளைத் தெரிவிக்கலாமே...
ஐயோ. பாடல்களையும் முன்னோட்டத்தையும் பார்த்துவிட்டு இந்தப்படம் பார்க்கவேண்டுமென நினைத்திருந்தேன். இப்படியாகிவிட்டதா. ம்ம்
ஆனால் இதன் பாடல்கள் மிக அருமை.
தமிழில் தல இரஃமானை வியாபாரத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதைவிட்டு இந்தப்படத்தில் பல வித்தியாசமான இசைக்கு பயன்படுத்தியதுபோல எப்போது செய்யப்போகிறார்கள் ??
முந்தய பதிவில் அதிகமாக ஆங்கிலம் கலந்துவிட்டேன். மன்னிக்கவும்.
Post a Comment