நான்கு முத்தான பாடல்களைத் தந்திருக்கும் புத்திசையமைப்பாளருக்கு1 இது இரண்டாவது படம். இரண்டு கரைநாட்டு2 இசை. இரண்டு மேற்கத்திய இசை. "அன்பாலே அழகாகும் வீடு...” வார்த்தைகள் புரியும் இசைஞானி காலத்து திரைக்கரைநாட்டு இசை. "சின்னக்கண்ணன் அழைக்கிறான்..." க்குப்பிறகு குறித்த ஆண்பாடகர்3 பாடியிருக்கும் திரையிசைப்பாடல். அழகான இப்பாடல் பாடியவர்களும்4 பொருளுணர்ந்து பாடியிருப்பது சிறப்பு. இது எனது இரண்டாவது "கண்கள் இரண்டால்..." என இசையமைப்பாளர் கூறியிருப்பது மேலும் சிறப்பு.
"ஒரு வெட்கம் வருதே..." தமிழ் தெரியாத பெண்5 குரலின் மெருகோடு காதை வருடும் மயிலிறகாக வருகின்றது. மென்பொருளையே உருட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு தென்றல் வீசுஞ்சோலையில் உலாவுவதுபோல் உணர்வு தரும் அருமையான மெல்லிசை. பாடலில் ஆண்பாடகர்6 குரலை சற்றே கீழ்நிலையில் சரி செய்து கொள்ள வேண்டும். மேல்நிலை7களிலேயே பாடிப்பாடி கீழ்நிலையில்8 சில வார்த்தைகள் உள்ளே சென்றுவிட்டது.
"நாந்தான் கொப்பன்டா...9" வார்த்தைகள் அதிகம் சிதையாமல் வந்திருக்கும் மேல்நாட்டு இசை. மெச்சலாம். "கல்லும் முள்ளும்...10" பாடலும் மேல்நாட்டு இசையே. மேல்நிலைகள் அதிகம் இருக்கும் இப்பாடலை முணுமுணுக்க இயலாது.
கணினி இசைக்காலத்தில் கரைநாட்டு இசையினை மறக்காமல் அதற்கே உரிய நேர்த்தியோடு இரண்டாவது படத்திலும் மற்றொரு முறை தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர்.
இழுவை இசைக்கருவிகளும்11 சரி, வறட்டு விரல் இழுவை இசைக்கருவிகளும்12 சரி அருமையாக ஒலிப்பது பாடல்களில் அழகினை மேலும் கூட்டுகிறது. பாடல்கள் வெற்றியடைய வாழ்த்துவோம்.
இப்படத்திற்கு இசையமைத்தவர் நாற்பத்தொன்று ஆண்டு இளைஞர் ஆவார்.சிலகாலம் தொலைக்காட்சியில் அறிவிப்பாளராகவும், கொடைக்கானலில் இசை ஆசிரியராகவும் பணியாற்ற இவர் திருச்சியில் படித்தவர்.பாடல்களை http://www.tamilbeat.com/ தளத்திலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
------------
1ஜேம்ஸ் வசந்தன்
2கடற்கரையோர ஊர்களான தஞ்சாவூர்,திருவையாறு,கும்பகோணம் ஊர்களில் பிறந்ததால் கரைநாட்டு இசை என அழைக்கப்படுகிறது. Carnatic or classical music
3பாலமுரளிக்கிருஷ்ணா
4பாலமுரளிக்கிருஷ்ணா, குழந்தை சிவாங்கி குழுவினர்
5ஷ்ரேயா கோஷல்
6நரேஷ் ஐயர்
7High Pitch
8Low Pitch
9Singers: Larson Cyril, Satyanarayana
10Singer: Benny Dayal
11Violin
12Base Guitar
1ஜேம்ஸ் வசந்தன்
2கடற்கரையோர ஊர்களான தஞ்சாவூர்,திருவையாறு,கும்பகோணம் ஊர்களில் பிறந்ததால் கரைநாட்டு இசை என அழைக்கப்படுகிறது. Carnatic or classical music
3பாலமுரளிக்கிருஷ்ணா
4பாலமுரளிக்கிருஷ்ணா, குழந்தை சிவாங்கி குழுவினர்
5ஷ்ரேயா கோஷல்
6நரேஷ் ஐயர்
7High Pitch
8Low Pitch
9Singers: Larson Cyril, Satyanarayana
10Singer: Benny Dayal
11Violin
12Base Guitar
2 Comments:
Being reviewed in Pure Tamil is very well appreciated. Moreover James vasanthan is definitely a notable person as he promptly uses Balamuralikrishna for the song. Hope everyone enjoyed with Prasanna's Tamil Poetic Reviews and James Vasanthan's composing style which brings back the age of Ilayaraaja. Being myself a die-hard of Ilayaraaja, praising James Vasanthan with my Legend.
கருத்துத் தெரிவித்த நண்பர் விஜய்க்கு நன்றி.
Post a Comment