செவ்வாய், 3 டிசம்பர், 2013

நிலைமை

கற்ற தமிழ் மங்காதிருக்க‌
உளச்சோர்வும் ஒவ்வாமையும் ஒழிந்து போக‌
கண்ணெரிச்சல் காணாமல் போக‌
நிரல் குழப்பம் நீங்கிப்போக‌
பொங்குதமிழ் கொண்டு புனைந்தான் புதுக்கவிதை
இணையத்தில் காலங்கழிக்கும்
இக்கால மென்பொறிஞன்.
---
அருஞ்சொற்பொருளுக்கும் (Glossary) ஆங்கிலம் தேவைப்படுகிறது. தமிழ்த்தாய் மன்னிப்பாளாக.
---
உளச்சோர்வு - Depression
ஒவ்வாமை - Allergy
நிரல்         - Program
இணையம்         - Internet
மென்பொறிஞன் - Software Engineer

கவிதை சொல்லும் பெருநெறி::
தமிழ் கவிதைகள் படிப்பதால் தென்றல் வீசுஞ்சோலையில் வாசஞ்செய்வது போலிருக்கும். ஆதலால் உளச்சோர்வு, ஒவ்வாமை, பெருங்குழப்பம், கண்ணெரிச்சல் போன்றவைகள் நீங்கி புத்துணர்வு பெறுதல் திண்ணம்.

0 Comments: