செவ்வாய், 3 டிசம்பர், 2013

கவிச்சோலை

      ஒழிப்போம்  சிறார் தொழிலை
     இராமன் சென்றான்
     பதினான்கு ஆண்டுகள் கானகம்.
     பதினான்கு அகவை நிரம்பவில்லை - குழந்தைக்கு
     இப்பொழுதே கானகம்.
     அவனிக்கு வந்தது - பெரும்
     பணி செய்யவே
     உண்மைதான்.
     பள்ளிசெல்லும் வயதில்  - செய்யும்
     பணி பணியல்ல
     பெரும் பிணி.

     குடும்பத்தில் பெரியோர் சரிவர இருப்பின் - இல்லை
     குழந்தைத் தொழிலாளர்.
     குழந்தைத் தொழிலாளரை வேரறுப்போம்.
     குவலயம் காப்போம்.

     வருவாய் குறைந்தாலும் பரவாயில்லை - களைவோம்
     விரைவாய்ச்  சிறார் தொழில்.
     அவனி முழுக்க
     சிறார் தொழில் அழிக்க  - இன்றே
     சர்வாதிகாரியாவோம்..

      இனிப்பு
     கல்லூரித் தேர்வில் வெற்றி பெற்ற என் காதலி
     இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் அத்தான்
     என்று காட்டினாள் தன் இதழ்களை.
     தேடல்
     அமாவாசையன்று
     அம்புலியைத் தேடியது
     அளப்பரிய இயற்கை.
      தனிமை
     ஆளித்தனிமையில்
     இன்பத்தேன்.
     கவிதைகள்.
      மெய் தீண்டல்
     முகச்சமவெளியில் புற்கள்
     என்னவன் சவரம் செய்து ஒரு வாரமாகி விட்டது.
     முரண்பாடு
     நெருப்பின்றி
     புகைந்தது.
     மூடுபனி.

0 Comments: