சனி, 3 மே, 2014

வேலையை நேசியுங்கள்; நிறுவனத்தை அல்ல‌ - கணினிக்கதை

தமிழ் கம்ப்யூட்டர் ஏப்ரல் 16 - 30,2014 இதழில் வெளியான 
கணினிக்கதை - பக்கம் 44
அலுவலகத்திலிருந்து ஒரு நாள் உல்லாசப்பயணம் சென்றிருந்தான் நெடிலன். உடன் யாரை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம் என்று நிறுவனம் சொல்லியிருந்ததால் தனது கல்லூரித் தோழி நுட்பாவையும் அழைத்துச் சென்றிருந்தான். "என்னே இனிது இந்த இயற்கை" என மனதில் கவிதை பேசியபடி, நீச்சல் குளத்தின் கரையிலிருந்து தொடுவானத்தை சுவைத்துக் கொண்டிருந்தான் நெடிலன். "கண்ணை விட அருமையான ஒளிக்கருவி இன்னும் கண்டறியப்படவில்லை” நெடிலன் மனதில் கவிதை தொடர்ந்தது. ஐயம் கேட்பதற்கென்ற அவனது அருகில் தோழி நுட்பா.
"நெடில் இத ஏன் தொடுவானம்ன்னு சொல்றாங்க?" தனது முதல் இயற்கை ஐயத்தைக் கேட்டாள் நுட்பா.
"தொலைவிலிருந்து பார்த்தால் வானமும் வையமும் தொட்டுக்கொண்டிருப்பது போலத் தெரியும். ஆனா பக்கத்துல போனா இரண்டும் தனித்தனி என்பது புரியும்.” எளிமையாய் விளக்கினான் நெடிலன்.
"அப்ப அத தொடாவானம்ன்னுதான சொல்லணும். ஏன் தொடு வானம்ன்னு சொல்றான்ங்க?" கேள்வி கேட்பது நுட்பா என்று காட்ட க்ளுக் கென சிரித்தாள் நெடிலனிடம்.
"இரு..என்னோட முறை (my turn) வரும்.” என்று மனதில் நினைத்துக் கொண்டே முறுவலித்தான் நெடிலன்.
"வாங்க.." அருகிலிருந்த மர ஊஞ்சலுக்கு அழைத்துச் சென்றாள்.
"ஐபிஎம் இப்பத்தான் தன்னோட நூறாவது (Thomas Watson 1914) ஆண்டக் கொண்டாடிக்கிட்டு இருந்துச்சு. திடீர்ன்னு 15000 ஊழியர்கள வேலைய விட்டு நிறுத்திடுச்சு. சிஸ்கோ உலகம் முழுக்க இருக்கற 4000 ஊழியர்கள, வேலையவிட்டு நீக்கிடுச்சு. எல்லாமே தீடீர்ன்னு நடந்துச்சுன்னா, நாம என்ன பண்ணறது நெடில்.” தனது நேரிய ஐயத்தை சீரிய முறையில் வினவினாள் நுட்பா.
“ஓர் உலகப் பொதுமறையான வாக்கியம் சொல்றேன் கேட்டுக்க. ‘வேலையை நேசி; நிறுவனத்தை அல்ல.’ நா..கூகுள்ல வேல பாக்கறேன். இன்னும் மைக்ரோசாஃப்ட்ல இல்லாட்டி ஃபேஸ்புக்ல வேல பாத்தாலும் சரி இது பொதுவான வாக்கியம்தான்.” தெளிவாகச் சொன்னான் நெடிலன்.
சொன்னவன் தொடர்ந்தான். "ஆனா எல்லாருமே, நிறுவனத்துல கெடக்கற PF, Insurance வசதிகளையும், நிறுவன அமைப்பினையும் (company infrastructure), இலவச ஊர்தி (cab facilities) வசதிகளையும் மட்டுமே நேசிக்கிறோம். இதையெல்லாம் நமக்கு கொடுக்கறதே, நம்மை அடிமை போல வேல வாங்கத்தான் அப்டீங்கறதை நாம மறந்துடுறோம். பள்ளியிலர்ந்து நம்மள பயிற்றுவிக்கறது அப்டித்தான். நீ நல்லாப் படிச்சு சிஸ்கோவுக்கு போகணும், ஐபிஎம்க்குப் போகணும் அப்டீன்னு. அதனாலயே நமக்கு நம்மளோட நிறுவனத்து மேல ஆசை அதிகமாகி நம்ம செய்ய வேண்டிய வேல மேல ஆசை கொறஞ்சுடுது. நம்ம நிறுவனத்தோட பேரு வெளில சொல்றப்ப பெரிசா இருக்கணும்ன்னு நாம நெனக்கறதுதான் இதுக்கு காரணம். நிறுவனம் முக்கியம்தான். ஆனா அதவிட நாம நம்ம வேலைய முழுசா நெசிக்கணும்.”
"பணி உயர்வு, ஊதிய உயர்வு, மாத ஊக்கத்தோகை அப்டின்னு எல்லாமே நம்மைத் தொடர்ந்து அடிமைகளாக வச்சுக்கற திட்டம்தான். 'என்னிடம் ஒருவர் மேலாண்மை இயக்குநராக (Managing Director) வேலை பார்க்கிறார். நான் நாள்தோறும் அவருக்கு என் எட்டுமணி நேரத்தை ஊதியமாகத் தருகிறேன்.' இந்த மனப்பான்மையோடதான் நாம இருக்கணும்." அண்மையில் முகநூல் செயலியில் (Facebook) கண்ட மேற்கோளையும் தன் உரையாட்டில் இணைத்துக் கொண்டான் அந்த தொடுவானத் தலைவன்.
"முன்னெல்லாம் நமது வேலை முறைமை (poor performance) சரியில்லை அப்டின்னாத்தான் நம்மள வேலையிலர்ந்து எடுப்பாங்க. இல்ல நம்ம குழுவுல நம்மள யாருக்குமே புடிக்கல‌, (failure of team playing) இல்லாட்டி நம்ம மேலாலரோட சண்ட (miscommunications with superior), ஆனா இப்ப நிலமை வேற மாதிரி இருக்கே.” தனது கேள்வியின் ஆழத்தை விளக்கினாள் நுட்பா மர ஊஞ்சல் சங்கிலியைத் தடவியபடி.
"நீ சொல்றது சரிதான். முன்னைக்கு இப்ப நிலமை மாறியிருக்கு. எல்லாமே நாம மேலை நாடுகளப் பாத்துப்பாத்து கத்துக்கறதுதான். இப்பல்லாம் பயன்பாட்டு வாழ்க்கைதான் எல்லா நிறுவனங்களும் கையாளுது. நமக்குத்தான் உடல் உயிர் எல்லாமே. வேலை எனப்படும் பிசினஸீக்கு அதெல்லாம் தெரியாது. எப்படி நீர்க்குவளைய நீர் குடிச்சுட்டு குப்பைத் தொட்டில தூக்கி வீசுறமோ, (use & throw or Hire & Fire) அது போலத்தான் தொழிற்நுட்ப நிறுவனங்கள் அதோட ஊழியர்கள வச்சுருக்கறது. இது நல்ல நீர்க்குவளை, அதோட உறுதி நல்லாயிருக்கு, அப்டீன்னெல்லாம் யாருமே நினைக்கறதில்ல. தண்ணி குடிச்சாச்சு. தூக்கி போட வேண்டியதுதான். வேல முடிச்சாஞ்சு. வேலய விட்டுத் தூக்கிட வேண்டியதுதான். ஏன்னா வெளில தொழிற்நுட்பக் கனவோடு ஆயிரம் அடிமைகள் குறைந்த விலைக்கு கெடைப்பாங்க.” நிறுவனங்களின் நிலைமையைத் திறம்பட அந்த ஊஞ்சலழகியிடம் விளக்கினான் நெடிலன்.
“சிஸ்கோ, ஐபிஎம் ரெண்டு நிறுவனமுமே Device based நிறுவனங்கள் தான, அவங்களே வேலைய விட்டு நிறுத்தினா என்ன செய்யறது?” அடுத்த கேள்வி கேட்டாள் நுட்பா.
“நீ சொல்றது சரிதான். ஒரு கருவியினை (server or router) வித்தா ஏழு முதல் எட்டு இலகரங்கள் கெடைக்கும்கறது உண்மைதான். அப்டீத்தான் இத்தன நாளாப் பொழப்ப ஓட்டிக்கிட்டுருந்தது இந்த இரு நிறுவனங்களும். சிஸ்கோ ரௌட்டர் இல்லாத இடமே கிடையாது. சந்தையில் ஐபிஎம் வழங்கிகள்தாம் (IBM servers) எப்பவுமே முதலிடம்.” ஊஞ்சலாடிக்கொண்டே பேசினான் நெடிலன்.
"அப்றம் என்னாச்சு." வியப்பில் விழிகள் விரியக் கேட்டாள் நுட்பா.”
“இப்பப் பொதுவா யாருமே அதிகமா இயல்புநிலை வழங்கிகளைப் (Physical server boxes) பயன்படுத்தறது இல்லை. எல்லாருமே மெய்நிகர் நிலை வழங்கிகளைப் (Virtual Server boxes using VM) பயன்படுத்தி வருகிறார்கள். அப்றம், ஏற்கனவே இருந்த வழங்கிகளையும், மெய்நிகர் நிலை வழங்கிகளாக உருமாற்றம் (Physical to Virtual migration) செய்து விட்டார்கள். இதுக்கு எளிமையான Virtual Machine Converter Standalone பயன்படுத்துகிறார்கள். இல்லையெனில் VSpere, VMotion பயன்படுத்துறாங்க. ஒரு 2000 X 2000 அளவுல‌ இருக்கக் கூடிய பெரிய ஆய்வகத்தை சில டேட்டா சென்டர்கள்ல நிறைச்சுப் பயன்படுத்தறாங்க. அதுனால இப்ப விஎம்வேர் நிறுவனம்தான் சந்தையில முன்னணியில் இருக்கறது.” அலுவலகத்தில் தான் அன்றாடம் செய்யும் நிகழ்வுகளிலிருந்து பேசினான் நெடிலன்.
“அப்ப சிஸ்கோ ரௌட்டர் என்னாச்சு?" அடுத்த வினா எழுப்பினாள் ஊஞ்சலழகி.
“அதுவும் மெய்நிகர் ரௌட்டர்கள் (virtual routers) என்று வந்து விட்டது. கூகுள் தேடுபொறியில் மெய்நிகர் ரௌட்டர் என்று தட்டிப்பார். நிறைய விடைக‌ள் கிடைக்கும். Virtual Router, Connectify என்று மென்பொருட்கள் கொட்டிக் கிடக்கும். எல்லாம் இலவசமே. முன்பெல்லாம், சோதனை ஓட்டத்துக்கு இயல்புநிலைக் கருவிகளையே (Physical boxes) பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்பொழுது அதற்கும் கூட மாதிரி மென்பொருட்கள் வந்து விட்டன. Packet tracer, GNS3, VIRL (Virtual Internet Routing Lab) என்று மென்பொருட்கள் அதிக அளவில் கிடக்கின்றன. அதனால சிஸ்கோவோட ரௌட்டர் கருவிகளும் கூட சரிவர சந்தையில் விற்பனையாவதில்லை. அதனால் சிஸ்கோவும் மென்பொருள் முன்னேற்றத்தில் (Software development) இறங்கிவிட்டது. ஆனால் அதையும் முடிந்த வண்ணம் செய்ய முடியவில்லை. ஏனெனில் மென்பொருள் முன்னேற்றத்திற்கென்று பல நிறுவனங்கள் சந்தையில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால ஏதோ ஒரு காரணத்த சொல்லி 4000 ஊழியர்கள பணிநீக்கம் செய்தது சிஸ்கோ. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் கான்ட்ராக்ட் எனப்படும் தற்காலிக ஊழியர்கள்தாம் அதிகம். அறிவேகுரு (AriveGuru.com) போன்ற சிறிய கான்ட்ராக்ட் நிறுவனங்களை நீக்கிவிட்டது. TCS, Accentrue, Mafoi, Addecco போன்ற பெரிய கான்ட்ராக்ட் நிறுவங்களை மட்டுமெ தன்னகத்தே வைத்துக் கொண்டது சிஸ்கோ.” மென்பொருள் துறை நிலைமையை விளக்கினான் நெடிலன்.
“சரி ஆன்லைன் சான்றிதழ்களோட (online certification) நெலம எப்படி இருக்கு?” ஆர்வமாய்க் கேட்டாள் மென்பொருள் அணங்கு.
“எல்லாத் துறைய்லயும் சான்றிதழ்களுக்கு மதிப்பு இருக்கு. அதுலயும் மெம்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் (updated certifications) இருந்தா, அதத்தான் எல்லாரும் மதிக்கறாங்க. முன்ன மாதிரி இல்ல. இப்ப எல்லாத்துறைய்லயும், நிறைய பேர் சான்றிதழ் வச்சுருக்காங்க. லினக்ஸ் சான்றிதழ்களுக்கு (RHCE-Red Hat Certified Engineer) எல்லாத்தையும் விட கூட மதிப்பு இருக்கு. சிஸ்கோ பொறுத்த அளவுல, சிசிஐஇ (CCIE) சான்றிதழ்தான் மதிக்கறாங்க. CCNA, CCNP எல்லாமே தொடக்க நிலை சான்றிதழ்களா மாறிடுச்சு. அத முடிச்சவங்களும் நிறையப்பேர் களத்துல (field) இருக்காங்க. சிசிஐஇ கூட இன்னும் அஞ்சு ஆண்டுக்குத்தான் தாக்குப் புடிக்கும்ன்னு சொல்றாங்க. ஏன்னா ஆய்வகங்களெல்லாம் டேட்டா சென்டருக்கு மாறிடும். அதனால எல்லாரும் மென்பொருள் முன்னேற்ற வேலைக்கு (Software development) மாறிடுவாங்க.” தான் இணையத்தில் படித்ததை அளந்தான் நெடிலன்.
“அப்ப நாமளும் அதுக்கு மாறிட்டா?” அதற்கெனவே காத்திருந்தாற் போன்று விரைவாகக் கேட்டாள் நுட்பா.
“இப்ப இருக்கற நிரல் எழுதும் முறைகளும் இன்னும் பதினைஞ்சு ஆண்டுகள்ல‌ மாறிடும். அப்டீன்னு மென்பொருள் வல்லுநர்கள் சொல்றாங்க. நான் ‘வல்லுநர்க‌ள்’ ன்னு சொல்றது நம்ம நாட்ல இருந்துகிட்டே அமெரிக்காவுக்கு வேல பாக்கறவங்களப் பத்தித்தான். ஏற்கனவே கூகுள் நிறுவனம் தன்னோட செய்தி வலைத்தளம் (http://google.com/news) உள்ளிட அனைத்து தளங்களுக்கும் தானியங்கி நிரல் (automatic program / automatic script) செய்து வச்சிருக்கு. இப்பொழுதே ஏறக்குறைய அனைத்து மென்பொருள் நிறுவனங்களும் நிரலாக்க நிரல் (Programmable Programs) பற்றி பேராராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்காங்க. இது செயற்கை நுண்ணறிவுடன் (Artificial Intelligence) இணைந்த செய்தியாதலால், அதோட விரைவுத்தன்மை குறைவாகவே இருக்கு. கூகுளோட தானியங்கி ஊர்தித் திட்டம் (Google’s automatic car project) போல. எப்படியிருந்தாலும் மென்பொருள் துறையோட நிலைமை முன்ன மாதிரியில்ல. இப்ப எல்லாம் மென்பொருள் துறை நெருக்கடின்னு (IT recession) சொல்றது ஒரு Style ஆக மாறிப்போச்சு. மறுபடியும் நெருக்கடியிலர்ந்து மீண்டு வந்தாலும், அதப்பத்தி நிறுவனங்கள் வாயே திறக்கறதில்ல. எது எப்டியிருந்தாலும், லினக்ஸ் அப்றம் பைத்தான் மொழி தெரிஞ்சுக்கிட்டா நமக்கு ஒரு நல்ல ஊதியத்தோட ஒரு வேலை கெடைக்கும். நாம நம்மளத் தொடர்ந்து மேம்படுத்திக்கணும் (self-equipment).” தனக்குத் தெரிந்ததையெல்லாம் இனிமையாய்ப் பேசினான் நெடிலன்.
"நீங்க ஒங்க நிறுவனத்துல பணி உயர்வு (promotion) கெடச்சு முகில் கணினி நிர்வாகி (Cloud admin) ஆகிட்டிங்க. எங்க நிறுவனத்துல எனக்கு என்ன நிலைமையோ தெரியல?” வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சுத்துடன் பேசினாள் ஊஞ்சலழகி.
"நீ தான் நல்லா வேல செய்யுறீயே..அப்டி எதாவதுன்னா, ஒன்னும் கவலப்படாத... நான் என் நிறுவனத்துல ஒனக்கு வேலைக்கு ஏற்பாடு பண்றேன்.”அவளைத் தேற்றினான் நெடிலன்.
"தொழிற்நுட்பச் சேதிகளெல்லாம் தெரிஞ்சாச்சு. வாங்க அந்தத் தோப்புல கொய்யாப்பழம் சாப்டலாம்.” சொன்னதோடு மட்டுமின்றி இரண்டு கொய்யாப்பழங்களைப் பறித்து நெடிலனுக்குக் கொடுத்தாள் நுட்பா.
"இது மரத்திலிருந்து கொய்த பழம் தானே, இதப் போயி ஏன் 'கொய்யாப் பழம்' ன்னு சொல்றாங்க. இது என்னோட முறை (this is my turn)” தமிழன் என்ற பெருமையோடு சிரித்தான் தன் வேலையை மட்டுமே நேசிக்கும் தொழிற்நுட்ப நெடிலன்.

சனி, 12 ஏப்ரல், 2014

கலைஞர் கவிதைகள் சில துண்டு துண்டான வரிகள்

கலைஞரின் சொல்லோவியம் என்ற கவிச்சோலையிலிருந்து சில வரிகள். நாம் மறந்த, அல்லது இந்நாட்களில் ஒலிவடிவில் பயன்படுத்தாத சில வரிகளை அறியத்தருகிறேன் உங்களுக்காக.

இவைகள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானவை.
எதிர்வீணைப் பேச்சுக்காரி
கொய்யாக் கன்னம்
போர்வை உடல்
தென்னிலங்கை
தழல் பறக்க‌
கோடாரிப்பிடி

9/9/2012
பொலிவைக்காட்டி
பொடிபோட்டுப் பிடித்தேனா
கட்டியணைத்து காய்ச்சல் போக்கி
இதழ் மது உண்டு வருவதற்கு
புது வண்டு வராமலா போய்விடும்.
தங்கத்தமிழ் உவமை கூறி
சங்கத்தமிழ் வளர்க்கின்றார்.
வெள்ளரிக்காய் போன்ற பல்
அல்லால் - ஆங்கு சென்று
விளக்கொளி விழியாள்.
இருபந்தாடும் மார்பகம்
இன்பத்தேன் பொழியும் திருவிழா.

21/10/2012 திருக்குறளில் தேன்
கூடல் செய்யும் அன்புக்கிள்ளை
மாதர் வாழ்வுக்கு கற்புநெறி வட்டம்
ஏறு தழுவுதல் வீரர்க்கு அழகு.
நில மடந்தை
பண்பாடு போற்றுவோம்.
புண்பட்ட பல்லாங்குழி
தேள் கொட்டுண்ட துறவி.

7/10/2012
வலைஞர்
அஃதேபோல்
பைந்தமிழ்ப்பனுவல்
கவிக்கோமான்
பிணிதீர்த்து
குங்குமாகக் கன்னம்சிவக்க‌
விரைவில் கரம்பிடித்து மணப்பேன்.
விடுதுயரம்.
கலாபமே
பாலமுதே
வல்லூறு

14/10/2012
வாளி மன்னன் (வாளுடைய மன்னன்)
கற்கண்டு மொழியாலே
சொற்சொல்லும் பாவை
முட்டாளை முடுக்கிவிட்டாள்
தும்பிக்கு மலர்மீது இருக்கும் பற்று

சனி, 5 ஏப்ரல், 2014

அதிகம் படித்தலைவிட ஆழப்படித்தலே சிறந்தது (Linux boot process) - கணினிக்கதை


சென்ற தமிழ் கம்ப்யூட்டர் இதழில் (மார்ச் 16-31,2014, பக்கம் 44) வெளியான எனது கணினிக்கதை.
“எங்கே போகுதோ வானம், அங்கே போகிறோம் நாமும்…” யுட்யூபில் வெளியாகியிருந்த அதி உயர் தொழிற்நுட்பத்தில் (motion capturing) இருந்த கோச்சடையான் கணினி வரைகலைப்பாடலை தனது தந்த நிற (ivory colour) XUV500 வில் ஒலிக்கவிட்டு இளைப்பாறிக் கொண்டிருந்தான் நெடிலன். வண்டியில் இசையின் ஒலியளவு அதிகம் இருந்ததால் அவனது தோழி நுட்பாவின் கைபேசி அழைப்பு அவனுக்கு கேட்கவில்லை.

பாடல் முடிந்தவுடன் இருந்திருந்தாற்போன்று அவனது கண்கள் கைபேசியின் பக்கம் திரும்பியது. அனிச்சையாக கைபேசியைப் பார்த்தவனுக்கு ஐந்து ஏற்கா அழைப்புகள் (missed calls) இருந்தது அதிர்ச்சியளித்தது.
ஐந்தும் நுட்பாவினுடையதுதான். “மறுபடியும் கூப்டா நல்லா திட்டப்போறா..” நினைத்துக் கொண்டே கைபேசியைத் தடவி அழைப்புச் செய்தான் அந்த உயர் மென்பொறிஞன்.
கைபேசி அழைப்பு எடுக்கப்பட்டபின் 15 நொடிகள் மறுமுனையில் அமைதி.
"நுட்பா.." மௌனத்தை உடைத்தான் நெடிலன்.
"சொல்லுங்க.. நெடில்.." இது நுட்பா.
“இல்ல. நீ தான் கூப்டிருந்த...” இழுத்தான் அந்த இளமென்பொறிஞன்.
“எனக்கு நாளைக்கு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்துல‌ நேர்காணல் இருக்கு.
“நீங்க. நேர்ல வந்தா நெறய ஐயங்கள் கேக்கணும். அதான்...” திட்டாமல் அமைதியாகப் பேசினாள் நுட்பா.
“அதுக்கென்ன பத்து மணித்துளிகள்ல வர்றேன்.” பளிச்சென்று பேசினான். பேசியவன், சொன்ன சொல் காப்பாற்றி பத்தே மணித்துளிகளில் நுட்பாவின் புத்தில்லமான பொற்குடிலுக்கு வந்தான்.
தனது நான்கு சக்கர ஊர்தியை அதற்குரிய இடத்தில் இட்டுவிட்டு சிரித்தபடி பொற்குடிலுக்குள் நடந்தான்.
"கைபேசிய எடுக்காம என்ன பண்ணிங்க?" வந்தவுடன் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள் நுட்பா.
“XUV500ல அடர்குறுவட்டு இயக்கில (DVD player) பாட்டுக் கேட்டுக்கிட்டிருந்தேன்.”  உண்மையை உளறியபடி, “அதான் வந்துட்டனே, ஒன்னோட கேள்வியெல்லாம் தொடங்கு...” நிலைமையைச் சமாளித்தான் நெடிலன்.
“உயர் மென்பொறி நிறைஞர் (Senior System Admin) பதவிக்கு ஐபிஎம்ல நாளைக்கு நேர்காணல். லினக்ஸ்தான் முக்கியமா கேக்கறாங்க.  நா..சாம்பா சர்வர், அப்பாச்சி சர்வர், PXE சர்வர், DHCP சர்வர் எல்லாம் படிச்சுட்டேன். நீங்க எதாவது உதவித்துளிகள் (tips) குடுத்தா பரவாயில்லை.”
“சர்வரெல்லாம் படிச்சுட்ட சரி, Linux boot process தெரியுமா? போர்ட் நம்பரெல்லாம் தெரியுமா?” விடையாக வேறொரு கேள்வி கேட்டான் நெடிலன்.
“அதெல்லாமா கேப்பாங்க. இது உயர் மென்பொறிஞர் பதவிதான…ரொம்ப நிறைய வழங்கிகள் (servers) பத்தித்தான கேப்பாங்க..” மறுமொழிந்தாள் நுட்பா.
“இந்த நெனப்புத்தான் தப்பு. எப்பவுமே நேர்காணல்ல, அடிப்படையான கேள்விதான் (fundamental questions) மொதல்ல கேப்பாங்க. அது சரியா இருந்தா, நம்ம மேல அவங்களுக்கு ஒரு நல்ல கருத்து (opinion) ஏற்படும். அதனால மேல போகப் போக‌ நாம தப்பா சொன்னாலும், அத விட்டுட்டு வேற கேள்வி கேப்பாங்க. நேர் சிந்தனையோட இருப்பாங்க. அடிப்படைலயே தப்பு பண்ணா, மேல கேள்வி எதும் கேக்கமாட்டாங்க. எதிர் சிந்தனை வந்துடும். இதுதான் அடிப்படை மனித விதி(basic human psycology).” நீட்டினான் நெடிலன்.
“ஐயோ! நா.. எனக்கு, linux boot process மறந்து போச்சே!.  அதுபத்தி சொல்லுங்க நெடில்.” மெல்லிய பதற்றத்துடன் நெடிலனின் நீள் நெற்றி நோக்கினாள் நுட்பா.
“பொதுவாக தொடக்க இயங்குதள ஏற்றினையே பூட் பிராசஸ் அப்டீன்னு சொல்றோம். Linux boot process, பொறுத்தவரையில் நான்கு நிலைகள் உண்டு.
  1. BIOS – Basic Input Output System
இதுல எதன் மூலம் லினக்ஸானது பொறிக்குள் வரவேண்டும் என்பது குறிப்பிடப்படும். அதாவது first boot device,
  1. boot from harddisk
  2. boot from DVD Live
  3. boot from network
நாம ஏற்கனவே பொறியில இருக்கற லினக்ஸ் பத்தி பேசறதால, boot from harddisk ஐ எடுத்துக்கலாம். அதுக்கடுத்து, 2. GRUB (Grand Unified Boot Loader version 0.97) க்கு பொறியானது வரும். நீ ரெட் ஹாட் லினக்ஸ் படிச்சிருக்கறதால, இந்தப் பதிப்பு பத்திப் பேசினாப் போதும். உபுண்டுன்னா, GRUB2.0 பதிப்பு வரும். அதப்படிச்சு இப்ப கொழப்பிக்க வேணாம். இந்த பூட் லோடர், /boot/grub/grub.conf கோப்புல இருக்கும். கூடிய மட்டும் அந்தக் கோப்புல (/boot/vmlinuz kernel file) இருக்கற சேதிகள மனப்பாடம் செஞ்சுக்க முயற்சி பண்ணணும். மொதல்ல, விஎம்லினக்ஸ் கோப்பானது ஏற்றப்படணும். இதுதான் கர்னல் கோப்பு. இந்தக்கோப்பு அழிஞ்சா அவ்வளவுதான் இயங்குதளம் எற்றப்படுவது நிறுத்தப்பட்டும்.
3. மூனாவது, இனிஷியல் ராம் டிஸ்க் கோப்பாகும். (/boot/initrd.img) இந்தக்கோப்பு அழிக்கப்பட்டு இருந்தா,  நாம mkinitrd கட்டள மூலமா அத‌ regenerate பண்ண முடியும். இது ரெண்டும் நல்லா லோட் ஆயிடுச்சுன்னா, அடுத்தது
4. runlevel லோட் ஆகணும்.
லினக்ஸ்ல ஏழு run levels உண்டு.” ஆங்கிலத்தில் தொடர்ந்தான் நெடிலன்.
init 0 halt / shutdown
init 1 single user mode
init 2 multi user mode without network
init 3 multi user mode with network
init 4 unused kept for future enhancement purpose
init 5 XII / GUI (Graphical User Interface)
init 6 reboot
“இந்த runlevels எல்லாம் மறந்து போனா, நாம‌, gedit /etc/inittab கட்டள குடுத்து எளிமையாப் பாக்கலாம்.” முனைப்புடன் பேசினான் நெடிலன்.
அவன் பேசும் அழகைச் சுவைத்துக் கொண்டே, “இப்ப எனக்கு நல்லா ஞாபகம் வந்துடுச்சு”, சொன்னாள் நுட்பா.
தனது கைபேசியில், கூகுளில் தேடி, /boot/grub/grub.conf கோப்பின் மாதிரியை எடுத்து (கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டளை வரிகள்) விளக்கத் தொடங்கினான் நெடிலன் சரளமான ஆங்கிலத்தில்.
default=0
timeout=5
splashimage=(hd0,5)/boot/grub/splash.xpm.gz
hiddenmenu
title Red Hat Enterprise Linux (2.6.32-71.el6.i686)
root (hd0,5)
kernel /boot/vmlinuz-2.6.32-71.el6.i686 ro root=UUID=261182d6-76bb-46cc-a095-83d55a180724 rd_NO_LUKS rd_NO_LVM rd_NO_MD rd_NO_DM LANG=en_US.UTF-8 SYSFONT=latarcyrheb-sun16 KEYBOARDTYPE=pc KEYTABLE=us nomodeset crashkernel=auto rhgb quiet
initrd /boot/initramfs-2.6.32-71.el6.i686.img
title Other
rootnoverify (hd0,0)
chainloader +1
இதுல default=0 ங்கறது முதல் இயங்குதளத்த லோட் செய்ய உதவுது. timeout=5 அப்டீங்கறது, பயனருக்கு கொடுக்கற அவகாசம். இங்க 5 நொடிகள் இருக்கு. splashimage என்பது பூட் திரைக்கு பின்னால வர்ற, படம். hiddenmenu இந்த தேவையில்லாத வரிகள பயனருக்குத் தெரியாம மறைக்கறதுக்கு. titile பயனருக்கு எந்த இயங்குதளம்ன்னு சொல்றதுக்கு.  இந்த‌ GRUB ல ரெண்டு OS இருக்கு. title Other ங்கறது விண்டோஸ் இயங்குதளம்.” விறுவிறு வென விளக்கி முடிதான் நெடிலன்.
“இப்போ போர்ட் நம்பர் பத்தி பாக்கலாம். மொத்தம் 65535 போர்ட் நம்பர்கள் இருக்கு. எல்லாமே logical port numbersதான். well-known port numbers 0-1023. Registered port numbers 1024-49151 dynamic or private port numbers 49152-65535. போர்ட் நம்பர்ஸ் போதுமா?” கேள்வியுடன் முடித்தான் அந்த மென்பொருள் வல்லுநன்.
“சரி நெடில், போர்ட் நம்பரெல்லாம் மறந்துடுத்துன்னா என்ன பண்றது?” நுட்பா நுணுக்கமாகக் கேட்டாள்.
“ரெண்டு வகையாக நம்ம இந்த போர்ட நம்பர்களப் பாக்கலாம். OSல இருந்துக்கிட்டே பாக்கணும்னா,
Linux file for port numbers gedit /etc/services.
Windows file for port numbers C:\Windows\System32\Drivers\etc\services இணையத்துல பாக்கணும்னா, http://pnaplinux.blogspot.in/search/label/Misc தொடுப்பைப் பாக்கலாம் தனது கைபேசியில் மாதிரி வெளியீட்டினைக் காட்டிக் கொண்டே ஆங்கிலத்தில் அளந்தான் நெடிலன்.
“நன்றி நெடில். நீங்க சொன்னது எனக்கு நாளைக்கு நேர்காணலுக்கு கண்டிப்பா உதவும். மெத்த மகிழ்ச்சி.” அவனது அறிவினை வியந்த வண்ணம் நவின்றாள் நுட்பா.
“நேர்காணலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நுட்பா.” வெகு இயல்பாகச் சொன்னான் நெடிலன்.

“ஆமா, நான் 5 தடவ கைபேசினேன் நீங்கதான் எடுக்கவேயில்ல. ஏன்?” வேண்டுமென்றே மீண்டும் கேட்டாள் நுட்பா.
“அப்பா...மறுபடியும் மொதல்லர்ந்தா?” மெல்லச் சிரித்த நெடிலன், “எங்கே போகுதோ வானம், அங்கே போகிறோம் நாமும்…” மகிழ்ச்சியுடன் முணுமுணுத்தான்.

நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்டு கைபேசி

சென்ற தமிழ் கம்ப்யூட்டர் இதழில் (மார்ச் 16-31,2014, பக்கம் 10) வெளியான எனது கட்டுரை.
எப்பொழுது வரும் என்று ஏறக்குறைய அனைவராலும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நோக்கியா ஆண்ட்ராய்டு கைபேசி விரைவில் சந்தைக்கு வருகிறது. சென்ற வாரம், அதாவது பிப்ரவரி திங்கள் இறுதி வாரம் பார்சிலோனாவில் நடந்த மொபைல் உலக மாநாட்டில் இது அறிவிக்கப்பட்டது.
இது முதலில் ஃபின்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும். (ஃபின்லாந்து நாட்டின் ஒரு சிற்றூரின் பெயரே நோக்கியா என்றழைக்கப்படுவதாகும்.) ஏரிகளின் நாடான (land of lakes) ஃபின்லாந்துவில்தான் நோக்கியா தொடங்கப்பட்டது.
கைபேசி உலகில் பல திறன்பேசிகள் வந்தாலும், நோக்கியாவிற்கு நிகர் அதுதான் என்பது உலகறிந்த உண்மை. அதற்குக் காரணம் அதன் நீடித்த உழைப்பு. மேலும் அதில் உள்ள மின்கலத்தின் உறுதித்தன்மை. நீரில் விழுந்தும், தூக்கியெறிப்பட்டும் கூட பிறகு மீண்டும் எடுத்து ஒட்ட வைக்கப்பட்டால் உழைக்கும் திறமை நோக்கியாவில் மட்டுமே உண்டு என்பதை இந்தியர்களுக்கு சொல்லித் தெரியத் தேவையில்லை.
கைபேசி உலகில் அனைவராலும் வாங்கக்கூடிய விலையில், பயனர் தோழமையில் (user friendly) உள்ள ஒரே அருமையான இயங்குதளமென்றால் அது ஆண்ட்ராய்டுதான். அது ஒரு திறமூல மென்பொருளாதலால் (open source) எவரும் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.
நோக்கியாவும் ஆண்ட்ராய்டும் கைகோர்க்குமா என்று சில ஆண்டுகளாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் வாங்கியது.
கைபேசி உலகில் நிலவிய கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் நோக்கியாவும், அதில் இயங்கிய‌ விண்டோஸ் இயங்குதளமும் சந்தித்த போது, ஆண்ட்ராய்டிற்கு எதிராக தனது கோலினை ஓச்ச வேண்டும் என்பதால்தான் மைக்ரோசாஃப்ட் அதனை வாங்கியது என்பதை எளிய பயனர்கள் கூட அறிந்து கொள்ளலாம்.
இனி இன்றைய கதைக்கு வருவோம். ஆண்ட்ராய்டு முழுக்க திறமூல மென்பொருள் கிடையாது. அதன் ஒருபகுதி லினக்ஸ் இயக்கமுறைமையின் அடிப்படையில் இருப்பதால் அதை மட்டும் எடுத்து சில பல மென்பொருள் தொடுதல்களைத் தட்டி (small software touchups), ஏற்கனவே இருக்கும் விண்டோஸின் இயக்கமுறைமையை ஒட்டி, இப்பொழுது அதில் இயங்காத, ஆனால் ஆண்ட்ராய்டில் இயங்கும் சில செயலிகளை இயங்கும் வண்ணம் இது அமைக்கப்பட்டிருக்கிறது என தொழிற்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலம் கண்டிப்பாக உறுதியான மின்கலப் பயன்பாட்டுடன் கூடிய ஒரு நம்பகமான அதே நேரம் விரும்பத்தகுந்த பயனர் இடைமுகப்புடன் அமைந்த ஒரு திறன்பேசியை குறைந்த விலைக்குக் கிடைக்கச் செய்து தனது சந்தையின் மதிப்பினை ஏற்றிக்கொள்ள மைக்ரோசாஃப்ட் திட்டம் தீட்டுகிறது.
இது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு சந்தையில் சோதனை செய்யப்படுகிறது. தொழிற்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, கொரியா, கனடா போன்ற நாடுகளில் இது விற்பனை செய்யப்படாது என இணையம் தெரிவிக்கிறது.
மேலும் இது சாம்சங் கேலக்ஸி எஸ்5 லிருந்து மென்பொருள் உரிமையுடன் எடுக்கப்பட்ட ஒரு புதிய வடிவம் என்று கூறப்படுகிறது. இது ஒரு பயனர் மாறுபடுத்திய(customized) ஆண்ட்ராய்டு4.1 ஜெல்லிபீன் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஏதும் சட்டச்சிக்கல் இல்லாத வண்ணம் அதே நேரம் ஆண்ட்ராய்டின் போட்டியினை சந்தையில் சமாளிக்க மைக்ரோசாஃப்டிற்கு இந்த வன்பொருள் உதவும் எனது பெரிதும் நம்பப்படுகிறது.
இது நோக்கியா X series என்று அழைக்கப்படுகிறது. இதன் இந்தியப்பதிப்பு வரும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனினும், இது இம்மாத இறுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் சிறப்பு அணிகள்:
  1. புத்தாக்கத்துடன் கூடிய ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன் (ஆன்ட்ராய்டு4.1)
  2. பயனர் கூகுள் செயலிகளை (Google apps) APK கோப்புகளின் மூலமா பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  3. கூகுள் App store இதில் இருக்காது. அதாவது, ஜிமெயில், கூகுள் குரோம், கூகுள் மேப்ஸ் அடங்கியவை நீக்கப்பட்டு, அதற்கு மாற்றாக‌ Outlook, Microsoft exchange, Nokia express browser ஆகியவை சேர்க்கப்பட்டு உள்ளன.
  4. இதன் இடைமுகப்பு ஆண்ட்ராய்டு போல அல்லாமல், நோக்கியா ஆஷாவின் இடைமுகப்பினை ஒத்துக் காணப்படுகிறது.
  5. மற்ற ஆஷா இயங்குதளங்களில் இருக்கும் மூன்று பொத்தான்கள் நீக்கப்பட்டு, back பொத்தான் சேர்க்கப்பட்டுள்ளது.
  6. நோக்கியா இதற்கான சிறப்பான App Store ஐச் சேர்த்துள்ளது.
மூன்று வகையான நோக்கியா X Series கள் வெளியிடப்பட இருக்கின்றன.
இதன் விபரங்கள் பின்வருமாறு:
Nokia X 89 euros (7538.52 INR)
Main camera sensor: 3-megapixel Display size: 4-inch Processor name: Qualcomm Snapdragon S4, Dual-core 1 GHz
Maximum talk time (3G): 10.5h Maximum music playback time: 26h Photo sharing: Twitter, Facebook, Send as email attachment, Share over Bluetooth
Social apps: Facebook, Twitter, WeChat, Viber, Skype
Display resolution: WVGA (800 x 480) Display features: Brightness control, Tactile feedback, Orientation sensor, Nokia Glance screen, Wide viewing angle, Screen double tap
Display colors: TrueColor (24-bit/16M) Aspect ratio: 15:9 Pixel density: 233 ppi
Display technology: IPS LCD Touch screen technology: Capacitive two-point touch
Sensors: Ambient light sensor, Accelerometer, Proximity sensor
Nokia X+ at 99 euros (8385.55 INR)
User data storage: In device, Memory card
RAM: 768 MB
Mass memory: 4 GB
Expandable memory card type: MicroSD
Maximum memory card size: 32 GB
Nokia XL for 89 euros (9232.57 INR)
Main camera sensor: 5 MP
Display size: 5-inch
Processor name: Qualcomm Snapdragon S4
Maximum talk time (3G): 13h
Maximum music playback time: 37h
Photo sharing: Twitter, Facebook, Send as email attachment, Share over Bluetooth
Social apps: Facebook, Twitter, WeChat, Viber, Skype
மைக்ரோசாஃப்ட் இப்படி சந்தையை மேம்படுத்துவது பற்றி கனவு கண்டு கொண்டிருக்க, சில கைபேசி நுட்பவியலாளர்கள் இந்தத் திறன்பேசி வந்தவுடன், எப்படி நாம் மைக்ரோசாஃப்ட் மடிக்கணினியில் உபுண்டு உள்ளிட்ட பல்வேறு லினக்ஸ் இயக்க முறைமைகளை நிறுவிப் பயன்படுத்துகிறோமோ அது போலவே திறன்பேசியிலும் குறிப்பிட்ட  இயங்குதளத்தினை அழித்துவிட்டு, நமக்கு வேண்டிய ஆண்ட்ராய்ட் கிட்கேட் ஐக் கூட நிறுவிக் கொள்ளலாம் என பேசிவருகின்றனர். நோக்கியாவின் நிலைமை என்ன என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் விபரம் அறிய‌
http://gadgets.ndtv.com/mobiles/news/nokia-x-android-smartphone-listed-online-at-rs-8500-with-march-15-availability-491743