சென்ற பதிவு ஈழம் பற்றியமையமையால் கூடுதல் பெயர் கிடைத்தது. இணைய நண்பர் செயபாலும், சவுக்கடி என்ற பெயரில் பெயர் தெரிவிக்க விரும்பாதவரும் (மறுமொழி தெரிவிக்க மட்டுமே, புதிய பதிவு தொடங்கினார் போலும்... பதிவுகள், மின்னஞ்சல் முகவரி எதுவுமில்லை.) பதிவினைச் சற்றே சாடியிருந்தனர். மற்றவர் பாராட்டியிருந்தனர்.
செயபால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழீழம் இருந்ததற்கு பொன்னியின் செல்வனை உதவிக்கு அழைத்து மிக்க மரியாதையுடன் மின்னஞ்சல் செய்திருந்தார். நன்றிகள். நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டது போன்று எனது பதிவானது ஒரு சாளரவழிப் பார்வையே. பூசலுக்குரியதன்று.
ஏன் தனி ஈழம் கிடைக்கவில்லை?
1. ஈழத்திலிருந்து அதற்காக போரிடுபவர்களின் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தன்னலமிக்கவர்கள்தாம்.
2. மற்றவர்கள் வெளிநாட்டில் முன்பு அகதிகளாகக் குடியேறி இன்று செயற்கைக் கோள்களில் தொப்புள் நடனம் பார்க்கும் அளவுக்கு முன்னேறியிருப்பவர்கள். இவர்களால் இணையத்தில் அலுவலக ஓய்வு நேரத்தில் பதிவுகள் எழுத முடியுமே தவிர வேறொன்றும் பயனில்லை. இவர்களில் பெரும்பாலும், வல்லரசிலும், ஆசுத்திரேலியாவிலும், வளைகுடா நாடுகளிலும் இருப்பவர்கள்.
3. மீதியிருப்பவர்கள் இச்சிக்கலைவைத்து அரசியல் செய்யும் சராசரி அரசியல் தலைவர்கள்.
தமிழீழத்தின் வரைபடத்தினைக் கூட இன்று நாம் தேடுபொறிகளில்தாம் பார்க்க வேண்டியிருக்கிறது. பிறகு எப்படி தமிழீழம் மலரும்?
ஏன் தனிநாடு வேண்டாம்?
காரணம் சிறியதுதான். நாட்டினை உடைப்பதும், சேர்ப்பதும் ஏறக்குறைய இயற்கை இறந்த நிகழ்வுகளுக்கு இணையானதுதாம். இதற்கு செக், சுலொவோக்கியா பிரிந்தது. கிழக்கு, மேற்கு செருமனிகள் இணைந்ததை மேற்கோள் காட்டலாம்.
இந்திய வரைபடத்தில் கூட இன்றும் இருக்கும் சில கசுமீரின் வரம்பெல்லைகளில் பல பாக்கித்தானுக்கு உரியவைகள்தாம். பண்டித நேருவின் உத்தரவுக்கு ஏற்ப இன்றும் நாம் விடுதலை இந்தியாவின் பழைய வரைபடத்தினையே பள்ளிகள் முதல் பயன்படுத்தி வருகின்றோம்.
கசுமீரில் இன்றும் விடுதலை இந்தியா (15.08.1947) விலைக்கே அரிசி, பருப்பு, நிலம் எல்லாம் கொடுத்து வருகின்றது இந்தியா. இந்தியாவிலிருந்து யாரும் கசுமீரில் சென்று நிலம் வாங்க முடியாது. ஆனால் அங்கிருந்து இந்தியா வந்தால் எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் வாங்கலாம்.
இந்த வசதிகளெல்லாம் நேரு இந்தியாவின் செல்லப்பிள்ளை கசுமீருக்கு, அது பிரிந்து போய்விடாமல் இருக்க கொடுத்தவைகள்தாம்.
மாநிலங்களில் நிலவரம்பு எடுத்துக்காட்டு:
திருப்பதியினை ஆந்திராவுக்கு கொடுத்துவிட்டு சென்னையை தன்னகத்தே வைத்துக்கொண்ட தமிழ்நாடு, உதகமண்டலத்தை கருநாட்டிலிருந்து[1] எடுத்துக்கொண்டது.
இவையெல்லாம், கால மாற்றத்திற்கு ஏற்ப மேலாண்மைக்காக ஏற்படுத்திக் கொண்ட வரம்பெல்லைப் பிரிவுகளே தவிர வேறொன்றுமில்லை.
"பழையன கழிதலும், புதியன புகுதலும்,
வழுவல கால வகையினானே."
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பவனந்தி முனிவர் சொன்னது நிகழ்ந்ததென கருதலாம்.
தமிழனும், சிங்களனும் இணைந்து வாழாமல், நாட்டைப் பிரித்தல் மென்மேலும் பூசல் வளர்க்கும். வேலுப்பிள்ளையின் பிள்ளை[2], நாட்டின் தேர்தலைப் புறக்கணித்தார். எனவே தமிழன் யாரும் தேர்தலில் நிற்காமல் அவனது உரிமை செத்தது.
இலங்கை ஈழ உரிமை வளர்த்து, உறவை வளர்ப்பதே சிறந்தது. இல்லையேல் இது தீர்வறிய இயலா நிலையிலேயே இருக்கும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பொன்னியின் செல்வன் கதையினை எழுதிய கல்கியே வடக்கேயிருந்து கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர் வழி அந்தணர் ஆவார்.
தனியீழம் என்று எண்ணாமல், சிங்களன், தமிழன் நல்லுறவு என எண்ண இச்சிக்கல் தீருமென்பது என் தாழ்மையான கருத்து.
4 Comments:
கருத்து கந்தசாமியாக எனக்கும் கருத்து ரெண்டு இருக்குன்னு பேசறதுக்கு மின்னாடி கொஞ்சம் நொழைஞ்சு வாசிச்சு பாருய்யா
தனி ஈழம் கிடைக்காததுக்கு நீரு தரும் காரணங்கள் தினமலருல வெட்டி ஒட்டினாப்பல இருக்கு.
ஈழத்தின் தலைவருங்க தன்னலமிக்கவருன்னு யாரு சொன்னாங்க? ஒங்க அப்பாரா ஆயியா? சொல்லறாப்ப எப்படின்னு சொல்லறதுதான?
அகதிகளா போயி தொப்புள்நடனம் பார்த்து லெச்சர் டைமுல பதிவு போடறானுங்களா? அப்போ யாருங்க கனடா மேம்பாலத்துலயும் லண்டன் வெச்ட்மினிஸ்டரிலயும் ஜெனிவா யூ என்னோ முன்னாடியும் அவுஸ்ரேலியா பிரதமமந்திரிவீடு முன்னாடியும் மாசம்மாசமா நின்னது? ஒங்களோட இந்தியத்தாயா? அகதிகளா அவுஸ்ரேலியா போனவனுக்கு அப்பாரு ஆயி எங்கய்யா இருக்காங்க? ஒங்கவீட்டூ கொல்லைக்குள்ளாறவா?
என்ன நாடு சின்னது, பிரிக்கமுடியாதா? போயி பூலோகதுல இத வுட எத்தன நாடு தீமோர் தொடக்கம் சிங்கப்பூரு வெரைக்கும் கெடக்கென்னு பாருய்யா
வந்துட்டானுங்க. ஒங்க மாதியான கருத்து கந்தசாமிங்க மத்தவனுங்கள மாங்கா மடையன்னு ரோசிச்சுக்கிட்டு நாலுமொழம் பொண்டாட்டிக்கு வாங்குற மதுரமல்லிப்பூவா பதிவு போடறீங்களே. எங்க போயி தலய முட்டிக்கெறது?
ஒன்னு என்ன எழவு பேசரதுன்னு தெரியனும் இல்லே பேசாம வாய மூடிக்கிட்டு கெடக்கனும்
இரண்டு அணிகள் இருந்த்தால்தான் போட்டி நன்றாக இருக்கும். அவ்வகையில் இது போன்று கருத்து சொல்வதற்காகவே மட்டும் வலைப்பதிவு தொடங்கியிருக்கும் வில்லங்கத்தார் நல்ல முறையில் பொழுதைப் போக்குகிறார்.
வணக்கம்,
//அங்கே இராமன் காலத்திலிருந்து இலங்கை மட்டும்தான் இருக்கின்றது. ஈழம் கிடையாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக வேலுப்பிள்ளையின் பிள்ளை[1] போர் செய்து மட்டுமே தனி நாடு வாங்கி விட முடியாது.//
நான் பொன்னியின் செல்வனை இழுத்தது, ஈழம் என்ற பெயர் பழங் காலத்திலிருந்தே பாவனையில் இருக்கும் பெயர் என்பதைச் சுட்டிக் காட்டத்தான். பல சான்றுகள் உண்டு. சங்கப் பாடல்களில் கூட ஈழத்துப் பூதந்த் தேவனார் என்று ஒரு ஈழத்துப் புலவரை குறிப்பிடுகிறார்கள். ஆக ஈழம் என்பது கிடையாது என்பது தவறு.
கல்கி வடக்கே இருந்து வந்தாலென்ன கிழக்கேயிருந்து வந்தாலென்ன அதிலென்ன? அவருக்குத தெரியாமல் எழுதி விட்டாரா?
// மற்றவர்கள் வெளிநாட்டில் முன்பு அகதிகளாகக் குடியேறி இன்று செயற்கைக் கோள்களில் தொப்புள் நடனம் பார்க்கும் அளவுக்கு முன்னேறியிருப்பவர்கள்//
இது சரியில்லாத வார்த்தைப் பிரயோகம். வெளிநாட்டில் வாழும் தமிழர் அனைவரும் அகதிகளாக வந்தவர்களல்ல. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நக்கலையும் தவிர்க்க வேண்டும்.
// வேலுப்பிள்ளையின் பிள்ளை[2], நாட்டின் தேர்தலைப் புறக்கணித்தார். //
இதென்ன நீட்டி முழக்கல்? அவ்வளவு காழ்ப்புணர்வா?
தேர்தலைப் புறக்கணிக்காமல் இருந்தால் சம உரிமை கிடைத்து விடுமா? 1948 இலிருந்து எல்லாத் தேர்தலிலும் தமிழருக்குக் கிடைத்தது அல்வா (அல்ல) அடி உதை தான். ஒவ்வொரு தேர்தல் முடிவிலும், தமிழனுக்கு அடி என்பது தீர்த்தத் திருவிழா போல் நடக்கும் நாட்டைப் பற்றி நன்கு அறிந்த பின் எழுது ங்கள் அன்பரே.
ஈழம் பழைய காலத்திலிருந்தது அதனால் அது தேவை என்று யாரும் போராடவில்லை. தமிழர் அடிப்படை மனித உரிமையுடன் வாழ வேண்டுமானால், தற்போதைய இலங்கையில் முடியாது. அதனால் ஒரு தனி அரசு வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. அந்தத் தனியரசுக்குப பெயர் தான் ஈழம். முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை.
If you are interested more, please take a look at the attached paper and see how long and how many have been affected in SL.
நண்பரின் மென்மையான கருத்துரைக்கு நன்றிகள்.
பதிவு எழுதுவதே கற்றுக்கொள்வதற்காகத்தான்.
Post a Comment