வியாழன், 23 ஏப்ரல், 2009

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடும் நிலா பாடிய ஒரே பாடல்.

தனது பெயரினை எப்பொழுதுமே பாதி ஆங்கிலத்தில், படத்தின் தலைப்பில் பெற்றிருப்பவர் Harris ஜெயராஜ்.ஏனோ தெரியவில்லை இவரது இசையில் பாடும் நிலா பாலு ஒரே ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார். அது மிகவும் அருமையான பாடல். அந்தப்பாடல் நன்றாக வந்திருந்த போதிலும் அதற்குப்பின் குறிப்பிட்ட இசையமைப்பாளர் இசையில் அவர் பாடவே இல்லை. அதற்கான காரணமும் இசைவிரும்பிகளுக்கும் தெரியவில்லை.

இந்தக்கட்டுரை வந்த பிறகாவது பாடும் நிலா குரல் அவரது இசையில் ஒலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.இது இசையமைப்பாளருக்கு இழுக்கே தவிர, பாடும் நிலாவுக்கு அன்று. இப்பதிவினைப் படிக்கும் இசைவிரும்பிகள் இதற்கான காரணத்தினைக் கூறினால் நன்றாக இருக்கும்.

அது அருளில்(விக்ரம் - சோதிகா) வரும் பட்டுவிரல் எனக்கு... எனத்தொடங்கும் அருமையான பாடல். சொர்ணலதாவோடு சேர்ந்து பாடியிருப்பார் பாடும்நிலா. பாடலில் மேல்நிலைகளில் அவருக்கே உரிய அணுக்கங்களோடு அணி செய்திருப்பார். அது விக்ரமுக்கும் செம்மையாய்ப் பொருந்தி வரும்.

வளர்ந்து வரும் இசையமைப்பாளரான இவர் தமிழைக் கொலை செய்யும் பாடகர்களுக்கு வாய்ப்புத்தந்து வருகிறார். சோதி நெறஞ்சவ .. சொன்னவுடன் சமஞ்சவ.. (சுக்வீந்தர் சிங்கின் தமிழ்க்கொலையில் 12பி பாடல்)ஒர் எடுத்துக்காட்டு.

தனது படங்களிலெல்லாம் மும்பை செயற்றீயினை ஒரு பாடல் பாட வைத்து விடவேண்டும் என்று கொள்கை வைத்திருப்பவர் குறித்த இசையமைப்பாளர். மற்ற பாடகர்களின் தேதிகளுக்காக காத்திருக்கும் இவருக்கு பாடும் நிலாவின் தேதி கிடைக்கவில்லையா என்ன?


3 Comments:

Subash said...

தவறு நண்பா

குமரன் படத்தில்
நிழல் என்றும் என துவங்கும் மிக மிக அருமையான மெலடி.

வெற்றி படத்தில் பாடவா பாடவா எனும் இதைவிட அருமையான மெலடி.

மற்றது நீங்கள் சொன்ன பாடல்.
3ம் ஒருமாதிரியானவைதான் அடிப்படையில். அதேமாதிரி தேவைப்பட்டால்தான் இவர் பாலாவை அழைப்பாரொ தெரியாது. ஹிஹி

மற்றது நீங்க பாலா ரசிகராக இருப்பதால் எல்லாரும் அவரை பாடவைக்கவேண்டுமென நினைப்பது எப்படி?

மற்றது இளையராஜா டிம்ஸ் ஐ விட பாலாவை அறிமுகப்படுத்தி அதிகமத் பாடவைத்தார்.
அதுபோல இப்ப இன்னொருவர் பாலாவை விட மற்றவர்களை அதிகம் பாடவைக்கிறார். அடுத்து இன்னொருவர்.

காலம் மாறும்போது மாற்றங்களை எதிர்கொள்ளவேண்டும்.

எப்படியாயினும் ஹரீசின் இசையில் பாலா பாடினால் இதன் சுகமே தனிதான். லேலேயுள்ள பாடல்களை கேட்டுப்பாருங்கள். ஹரீசிற்கு சில்சில்லென்ற இசையோடு பாடல்களை வடிவமைப்பது பிடீக்கும்போல் தெரிகிறது. அவ்விசைக்கு பாலாவின் கணீரெனும் குரல்தான் பெஸ்ட் சாய்ஸ்.

மற்றும் ஹரீசிற்கு இடைக்கால பாடலின் ஸ்டைலில் பாட்டிசைப்பதும் பிடிக்குமென தெரிகிறது. அதற்கும் பாலாதான் முதல் சாய்ஸ்

ம்ம்ம் பார்க்கலாம் தல

PNA Prasanna said...

கருத்துத் தெரிவித்த நண்பர் சுபாஷீக்கு நன்றிகள். அவர் குறிப்பிட்ட படப்பாடல்கள் அவ்வளவு பெயர் பெறவில்லையாதலால் எனக்கு அவைகள் குறித்துத் தெரியவில்லை.

அந்தப்பாடல்களை எனக்கு அனுப்பினால் நலமாக இருக்கும்.


இது போன்று கட்டுரைகளைத் தெளிவாகப் படித்துணர்ந்து கருத்துக்கள் தெரிவித்தல் ::: தமிழ் எக்காளத்திற்கு ::: நலம் பயக்கும்.

Subash said...

தாமதத்திற்கு மன்னிக்கவும்.
உங்களின் மின்னஞ்சல் முகவரி தருவீர்களா? அல்லது aneslin@gmail.com இற்கு ஒரு மிக்கஞ்சல் தட்டி விடுங்களேன். உடனடியாக இனுப்பி வைக்கிறேன்.
நிச்சயமாக அந்தப்பாடல்களும் உங்களுக்குப்பிடிக்குமென நினைக்கிறேன்.