திங்கள், 20 ஜூன், 2011

அரிசியின் வேறு பெயர்கள்:


உலகத்தின் பொதுவான அணிகளில் ஒன்றாக அரிசி இருந்தாலும் அதன் தாய்வீடு தமிழகம்தான். அதன் வெவ்வேறு பெயர்கள் வெவ்வேறு மொழிகளில் பின்வருமாறு:

ஒரைஸா (இலத்தீன்)
அரூஜ் (அரபி)
அரோஜ் (ஸ்பானிஷ்)
ஒரிஜா (கிரேக்கம்)
ரயிஸொ (இத்தாலி)
ரிஜ் (பிரெஞ்சு)
ரியிஸ் (ஜெர்மன்)
ரிஸ் (ரஷ்யா)
வ்ரிஹி (சமற்கிருதம்)
வாரி (மடகஸ்கர்)
ப்ரின்ஜ் (பார்சி)
அக்கி (கன்னடம்)
சாவல் (இந்தி)

நன்றி தினகரன்.வசந்தம்

காற்றில் ஓடும் ஊர்தி கண்டுபிடிப்பு


பொள்ளாச்சி. ஏப்ரல் 17. பெட்ரோல் விலை உயர்வு, ஊர்தி விலை அதிகம், சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு கோவை கருமத்தப்பட்டி தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர்கள் தீர்வு கண்டுள்ளனர். இன்று உலகம் முழுவதிலும் மக்களைப் பெரிதும் தாக்கி வருவது சூழல் மாசுபாடுதான். மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நாடுகளும் பல பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

3 மாதம் இடைவிடாத முயற்சியின் காரணமாக 35000உரூபாய் செலவில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் ஊர்தியை அமைத்தோம். மணிக்கு 35 கி.மி செல்லும் இதற்கு ஆண்டுக்கு பராமரிப்புச் செலவு 2000உரூபாய் மட்டுமே. இதிலிருந்து புகையும் வராது. சூழலும் மாசுபடாது. நாம் செல்லும் வழியில் எங்காவது ஒரு மிதிவண்டிக் கடையில் நிறுத்தி ஊர்தியின் பின்புறத்தில் இருக்கும் பெட்டியில் காற்றை நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடரலாம். இவ்வாறு மதன்குமார்(21) கூறினார்.

நன்றி தினகரன்.

நாப்பழக்கச் செழுங்கவிதை


அண்டமெல்லாம் பற்றுறுதி கொண்டு கற்றறிய‌
பொங்குதமிழ் தொட்டெழுதிப் படைக்கின்றேன்
புதுவிருந்து யான் உற்றறிந்ததை.

உற்றறிந்ததில் ஊறு காணாமல்
சிற்றறிவு பேரறிவு பிணக்கில்லாமல்
பற்றிடுவீர் தமிழ் சுவைஞர்களே!

சுவைஞர்களே அமிழ்தஞ்சுவையறிய‌
செப்புங்கள் "தமிழ் தமிழ்" என்று
பிழையறாது இடையறாது.

சனி, 18 ஜூன், 2011

என்னைக் கவர்ந்த பாடல்


படம்: ரோஜா
பாடியவர்: மின்மினி
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: ஏ.ஆர்.இரகுமான்
குறிப்பு: ஏ.ஆர்.இரகுமானுக்கு நாட்டு விருது வாங்கித்தந்த பாடல்.


பல்லவி

சின்னச்சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றிவர ஆசை - (சின்னச்சின்ன)

சரணம் 1


மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களை எல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களை எல்லாம் சுட்டுவிட ஆசை
கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை - (சின்னச்சின்ன)

சரணம் 2


சேற்றுவயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை - (சின்னச்சின்ன)